http://www.thanimaram.com/2017/07/19.html
-------------------
-------------------------------------------
அடிக்கடி அழுது வடிக்கும் உன்
-------------------
-------------------------------------------
அடிக்கடி அழுது வடிக்கும் உன்
அழகான கண்கள் தான் என்னையும்
,அடுக்கடுக்காய் ,அனாதையாக்கப்பட்ட
அற்புதமான நம் காதலை எண்ணி
அதிசயமான பாடல்களை சுமந்து
அதிகாலை நேரத்தில் !
அருமையான நினைவழியா நாட்களாய்
அடிமனதில் இன்னும் ஒலிக்கின்றது!---
------------------------------
இனவாதம் பேசும் அந்த அரசியல்வாதியின்
இளைய சகோதரனுக்கு !
இதயத்தில் ஓட்டை என்ற செய்தி கேட்டு?
இனங்கள் கடந்து ,இருக்கும் பணத்தை எல்லாம் இன்முகத்துடன்
இறைத்தான் இதயமுள்ள
இலங்கைக்குடிமகன்!
----------------------------
ஆழ்மன உணர்வுகளில்
அடிநாதமாக வாழும்
அன்பு ஜீவன் போல
அகதியின் நெஞ்சில்
அருவி போல வந்தாயே!
ஆன்மீகம் எல்லாம் என் அருகில் போல
ஆசையில் கடந்து வா என்றாயே!
ஆற்றங்கரையில் தொலைத்த
அறுநாக்கொடி போல என் இதயம்
அலைகின்றது இன்னும் !
அருவிகளில் நினைவிருக்கா?
ஆணை வருகின்றது என்று
அணைத்துக்கொண்டாய் அன்று !
ஆணை போனதும் அதன் பின்னே நீ
அகதியாய் போனதும்,
அழியாத நினைவுகளாய்!
அந்த மரம் இன்னும் உன்னையே எண்ணி
ஆசையில் மடிந்த கதை நினைவிருக்கா?
அன்பே அத்தை பெத்த
அழகிய குயிலே!
7 comments :
படிக்கப் படிக்க மனம் வேதனையில் வாடுகிறது நண்பரே
கவிதையில் வேதனையின் தாக்கம் புரிகிறது நண்பரே
அருமை தனிமரம் நேசன்!!
//இனவாதம் பேசும் அந்த அரசியல்வாதியின்
இளைய சகோதரனுக்கு !
இதயத்தில் ஓட்டை என்ற செய்தி கேட்டு?
இனங்கள் கடந்து ,இருக்கும் பணத்தை எல்லாம் இன்முகத்துடன்
இறைத்தான் இதயமுள்ள
இலங்கைக்குடிமகன்!// மிகவும் ரசித்த வரிகள்!!!
நெகிழ்ச்சி தோழர்...
அருமையான கருத்து பாராட்டுகள்
இதயங்கள் நிறைந்தவர்கள் இதயமுள்ள ஈழத்தமிழர்கள்..............
அருமை நண்பரே
Post a Comment