17 July 2017

காற்றில் வந்த கவிதைகள்-17


 ---------------http://www.thanimaram.com/2017/06/16.html
----------------------
மென்வலு அரசியல் போல
மென்மையாக மேற்கத்திய மொழிபேசும்
மெல்லிடையாளே!
மெல்ல மெல்ல விட்டுக்கொடுக்கும்
மெல்லினம் போல தமிழ் இனம்
மெனக்கொடும் துயரம் எல்லாம்
மென்மேலும் சொல்லும் தகுதி 
மெருகூட்டுகின்றது உன் பார்வையில் 
மெட்டுப்போட்டு பாட்டு எழுத 
மெலிஞ்சுமுல்லன் கவிதை போல
மெசேஞ்சரில் ஒழிந்து கொள்ளாதே! வா

மென்று குடிப்போம் காதலை!

--------------------------------------------------------
////: ஒரு பொய்யாவது சொல் கண்ணே தலைப்பு!


காதலில் விழுந்த காளையோ ,
கண்ணில் கனவுகள் சுமக்கும் 
கடினமான கவிஞனோ அல்ல !
கால் போன போக்கில்
கதை எழுதும் ஆசிரியனும் அல்ல!
காலத்தாயின் கனவுகளுக்கு
காத்திரமான பங்களிப்பு செய்ய
கடும் உறுதி கொண்டு
கலந்து போனவன் ! சந்தேக  தீயில் 
காணமல் போனவன் .
கருமைச்சிறையில் இருந்து
கந்தகக் காற்றின் வாசம் எல்லாம்
கண்ட கதை சொல்ல வருவான்!
கைதிகள் நிலை என்ன என்று
கையேந்தும் அந்தத்தாய்க்கு
ஒரு பொய்யாவது சொல் கண்ணே!
கண்டிப்பாக உங்கள் மகன் 
கார்காலத்தில் பூப்பான் என்ற 
ஒற்றை மகிழ்ச்சி போதும்!
கட்டையில் போகத்துடிக்கும் அவள் உயிருக்கு! ஒரு துளி பால் வார்ப்பது போல 
ஒரு பொய்யாவது சொல் கண்ணே நீயும்
கண்டுபிடித்து தருவாய் என்ற
நல்லாட்சி  அதிகாரி போல!
கனவுகள் காண்போம்!
கைதிகள் விடுதலை என்று
ஒரு பொய்யாவது சொல் கண்ணே!
கண்ணீருடன் காத்திருக்கும்
கலியுகத் தாய்களுக்கும் ,தந்தைகளுக்கும்
காதலிகளுக்கும் !உறவுகளுக்கும்!


---------------------------------
/////:
 தலைப்பு உயிரிலே கலந்தது.



ஊர் கூடி உல்லாசம் கண்டோம்!
ஊழிக்காலச் சிந்தனையில்
உதிர்த்தார்கள் .உங்களுக்கு
உண்மையில் ஏதுமில்லை என்ற
உதாசீனச் செயல்கள் உக்கிரமாய்.
உடமைகள் போய்
உயிர்கள் பல 
உதிரங்கள் சிந்தி ஊஞ்சல் ஆடியபோதும்,
உயிரிலே கலந்தது 
உண்ணதமான ஈழக்கனவு.
உயிரிலே சிதைந்தது 
ஊழ்பகையினால்!
உயிரிலே கலந்து இன்று
உலகம் எங்கும் 
உரத்த கோஷங்களுடன்
உயிர் வாழத்துடிக்கின்றது
உண்மை வெல்லும் பொழுது
உயிரிலே கலந்த ஊர்கள் 
உத்தர நட்சத்திரம் போல சிரிக்கும்!



------------------------------------- 



3 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை வெல்லும் பொழுது
உயிரிலே கலந்த ஊர்கள்
உத்தர நட்சத்திரம் போல சிரிக்கும்!

உண்மை நண்பரே
அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகளில் உள்ளக்குமுறல் புரிகிறது...

வலிப்போக்கன் said...

அருமை..