02 October 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்--18

 http://www.thanimaram.com/2017/09/17.html
-----------------------------------------------------


சீனி இறக்குமதி பைகளில் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு அமைச்சரின் உதவியாளர் கைது என்பதும் ,பாலியல் உல்லாசமையம் சுற்றிவளைப்பில் அமைச்சரின் உறவினர் கைது,வெளிநாட்டுக்கு     வீட்டுப்பணியாளர்களை அனுப்பிவைத்ததில் ஊழல் என்ற குற்றச்சாட்டுக்கள் என்ற  செய்தித்துளிகள் எல்லாம் மழைத்துளிகள் போல ஊடகத்தில்  தூவானம்! வீசுவதும், முடிவில் குற்றத்தடுப்பு விசாரணைத்திணைக்களத்தில் குற்றங்கள் விசாரணை செயலில் இருக்கின்றது என்ற ஒற்றைவரியில் ஆட்சியாளர்கள் தம் விசாரணையை காலதாமம்மாக்குவதில் கைதேர்ந்தவர்கள் .


அவன்காட் விவகாரத்தில் பதவி இறக்குவதும்  பதவி மாற்றத்தின் போது அமைச்சர் ஆகுவது போலவோ, சதொசா அமைச்சில் மோசடிதேர்தலில் நிதி மோசடியில் ஈடுபட்டார்கள், அரசவளம் தனி ஒருவரின் சொத்தாக்கப்பட்டது , இலங்கையில் ஊடக அமைச்சில் அனுமதி பெறாமல் வானொலி ஊடகம் நடத்தப்பட்டது ,அரசின் பணம் தவறாக முதலீடு செய்யப்பட்டது என்பதோ ?

பிரபல்ய விளையாட்டு வீரரின் கொலை விடயம் விசாரணை முடிவு விரைவில் கொலையாளிகள் பெயர்கள் வெளியிடப்படும் என்ற வாக்குறுதிகள் எல்லாம்! ஏனோ ?எந்த முதல் குடிமகன் என் தந்தையின் வரலாறு எழுதிய மகள் முதல் அச்சு நூல்களிலும் வெளிப்படையாக பேசியதில்லை என்பதும் ,இங்கே முகநூலில் எதுவும் வெளிப்ப்டையாக விமர்சனம் பேசியதில்லை எல்லாம்  ஒரு அரசியல் என  விளம்பரம்போலத்தான் சேர் !

 நீலப்படையணி என்ற  ஒரு பொதுச்சேவை அமைப்பில் இருந்தவர்கள் பலருக்கு பொதுத்தளத்தில் தொடர்ந்து சேவையாற்ற பயிற்ச்சி பெற வெளிநாடுகளுக்கு அரசின் சார்பில் சென்ற மாணவர்கள் பற்றிய அறியாத மூடுபனி பக்கங்கள் , நாடு திரும்பாதோர் பட்டியல் எல்லாம் யாரும் பொதுவெளியில் ஏன் வெளியிடமறுக்கின்றார்கள் ?

விரைவில் விரைவில் என்றே ஆட்சி விரைந்து ஓடிவிடும் ,ஆனால் அடங்கமறுத்த அதிகாரிகள் முதல்க்கொண்டு ,மக்கள் நேர்மையான பணியாளர்கள் அரச இடைத்தரகர்களின் வன்முறைச் செயப்பாட்டினால் அரச உத்தியோகம் வேண்டாம் என்று பதவி துறந்து வெளிநாடு சென்றவர்கள் எல்லாம் !

ஆட்சி மாற்றத்தின் பின் அரச ஊழியர்கள் பாதிக்கட்ட மக்கள் சேவை ஆணைக்குழுவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரும் விசாரணைக்குழு அதிகாரிகள் கூட ஏன் சார் ?சட்டத்தை தவறாக வளைப்போருக்கு சிறைவாசல் திறப்பது இல்லை ?

அமைச்சரின் மகன்கள் , மகள்களின் பாலியல் தேவைக்கு எத்தனை ஆயிரம் கோடிகள் நட்சத்திரவிடுதியில் தங்கினார்கள்  என்ற போர்வையில்  நீர்வேது குடிப்பது? மாசாஜ் என்ற சித்துவிளையாட்டு இராஜமுத்திரை  படம்  போலத்தானா

நீ ஆதாரம் இல்லாமல் கதையாளக்கூடாது சம்பிக்க பொதுத்தளத்தில் அரசுக்கு எதிராக பல போலுக்குற்றச்சாட்டு இருக்கு  ! கடந்த ஆட்சிக் காலத்தவர்கள்  மீது நிறைய போலியானகுற்ச்சாட்டுக்கள் இங்கே இருக்கு.

 அதுவும் ஒரு சில குற்றச்சாட்டு போலிதான் சேர் . வயாக்கார புகழ் பெற்றது மட்டும் பாராளமன்றத்தில்  பேசுவோர்! மகன்களின் காமலீலைகள் மனம் திறந்து  டிவிட்டரில்  கிளுகிளுக்காட்சிகள் பதிவேற்றம் செய்வேன் என்றவர்களின் வெற்றுத்தோட்டாக்கதை எல்லாம் இங்கே பொம்மை பாடல் போல  நீயும் பொம்மை நானும் பொம்மை !

இதுவரையும்  விளையாட்டு வீரரின் காதலி இப்போது எங்கே? பாரத நாட்டில் எதிர்க்கட்சித்தலைவி  செயல்பாட்டில்  இல்லாதது போல ஏனோ இருபக்கமும் கூச்சல் அடங்கிவிட்டதே !

ஏதோ கொடுப்பணவுப் பேரங்கள் நிச்சயம் அதிகம் இருக்கும் சேர் !

லித்துனியாவில் மாணவர்கள் என்ற  போர்வையில் அரச இடைத்தரகர்களும் , ஆட்சியின் இளையவர்கள் வாரிசு விளம்பரதார்களும் குறும்படம் இயக்கம், தொழில்நுடப அறிவுத்தேடல் என்ற போர்வையில் சமூகச்சீர்ழிவு வீடியோக்கள் பல நம்நாட்டுக்கு இறக்குமதியாகுவதுக்கு காரணம் எல்லாம் மேல்தட்டு ஆடம்பரவாழ்க்கை வாழ்வோர்கள் தான் சேர்

ஏன் திடீர் பணக்காரன் ஆகும் ஆசையில் எத்தனை பேர்  இங்கே எத்தனை கூத்து ஆடுகின்றார்கள்! உண்மைதான் அசங்க ரட்னாயக்க சேர். ஆனால் 
சாமானிய மாணவர்களிடம் நட்சத்திரவிடுதிக்கு போவதுக்கு ஏது கேளிக்கை வசதியிருக்கு?  

ஒருநாள் கூத்து ஓட்டுப்போடவே  போக்குவரத்து  வசதி இல்லாத ஊர்கள் போல  ஒரு  விரும்பிய சினிமாவுக்கு போவதற்கே இங்கே பல வறுமையின் நிறம் சிவப்பு போல இருக்கும் நிலையில்! தினமும் உணவு  வறுமை வாட்டி எடுப்பதைப்பற்றியோ, வேலைவாய்ப்பு இன்மை , நாளாந்த தோட்டத்தொழிலாளர்கள் கூலிவிடயமோ  இங்கே நுன்னிய அரசியல் போல நம்  சினிமா பேசாது!


 ஆனால் பொப்பாடகர் ,வட இந்திய நட்சத்திரப் பட்டாளம் இலங்கை வருகை, மார்புக் கச்சையை (உள்ளாடையை )கழற்றி வீசிய ரசிகை  என்ற செய்தியின் பின்னே இருக்கும் கிளுகிளுப்பு , பணப்பரிமாற்றம் என்ற போர்வையில் அரசுக்கு நட்டம் ஏற்படுத்திய  பற்றி எல்லாம் எந்த நல்லெண்ண தூதுக்குழுவும் விசாரணையில் சிக்கிக்கொண்டதில்லையே?சாதாரன  பாலியல் வழக்கில் சிக்குண்ட நடிகை போல

நடிகையின் விலைமதிப்பான சொகுசு கார்கட்டுப்பாட்டை மீறியதால் விபத்து நடத்து என்று அறிக்கைவிடும் எந்த பொலிஸ் அதிகாரியாவது? நடிகையின் காரில் இருந்த பொருட்கள் பற்றி ஏதும் சோதனை செய்ததில்லையே ?



ஏன் அது பற்றி ஊடகம் மூன்றாவது கோணத்தில் சிந்திப்பதில்லை ?இங்கே திட்டமிட்ட கொலைகள் வெள்ளித்திரை நாடகம் போல அல்ல , யுத்தம் என்ற  ஏமாற்றுக் கவசத்தின் பின்னே பல திருவிளையாடல்கள் பொதுத்தளத்தில் பேசவோ !எழுதவோ ?அச்சநிலை இருப்பதுக்கு காரணம் குற்றம்மிலைப்பவர்களும் ,குற்றத்துக்கு உடந்தையாக ஆட்சிநிறுவாகத்தில்  இருப்பவர்களும்  விக்ரம்வேதா போல எப்போதும் மாற்றம் காண்பதில்லையே !பாதுகாப்பு செயலரும் ,பாதுகாப்பு ஆலோசகர்ளும் ,அரசாங் ஊடகப் பேச்சாளர்களும் மட்டும் தானே முகம் மாறுகின்றார்கள்.

 மற்றைய நிறுவாக துறைகளில் ஏன் உடனடி அமைச்சர்களின் செயலாளர் முதல் பாதுகாப்பு அதிகாரிகள் வரை மாற்றாங்களை எந்த ஆட்சியிலும் செய்ய முடியாது இருக்கின்றது சேர்

சில நேரத்தில் மறைக்கப்பட்ட விடயங்களை  சிலதை யாரிடமாவது சொல்வது காலத்தின் கடமை என்பதால் தான் இந்த விடயங்களை எல்லாம் உங்களுடன் பேச  விளைகின்றேன்!




.இது தேசவிரோத செயல் அல் நாம் எப்போது பொதுத்தளத்தில் சிறப்பாக வெளிநாடுகள் போல செயல்படப்போகின்றோம்?


தொடரும்...

4 comments :

KILLERGEE Devakottai said...

அரசியல் பலம் உள்ளவர்கள் எல்லாம் சாதிக்கின்றார்கள் நண்பரே
தொடர்கிறேன்...

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அரசியல் நன்றாக வருகிறது நேசனுக்கு.... நீங்க தேர்தலில் நில்லுங்கோ என் வோட் நேசனுக்கே:)

குடும்பக் குத்துவிளக்கு நன்றாக இருக்கு:).

வலிப்போக்கன் said...

திடிர் பணக்கார அரசியல் ரவுடிகள் அப்படித்தான் நண்பரே...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அரசியல் வாதிகள் திருந்த மாட்டார்கள். அதிகாரிகள் அவர்களுக்கு உறுதுணை அல்லவா