29 March 2018

காற்றில் வந்த கவிதைக்கள் -34

நன்றிகள் தமிழருவி மற்றும் புரட்சி வானொலிக்கு!

—-
-----------------http://www.thanimaram.com/2018/03/33.html


ஏற்றுக்கொள்

—-
தூரநோக்கமும் 
தூய எண்ணமும் கொண்டே
தூயவன் போல ஒருவர் வந்தார்!
துவண்டு போன இளைஞர்கள்
துடிதுடிப்புடன் துணையாகிப்போனதும்,
தூக்கிப்போட்டதும் ,தொலைந்த கதைகள் 
தூற்றிக்கொள்வது போல!
துண்டு போட்டு ,
துட்டு வாங்கி ,
துளிர்க்கும் ஆடம்பர வாழ்க்கை எல்லாம்
தூண்டில் மீன்போல,
துறவறம் எல்லாம் அறியாத
தூய்மையற்ற தேசியவாதிகளின்
தூர்நாற்றம் எல்லாம்
தும்மல் போல ஏற்றுக்கொள் !
துணிவு இல்லாத சமூகமே!
துலைக்கோ போறியல் என்றால்
துன்னாலையில் வீடு பார்க்கப்போறேன்
துணி தோய்க்கும் வீணையம்மா வீட்டில்
துடக்கு கழிக்க கூப்பிட்ட
துரைசிங்கத்தார் சொல்லியதையும்
தூரத்துப்பாடலுடன் ஏற்றுக்கொள்
துணைக்கு வராத நட்பே!
தூற்றுவோர் துற்றட்டும்
துப்பாக்கி அரசியலில்
துழைக்காத மண்வாசனையை!



(யாவும் கற்பனை)
////////////////////////////////////////////////


ஏனோ ஏதும் எழுதப்பிடிக்கவில்லை!
எங்கும் ஏமாறும் அப்பாவி வாக்காளர் போல
ஏதிலியும்!
 ஏந்துகின்றேன் பிச்சைப்பாத்திரம்!
எவராவது வந்து நிரப்புவார்கள்
ஏழ்மையான இசை என்று
ஏனோ சில மெட்டுக்கள்
எதிர்காலத்தை தொலைத்து
ஏமாறும் காதலை எண்ணி
எவரிடம் சொல்ல!
(யாவும் கற்பனை)//

—-
ஏளனச்சிரிப்பு!

--------------------------------------------------
பாதகர்கள், படுகொலை செய்தவர்கள்!
பாவிகளுக்கு மன்னிப்பில்லை,
பார்த்துக்கொள்கின்றோம்
பாடையில் வீட்டை 
பாராளமன்றத்தில் 
பதவிக்காக
பலலட்டசம் பட்டுவாடா செய்யாதவர்
பலமான நேர்மை  என்றெல்லாம்
பத்திரிக்கையில் கொக்கரித்தவர்கள்
பதவி சுகத்துக்காய்
பாலுக்கு காவல் பூனை போல
பட்டணசபைகளுக்கு
பங்குபோட்டுக்கொள்வதை
பார்த்துச்சிரிக்கின்றான்
பாதைசாரி!






(யாவும் கற்பனை)













13 comments :

Thulasidharan V Thillaiakathu said...

கவிதைகள் நன்றாக இருக்கின்றன நேசன்....அரசியலும் இடையில் ...காதலும்...

ராகுல் அந்தச் சின்னவர் பாடுவது மிக மிக நன்றாக இருக்கிறது. குரல்வளம் அருமை...

அவருக்கு எம் வாழ்த்துகள்!

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை தோழர்...

putthan said...

தொடரட்டும் உங்கள் கவித்துவம்

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

///துழைக்கோ போறியல் என்றால்
துன்னாலையில் வீடு பார்க்கப்போறேன்//

ஹா ஹா ஹா அருமையான எதுகை மோனையில் கவிதை..

அது ழை இல்லை நேசன் லை :)

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அந்தக் குட்டிப்பிள்ளைபாடும் பாடல் கேட்டதில்லை முன்பு.. மிக அருமை.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

கவிதைகள் வழமைபோல் அருமை.

இருப்பினும் பூனையைப் பூணை என்றமைக்கு என் வன்மையான கண்டனங்கள் :)

தனிமரம் said...

நன்றி கீதா அக்கா வருகைக்கும் ,கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி டிடி வருகைக்கும், ஊக்கத்துக்கும்.

தனிமரம் said...

நன்றி புத்தன் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

ஹா ஹா அடிக்கடி உச்சரிப்பு பிழையாகிவிடுகின்றது!)))திருத்திவிட்டேன்.

தனிமரம் said...

ஓ இணைய வானொலியில் ஒலித்தது இங்கே பகிர்ந்தேன் எனக்கும் பிடித்து இருந்தது.

தனிமரம் said...

அரசியலில் அதிகம் பெரிய பூணைகள் இருப்பது தாங்கள் அறியாத சங்கதி அல்ல!))) இருந்தாலும் பூனைக்கு ஒரு நன்றிகள். நன்றி பூசாரே வருகைக்கும், கருத்துரைக்கும்.

Yarlpavanan said...

அருமையான வரிகள்
தொடருங்கள்