10 May 2017

ஈரச்சாலை இரவுக்கனவு!

வானொலியோடு கூடிய சிறுவயது  நேசிப்பு இசைமீதான காதலாகி பல பாடல்களையும் இனவாத பூமியில் கேட்கும் வரம் பெற்ற  சாமானிய ரசிகன் அடியவன்.


அதனால் தான் நம்மவர்கள் பாடல்கள் என்றாலும் இந்தியதேச பாடல் என்றாலும் இசை மீதான மோகத்தில் பல இணையவானொலிகளுடன் இன்றும் பயணிக்கின்றேன் பல பொருளாதார தேடல்களுக்கு மத்தியிலும்.


 முன்னர் போல பல நேரத்தில் புதிய புதிய பாடல்களை  உடனே கேட்கமுடியாத பணிமாற்றம்/ ஆன்மீகப்பாதை /உதவாக்கரையும் இப்ப ஏதோ வலையில் /முகநூல் எல்லாம் எழுதுதாம்.   அதுதான் தனிமரம் என்ற ஊதாரி))) ஏதோ புனைபெயரில் ! இப்படி சிலரிடம்

பாரிசில் இருந்து  இலங்கைக்கு கோடைக்கால விடுமுறையில் என்று புலம்பெயந்து போவோரிடம் பெருமை பேசும் என் தாய் மாமன் கூட நான் பேசியதில்லை இன்றுவரை காரணம் இசைமீதான  காதல் . நினைத்துப்பார்க்கின்றேன் இடையில் வந்த இடைவெளிக்கு காரணம் என்ன ?


தலைமுறை மாற்றம். பூர்ணிமா ஜெயராம்? நதியாவா?ரேவதியா? அம்பிகாவா? ராதாவா? பானுப்ரியாவா? தேவயானியா? சினேஹாவா?  இன்னொரு தொடர் குசும்பாக எழுதமுடியும்))


முகநூலில் தடம் மாறிப்போகின்ற வழிகளில் கூட நெஞ்சுக்குப்பிடித்த பாடல்களை நட்புக்கள்  பகிந்து  !

இது பற்றிய உங்களின் ஆதரவுக்கரம் என்ன பங்கு வகிக்கும் என்று கேட்கின்ற போது தனிமரம் வலையில் எப்போதும் சேமிப்பாகபாடல்கள் இருக்கும்!

அது   நான் விரும்பி எழுதிய  தொடரில் எழுதில் இடைச்செருகலாக  /அந்த நாள் நினைவு போல  இடைச்செருகலாக என்பதை மட்டும் எப்போதும் தெரிவிப்பேன்!


இப்படித்தான் சகமுன்னால் பதிவர் நண்பர்கள் பதிவர் ராஜ் என் முகநூலில் பகிந்த இந்த பாடல் என்னையும்  ஈரச்சாலையில் இனிதே ஒய்யாரமாக ஓய்வு எடுக்கக்சொல்லுது இன்னும் திமிர் இசைமீதான தேடலில்)))

 இப்பாடலில் இசைமீட்டியவரும் ,கவிதை தீட்டியவரும், இப்போது என் முகநூல் நட்புக்கள் என்பதும் தனிமரத்தின் வளர்ச்சி என்ற சிற்றின்பத்துடன் இனிய பாடலை நீங்களும் கேட்க இங்கே)))

8 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

இதோ இணைப்பிற்குச் செல்கிறேன் நண்பரே

Angel said...

ராதாவை நானேதான் ஞாபகப்படுத்தி விட்டுட்டேனோ :)


பாட்டும் வரிகளும் அந்த குரலும் தேனில் மூழ்கிய பலாச்சுளை சாப்பிட்ட இனிமை தருது

Rajeevan Ramalingam said...

நீங்கள் ஒரு அற்புதமான இசை ரசிகன் பாஸ்

வலிப்போக்கன் said...

என் இளவயதில் பாடல்களை கேட்க வழியில்லை..இப்போது கேட்க ஆசை இருந்தும் முடியவில்லை...இது எனக்கான சாபமோ...

முற்றும் அறிந்த அதிரா said...

நினைவுகள் நன்றாக இருக்கு நேசன்..

///பூர்ணிமா ஜெயராம்? நதியாவா?ரேவதியா? அம்பிகாவா? ராதாவா? பானுப்ரியாவா? தேவயானியா? சினேஹாவா?///
இப்பூடியெல்லாம் கேள்வி கேட்கலாமா நீங்க? பிறகு ஸ்நேகா கோபிச்சிட மாட்டா....:)

ஸ்நேகா.. ஸ்நேகா.. ஸ்நேகா.. எனத்தான் எப்பவும் எழுதோணும். அடிக்கடி ஆளை மாத்திடக்கூடாது கர்:).

முற்றும் அறிந்த அதிரா said...

பாடல் கேட்டேன்... ஸ்ஸ்ஸ்ஸ்லோவா இருக்கு.. இருப்பினும் நன்றாகவே இருக்குது.

vimalanperali said...

மென்மை சுமந்த பாடல்.நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்,

Thulasidharan V Thillaiakathu said...

பாடல் அருமை நேசன். அது சரி ஸ்னேகாவோடு மத்தவங்களையும் சொல்லிருக்கீங்களே! என்னாச்சு ஸ்னேகா கொஞ்ச நாளா காணலை?!! ஸ்னேகாவோடு காயா??!!!! ஹஹஹ்