முன்னர் இங்கே --http://www.thanimaram.com/2017/08/20.html
----------------------------------------
வழிகாட்டும் ஆசான்போலும்,
----------------------------------------
வழிகாட்டும் ஆசான்போலும்,
வழிநடத்தும் துணைவன் போலும்,
வாழ்க்கைப்பயணத்தில் என்றும்
வரவேண்டி ஆசை கொண்டேன்!
வா போகலாம் என்று
வழிவிட்டாய் ஆலயம் நோக்கி!
வரமறுத்த காதலியாய்!!
வழிகாட்டுகின்றேன் குருவாக!
----------------------------------------
விழிகளில் கண்ணிர் சிந்தும்
விழிகளில் கண்ணிர் சிந்தும்
விரும்பியவள் முகத்தில்
விரல்கொண்டு சாமரம் வீசுவோனோ?
விரைந்து வந்த தாமதித்த ரயில் போல
விட்டுப்பிரிந்த விரும்பிய
விதர்ப்ப நாட்டு வேந்தன் போலாவோனோ?
விறைக்கும் குளிர்தேசத்தில்!
விடுகதைகளுக்கு பதில் தேடும்
வினைத்திறனுள்ள எழுத்தாளர் போல
விடையில்லா காதலில்
விழுந்து !வீடுதேடி வந்ததும் ,
வீதியில் நின் தாய்
வீசீய வீர வார்த்தைகள் எல்லாம்
விரும்பிய பாடலைக்கேட்டே
விழிமூடும் நேயர் போலவே
விஞ்சி நிற்கின்றது ! இன்னும் !
விரல்களினால் நீ இழுத்து மூடும்
விழ்ந்து வரும் மேலாடையை நோக்கும்
விடுப்புப்பார்க்கும் சபையில்! இருந்து என்னைக்கண்டு
விலகிப்போய்
விழிகளில் நீர் சுரக்கும் செயல்கண்டு
வீரகேசரியில் எழுதிய
விமர்சனம் போல கண்ணால் பேசவா? அன்பே!
விலகிப்போன உன்
விபரமறியாத காதலில்
வீதியில் நின்ற கதையை
விரைவில் ஒரு தொடராக
விதைக்கும் ஆசையில் !
விண்ணுக்கும் மண்ணுக்கும் போல
விசர்க்கதைகள் எல்லாம் கண்ணால் பேசவா?
விரும்பியவள், விரும்புகின்றேன் நாயகி
விரும்பியவள், விரும்புகின்றேன் நாயகி
வீட்டில் என்னவளே என்று!
விட்டில்ப்பூச்சியாய்
விரைந்திடும் ரயிலைத்தேடி
வீரா படப்பாடலுடன்
வீதியில் ஒருவன்!
இன்னும் இன்னும் அழுதிடவே
இதயமும் துடிக்குது
இனியும் நீ வேண்டாம் என்று
இருளில் விட்டுச்சென்ற
இல்லற வாழ்வை எண்ணி
இனிதே விரும்பியவன்!///
-------------------------------------
யுகம் யுகமாய் நீயும்
யுவதி போல நானும்
யவன தேசம் எல்லாம்
யாசித்துப்பெற்று
யசோதையின் மைந்தன் லீலை போல
யாமறிந்த மொழியில்
யாழில் சுருதிமீட்டியதும்
யுத்தம் எனும் அரங்கனின்
யாழ்வருகையில்
யாழ்தேவியில் பிரிந்தோம் !
யாருக்கும் கிடைக்காத தீர்வு
யாப்பு போலவே
யாருமற்ற ஏதிலிகளாய்
யாவரும் தேடுகின்றோம்
உயிரிப் தேடலாய் ஈழம் என்னும்
யாசிப்பை!
3 comments :
யுத்தம் எனும் அரங்கனின்
யாழ்வருகையில்
யாழ்தேவியில் பிரிந்தோம் !//
சோகம்!! ஈழம் எனும் யாசிப்பை! காதல் என்று சொல்லிவந்தாலும் அதிலு ஈழத்தின் சோகம் காதலின் சோகம் என்ரு எல்லாம் கலந்துகட்டி..நல்லாருக்கு தனிமரம்......
வரிகளை ரசித்தாலும் வேதனைகளே கூடுதல் நண்பரே...
த.ம. இணைய மறுக்கிறது.
அனைத்து ரசனையிலும் இப்போ அழகாக கவி வடிக்கிறீங்க நேசன்.. வாழ்த்துக்கள்.. பாடல் பிடித்த படல் எனக்கும்:).
Post a Comment