நினைவுப்பயணம்!
உடல்களைத்து உறங்கும் போதெல்லாம்
உறங்காத சிந்தனைகள்
கடந்த கால
உழைப்புக்காக
ஊக்கத்துடன் பயணித்த
ஊர்கள் எல்லாம் நோக்கி !இன்றும்
நினைவுப்பயணம் போல
ஊஞ்சல் ஆடுகின்றது
உற்சாகம் தரும்
--- பம்பரம் ---
-----
பணிகள் செய்யும் போது
பம்பரம் போல செயல்பட்டால்
பணியில் பதவி உயர்வு
பம்பரம் போல சுற்றி வரும்.
படிப்பித்த வாத்தியாரும்
படம் பார்த்தார்
பக்கத்தில் இருந்து
நடிகையின் தொப்புளில்
பம்பரம் விட்ட சின்னக்கவுண்டர்
பதுளை திரையரங்கில்.
பம்பரம் பற்றி விளம்பரம் எழுதுங்கள்
பார்க்களாம் உங்கள்
பார்வைகள் எப்படி?
பறந்துதிரியுது என்று!
பக்கத்தில் இருந்த
பால்ய நண்பன்
பதிவு செய்தது.
"கைத்தறியை வாழவைப்போம்
காளையர்களே களைந்திடுங்கள்
அன்னிய மோகத்தை!
கட்டினால் இடுப்பில் இருந்து
கழன்றுவிழாது,
காற்றோட்டமான ஆடையிது,
கடும் குளிருக்கும் போர்வையாகும்
பம்பரம் மார்க் சாரங்கள்"
இறக்குமதி செய்து வினியோகிப்போர்
பக்கத்துவீட்டு
பரிமளத்தின் தந்தை
பலாலி .
படித்த பின் முகநூலிலும்
பத்திரிக்கையிலும்
பலரை சென்றைடைய இன்றே
பதிவு ஏற்றுங்கள்
பம்பரம் போல ,
படைத்தவன் ஒரு தமிழன்
பகிர்வோர் ஒரு தமிழர் என்றால்
பல கைகள்
பலமாக உயரும் !
படித்ததில் இது பிடித்தது
பார்த்துக்கொண்டே இருந்தேன்
பக்கத்து ஊர் நஸ்ருல்லாவும்
பஜாஜ் வண்டியில்
பம்பரமார்க் சாரம் அணிந்து
பல்லுக்கொட்டிச் சிரிப்பதை,
பம்பரம் மார்க் அதிஸ்ட்ட லாபச்சீட்டும்
பறந்து வருமாம் விரைவில்!
பலரும் அறிந்த லங்காபுவத் சொல்லியது
பல ஊர்களுக்கு விற்பனை செய்ய
பம்பரம் போல இன்றே
பதிவுகளுக்கு முந்துங்கள்!
பரிசுப்பொருட்களும் கிடைக்கும்.
பாதியில் பம்பரக்கனவும்
பறந்தே போனது
பார்த்தாலே பரவசம் சினேஹா போல
பம்பரக்கண்ணாலே பாடலும்
பண்பலையில் வந்தது !
இது ஒரு கட்டணம் செலுத்திய
பம்பரம் மாக் விளம்பரம்!!
பம்பரம் மாக் விளம்பரம்!!
(இது ஒரு கற்பனையே)
பதுளை-மலையகத்தில் ஒரு ஊர்
பல்லுக்கொட்டி சிரிப்பு-ஆனந்தச்சிரிப்பு
பலாலி-யாழ்பாணத்தில் பிரபல்யமான ஒரு ஊர்
லங்காபுவத்-இலங்கையின் ஊடக செய்தி
-----------------------------------------------------------
http://www.thanimaram.com/2018/03/32.html
-----------------------------------------------------------
http://www.thanimaram.com/2018/03/32.html
7 comments :
கற்பனை அருமை...
அத்தனையும் அருமை...
///"கைத்தறியை வாழவைப்போம்
காளையர்களே களைந்திடுங்கள்
அன்னிய மோகத்தை!
கட்டினால் இடுப்பில் இருந்து
கழன்றுவிழாது,
காற்றோட்டமான ஆடையிது,
கடும் குளிருக்கும் போர்வையாகும்
பம்பரம் மார்க் சாரங்கள்"
இறக்குமதி செய்து வினியோகிப்போர்
பக்கத்துவீட்டு
பரிமளத்தின் தந்தை
பரஞ்சோதி ஸ்டோர்.///
சூப்பர் விளம்பரம்..
//பாதியில் பம்பரக்கனவும்
பறந்தே போனது
பார்த்தாலே பரவசம் சினேஹா போல//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
பாடல் நன்று...
அருமையான சிறப்புப் பதிவு
அருமை நண்பரே
"கைத்தறியை வாழவைப்போம் காளையர்களே களைந்திடுங்கள் அன்னிய மோகத்தை! கட்டினால் இடுப்பில் இருந்து கழன்றுவிழாது, காற்றோட்டமான ஆடையிது, கடும் குளிருக்கும் போர்வையாகும் பம்பரம் மார்க் சாரங்கள்" //
செமையா இருக்கு நேசன்...
//பக்கத்துவீட்டு
பரிமளத்தின் தந்தை
பரஞ்சோதி ஸ்டோர்.//
ஹா ஹா இதான் தனிமரம் நேசனின் டச்சு!!!
//பாதியில் பம்பரக்கனவும் பறந்தே போனது பார்த்தாலே பரவசம் சினேஹா போல பம்பரக்கண்ணாலே பாடலும் பண்பலையில் வந்தது !//
ஹா ஹா ஹா அதானே ஸ்னேகா இல்லாமல் தனிமரம்?!!! கவிதை பதிவுகள் வருமோ?!!..!!!
கீதா
துளசி இந்த மாதத்தோடு ரிட்டையர் ஆகிறார் அதான் பதிவுகள் பார்க்க இயலவில்லை...கொஞ்சம் வேலைப்பளு....தேர்வு பணி என்று...அதன் பின் வருவார்...
Post a Comment