12 March 2017

காற்றில் வந்த கவிதைகள் -10

முன்னம் இங்கே--http://www.thanimaram.com/2017/03/9.html   நன்றிகள் ஜினேஸ்§

புனிதனாக வாழ ஆசைதான் !
புழுதிவாரித் தூற்றும்
புறந்தள்ளி இவன் மோசக்காரன் என்று
புலம்பெயர்ந்தவன்
புண்ணியமாக சில லட்சங்கள்
புண்ணியம் செய்யாத போது!///




--------------------------------------------------
விழிகளில் வந்திடு கன்னே
விம்மலுடன்....வீதி எங்கும்
விரித்த கைகளுடன்
விதவையானவள்
விசாரிக்கின்றாள்
விடுதலைக்கு போன
வீரனைப்பெற்றவள்!//////

------------------------------------------------


ஆசையைத் துறந்து வா என
அழைக்கின்றது ஆன்மீகம்
ஆனாலும் அன்பே உன்னால்
ஆழ்மனதில் தோன்றிய
அழியாத காயத்துக்கு
ஆற்றுப்படுத்த ஏது வழி?


-----------------------------------------------
///!!
விரும்பிய பாடல் காற்றில்
விரைந்து வரும் என காத்திருந்தேன்.
விளம்பர இடைவேளைக்கு
விலகிச்செல்லும்
விருப்ப ஓய்வு போல !
விட்டுச்சென்றவள்
விரைந்து வருவாள் என
விழித்திருந்த போது
விட்டுப்போனது இணையத்தொடர்பு
விரும்பிய பாடல்  நிலை???
விரைவில்!!!


டிஸ்கி போட்டு பல மாதங்கள்§[[[

/// அசட்டையினத்தின் சோகக்கதை இங்கே- ஆனாலும் எழுத்து ஆர்வம் தொடர்ந்து இயங்க சினேஹாவின் காதல் போல[[http://www.thanimaram.com/2017/03/9.html

இதுவரை தனிமரம்.org  என்ற முகவரி கொஞ்சம் மாற்றவேண்டியதாகிவிட்டது .இனி தனிமரம் .com என்றே வாசம் வீசும் உங்களின் ஆதரவுடன். தனிமரத்தோடு மீண்டும் இணைந்து பின்தொடர்வோர் பட்டியலில் உங்களையும் இணைதுவிடுங்கள்! தயவு கூர்ந்து!  உங்கள் ஒரு சில இணைய நேரத்தில் நட்பாக ஏதிலி தனிமரத்துடன்! நேசமுடன் நேசன்! !




6 comments :

முற்றும் அறிந்த அதிரா said...

ஆவ்வ்வ்வ் கவிதையில் கலக்குறீங்க கவிஞர் நேசன்... படங்களும் கவிதைகளும் அழகு... ஆன்மிகக் கவிதை எனக்கு நன்கு பிடிச்சிருக்கு.

முற்றும் அறிந்த அதிரா said...

ஓ நீங்களும் கொம் க்கு மாறிட்டீங்களோ... அதனால்தான் நோட்டிபிகேசன் காட்டாமல் இருந்து, ஏன் என யோசிச்சு, தேடி வந்து புதுசு எடுத்திட்டேன், இப்போ காட்டுது.

முற்றும் அறிந்த அதிரா said...

பாட்டு.. ஆரம்பகால அப்பாஸ் ஆ?? நம்ப முடியவில்லை.....

தனிமரம் said...

பாட்டு.. ஆரம்பகால அப்பாஸ் ஆ?? நம்ப முடியவில்லை.../இல்லை இது 2000 ஆண்டில் வந்த படம் இதே காலத்தில் தான் ஆனந்தம் படத்தில் சினேஹாவுக்கு ஜோடியாக துணைப்பாத்திரம் ஏற்றார். சிந்தாமல் சிதறாமல் படம் இலங்கையில் தான் அதிக நாட்கள் ஓடியது எனலாம்! இந்தப்பாட்டு கூட இலங்கை பண்பலைகளில் சக்கை போடு போட்டது!

Angel said...

நேசன் உங்க பதிவுகள் எனக்கு தெரியலியே ?? என்னாச்சு இப்போ தேடி ஓடி வந்தேன் உள்ளே விடறதுக்கும் பிளாக் விடலை நான் கேட்டை தள்ளிட்டு வந்தேன் .கவிதை அருமை

K. ASOKAN said...

பதிவுகள் வளமாய் உள்ளன பாராட்டுகள்