http://www.thanimaram.com/2017/11/27.html
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் ஒவ்வொரு சிக்கல்களுக்கும் உருப்படியான உடலியல்/உளவியல் மருத்துதீர்வு வழங்குவதில் என்றும் முன்னனி வகிக்கும் நாடுகளில் பாரிசின் சுகாதார அமைப்பின் சேவைப்பண்பாட்டை என்றும் மறக்கமுடியாது .
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் ஒவ்வொரு சிக்கல்களுக்கும் உருப்படியான உடலியல்/உளவியல் மருத்துதீர்வு வழங்குவதில் என்றும் முன்னனி வகிக்கும் நாடுகளில் பாரிசின் சுகாதார அமைப்பின் சேவைப்பண்பாட்டை என்றும் மறக்கமுடியாது .
இன/மத/மொழி கடந்து தேக ஆரோக்கியம் ஒவ்வொரு பிரஜைக்கும் மிகவும் பிரதானம் என்றும் சிந்திப்பதில் இத்தேசம் ஒரு சொர்க்கபூமி.
பொருளாதார கஸ்ரம் இருந்தாலும் ,ஒவ்வொருவருக்கும் அரசின் மானியங்கள் பெற்றுக்கொள்வது முதல் எப்படி எல்லாம் தவனை முறையில் மருத்தவச்செலவு திருப்பிச்செலுத்த முடியும் என்ற இலவச ஆலோசனைகளை வழங்குவதுக்கு மருத்துவமனையிலேயே ஒரு தனிப்பட்ட பிரிவு இருப்பதையும் மறந்துவிடக்கூடாது.
இலங்கையில் இருந்து வந்து குறுகியகாலம் தான் என்றாலும் கமலேஸ் போதைவஸ்த்து பாவனையில் இருந்து மீள இங்கே வளங்கப்பட்ட உளவியல்ரீதியான அறிவுரைகள் மிகவும் காத்திரமான சிந்தனையைத்தூண்டியன் விளைவாகhttp://www.desintoxicationdrogue.fr/cure-de-desintoxication-complete-14-jours
விரைவிலேயே கமலேஸ் போதை வஸ்த்து பாவனையில் இருந்து மீண்டது மகிழ்ச்சி !
விரைவிலேயே கமலேஸ் போதை வஸ்த்து பாவனையில் இருந்து மீண்டது மகிழ்ச்சி !
எப்போதும் வியாபார விற்பனைப் பிரதிநிதியாக நானும், என் நட்புகள் எல்லோரும் அவசர தொழில்முறை. உதவி கேட்டாள் துணிந்து வழங்கிய தவராஜா முதலாளிக்கு என்னால் வழங்கக்கூடிய ஒரு சிறிய கைமாறு இதுவாகவே மட்டுமே இருந்தது யாழவன் !
பெருமைக்காக நான் இங்கே ஏதும் சொல்ல வரவில்லை !ஆனால் இந்த விற்பனைப்பிரதிநிதி என்பது போல சுதந்திர உணர்வு என்ற புத்தம் புதுப்பயணம் படம் கூட நீ பார்த்து இருக்கமாட்டாய்!
மலையகம் நோக்கிய பலதேடல்களுக்கும் ,பிரதேசவாதம் கடந்த சிந்தனை விருத்திக்கும் காரணமாக இருந்தது பொதுவெளியில் என்பது நீயும் அறிந்து இருப்பாய் !
என் தனித்துவ சிந்தனையின் பின்னே பல புது முகங்கள் பல ஊர்களுக்கு இளையஞர் அணி படம் போல பயணித்தது எனக்கும் மகிழ்ச்சி தான் .
மலையகத்தின் எழில்களுக்கு மட்டுமா இதயங்கள் இடம்மாற்றிக்கொண்டதுக்கும், அரசியல்வாழ்வில் உள்நுழைவதுக்கும் இந்த வியாபார துறை வழிகாட்டியது போலவே
இந்த சுறுட்டுக்கடைகளும் பல கதைகள் சொல்லும் !ராகுல், ஜீவன், யாழவன் ,தனிமரம் என நாம் இந்த வியாபாரம் பற்றி நீண்ட வாழ்வியல் அனுபவம் பலருக்கு பொதுவெளியில் சொல்லும் தகுதிகூட இருக்கு !
இந்த சுறுட்டுக்கடைகளும் பல கதைகள் சொல்லும் !ராகுல், ஜீவன், யாழவன் ,தனிமரம் என நாம் இந்த வியாபாரம் பற்றி நீண்ட வாழ்வியல் அனுபவம் பலருக்கு பொதுவெளியில் சொல்லும் தகுதிகூட இருக்கு !
ஆனால் இந்த பொருளாதாரம் தானே நம்மை அரசியல்வாதிகளிடம் கைகட்டி நிற்கவைத்தது!
இன்று முகநூலில் பல அரசியல்வாதிகளின் பிரச்சாரமுகவர்கள் போல வேற்று முகத்தில் உலாவினாலும், அவர்களின் சேவையையும் மறக்காமல் தானே இருக்கின்றோம் !ஒன்று சொல்லவா யாழவன் !
வியாபாரிகள் என்பதைத்தாண்டி விற்பனைப்பிரதிநிதியாக பல்தேசிய கம்பனிக்களுக்கு தினம் எத்தனை லட்சங்கள் காசாகவும், காசோலையாகவும் கைகளில் காவிச்சென்று இருப்போம் ஜனாதிபதியின் செயலாளர் கோப்பு போல !
அப்போதெல்லாம் இந்தப்பணம் எங்களை ஒரு பொருட்டாவே கருதியதில்லையே ?நாங்களும் ,நாகரிகமாக அலங்கரித்து வீதிகளில் அலைந்த போதெல்லாம் மதிப்புடனும் ,மரியாதையுடனும் தானே இருந்தோம்.
அது எப்படி புதுப்பணம், புதுத்தேசம் என்றதன் பின் எங்களின் இயல்புகளை சீண்டிப்பார்ப்பது?
ஒரு உருகும் பிரெஞ்சுக்காதலிக்கு கல்வித்தகுதி தேவைப்பட்டது ?தாலியோடு தனிமரம் நாயகிக்கு மறுதார துணிவு இல்லை!
இந்த சாருமதிக்கும் அவள் தாய்க்கும் நல்ல பொடியன் கமலேஸ் பற்றி புரிந்துகொள்ளமுயற்ச்சிக்கவில்லை.
எனக்கு யார் மீதும் கோபம் அல்ல. ஒருவனை புரிந்துகொள்ளாமல் அவன் மீது வீண்பழி போடுவது அழகல்ல, புரிந்துகொள்ள ஏன் மறுக்கின்றார்கள்?
இத்தணைக்கும் உறவுகள் அல்லவா எப்படி இவர்களினால் ஆலமரத்தின் வேர்கள் மீது சுடுதண்ணீர் வார்ப்பது போல வார்த்தைகள் கொண்டு ஈட்டி போல குத்தமுடியுது?
எல்லாம் காலமாற்றம் ராகுல்!
நீயும் சரி ,நானும் சரி எதையும் இங்கே மாற்றம் காணும் சக்தி படைத்தவர்கள் அல்ல! இப்ப சொல்லு எங்க எப்படி இருக்கின்றான் கமலேஸ்?
இங்கே தான் தனியாக ஒரு சில்லறைக்கடை தொடங்கி இருக்கின்றான் !என் முகாமைத்துவத்துத்தின் கீழ் !
ஓ நீ பிரெஞ்சில் தானா இருக்கின்றாய்? நான் எங்கு இருப்பது என்பது முக்கியம் அல்ல என் அமைதிதான் முக்கியம்!
ஓ நீ பிரெஞ்சில் தானா இருக்கின்றாய்? நான் எங்கு இருப்பது என்பது முக்கியம் அல்ல என் அமைதிதான் முக்கியம்!
கமலேஸ் அனுபவம் அவனை இன்னும் பல படிகளில் முன்னேற்றும் !உறவுகளின் அவமதிப்பு அவனை சத்ரியன் படம் போல மீண்டும் பழைய கமலேஷ் போல பார்க்க வைத்து இருக்கின்றது .அதில் என் வழிகாட்டல் உதவி அவனுக்கு இன்னொரு தேசியகீதம் போல !
இன்னொன்று சொல்லவா? தவராஜா அண்ணாவும் அவரின் மணைவியும் அடுத்த வாரம் இங்கே சுற்றுலா வருவதுக்கான ஏற்பாடுகளை அங்கிருக்கும் அன்பான அரசியல்வாதியின் உதவி மூலம் செய்து விட்டேன் .அவருக்கு வெற்றிலையின் வாசம் நல்லாக தெரியும்!
தவராஜா அவருக்கு சித்தசுவாதீனம் இப்போது கொஞ்சம் முன்னேற்றம் கண்டு இருக்கின்றது என்று என் வானொலி நட்பு டாக்டர் சொல்லி இருந்தார் !
அரசியல்வாதிகளின் குடும்ப சுற்றுலாவில் வருவோருக்கு எந்த தடைகளும் அதிகம் இருப்பதில்லைத்தானே யாழவன்!
ஓம் !அதுசரி இத்தனை செயல்களை ஐநாவின் அறிக்கை போல விரைந்து செய்து கொண்டு இருக்கும் உன்னை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு!
ஆமா இது பற்றி சாருமதியின் தாய்க்கு ஏதாவது தெரியுமா ?இல்லை !!
நிச்சயம் ஒருநாள் அவர்களின் போலி முகம் சபையில் கிழிக்கப்படும்!
அப்போது இருக்க வைத்து அழகு பார்த்து செல்பி எடுத்து முகநூலில் போடும் போது புரிந்துகொள்வார்கள் !புதுப்பணம் ஒரு போதும் நல்ல நட்புக்களையும், நல்ல உறவுகளையும் சேர்ந்தே பயணிக்க வழிக்காட்டாது இருகண்கள் போல என்ற யதார்த்த உண்மையை புரிந்துகொள்ளட்டும்.
நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும் . நானும் ஏதோ தேடல் கொண்டதுக்கு உன் மூலம் ஒரு விடிவு கிடைத்து இருக்குது!
எப்படியாவது தவராஜா குடும்பம் மாயாண்டி குடும்பத்தார் போல மகிழ்ச்சியாக இருந்தால் போதும்.
ராகுல் கந்தன் ஸ்டோர் முதலாளி இங்கு வரும் போது சொல்லு பாரிஸ் விமானநிலையத்தில் வந்து சந்திக்கின்றேன் கூடவே செல்பி எடுத்துப்போட்டு தனிமரத்துக்கு பவுசு காட்டவேண்டும்!
முன்னர் நீ பார்த்த முதலாளியுடன் இப்போது என் சந்திப்பு என்று!
அவனைவிட்டுவிடு அந்த சினேஹாவோடு கற்பனையில் மஜா பண்ணட்டும்!
தள்ளிப்போகும் விழித்திரு பட வெளியீடு போல )))தந்தை மகன் சந்திக்கும் போது நல்ல பாடல் இணைய வானொலியில் ஒலிக்க வேண்டும்.
இந்த காதலும் சிலருக்கு படிப்பினை கொடுத்து இருந்தால் மகிழ்ச்சி!
அப்புறம் கமலேஸ் அதிகம் பொதுசமூக ஊடகத்தில் விலகி இருப்பதுக்கு காரணம் வியாபார தூர நோக்கம் அன்றி வேறில்லை .விரைவில் அவனுக்கும் ஒரு பெண் ஊரில் இருந்து பார்க்கச்சொல்வேன்! அந்தக்கலியாணத்தை பெரியண்ணா படம் போல நானே நேரில் இருந்து நம் சம்பிருதாயம் எல்லாம் அடுத்த தலைமுறைக்கும் விளக்கி நடத்திவைப்பேன் .
அப்புறம் கமலேஸ் அதிகம் பொதுசமூக ஊடகத்தில் விலகி இருப்பதுக்கு காரணம் வியாபார தூர நோக்கம் அன்றி வேறில்லை .விரைவில் அவனுக்கும் ஒரு பெண் ஊரில் இருந்து பார்க்கச்சொல்வேன்! அந்தக்கலியாணத்தை பெரியண்ணா படம் போல நானே நேரில் இருந்து நம் சம்பிருதாயம் எல்லாம் அடுத்த தலைமுறைக்கும் விளக்கி நடத்திவைப்பேன் .
இதை எல்லாம் தனிமரத்திடம் சொல்லிவிடாத அந்த நாதாரி கதை மாந்தர்களும், உண்மை ஊரின் பெயர்கள் மாற்றி உலகமேடையில் மலையக காற்றினை பறக்கவிட்டுவிடுவான் புகழ்விரும்பி.
விரைவில் அவனுக்கு ஏதாவது தொல்லை கொடுக்கனும் பார்க்கலாம் நேரம் வரும் போது! இப்போது மகிழ்ச்சியுடன் இருப்பாய்தானே யாழவன் ?
நூறுவீதம் மனமகிழ்ச்சி அழைப்பை துண்டிக்கின்றேன். மீண்டும் அழைப்பினை நேரம் கிடைக்கும்போது எடு !அதுக்கு முன்னாடி
இன்னொன்று இப்ப வைப்பர்/டிவிட்டர்/ வாட்சாப் எல்லாம் நீ பிரபல்யம் என்று சொன்னாலும் யாழவன் என் போல ஒரு நல்ல நம்பிக்கையான நட்பு வட்டத்தை உன்னால் என்றும் உருவாக்கமுடியாது!
உன்மைதான் ராகுல் நீ ஒரு வழிகாட்டி குரு போல !பாரிசில் குளிர் தொடங்கப்போகுது !
நீ எனக்கு திரட்டியில் கள்ள ஓட்டு போடுவது போல ஐஸ் வைக்காத ! நண்பா நானும். உன்னோடு ஆன்மீகம் பக்கம் நோக்கி வரவோ?))
போடா லூசு யாழவன் ! அங்கேயும் அரசியல் போல போட்டிகள், பொறாமைகள் இருக்கு வா என்றும் சொல்லமாட்டேன்! வரவேண்டாம் என்றும் தடுக்க மாட்டேன் ஆனால் எல்லாவற்றையும் தாங்கும் பக்குவம் இருந்தால் மகிழ்ச்சி !
நானும் வேலைக்கு போக வேண்டும் மீண்டும் சந்திபோம் !நிச்சயம் ராகுல் ஒரு செல்பி விரைவில் எடுப்போம்!
காத்திரு சிறைக்கைதிகள் விடுதலை விவகாரம் போல ! நீ திருந்தவே மாட்டாய்!அழைப்பினை துண்டித்தான் ராகுல் !
சுபம்!
முற்றும் கற்பனையே இத்தொடர்!
4 comments :
படங்களும் பதிவும் அருமை
ஆஹா முடிவுக்கு ஓடி வந்துவிட்டேன் நேசன்... பல கதைகளை ஒன்றிணைத்து சுபமாக முடிவடையச் செய்திட்டீங்க...
//முற்றும் கற்பனையே இத்தொடர்!//
எனக்கு காதில் 2 தடவைகள் குத்தியிருக்கு:) இதை நான் நம்புவேனோ?:)... நம்போணும் எனில் ஸ்நேகா தலையில் அடிச்சு சத்தியம் பண்ணுங்கோ பார்ப்போம்:).
கற்பனையாக இருப்பினும்
முழுவதும் கற்பனையல்ல என்பது புரிகிறது
நன்றி நண்பரே
ஓ! முற்றும் போட்டாச்சு! கமலேஸ் குணமாகிவிடுவார்!! நல்ல நட்பூக்கள் இருக்கும் போது!...அது சரி யதார்த்தம் கலந்ததுதானே கதை. நம்மைச் சுற்றி நடப்பவற்றைத்தானே நாம் கதையாகக் கற்பனையும் கலந்து வடிக்கிறோம்!! அப்படி உங்கள் கதையிலும் நிஜம் கலந்திருந்தாலும் கற்பனையாகவே எடுத்துக் கொள்வோம்!
மலையகத் தொடர் தொடங்கிடுமோ விரைவில்!!?? தொடர்ந்து எழுதுங்கள் நேசன்!! வாழ்த்துகள்!
துளசிதரன், கீதா
Post a Comment