04 April 2017

முன்னோட்டம்...! விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்!

வணக்கம் வலையுறவுகளே மீண்டும் தனிமரம் புதிய தொடருடன் உங்களிடம் வருகின்றேன் தனிமரம்.org ,சினேஹாவின் சாபத்தால் காணமல் போய் !

இப்போது நீர்பறவை நாயகியின் கருணையினால் தனிமரம் .com என்ற புதிய டைனமில் உங்களை நாடி அதே பழைய தனிமரம் நேசனாக மீண்டும் வருகின்றேன்))  .


அருமை/ மகிழ்ச்சி /சந்தோஸம் / வாழ்த்துக்கள்/தொடர்கின்றேன் என்ற தொடர்கதையின் பின்னூட்ட வார்த்தைகள் ஜாலம் கேட்டு உண்மையில் சில மாதங்கள்  தனிமரமும் காதல்க் கோட்டை கட்டவில்லை))  .



ஆன்மீகம் கடந்த பின் தனிமரம் வெட்டியான் என்ன செய்வேன் ?சருகு சும்மா இருந்தாலும் காற்று விடாதாம். என்பது போல என்னையும் என்னைச்சுற்றிய நட்புக்கள் புதிய தொடர் எழுதச்சொல்லுகின்றது.)))

அரசியல் வியாபாரிகள் எத்தனையோ பேர் கேட்டதால் இலங்கை போகவில்லை என்பது போல எல்லாம் தனிமரம் அறிக்கைவிடாது புனித பூமியை துறந்து. வந்தாச்சு அகதியாக.

தவழ்வது முகநூலில்)) தட்டினால் மெசென்சரில் பல உள்ளடப்பு செய்திகள்! நாளாந்தம் படிக்க.எங்கும் போகலாம்   தணிக்கையற்று.

  இப்ப எல்லாம் முன்னர் போல வலைப்பக்கம் வர ஓய்வு அதிகம் கிடைப்பதில்லை என்று எல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.  சோம்பல் கூடிவிட்டது ))).

கிடைக்கும் ஓய்வில் உங்களுடன் அடுத்த பகிர்வாக புதிய தொடரினை கொண்டுவரத் தயாராக உங்களின் அன்பும்  , தார்மீக ஆதரவும் கிடைக்கும் என்ற இடைத்தேர்தல் பிரட்சார மேடை போல தனிமரமும் களத்தில் இனி உஷார்)))

மீண்டும் ஒரு ஒப்பாரியா ?என்று கேட்பது காதில் விழுகின்றது !என்றாலும் இனவாத யுத்ததின் புலப்படாத பாதிப்புக்கள் இன்னும் எம்புனித மண்ணில் சொல்லப் படாமல் இன்னும் இருட்டடைப்பு செய்யப்படும் செய்திகளை .தகவல்களை தொடர்ந்தும்

பொதுவெளியில் சொல்ல வேண்டியது காலத்தின் கடமை .

வரலாற்றில் பலவிடயங்கள் பொறிக்கப்பட வேண்டும் என்ற தேடலின் விளைவாக குறுந்தொடரினை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.


எப்போதும் போல இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் தொடர்பு இல்லை என்பதை சினேஹா மீது ஆணையிட்டுச் சொல்லும் இவன் பரதேசி! படிக்க ஆசை பாரத தேசிய மொழில் ஹிந்தி மொழி படிக்கலாம் முப்பது நாளில் ஹிந்தி என்ற புத்தகம் தொலைத்த பன்னடை இப்போது அறிவுஜீவி போல முகநூலில் கதை பேச விரும்பாத !உடல்கட்டு இல்லாதவன்[[ நேரச்சிக்கல் [[
உங்களுடன் வலையில் !
படிக்காத
தனிமரம் நேசன்
பாரிசில் ஓர் ஏதிலி)))


முடிந்தால் வாருங்கள் தொடர் வாசிக்க ! யார் வீட்டுக்கும் புதிய பதிவு போட்டுவிட்டேன் என்று கூவும் பேப்பர் போடும் நிலையில் இப்ப தனிமரம் நேசன் இல்லை!

 இணையத்தில் நட்பு யாசிப்பது என்பது என் சுயத்தை இழப்பது என்றால் எப்போதும் தனிமரம் இப்படித்தான்!தமிழ்மணத்தில் இப்போது என் பதிவுகள் வராது அதன் தொழில்நுட்ப சிக்கல் நான் அறியேன் பதிவினை இணைப்பதில் முகவரி மாற்றம் தொல்லை என்றாகிவிட்டது! விரும்பியோர் தனிமரம்.கொம் தேடி வந்தால் புதிய பகிர்வை அறியலாம்[[ ஒலிபரப்பு தடங்களுக்கு வருந்துகின்றேன்[[ யாரும் தடை போட முடியாது கவண் படம் போல[[

இனி என்ன டூயட் தான் [[

4 comments :

Yarlpavanan said...

https://plus.google.com/u/0/communities/110989462720435185590 என்ற உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுவில் இணைந்தமைக்குப் பாராட்டுகள்.

உங்கள் புதிய பதிவின் தலைப்பு, இணைப்பு, நான்கு வரிகளில் சிறுவிளக்கம் வழங்கினால் போதும்.

நன்றி.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஹா ஹா ஹா மிக அழகாக அனைத்து உண்மைகளையும் ஜாலியாகச் சொல்லியே சிரிக்க வைத்திட்டீங்க... இந்தக் கொமெடி இருக்கோணும் உங்கள் தொடரில் அப்போதான் ஆர்வமாக படிப்பேன்.. இல்லையெனில் தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன்:) ஆரம்பமே சொல்லி வைக்கிறேன்.

Angel said...

ஹாஹா :) நேசன் உங்க வலைப்பூ வாசலில் ஸ்கொட்லான்ட் யார்டு போலீஸ் நின்னுகிட்டு எப்பவும் குறுக்கு கேள்வி கேட்டுத்தான் உள்ளே விடுவாங்க இப்போ அவங்கள காணோம் ஈஸியா வந்துட்டேன் :)

எதையும் ஜாலியா சொல்லிட்டு போவீங்க உங்க பதிவில் ..ஆனா அந்த பரட்டை மனிதன் படம் தான் அடிக்கடி பயங்காட்டுது :)
அப்போ இனிமே ஸ்னேகா இல்லையா இந்த பக்கம் :) அப்போ யார் அடுத்த ஹீரோயின் :)
குறுந்தொடருக்கு காத்திருக்கேன் சீக்கிரம் ஆரம்பிங்க .

கரந்தை ஜெயக்குமார் said...

புதிய பொலிவுடன்
புத்தெழுச்சியுடன்
வாருங்கள் நண்பரே
தங்களின் தொடரினை
வாசிக்க ஆவலுடன்
காத்திருக்கிறேன்
வாருங்கள் வாருங்கள்