28 September 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-17


முன்னம் இங்கே விம்மல்http://www.thanimaram.com/2017/09/16.html


-------------------------------------------------
இலங்கையின் அரசியல் வியாபாரிகள் வரையும் இனவாதக்கோட்டில் அரச நிறுவாக ஊழியர்கள் சாலையே அமைப்பது ஒன்றும்  பஞ்சசீலக்கொள்கை போல பொதுமக்கள் அறியாதவிடயம் அல்ல!

அரசியல்வாதிகள் தங்களின் வாக்கு வங்கியை எப்படி எல்லாம் அதிகரிக்கலாம் என சிந்திக்கும் தருனத்தில் ,அரச ஊழியர்கள் தம் வங்கிக்கணக்கில் எவ்வளவு ஊழல் மூலம் சொத்து சேமிக்கலாம் என்ற  விபரங்கள் எல்லாம் பணமுறிப்பு விடயம் போல அங்கங்கே ஊடகங்களில் விவாதிப்பதும்

வீடமைப்பு அமைச்சில்  போக்குவரத்து சாதனங்களை சூறையாடிவர்கள் கதைகள் தேர்தல் நேரத்தில் ஒளி/ஒலியில் விவாதிக்கும் போதுகளில் மட்டும்  !ஆட்சியின் செயலாளர்கள் கைதாவதும், பின் விசாரணை நடைபெறுகின்றது என்ற அறிக்கையின் பின்னே அவர்களின் சுதந்திரவாழ்வு பற்றி இங்கே எந்த ஊடகமும் தேடல் கொண்டதில்லை?


 காரணம் தேவையான விடயங்களை அன்பளிப்பாக கொடுத்து ஆட்சி நிறுவாகத்தில் இருப்பவர்களும் தப்பித்துகொள்கின்றனர்

சாதாரன படைத்தளபதியின் மகன் அமெரிக்காவில்  குடியுரிமை பெற்று கல்வி கற்பதுக்கு ஏது வருமானம் என்று யாரும் சிந்திப்பதில்லை

அரசியல்வாதிகளின் வாரிசுகள் எப்படி ஐரோப்பாவில் தங்குமிட அனுமதியுடன்  கூடிய உல்லாச வாழ்வு வாழமுடிகின்றது

சாமானிய ஒரு பட்டதாரியினால் உயர்கல்வி  தேடல் கொண்டு இன்னொரு தேசம் செல்வதுக்கான நிறுவாக கட்டமைப்புக்கள் தடைகள் எப்படி அரச ஊழியர்களின் வாரிசுகளுக்கும் ,அரசியல் வாதிகளின் குடும்ப உறவுகளுக்கும்  சிறப்புச் சலுகை என்ற செங்கம்பளம் விரிக்கப்படுகின்றது

இது பற்றி ஏன் ஊடகங்கள் மக்களின் கேள்விக்கு பதில் தேடுவதில்லை என்றால் !போர்த்தி மூடும்  தந்திரம்தான் இனவாத யுத்தம்  என்ற வெள்ளையானை  காது குத்தல்!

இனவாதம் ஆட்சிநிறுவாகத்தில் இருப்பது எல்லோருமே ஒரே தேசம் ஒரே இனம் என்ற மதவெறியும் ,இனவெறியும் கொண்ட கிழட்டுச்சிங்கங்கள்இங்கே தமிழர் எல்லாம்  மரத்தில்  படரும் கொடி போல என்ற கொள்கைவாதிகள்


எப்படி எல்லாம் அரச வளங்களை சுரண்டி சுகபோக வாழ்வு வாழ முடியும் என்பதை ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசி தம் வம்சத்துக்கு மாடமாளிகை கட்டுவோர் பற்றி எந்த ஆட்சி மாற்றமும் கண்டுகொள்வதில்லை ரமணா  படம் போல !இங்கே பலர் இன்னும் தூக்க வேண்டும்!

வலி தந்தவர்கள் வயிற்றில் அடிப்பது போலத்தான்   நிறுவாககட்டமைப்பை சீர்குலைப்பவர்களை நிச்சயம் தூக்கில் தொங்கவிட முடியுமா ஊடகத்தில் காட்சியுடன்இது சாத்தியமாக  இன்னும் பல ஆட்சி நல்லாட்சி என்று எதிர்காலத்தில்  வந்தாலும் முடியாத ஒரு நாள் முதல்வன் படம் போலத்தான்!


வெளியுறவுத்துறையிலும்,புலனாய்வுத்துறையிலும் ,சுங்கத்துறையிலும் ,துறைமுக அதிகார சபையிலும் ,ஊழல்வாதிகள் பெருகிவிட்டார்கள் என்று ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற போதெல்லாம் பொதுமேடையில் சட்டை கிழிக்கும் எதிர்க்கட்சியினர் எல்லாம் பின்னர் காணமல் போனோர் விடயம் போல கிடப்பில் போடும் பைல்கள் இங்கே அதிகம்

அரச சேவையாளர்கள் மீதான ஊழல்க்குற்றச்சாட்டினை விசாரிக்கும் பாராளமன்ற நிதிக்குழு ஆணைக்குழுக்கள் எல்லாம் கால அவகாசம் வேண்டி வேண்டியே ஓய்வு பெற்ற கதைகள் எல்லாம் பொதுவெளியில் பேச யாரும் முணைவதில்லையே ?

ஆடம்பரக் கார்கள்  மட்டும் எப்படி உள்ளே வந்தது ?இறக்குமதி அனுமதி பெறாமல் என்ற புலனாய்வுக்கட்டுரை  எழுதியவர் கூட காணமல் போன தேசத்தில் எதை எழுதில்  ...தணிக்கை!....செய்வது ?


பாதுகாப்பு அதிகாரிகளே பல லட்சம் பெற்றுக்கொண்டு பத்திரமாக தமிழர்களை வெளிநாட்டுக்கு ஆட்கடத்திய கதைகள் எல்லாம் சிங்கள ஊடகத்தில் போதை வஸ்த்து விற்கும் ராஜாக்கள் என்ற  செய்திகள் படிக்காத வாசகர்கள் தான் திரட்டியில் குழுவாக சேர்ந்து மைன்ஸ் ஓட்டு இடும் வித்தை போலத்தான் என்று  எள்ளி நகையாடிய கதைகள் எல்லாம் பொதுவெளி அரங்கில் இன்னும் மேடையேறவில்லை !என்று நீங்கள் நினைத்தால் !அது உங்களின் மடமைத்தனம்


கவிதையும் ,புனைவும் சமையல்க்குறிப்பும் தான் இப்போதைய ஊடகங்களில் வருகின்றது   ,முதன்மை தேர்வில் என்ற பட்டதாரிகள் பலர் சினிமாவோ அதிகம்  விரும்புகின்றார்கள்! அவர்கள்  அரசியல் பதிவுக்கு எத்தனை ஓட்டுப்போட்டு மகுடம் சூட்டினார்கள்?

 தம் எழுத்து பொன்னாது என்ற அவர்களின் வசந்த காலத்தில்? சினிமா அன்றி வேற என்ன சாதனைப்பகிர்வுகள் எழுதிக்கிழித்தார்கள் ?இப்படி எல்லாம் முதலில்  பேச எனக்கு ஆசையில்லை சேர்!


 இங்கே  ஐரோப்பா வந்த நிலையில் ஏழையின் மஞ்சல் பையில் இருப்பது! என் தாய்  எங்க நாட்டில் புத்த மடாலயத்தில் என்னை துஸ்ர ஐந்துக்கள் தீண்டக்கூடாது என்று மனம் உருகி பிரெஞ்சுக்காதலி போல விட்டுப்போன வெட்டியான் பிரார்த்தனை  இல்ல!

இது தூய பாசத்தில் செய்து பெரிய மதத்துறவியிடம்   ஓதி வாங்கி வந்த நூலும் ,என் பிள்ளை விவசாயி பெற்றவன் !என்றாவது இந்த ஊருக்கு திரும்பி வருவான் என் சந்ததி தயிர் விற்றாலும் தன்நம்பிக்கை கொண்ட குணம் என்பதை நினைவுப்பரிசா சிரித்த புகைப்பட நினைவு  இருக்கும் அந்த அழகிய பையை  குரங்குப்பொம்மை படம்  போல திருடன் கொள்ளை அடித்த பையில் கடவுச்சீட்டு தொலைந்தால் கூட மீளப்பெற எத்தனை தொகை கொடுக்க வேண்டும் என்பது தெரியுமா

அவசரமாக உரிய விசாவில் புலம்பெயர் நாட்டில் இருந்து தாயகம் போகவேண்டி இருக்கும் போது !நாம் படும் துயரம் உங்களுக்கு எப்படி புரியவைக்க முடியும்? ஐரோப்பா , அவுஸ்ரேலியா, கனடா போன்று நாட்டில் இருக்கும் நம்மவர்கள் என்ன காசு புடுங்கும் மரங்களா


அரச தூதுவர்  ஆலயங்களில் அரச வருமானம் எடுத்துக்கொண்டே இவர்கள் செய்யும் சித்த விளையாட்டுக்கள் பற்றி எந்த ஊடகத்தில் சுதந்திரமாக எழுத முடியும் சேர்

அமைச்சர் வீட்டில் சந்தேகத்துக்கு இடமானா முறையில் இறந்த இளைஞன் நிலை பற்றியோ?

 நாட்டில் முன்னால் முதல்க்குடிமகனின் வாரிசுவிடம் இருந்த போலி நாணயத்தாள் பற்றியோ உரிய விசாரணை புலன் விசாரனை தொடங்கமுன்னமே வாஞ்சிநாதன் படம் போல  மேல் மட்டத்தில் தொடர்பு பட்டவர்கள் கதை நமக்கு ஏன் என்று சிந்திக்கும் ஊடக மறைமுக தணிக்கை இன்றி !எப்போது எதை எங்கே  பேசமுடியும் அசங்க ரத்னாயக்க சேர்?




சம்பிக்க பேசுவதை வியப்புடன் நோக்கினார் அந்த புலனாய்வு அதிகாரி!


தொடரும்-....


5 comments :

KILLERGEE Devakottai said...

நிறைய விடயங்கள் அறிந்தேன் நண்பரே... தொடர்கிறேன்
தமிழ்மணம் இணைய மறுக்கிறது.

வலிப்போக்கன் said...

அறியாமல் இருந்ததை அறிந்தேன் நண்பரே....

சீராளன்.வீ said...

வணக்கம் நேசன் !

இலங்கை அரசியல் பற்றி நல்லாவே அறிந்து இருக்கீங்க !

படங்கள் செம

K. ASOKAN said...

பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

இலங்கை அரசியலை பிச்சு உதறிறீங்க!!!!! உங்க கதைகள் எல்லாவற்றிலும் இலங்கை அரசியல் ஊடுருவி நிற்பதைக் காணும் போது நம் மக்கள் எல்லோரும் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அறிய முடிகிறது!!! அதன் தாக்கம் தெரிகிறது..

தொடர்கிறோம்...