09 November 2017

தொடரில் ஒரு மின்னல்!

தொடர்கதை வாசிப்பு ஆர்வம் என்பது இன்றைய இணையயுகத்தில் அதிகம் நேரப்பழுவினை ஏற்படுத்தும் ஒரு செயல் ,இணையத்தின் பாவணை அளவு, வாசிப்புக்கான நேரச்சிக்கல், வாசித்தாலும் பின்னூட்டம் இடும் சோம்பல், சில வேதனையான கதைப்போக்கில் எப்படியாக பின்னூட்டம் இடுவது என்ற கையறு நிலை என பல தடைகளை இந்த வலையுலகில் நாம் காணமுடியும்

இருந்தாலும் தமிழ்மணம் திரட்டியில் தற்போது தனிமரம் பதிவுகள் கண்களில் படுவதில்லை தனிமரம்.org, இருந்து தனிமரம் .com என்று மாற்றிய விபரத்தை தமிழ்மணம் நிறுவாகத்துக்கு பல தடவை தனிமெயிலில் அறிவுத்தல் கொடுத்தாலும்! அவர்கள் ஏனோ அசட்டையீனத்தில்

அதனால் சூடான வாசகர் பார்வையிலோ  இன்றைய முதல் 40 பதிவர்களில் என தனிமரம் வலைப்பதிவுகள்  இப்போது வரிசையில் காத்திருப்பதில்லை

அதுக்காக எழுத வேண்டிய உணர்வுகளை எழுதாமல் இருக்கவும் மனம் அமைதி கொள்வதில்லை .அந்த வகையில் ஒரு கற்பனைத்தொடரினை கடந்த சில மாதங்களாக .இந்த தனிமரம் வலையில் ஏதோ பொதுச்சுவரில் கிறுக்கள் போல கோடுகள் போட்டிருந்தேன்.


 அக்கோட்டில் பலர் வந்து போனதையும் மகிழ்ச்சியுடன் பார்த்து மனநிறைவு கொண்டேன் .

அவர்கள் எல்லோரையும் அடுத்த பகிர்விள் வரிசைப்பட்டியல் இடுவேன் தேர்தல் வேட்பாளர் தன் சொத்துக்கள் விபரம்பற்றி தேர்தல் திணைக்களத்துக்கு தெரிவிப்பது போல))) !

அதுக்கு முன் ஒரு அன்பான தனிமரத்தை இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் என்று தட்டிக்கொடுப்போரில் இவர் கொஞ்சம் அல்ல அதிகமாகவே நெஞ்சில் இடம் பிடித்தவர் மரியாதை நிமித்தம் கிளிப்பேச்சு கேட்கவா பட  தலமை வாத்தியார் திலகன் போல .


முதலில் இந்த தனிமரம் அவரிடம் பொதுவெளியில்-http://thillaiakathuchronicles.blogspot.com/2017/01/Jallikattu.html மன்னிப்புக்கோருகின்றேன். .

 .உங்களின் பல்வேறு பணிகளுக்கு இடையிலும் அழகிய கருத்துக்களுடன் மூன்றாவது பக்கத்தில் இருந்து பின்னூட்டம் இட்ட கேள்விகளுக்கு உரிய காலத்தில் பதில் தராமைக்காக!


காரணம் அழகான பல பின்னூட்ட க்கருத்துக்களை கேள்வியாக முன் வைத்து இருந்தார். ஆனால் இன்றுதான் பதில் கொடுக்கும் சந்தர்ப்பம் காரணம் தொடரின் போக்கில் கேள்விக்கு பதில் கொடுத்தால் அந்த தொடரின் சிந்தனையில் சில நேரங்கள் சில மாற்றங்களை எங்கே உருவாக்கி விடுமோ என்ற முன்னெச்சரிக்கை பயம்  முதற்க்காரணி.

 இரண்டாவது முன்னர் போல பின்னூட்டங்களுக்கு எல்லாம் தனித்தனியாக  பதில் கொடுக்கும் அளவுக்கு நேரச்சிக்கல் என்றுப்பொய் சொல்ல மாட்டேன். ஆனால் என் கைபேசியின் ஓய்வை தங்களுக்கு தரச்சொல்லும் மகன்களின் குறும்புக்களுக்கு முன்னே ஐபோன்  அடிக்கடி அழுதுவடிக்கின்றது ஓய்வை தந்துவிடுங்கள் என்று)))) 

இதுவும் ஒரு சுகம் தானே என் தந்தை என்னோடு இருந்த இளமைக்காலங்கள் நினைவில் இல்லை .என் பிள்ளைகளுக்கு அந்த தவற்றை விட்டுவிடக்கூடாது என்ற சாமானிய தந்தை போலத்தான் நானும் சிந்திக்கின்றேன்.



நாங்களும் தான் பிள்ளைகள் பெற்றோம் நீ அவங்களுக்கு அதிகம் செல்லம் கொடுக்கின்றாய் என்ற என் தாயின் செல்லக்கோபத்தையும் சேர்தே ரசிக்கின்றேன் தொடர்கதைகள் போல))) 








துளசிதரன் சாரின் கேள்வித்தொகுப்பாக அமைவதில் சில  முக்கிய விடயம்

)1). எல்லாத்தொடரிலும் அரசியலில் புகுந்து விளையாடுகின்றீர்களே ?உங்களுக்கு அதிக அரசியல் ஈடுபாடு இருக்கோ?

சாமானிய எங்கள் இயல்பு வாழ்வில் இலங்கை அரசின் யுத்தம் திணிப்பு  தனிப்பட்ட முறையில் பல அவலங்களை ,அனுபவரீதியாக உணரவும், அதன் புறக்காரணியாக  தெரிந்த வியாபாரம் எல்லாம் விட்டு புலம்பெயர் வாழ்வு நோக்கி  புகுந்துகொள்ள ஆணிவேராக இருப்பது அரசியலே. அதனால் தான் என் தொடர்களில் எல்லாம் சிலர் தொட்டு எழுத தயங்கும் விடயங்களை அங்காங்கே கதையின் போக்கில்  ஊடகங்கள் மூடிமறைப்பதை பொதுவெளியில் தொடர்கதைகளாக தொடர்கின்றேன். சிறுகதைக்குள் பல விடயத்தை என்னால் கட்டுப்படுத்தும் வித்தை அறியேன்!)))அதிரா இடம் கேட்டு படிக்க வேண்டும்)))




தனிமரத்துக்கு பொருளாதார தேடல் நிமித்தம் புலம்பெயரும் அவசியம் என்றும் இருந்தது இல்லை. ஆனால் இந்த அரசியல் தான் விரும்பிய ஆட்சிக்கு கள்ள ஓட்டுப்போட்டும் ,கடைசியில் எல்லாம் இழந்த வியாபார வம்ஷத்தின் கடைசிக்கொழுந்து போல ))ஏதிலியாக பாரிஸ் தேசத்தில் இங்கே என்னை சிரிப்புடன் சினேஹாவுடன் ஜொல்லுவிடுவது போல  வாழ்வதும் இன்பம் தான்!அரசியலில் நேரடியாக பங்குகொள்ளவில்லை ஆனால் என் முக்கிய நட்புக்களுக்கு அரசியல் முகநூல் விளம்பரதாரர்களில் மறைமுகமாக இருக்கின்றேன்))அது சிங்கள நட்பு என்றாலும் கொள்கைக்கு தான் ஆதரவு


2)உங்க தொடர்களில் அதிகம் அரசியல்பாதிப்பை உணர்கின்றபோது அதன் மூலம் நாமும் யுத்ததின் வலிகளும் மக்களின் துன்பதுயரங்களையும் உணரமுடிகின்றது ஆனாலும் இவை அதிகம் துயரங்களாக எழுத்தில் இருக்கின்றதே வாசிக்கும் போது ?
பின்னூட்டம் இட நினைக்கின்றபோது மனசு தடுமாறுகின்றது

என்ன செய்வது சார். சில விடயத்தை சிரிக்கும் வண்ணம் என்னால் எழுதும் திறமை கைவரவில்லை. அதிகம் ஒப்பாரிதான் கேட்டது ஊடக ஆசையில் தனித்துப்போக ஆசைப்பட்டபோது.))) இருந்தாலும் தைரியத்துடன் பின்னூட்டம் இடுங்கள் தனிமரம் வலையில் தணிக்கை இல்லை எப்போதும்)))



3)எப்படி இப்படி சினிமா பட நினைவுகளை காட்சியில் கொண்டு வந்து கோர்க்கின்றீங்கள்?

சிறுவயதுமுதல்  எதிர்காலத்தில் ஊடகத்தில் மின்னனும் என்ற ஆசையில் பார்த்து சினிமாவும் ,அதன் பாடல்களும் நினைவுக்குறிப்புக்களாக இன்னும் ஏதோ மூளையில் கொஞ்சம் கறைபடிந்த பாசிக்கிணறு போல தேங்கிக்கிடக்கின்றது.

4)சந்தடி சாக்கில் திரட்டியின் இன்றைய அவலத்தையும் கோர்க்கும் உங்க குசும்பு அதிகம் தனிமரம்!

 இந்த திரட்டி தான் நமக்கு ஒரு நட்புப்பாலம் ஆனால் இங்கே நண்பர்களுக்கிடையே கூட பொறாமைகளையும்,மறைமுக  சீண்டல்களையும் பார்க்கும் போது  !நண்பர் கில்லர்ஜீ சொல்லியது போல மகுடம் என்ற ஐநா பதவி இருக்கே அது பல நல்ல பதிவுகளை இனம்காட்ட மறுக்கின்றது))) ,இதனால் சோர்வு பல பதிவர்களுக்கு இருப்பது  ஒன்றும் புதுமையல்ல!))) 

இந்த திரட்டியில் வாக்குமுறைக்கு என்றும் கட்டுப்படாத நிலையில் தான் ஒரு முகநூல் குழுமத்தில் இருந்து கடந்த காலத்தில் வெளியேறிஇன்னும் இருக்கின்றேன் தனிமரமா!))) 

வெளியேறி வெற்றிகாணமாட்டாய் என்றவர்களுக்கு போட்டியாக இன்னும் இங்கே டீ ஆத்துக்கின்றேன் )))  போட்டிக்கு சவால் விட்டவர்கள் இன்று முகநூலில் கூட இல்லாத நிலையை அவதானிக்கும் போது சிரிப்பாக இருக்கு .இங்கே ஓய்வுப்பொழுதில் தானே எதையும் பலருடன் பகிர்ந்து கொள்ளமுடியும்.






ஏதோ ஒரு சில நட்புக்களின் தொடர் ஊக்கம் இன்னும் புதிய புதிய தொடர்களை எழுதத் தூண்டுகின்றது.

6)எங்கே இந்தத்தொடரில் சினேஹாவைக்காணவில்லை?

இந்தக்கதைக்களம் அப்புத்தளைக்கும்,





 பாரிசிக்கும் இடையில் ஒரு மாற்றுக்கருத்து நிலையில் பகிர்ந்த தொடர் காணமல் போனோர் துடிதுடிப்பு பற்றிய தேடலில்  சாருமதி பாத்திரம் வேற,



 உருகும் பிரெஞ்சுக்காதலி தொடர்  சினேஹா போல நிஷா படைப்பு வேற !அத்துடன் இந்தத்தொடரில் தேசிய அரசியல் , பொருளாதார அரசியல் தான் அதிகம். காதல் இங்கே  தமிழ்சினிமாவில் அமெரிக்கா மாப்பிள்ளை போல வந்து போகும் ஒரு குறியீடு மட்டும் தான்!

சினேஹாவை என்றும் யாருக்காவும் மறக்கமுடியாது ஒரு நல்ல நடிகையாக எப்போதும் விரும்புவேன்
))))



சிற்பமே என்னடி மாயம் சிற்பியை செதுகின்றாய் ))) கவிதையில் குறியீடுகள் கூட அழகு தானே சினிமாவில்)))














5 comments :

KILLERGEE Devakottai said...

//சினேஹாவை என்றும் யாருக்காவும் மறக்க முடியாது//

பாவம் பிரசன்னா.. ஹி.. ஹி..

எம்மையும் உமது மரத்தின் கிளைகளில் வைத்து இருப்பது கண்டு மகிழ்ச்சி நண்பா.

Thulasidharan V Thillaiakathu said...

ஓ! தனிமரம்!!!!! என்ன சொல்ல என்று வார்த்தைகள் இல்லை நேசன்!!! நேசன் உங்கள் நேசத்தைக் கொட்டிவிட்டீர்கள்..கிளைகளாகப் பரப்பி விட்டீர்கள்! ஒவ்வொரு பின்னூட்டத்திலும் இட்டிருந்த கருத்துகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி! எதிர்பாராத ஒன்று இது!!! மிக மிக நன்றி நேசன். தொடருங்கள் உங்கள் எழுத்தை. உங்கள் வேதனைகள் எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஏதிலிகளாக வாழ்வதில் உள்ள துயரங்களையும் அறிவோம்.

நாங்களும் தொடர்கிறோம். நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். மிக்க நன்றி நேசன்!!!

துளசிதரன், கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நேசன் மன்னிப்பு எதற்கு? அதெல்லாம் வேண்டாம் நேசன். எமக்குத் தெரியாதா? இதற்கெலாம் மன்னிப்பு வேண்டாமே நேசன். அது உங்கள் அழகான மனதைக் காட்டுகிறது என்றாலும் தயவாய் மன்னிப்புக் கோருதல் எல்லாம் வேண்டாம்...ப்ளீய்ஸ்

துளசிதரன், கீதா

பூ விழி said...

2 ,3 வது கேள்விகள் எனக்கும் தோன்றி இருக்கின்றன சிரியஸா படிச்சிட்டவரேன் சினேகா ஹா ஹா யாருக்கும் மறக்க சொல்ல முடியாது பொதுவாழ்வில் வந்தவர்களை

Angel said...

ஆஹா கேள்விகளும் அதற்கான பதில்களும் அருமை நேசன் .சிலபல நேரங்களில் இலங்கை அரசியல் அவ்ளோ புரியதா அதான் ஒன்றும் சொல்லாமல் போய்டுவேன் .நேசன் பதிவில் அதிகம் பிடித்தது திரை இசை பாடல்களை பேசுவது போல நுழைப்பது :)
அப்புறம் நேசன் நாமெல்லாம் 2011 லிருந்த நாட்களும் நினைவுக்கு வருது ரெவரி ,ஹேமா .கலா ,யோகா அண்ணன் காலை என எத்த்னை ஆனந்தமான நாட்கள் .