இலங்கையின் கல்வித்துறையில் அரசாங்கம் வழங்கும் இலவச சேவையில் வைத்தியராகவும் , என்ஜினியராகவும் ,முகாமைத்துவப் பட்டதாரிகளும் உயர்கல்வி ,மேற்படிப்பு, என்று அரச பணத்தை விரயம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிடும் வரலாறு சேர் பொன்னம்பலம் ராமநாதன் காலத்தில் இருந்து இன்றுவரை தொடரும் ஒரு தொடர்கதை.
இன்றும் அதுக்கு சுவாரசியம் ஊட்டும் சினிமாவில் கவர்ச்சி போல இனவாத யுத்தம் மத்தியதர வர்க்கத்தையும் புலம்பெயர்வைத்தது எனலாம் !
அத்தோடு இலங்கையின் கல்வித்துறையில் ஏற்பட்ட சந்திரிக்கா ஆட்சியில் நவீனமயமாக்கல் செயற்பாடுகள் மூலமும் அதுவரை இருந்த திருச்சபைகளின் நிறுவாக செயற்பாடுகளுடன் ,மேலும் தனியார் துறையினர் கல்விச்சேவை வழங்கும் கல்விக்கூடங்களை தொடங்கும் வசதியின் மூலம் பலர் ஆங்கிலக்கல்விக்கு முக்கியம் கொடுக்கும் புத்துணர்ச்சி செயல்கள் இலங்கை எங்கும் பரவியது அம்மையாரின் ஆட்சி அலங்காரம் பலரும் அறியாத வெளிநாட்டுக்கல்விக்கூடங்களில் கூட உயர்கல்வியை பெறும் வசதிவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டது. இதில் இன்னொரு வேடிக்கை இலங்கை ஜானதிபதிகளிலே சந்திரிக்கா அவர்கள் படித்தது பிரெஞ்சு தேச பல்கலைக்கழகம் ஒரு போலி என்று கூட அன்நாட்களில் ஊடகம் செய்தியை தீரிவுபடுத்தியம் வரலாறு!
அந்த வகையில் இலங்கையிலும் பிரிட்டிஸ் கவுஸ்லின் செயல்த்திறங்கள் வீரியம் கொண்டது!
இனவாத யுத்தத்தினால் வடக்கில் இருந்து கொழும்புக்கும் ,வெள்ளவத்தை முதல் பானந்துறைவரையும் இடம் பெயர்ந்த வந்த யாழ்ப்பாணத்தவர்களின் புதிய பெஷன் ஒன்று பிரிட்டிஸ்கவுண்சிலில் ஏதாவது ஒரு கற்கைக்கு விண்ணப்பித்து ,அதனைப்பயில்கின்றேன் என்பதும் ,அதையே பீலாவாக மற்றவர்களிடம் கதையளப்பதும் ஒரு தற்பெருமை நானும் அடுத்த முதல்வர் என்பது போல!
மச்சான் நான் சாட்டர் எக்கவுண்ட் கோஸ் செய்கின்றேன், மார்க்கட்டிங் கோர்ஸ், ஐடி கோர்ஸ் என்று வாயில் நுழையமுடியாத பெயர்களை எல்லாம் தமிழ்சினிமாவுக்கு நிகராக கொரிய, ஈரானியப்படத்தின் பெயர்களை சொல்லி அதில் இருந்து உருவப்பட்டது என்பது சொல்வது போலத்தான் !
இந்தக்கல்விப்பாதை பலரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு பஞ்ச தந்திரம் போல கைகொடுத்தது .
இலங்கையின் வரலாற்றில் கல்வியில் மேலும் பன்முகப்படுத்தும் செயல் வடிவம் தான் கணனித்துறையின் வருகைப்புரட்சி !
உயர்வதுக்கு கிடைக்கும் பாதைகள் எல்லாம் ஏனோ பலரை வெளிநாட்டு மோகத்திற்கு நீர்வார்த்தது .அது மலையகம் நோக்கியும் மடைதிறந்தது.
அதுவரை தலைநகர் கொழும்பிலும் , கண்டியிலும் இருந்து செயல்ப் பட்ட கல்வித்துறை கழகங்கள் மலையகத்தின் பெரு நகரங்களான பதுளை, பண்டாரவளை, இரத்தினபுரி, எனவும் கிளைகள் படரத்தொடங்கியது சினிமாவில் டியுட்டல் செயல்பாடு போல மத்தியதர வர்க்கத்திற்கு ஈடாக கீழ்நிலை மக்களும் கல்வித்துறையில் அதிக தேடலைக் கொண்டவர்களுக்கு இச்செயல் வரப்பிரசாதம் ஆகியது .
குறிப்பிட்ட பணத்தொகையை ஆரம்பக்கட்டணமாக கட்டியபின் மற்றத்தொகையை பிரிவு பிரிவுவாக கட்டுவதன் ஊடாக கல்வியை தொடரமுடியும். அதன் மூலம் வெளிநாட்டுக்கல்வியக்கழகங்களில் பட்டம் பெறும் வசதிக்கு விண்ணப்பித்து அவர்கள் மேலும் கல்வியைத் தொடர நாட்டைவிட்டு புலம்பெயரமுடியும்.
அந்த இனிய பாதையைக்கூட முற்கலாக மாற்றிவிட்டார்கள் சில கல்வி வியாபாரிகளும் ,அரச ஊழிய ஊழல்வாதிகளும் .
காரணம் இந்த கோட்டா இன் ஊடாக அதிக புலப்பெயர்வு விசா ஒரு வியாபாரமாகியது 1997 இல் காலப்பகுதியில்.
அதனால் அதிக தடைகளை இலங்கையில் இயங்கும் ஐரோப்பிய , கனடிய ,அவுஸ்ரேலிய, நியூசிலாந்து, சைப்ரஸ் தூதர ஆலயங்கள் பின்பற்றத்தொடங்கியதும் ஒரு சொல்லப்படாத தூங்காவனம் போல எனலாம் !
இந்த நிலையில் தான் உயர்தர பரீட்ச்சை எழுதி விட்டு பெறுபேறு வரும் வரை காத்திருந்த கமலேஸ் மேற்படிப்பு என்ற போர்வையில் வெளிநாடு செல்வதுக்கு பொருத்தமான மார்க்கட்டிங் டெக்னோலஜிக் என்று சொல்லப்படும் சந்தைப்படுத்தல் நுட்பத்திறனுக்கு கொழும்பில் கல்வி கற்கும் வசதி பற்றியும் ,அதன் விபரங்களையும் அறிந்து தெளிவு பெற கொழும்புக்கு அழைத்துவர பின்புலமாக இருந்தான் யாழவன் !
நல்லாட்சியையும் நம்பிய சிறுபாண்மை அரசியல் தலமைகளை நட்டாற்றில் விட்டது போலவே கமலேசின் சாருமதி மீதான காதல் கல்விக்கழகத்தில் கிடைத்த ஒரு கறுப்பாடு ஊழல் செய்து தனக்குகிடைத்த வாய்ப்பினை போலியான சான்றிதல்களுடன் லித்துவேனியாவில் கல்விகற்கும் வாய்ப்பு என்ற போர்வையில் புலம்பெயரவைத்தான்! இலங்கையில் உயர்தரம் கற்றதுக்கான அடிப்படை சான்றிதல் இருந்தால் வெளிநாட்டுக்கல்விக்கழகங்களில் கல்வியை தொடரமுடியும் .
உயர்தர பெறுபெறு வெளிவந்த பின்னர் அதன் தகுதிச்சான்றிதல் ஒப்படைத்தால் போதும் என்ற நிலை அக்காலத்தில் இருந்தது! இப்போது சாதாராண தரத்தோடு ஆரம்ப படிநிலையை எட்டமுடியும் என்றளவுக்கு கல்வியின் தரம் சீரழிந்துவிட்டது இதை எல்லாம் என்றாவது பொதுவில் பேசவேண்டும் மச்சான் என்றான் கமலேசின் தம்பி நிலாந்தனுடன்!
ஒம் நிச்சயம் அண்ணா நீங்க எழுதனும் இல்லையேல் உங்க நட்புகள் ஊவா சமூக வானொலியில் உரைச்சித்திரம் போல சரி இதை புரிய வைக்கனும் யாழவன் .
நிச்சயம் தெளிவு பெறுவார்கள் பலர்! அதுசரி கமலேஸ் அண்ணா போகும் நாடு எப்படி என்று உங்களுக்குத்தெரியுமா?
கமலேஸ் அண்ணா தேவையில்லாமல் 12 லட்சம் கொடுப்பது பற்றிய உங்களின் கருத்து என்ன?
கமலேஸ் அண்ணா தேவையில்லாமல் 12 லட்சம் கொடுப்பது பற்றிய உங்களின் கருத்து என்ன?
நான் என்ன சொல்ல.......நிலாந்தன்?!!!!!
தொடரும்....
7 comments :
நனவிடை தோய்தல்
ஒரு புதிய வார்த்தையினை
அறிந்து கொண்டேன் நண்பரே
நன்றி
ஓ! இலங்கையின் கல்வித் துறையும் இந்திய நாட்டைப் போலத்தான் செயல்படுவது போலத் தெரிகிறது...புலம் பெயர்தல் என்பது பல காரணங்கள் இருக்கின்றனதான். நீங்கள் சொல்லுவது போல் தாய்நாட்டில் கல்வி கற்று அதுவும் கட்டணம் இல்லாமலோ அல்லது குறைவாகவோ செலுத்திக் கற்றுவிட்டு வெளிநாடு சென்று பணம் ஈட்டுதல்..அதில் சிலர் மீண்டும் தாய்நாட்டிற்குத் தாங்கள் ஈட்டும் பணத்தினால் உதவியும் செய்கிறார்கள் என்பதையும் மனதில் கொள்ளலாம் இல்லையோ நேசன்?!!! ஏனென்றால் இங்குத் தரமான கல்வி கிடைக்காத போது அதனை கிடைக்கும் நாட்டில் சென்று படித்து பணம் ஈட்டி மீண்டும் தாய்நாட்டில் முதலீடு செய்யலாம் தான். அதேபோன்ற தரமான கல்வி கிடைக்கவும் வழி வகுக்கலாம் தான் ஆனால் சொல்லுவது எளிது....யதார்த்தம் வேறு..
பல தகவல்களை அறிய முடிகிறது தங்களின் இத் தொடரின் மூலம்....தொடர்கிறோம்..
பயனுள்ள தகவல் பாராட்டுகள்
கல்வியை வியாபாரமாக்குவது அனைத்து வளரும் நாடுகளிலும் காணப்படுவது வேதனை.சிறப்பான விவரங்கள் நிறைந்த பதிவு
கல்வி வியாபாரம் ...
இளைய தலைமுறைகளுக்கே பாரம்...
ஆஹா நேசனை இப்போதான் எட்டிப்பார்க்கிறேன்.. நலம்தானே நேசன்?... இருப்பினும் நான் காணாமல் போனதோடு ஸ்நேகாவையும் கழட்டி விட்டிட்டீங்கபோல இருக்கே கர்ர்ர்ர்:)
வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற நிலை மாறி நாட்டுக்கு நாடு வாசற்படி என்று ஆகிவிட்டது நண்பரே...........
Post a Comment