எழுத்தில் மனம் இசையைக்கேட்டு மயங்கும் ஒரு ரசிகன் போல நானும் தொடர்கதைகள் என்ற எழுத்தில் சந்தோஷம் கொள்கின்றேன். என் வேலைப்பொழுது ரயில் பயணங்களில் ஐபோன் ஊடாக போக்குவரத்து தொடர்புப் பாலமாக இந்த உலகம் எங்கும் தனிமரம் என்ற மரக்குறியீட்டின் பின்னே உணர்ச்சிகளின் ஒரு வடிகாலாக எழுதுகின்ற மன அமைதி /ஆத்ம சந்தோஷத்தினை தொடர்கள் தான் எப்போதும் எனக்கு தருகின்றது.
இதுவரை எழுதிய தொடர்களில் நொந்து போகும் ஓர் இதையம்,மலையகத்தில் முகம் தொலைந்தவன் ,உருகும்பிரெஞ்சுக்காதலி, என் உயிரே என்னில் இருந்து விலகும் நொடி ,தாலியோடு தனிமரமாக தவிக்கின்றேன், விழியில் வலி தந்தவளே!,யாசிக்கும் ஓர் ஏதிலி, முகம் காணும் ஆசையுடன்!, விழிகளில் வந்திடுகண்ணே விம்மலுடன், என இந்த வலையுலகில். பலரின் கவனிப்பைப்பெற்று இருக்கின்றேன் தனிமரம் என்ற மகிழ்ச்சிக்கு இணையத்தின் நேர விலை அதிகம் தான்.
இதில் மலையகத்தில்முகம் தொலைந்தவன், உருகும் பிரெஞ்சுக்காதலி,விழியில் வலி தந்தவளே,தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் என்பன நட்புக்களின் உதவியுடன் மின்நூல் கண்டு இருக்கின்றன. அதில் அறிஞர் யாழ்பாவண்ணன் உதவியும்,http://www.thanimaram.com/2015/04/blog-post_2.html, free tamil ebooks - fte - cc licenced tamil ebooks, உதவியும் மறக்கமுடியாத உதவிகள்!
என்றாலும் மலையக ஊர்கள் பற்றி அறியாத /தெரியாத /தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு சிலருக்கு ,ஒவ்வொரு ஊரின் சாமானிய இயல்பு வாழ்வின் முகங்களை கொஞ்சம் இங்கே பாருங்கள் கொட்டிக்கிடக்குது செல்வங்கள் பூமியிலே என்ற பாடல் போல தொடர்கதைகளின் மையப்புள்ளியாக பல மலையக மண்ணின் வாசங்களை எந்தத்தணிக்கையும் இன்றி பதிவு செய்யும் ஆவலில்தான் பல இடங்களை பொதுவெளியில் பேசியிருக்கின்றேன் .
இலங்கையின் ஆட்சியாளர்களின் கப்பம் கோருதல்/மிரட்டல் ,உயிர்ப்பயம் என்ற இன்னொரு முகம் இங்கே சுதந்திர தேசத்தில் இருந்து. இது காட்டிக்கொடுப்பு/ தேச துரோகம் என்ற சிந்தனைவட்டம் தாண்டிய சாமானியவொரு விற்பனைப்பிரதிநிதி.
பல ஊர்களில் பல முதலாளிகளை வியாபார நிமித்தமும் விளம்பரம் பெறுவதுக்காகவும் சந்தித்த அனுபவம் என்ற கர்வம் தனிமரத்திடம் எப்போதும் இருக்கு .
முகநூலில்க் மாடு மேய்க்கின்றேன் என்பதன் பொதுவெளி விளையாட்டுப்பேச்சு ,வியாபார உலகில் நுழைந்தவர்களுக்குத்தான் அதன் இன்னொரு முகம் அறிந்துகொள்ளமுடியும் .
எத்தனைபேரினை வியாபார நிமித்தம் சந்தித்து ,வழிகாட்டி, சூழ்நிலைகளை சாதமாக்கிகொள்ள வேண்டும் எந்த ஊர் போனாலும் அங்கேயும் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்ற சினிமா வசனம் போல !
யாரையும் பொதுக்குண இயல்புடன் சீண்டுவது அழகல்ல! சிலவிடயங்களை மறந்து தான் பொது ஊடகத்தில் ஓய்வுப்பொழுதில் சிரிப்பதும், கவிதை வடிப்பதும் ,காட்சிகளுடன் கலாய்ப்பதும் என கால நதியில் தனிமரமும் தொடர்ந்தும் பயணிக்கின்றேன்!
என் சொத்துக்கள் என்றால் எப்போதும் நினைவுகள் அன்றி வேறில்லை சேமிப்பாக இன்றும் பாரிசில்)))
இந்தத்தொடரில் என்னை அதிகம் பின்னூட்டம் இட்டு ஊக்கிவித்தவர்களில் முதலிடம் அன்பு வாத்தியார் கரந்தை ஐயா அவரின் பின்னூட்டங்கள் சுறுக்கமாகவும்,பரீட்சை வேலைப்பளுவுக்கும் இடையில் தொடரை ரசிக்கின்றார் என்ற உள்ளுணர்வையும் தொட்டுச்சென்றது.
அவர் போலவே நண்பர் கில்லர்ஜீ,திண்டுக்கல் தனபாலன், வலிப்போக்கன், ரஜீவன் ராமலிங்கம்,நாகேந்திரபாரதி ,அசோகன் குப்புசாமி, யாழ்பாவண்ணன், முங்கில்காற்று முரளிதரன், அஞ்சலின், அதிரா ,துளசிதரன் சார், பூவிழி,யாழ்புத்தன், பாவலர் சீராளன், Mohamed althaf ,ஊமைக்கனவுகள்,முகம் காட்டாத புதிய உறவு, எல்லோருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல இதயத்தில் இருந்து .
தொடரினை முகநூலில் வாழ்த்தியவர்கள்,லைக்கிட்டவர்கள் எல்லோருக்கும் என் பாசமான நன்றிகள் ,
கூகிள் + உலகத்தமிழ் வலைப்பதிவர்களின் குழுமத்தில் பின்னூட்டம் இடவர்களுக்கும், அங்கிருந்து நண்பர்களுக்கு பகிர்ந்து உறவுகளுக்கும் என்றும் நன்றிகள்.
வேலைப்பளுவினால் பாடல் தேடித்தாருங்கள் என்ற முகநூல் அழைப்புக்கு செவி சாய்த்த முகநூல் நண்பன் உங்களின் நண்பன் சபரிக்கும் நன்றிகள்.
ஏன் இந்த வீங்கினவேலைகள் அரசியல் என்ன வீட்டுக்கு வருமானம் தருகின்றதா என்றே திட்டித்திட்டி சில நேரங்களில் பிழைகளை களைந்த அன்பு மனைவிக்கும் நன்றிகள்.
பின்னூட்டம் இட ஆசையிருந்தும் போதிய இணைய நேரம்மின்மையால் கருதிட முடியவில்லை நண்பா என்று நட்புப்பாராட்டும் உறவுகளுக்கும் நன்றிகள் .
பாடல்களை பகிர உதவிய சமூகத்தளம் யூட்டிப்பிக்கும் நன்றிகள்.
பாடல்களில் சிந்தை மயங்கி யாரையாவது மறந்து இருந்தால் இந்த சினேஹா ரசிகனை மன்னித்துவிடுங்கள்.
கதைக்கு உந்து சக்தி தந்து தொடர் எழுத ஊக்குவித்த பொதுத்தளத்தில் பெயர் குறிப்பிடமுடியாத நேசமான நண்பர்களுக்கும், மரியாதைக்குரிய நண்பிக்கும் தனிமரம் வலைப்பதிவரின் நன்றிகள். லித்துனியா எல்லாம் பேசவைத்தீர்களே!
.கதைக்களத்தின் கவிதைகளை காற்றில் பகிர்ந்த தமிழருவி வானொலிக்கும், புரட்சி வானொலிக்கும் நன்றிகள்.
.கதைக்களத்தின் கவிதைகளை காற்றில் பகிர்ந்த தமிழருவி வானொலிக்கும், புரட்சி வானொலிக்கும் நன்றிகள்.
இன்னும் யாரையாவது மறைமுகமாக மரங்கொத்தி போல சாடி இருந்தால் மன்னிக்கவும் .!தனிமரம் நட்புக்காக கோருகிறேன்!))
மறக்க நினைக்கத்தான்
மரமாகி மகிழ்ந்து குழாவுகின்றேன்!
மடியேந்தி பிச்சை எந்துவது போல
மலைகளும் மனம் உறுகி
மடைதிறந்த வெள்ளம் போல
மனம்விரும்பி மார்கழி குளிரிலும்
மதிப்புடன் தான் !
மரியாதையுடன் வழிகாட்டும் ஆவலில்
மாணவத்தலைவன் போல
மயக்கத்துடன் வழிகேட்கின்றேன்
மாசறு பெண்ணே!
மறுவருடம் எனினும் கழுத்தில் மாலை தாங்க வேண்டடும் நீ!
மகிழ்ச்சியுடன் வாழ்த்துவேன்!
என் திமிரை என்றும் அழிக்காத
உன் திறமைக்கு என்றும்
மாசற்ற வாழ்த்துக்கள்!
மாசற்ற கல்வி கல்லாதவன்
மாகாணசபையிலும் பேசும்
மாற்றுமொழி அறிந்தவன்!
(யாவும் ஒரு நங்கைக்கு குறியீடுபோல ஒரு கற்பனை)
------------------------------
நாங்கள் எப்போதும் நலமே இருமகன்களுடன் இப்போதும் இல்லறத்தில்!
இம்சை இருக்கே இன்னொரு தொடர் எழுதலாம் விரைவில்))ஐய்யகோ இங்கேகுறியீடு சினேஹா பிரசன்னா அல்ல))) தனிமரம் இன்னும். தொடர்வேன் உங்களின் ஆதரவு இருக்கும் வரை!
இம்சை இருக்கே இன்னொரு தொடர் எழுதலாம் விரைவில்))ஐய்யகோ இங்கேகுறியீடு சினேஹா பிரசன்னா அல்ல))) தனிமரம் இன்னும். தொடர்வேன் உங்களின் ஆதரவு இருக்கும் வரை!
5 comments :
கரும்பு திண்னக் கூலி என்பார்கள்
அதைப்போல் தங்களின் பதிவினைப் படித்ததற்காக
நன்றியா
மகிழ்ந்தேன்
நன்றி நண்பரே
தொடர்ந்து எழுதுங்கள்
தங்களின் எழுத்துக்களை படிக்க ரசிக்கக் காத்திருக்கிறோம்
நன்றிக்கு நன்றி நண்பா...
கடைசிவரை சினேகாவை விடவில்லை போலும் இம்முறை கணவரோடு பரவாயில்லையே....
தொடர்ந்து இயன்றவரை எழுதுங்கள் காத்திருக்கின்றோம் படிக்க......
வணக்கம்
என்னையும் மறந்து விட்டீங்கள் அண்ணா....ஹா..ஹா.... எழுதுங்கள் தொடர்ந்து வெற்றி நிச்சயம் நானும் தங்களின் இரசிகன்தான்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தனிமரம் நேசன், என்றும் எப்போதும் சொல்வது போலவே தொடருங்கள். எழுதுங்கள்! மனதில் தோன்றுபவற்றை ஒருங்கிணைத்து, ஒழுங்கு படுத்தி எழுதுங்கள்! நாங்களும் தொடர்கிறோம்..
மிக்க நன்றி எங்களையும் குறிப்பிட்டமைக்கு.....சினேகாவை அடுத்த தொடரிலும் காணலாம் என்று நினைக்கிறோம்....மிக்க நன்றி மீண்டும்..வாழ்த்த்குஅள் நேசன்!!!
கீதா
தோழரே என்னையும் இணைத்துள்ளீர்கள் நன்றி கவிதை படிக்கச் எனக்கு எப்போதும் பிடிக்கும் இங்கு கதைகளே கவிதையாய் நினைவுகளை தாங்கியது அருமை தொடர்ந்து எழுதுங்கள்
Post a Comment