02 May 2017

குறும்பா போல குறும்பு!

கும்பிட்டு தொழுது
குப்புறவிழுந்து
குடிகார அரசியல்வாதிக்கும்
குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும்
குறுகிப்போய்விடுவேனோ!
குறுந்தொடர் எழுதும் ஆசையில்
குறுஞ்சஞ்கையில்!
குருவே சரணம் என்று பணிவேனோ?

குற்றம் என்று குற்றியலுகரம்
குறுக்கே வரும் ஊடகம் போல
குத்திக்காட்டும் எழுத்துக்கலை
குடியில் வராது ஒன்று என்று!
குற்றவாளிபோல குறுகிநில்லாதே!
கும்பிடு போட்டு
குறிப்புக்கேட்டும் உன் கொப்பன்
குதறியவார்த்தைகள்
குன்றில் கேட்டிருக்கும்!
குளுகுளு அறையில் உன் செவியில்
குட்டியிருக்காது என்று புலம்ப
குட்டிப்பிசாசே பாடல் போல
குணா படம் போல அல்ல!
குற்றுயிர்  இல்லையடி என் காதல்!

குயிலே நீ ஒரு
குறத்தி  போல எந்தன் நெஞ்சில்
குடியிருக்க வரவில்லையெனில்!
குன்றில் கொலைசெய்து
குற்றவாளிக்கூட்டில் தப்பிக்ககூட
குடுக்கப்பல  நல்ல கூட்டாளிகள்
குற்றரேகைகளும்
குபேரன் போல
குணமகள் தாள்களும் கொட்டிக்கொடுப்பேன்!
குற்றப்பரம்பரை போல அரசியல்வாதிகள்
குணம் எல்லாம் பார்த்தவன்!
குற்றாலக்குறவஞ்சி படித்தவன்))).

குடுமிவழித்த  குழந்தை போல
கும்பிடும் துறவி போல
குருநாகல் வெவ்விளநீர் போல
குதுகலத்துடன் நீங்கள் கேட்பது
குன்றின் நிகழ்ச்சிக்கு
கு -வரிக்கவிதை தந்த வாசகன்!!!
குறிஞ்சிப்பூ! கவிதைக்கு
குரல் கொடுத்தவர் உங்கள்  அன்புடன்
குறியீட்டு இசையுடன் விடைபெறுவது
குகன் .


குறுக்கால பேவானே பாட்டை போடு
குத்தாக ஒரு பாட்டு
குடிக்க ஒரு காப்பி
குடிப்போம் வா !
குறுஞ்செய்தி வரவில்லை!
குருவி போல !

--------------------------------------------

      ;(((.   உங்களின் கிழித்த  நாட்குறிப்பில் குசுக்கிய  கவிதைகளில்   தணிக்கையால் வெளிவராத ஒரு   கவிதையை  குவிக்கா அனுப்பவும் என்ற  )))) இணைய வானொலி அறிவிப்பாளினி அன்பு நட்பு தோழிக்கா அவசரமாக கவிதையும் பாடலும் கேட்டேன் [[ அவர் வேற பாட்டை ஒலிக்கவிட்டார்[ஆனாலும் என் கோபம் அவர் நிகழ்ச்சிப்பக்கம் போகவில்லை ஒரு வாரமாக[[  [[



  என்றும் போல  தனிமரம் உங்ளோடு ஒருவன்! !


என்  பாடல் தேர்வு இது[[கு வரிசை எழுதுவது இலகுவல்ல[[
குரல் பிடிக்கும்[[ பாடல் போல!
குத்தினால் விஸ்வரூபம் எடுக்கும் தனிமரம்[[



5 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
குறுஞ்செய்தி விரைவில் வந்து சேரும் நண்பரே

K. ASOKAN said...

அனைத்தும் அருமையாக உள்ளது. வெற்றி தங்களுக்கே

Angel said...

ஆஹா !! நல்லாருக்கே எனக்கு எந்த வரிசையிலும் இப்படி எழுத வராது

M0HAM3D said...

அனைத்தும் அருமையாக உள்ளது

Thulasidharan V Thillaiakathu said...

நல்லாருக்கு தனிமரம் நேசன்...