11 July 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்..- 9

முன்னர் இங்கே-http://www.thanimaram.com/2017/07/8.html
-----------------------------------------------------


கடினமான உடல் உழைப்பும், கச்சிதமான நிதித்திட்டமிடல் செயல்பாடுகளும் ,தனியார் வியாபாரத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணச்செயல்களும் தனி ஒருவனை மென்மேலும் வளர்ச்சியடைவைக்கும் . !


அப்படித்தான் சில்லறை வியாபாரத்தில் தொடங்கிய வாழ்வை அடுத்தகட்ட வளர்ச்சி போல உள்நாட்டு/வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் இலங்கையின் பிரபல்யமான பல நிறுவனங்களில் ஒன்றின் அப்புத்தளை நகரத்திற்கான ஏகவினியோகத்தர் என்ற புதிய செயல்த்திட்டத்தை விஸ்தரித்தார் இலங்கை இராணுவம் அப்பாவி மக்களின் காணிகள் சுவீகரிப்பு செய்வது போல அல்லாமல் நேர்மையான முதலீடு செய்தார்  கமலேசின் தந்தை தவராஜா!  ( sub ajency)


ஒரு பல்தேசிய நிறுவனத்தின் ஏகவினியோகஸ்த்தர் என்ற வியாபார காந்த சக்தி ரஜனியின் பாட்ஷா ஆட்டோ போல நம்பிக்கையானவர்களின் உடல்வள உழைப்பு மூலம் மேலும் மேலும் பல நிறுவனங்களுன் ஏகவினியோகஸ்த்தர் என்ற பன்முகத்தன்மையுடன்


கந்தன்   ஸ்டோர்ஸ் என்ற முகவரியோடு தவராஜாவின்  தனிநபர்  வியாபாரம் சிறந்த முறையில் செயல்பட்டது.


 கூடவே ஆரம்பத்தில் தொடங்கிய வெற்றிலைக்கடை வியாபாரமும் கைகொடுக்க பலரும் அன்புடன் மதிக்கும் கந்தன் முதலாளி தவராஜா பிரபல்யம் அடைந்தார் சினிமாவில் ஒரு பாடலுடன் வெற்றியடையும் ஹீரோ போல இல்லாமல் . !


வியாபாரத்தின் வெற்றி என்பது சிக்கனமான நிதிச்செயல்ப்பாடும், எதையும் ஆராய்ந்து பார்க்கும் சமயோசித்த எண்ணமும் இருக்க வேண்டும்


அப்புத்தளை மட்டுமல்லாது அருகில் இருக்கும் பல நகரங்கள் பண்டாரவளை, வெலிமட, ஹல்ததுமுல்ல, பதுளை என நீண்ட நகரங்களுக்கும் கந்தன்  வியாபாரம் கிளைபரப்பியது .அத்தியாவசிய/ஆடம்படரப் பொருட்களின் ஏகவினியோகஸ்த்தர் என்ற முகவரி

வியாபாரத்தில் களவுகளுக்கும், நிதிக்கையாடல்களுக்கும் குறையிருக்காத  மரகத நாணயம் போல. இதனால்  தன் வியாபாரத்திற்கு நம்பிக்கையாக தன் பூர்வீக பூமியில் இருந்து பலரை அழைத்து வந்தார் மஞ்சல் பையுடன் ரயில் ஏறும்  பாட்டுக்கு நான் அடிமை பட ராமராஜன் போல !

 வெற்றிலைக்கடை வியாபாரத்தை விரும்பாதவர்களையும் ,வடக்கில் கட்டமைத்த இனவாத யுத்த நடவடிக்கை முன்னேற்றச்செயல்கள் .உயிரைக்காக்கவும், பொருளாதார தேடலுக்காகவும் இடம்பெயர்ந்தார்கள் ஜீன்ஸ் பட நாசர் போல!


. இனவாதத்தின் வெற்றி என்பது சாமானிய மக்களின் மனங்களிலும் இனவாத விசத்தினைப் பரப்புவது. அது அரசியல்வாதிகள் முதல் அரச நிறுவாக அதிகாரிகள் தொடக்கம் சாதாரன தனியுடமைக்கம்பனிகள் வரை கண்ணுக்குள் தெரியாத கிருமிகள் போல ஆட்களைக்கொல்லும் கொடிய விசம்

வியாபாரத்தில் போட்டி என்பது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கைகாட்டவேண்டும் ,கூட இருந்தே சொருவும் பாகுபலி கட்டப்பா போல அல்லாது. இனவாத சிந்தனை தமிழர்களிடம் இருந்த ஏகவினியோகஸ்த்தர்கள் என்ற உரிமைளையும்     இனவாத வேட்டி உருவுவது போல நாகரிகமாக சிலர் தமிழர் வியாரத்திக்கும்  எண்கவுண்டர் செய்யும் இந்திய சினிமாபொலிஸ்சார்   போல இச் செயலில் சில  இனவாத சந்தைப்படுத்தல் முகாமையாளர்கள் தனியார் கம்பனிகளில் தோன்றியதன்  விழைவு  .தமிழர்கள் என்றாலே புலிகள் கண்ணோட்டத்தில் நோக்கும் குர்க்கத்தனம்!

. ஏகவினியோகஸ்த்தர் சந்தைப்படுத்தல் எல்லாம் தமிழரிடம் இருந்து சிங்களவர்கள் கையில் கொடுக்கப்பட்டது .சிங்களவர்கள் இல்லாத இடங்களில் இஸ்லாமிய வியாபாரிகளிடம் கையகப்படுத்தும் செயல்களை கச்சிதமாக செயல்படுத்திய பல நிறுவனங்கள் கால்ப்போக்கில்  இலங்கை ஆட்சியாளர்களின் யுத்த நடவடிக்கை தோல்வி போல பல தனியார் நிறுவனங்களின் வியாபார வளர்ச்சியும் தோல்வியை நோக்கிச் சென்றது

எது வந்த போதும் கலக்கம் தேவையில்லை கண்ணம்மா என்ற நிலையில் அடிப்படை வெற்றிலைக்கடை வியாபாரத்தை சிறப்போடு செயல்படுத்திய தவராஜா தன் பிள்ளைகளான கமலேஸ், நிலாந்தன் ,சுதர்ஷன் மூவரையும் தனியார் ஆங்கிலமொழிக்கல்வி கொடுக்கும் மிகப் பிரபல்யமான அருகில் இருக்கும் பண்டாரவளை நகரத்துப்பள்ளியில்  படிக்கவைத்தார் அதிக பணம் செலவழித்து




 அதுக்கு அடிப்படை காரணம் 

என்ன இருந்தாலும் ஆங்கிலம் படித்தால் தன் உடன்பிறந்த தங்கை  மகள் லண்டன் படம் போலவோ, உன்னைத்தேடி படம் போலவோ   அத்தை மகள் ரத்தினம் போல அல்ல மாமன்மகள்  சத்யராஜ் படம் போலவோ என்ற கற்பனையில் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் மருமகளுக்கு  என்றாவது மணம் முடித்துக்கொடுக்கலாம் என்ற அற்ப இலங்கையின் நல்லாட்சி நாடகம் போல ஒரு கற்பனைத்திறன். அதுக்கு காவடி தூக்கும் 

யாழ் மேட்டுக்குடி பண்டித கோட்டுப்போட்ட இன்றைய சட்டதரணி போல   மக்கள் நலம் அறியாத பின்கதவு அறிவியூசீவி   எல்லாம் வெட்டி ஆடலாம் என்ற நினைப்பில்  அண்ணன் தங்கை உறவு என்பது கிழக்கு சீமையிலே  ராதிகாவோ  போலவோ) சம்திங் சம்திங் ஜெயம் பட பிரபு போலவோ அல்ல புலம்பெயர் பாசம் .என்பதை பின் அறிந்தார்!

இலங்கையின் ஆட்சியாளர்களின் நல்லிணக்க  தோல்விக்கு காரணம் இனவாத செயல்கள் எங்கு நடந்தாலும்! அதில் தமிழர் பாதிக்கப்பட்டால் பாரமுகத்துடன் இருப்பது. இது மலையக மக்களின் வாழ்வு என்றாலும் இலங்கைத்தமிழர் வாழ்வு என்றாலும்!

.மலைகத்தில் தோன்றிய சிங்களே வீரவித்தாரன என்ற இனவாத அமைப்பின் செயல்கள் சாமானிய மக்களின் வாழ்விலும் வடக்கில் மகிந்தவின் வசந்தம் போல அல்ல தெற்கில் வில்லும் சங்கும்  என்ற சட்டபூர்வ அமைப்பின் செயல்பாடு இது எங்கள் தேசம் (சிங்கள பூமி) என்று இனவாத செயல்கள் மலையகம் தாண்டி கொழும்புவரை விரிவாக்கம் கண்டநிலையில்!

 அரச அதிகாரிகளுக்கு கொழுத்த பணம் பெறும் வழிகள் தான் ஆட்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்வது , ஏதாவது ஆயுதங்களை கைப்பற்றியது என்று நாடகம் ஆடுவது .இப்படி நாடகமேடை தொடர பல வியாபாரிகள் தங்களின் இருப்பிடத்தையும் தொழிலையும் கைவிட்டு புலம்பெயரவும்,    உழைத்தது போதும் என்று வடக்கு நோக்கியும் போனார்கள்.

இந்த மண் எங்களின் சொந்தமண் போல அல்ல என்றாலும் எங்களின் வாழ்வியல் மூச்சு எங்கும் போவதில்லை என்ற நம்பிக்கையோடு இருந்தார் தவராஜா!




தொடரும்.   

///////////////////////////////////////////////////////////////
(சிங்கள வீரவித்தாரண என்ற இனவாத அமைப்பு சந்திரிக்கா ஆட்சியில் தோற்றம் பெற்றது இன்றைய நல்லாட்சியில் பொதுபலசேனா போல.)

4 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

நம்பிக்கைதானே வாழ்க்கை
நல்லதே நடக்கட்டும் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

அங்கங்கே உதாரணத்திற்கு திரைப்பட காட்சிகள்... தொடருங்கள் தோழர்...

வலிப்போக்கன் said...

தொடருகிறேன்....

Thulasidharan V Thillaiakathu said...

எப்படி இவ்வளவி நினைவாற்றல்? சரியாக சினிமாக் காட்சிகளைச் சொல்லிச் செல்கிறீர்கள். தொடர் இல்லையா...இதோ பழையதை வாசித்தால்தானே தொடர முடியும்...தொடர்கிறோம் தனிமரம் நேசன்....