பிரார்த்தனைகள் வீண்போவதில்லை ! கடவுள் கொடுக்கும் துயரங்கள் எல்லாம் பக்தர்கள் தாங்கும் அளவுக்கு மட்டுமே .
கண்முன்னே கடவுள் வந்தது போல இந்திய விசா வழங்கும் நிறுவனத்துக்கு வழமை போல என் பயண ஆவணத்தை மீளப்பபொறும் நோக்கில் சென்று எனது ஆவணத்தை மீளக் கேட்ட போது ஒருக்கனம் கடவுளே நேரில் தோன்றியது போல ஓர் உணர்வுhttp://www.thanimaram.com/2018/02/blog-post_8.html.
நம்பிய கடவுள் விசா வடிவில் முன்னே வந்த அக்கன உணர்வுப்பரவசம் எழுத்தில் வடிக்க முடியாத ஆனந்தம்.
திடீர் என்று சிந்தனை எல்லாம் எப்போது யாத்திரை போவது என்ற அவசர நிலை காரணம் விசாகிடைத்தது 13/2/18 இல் பாரிஸ் நேரம் மாலை 4 மணிக்கு .
சபரிமலையில் நெய்யபிஷேகம் செய்யும் இறுதிப்பொழுது 16/2/18.
இருப்பதுவோ 3 தினங்கள் விடியும் பொழுதில் பாரிசில் காதலர் தின கொண்டாட்டம்14/2/ இல் .
என் வேலைத்தளத்தில் வழமையாக உருகும் பிரெஞ்சுக்காரிக்கு செய்தது போல !
விரும்பிச் செய்த சுவையூட்டிகள் பல முழுமையாக்கவில்லை!
அவை பல முடித்துவைக்க வேண்டி காத்திருக்கும் நிலையில் அடியேன் திடீர் என்று!
நாளை அதிகாலையில் பயணம் செல்வது என்பது கைதாகப்போகும் மந்திரிக்கு நெஞ்சுவலி வருவது போல என் முதலாளிக்கு திடீர் என்று என்னைப்பிரிவது கடினம் இப்படி ஒரு அடிமாடு எங்கு தேடியும் கிடையாதே!)))
என்றாலும் விடுமுறைக்கு அனுமதித்த நிலைக்கு நன்றி சொல்ல வேண்டும்!
விரும்பிச் செய்த சுவையூட்டிகள் பல முழுமையாக்கவில்லை!
அவை பல முடித்துவைக்க வேண்டி காத்திருக்கும் நிலையில் அடியேன் திடீர் என்று!
நாளை அதிகாலையில் பயணம் செல்வது என்பது கைதாகப்போகும் மந்திரிக்கு நெஞ்சுவலி வருவது போல என் முதலாளிக்கு திடீர் என்று என்னைப்பிரிவது கடினம் இப்படி ஒரு அடிமாடு எங்கு தேடியும் கிடையாதே!)))
என்றாலும் விடுமுறைக்கு அனுமதித்த நிலைக்கு நன்றி சொல்ல வேண்டும்!
வேலைத்தளம் பொருளாதார வீழ்ச்சியில் செல்கின்றநிலையில் எந்த நேரத்திலும் மூடுவிழாக்காணும் நிலையில் இருக்கின்றது.
மாற்று வேலைகள் வந்துகொண்டே இருக்கின்றது தனிமரம் வந்திடு உள்ளூர்ராட்சி சபைகளில் ஆளுங்கட்சிக்கு ஆதரவுக்கடிதம் கொடுக்கும் எதிர்க்கட்சிகள் போல என்றாலும் இந்தவருட யாத்திரைமிக முக்கியம் என்ற தனிப்பட்ட காரணத்துக்காகவே அதிகம் பொறுமையுடன் பணி ஆற்றுவதை என் பிரெஞ்சு முதலாளி அறியாத செய்தி.
இக்கடினமான நிலையில் விசா பெற்றதும் முதலில் அழைப்பு எடுத்தது என் குருசாமிக்கு .விரதத்தினை முடிக்க முன் நின்ற போதெல்லாம் பொறுமைகொள், நிச்சயம் ஐய்யப்பனை தருசனம் காண்பாய் என்ற இடைவிடாத நம்பிக்கை ஊட்டியவர் அவர்.
மறுநாள் காலையில் விமானடிக்கட் கிடைக்குமா என்று விமானச்சீட்டு பெறும் நிலையம் மூடும் நேரத்தில் வந்து கதவைத்தட்டும் உன்னை சினேகா கூட மன்னிக்கமாட்டாள் என்ற நிலையில் ஒரு பிரெஞ்சுக்காரி கோபப்பார்வை இருக்கே தனியழகு))).
நாம் முன் பெற்றுக்கொண்ட டிக்கட் பணம் ஆற்றில் போனநிலையில் புதிய டிக்கட் உடனடியாக எடுத்துக்கொண்டோம் !ஐய்யப்பனுக்காக இதையும் தாங்கிக்கொள்ளும் பக்குவம் இப்போது அதிகமாகவே தோன்றிவிட்டது
நாம் முன் பெற்றுக்கொண்ட டிக்கட் பணம் ஆற்றில் போனநிலையில் புதிய டிக்கட் உடனடியாக எடுத்துக்கொண்டோம் !ஐய்யப்பனுக்காக இதையும் தாங்கிக்கொள்ளும் பக்குவம் இப்போது அதிகமாகவே தோன்றிவிட்டது
. வரும் போது கையில் ஏதும் அற்ற ஏதிலியாக வந்த பலரில் இன்று ஒரு முகவரியுடன் வாழ கருணைக்கடவுள் ஐய்யனின் அருள் தான் மூலக்காரணம் என்பதில் தனிமரம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் .ஆன்மீகம் கூட ஒரு போதைதான் ஷரிஹரியின் பாடல்களில் வரும் ஒரு வரிகள் போலத்தான்!
பாரிசில் இருந்து 13/2 காலை 11.30 புறப்பட்ட எம் விமானம் சென்னையை அடைந்தது 14/2/ அதிகாலை 4.45.
எந்தளவு விரைவாக குடிவரவு சோதனைகளை முடிக்க முடியுமோ அந்தளவு வேகமாக முடிந்தால் நிம்மதியுடன் இருமுடிகட்டிப்பயணிக்க முடியும் என்ற அவசரநிலை !
சென்னையில் இருந்து எரிமேலி சென்றுவிட்டு பம்பா செல்வதுக்கு 17 மணித்தியாளங்கள் தேவை அன்னளவாக தொடந்து வாகனத்தை செலுத்துவது என்றால்!
எங்களின் அவசரம் புரிந்த சென்னைச்சாரதியும் ஒத்துழைத்த நிலையில் 15/2/ இல் அதிகாலை 1.45 பம்பாவிற்கு சென்றோம் நம் குழுவாக!
சென்ற வேகத்தில் புனித பம்பை நதியில் ஒரு முழுக்கு அதிகாலையில் குளிர் என்றாலும் உடல் அலுப்புக்கு இதமான ஒத்தடம் போல இருந்தது அக்குளியல் .
குளிர்த்ததும் குருசாமியின் ஆசியுடன் இருமுடியைத் தலையில் ஏந்தி நடைதிறவாத பம்பா கணபதியின் வாசலில் ஒரு தேங்காய் உடைத்துவிட்டு அண்ணாந்தா நீலிமலை.
சபரிமலை வாசனிடம் வந்து விட்டோம் இனி நீயே வழித்துணை தருசனத்துக்கு என்றுவிட்டு பாத யாத்திரை தொடங்கினோம்!
15/2 இல் மாசி மகம் என்பதால் மண்டல விரத்தைத்தைவிட இப்போது அதிக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கும்மிருட்டிலும் ஐய்யனின் அதிகாலை தருசனத்துக்கு கடந்த்செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்து.
இதுவரையில் மண்டல விரத்த நேரத்தில் தருசனம் காணச்சென்றதுக்கும், இவ்வாண்டு மாதப்பூசைக்கு தருசனம் காண்பதுக்கும் இடையில் மாற்றங்கள் பல .
இவ்வாண்டு நாம் சென்றவேளையில் ஐய்யனின் பதினெட்டுப்படிகளிலும் மெதுவாக ஒவ்வொன்றாக தொட்டு வணங்கிச்செல்லும் ப்ரார்த்தம் பெற்றோம் .
இருமுடியுடன் ஐய்யனின் திவ்விய தருசனத்துக்கு பக்தர்கள் காத்து இருந்த கியூ அதிகம். கணபதி ஹோமம் முடிந்து நித்திய அபிசேஷகம் தொடர்ந்த நிலையில் நெய்யபிஷேகம் காணும் வரம் பெற்றதும் விரத பூர்த்தியின் மகிமை கொண்டதும் பக்திப்பரவசமே!
பின் இருமுடி பிரித்து நெய்யபிஷேகத்திற்கு நெய்யினை மேல்ச்சாந்தியிடம் கொடுத்து அபிஷேகம் செய்துகொண்டதும், மஞ்சமாதாவுக்கு செய்யும் காய் உருட்டுதல் ,மஞ்சல்ப்பொடி பூசைகள், நவக்கிரகங்களுக்காண குங்கும காணிக்கைகள் செலுத்தி, வலம் வந்து மதியம் வரை தருசனம் கண்டோம் இனிதே திருப்திகரமாக!
சென்னையில் இருந்து சபரி
மலைக்கு சென்ற வேகம் போலவே மீண்டும் திரும்பி வரும் வழியில் சென்னையில் பிரபல மூத்தபதிவர் ஐயா இராசு செல்லாப்பா அவர்களை நேரில் சந்தித்ததும்!
விரைந்து பாரிஸ் வந்ததும் இவ்வாண்டு மறக்கமுடியாத அனுபவம்!
வலையுறவுகளின் பிரார்த்தனைகளும் சேர்ந்தே இந்த அடியவனை இவ்வாண்டும் சபரிமலை சாஸ்த்தாவிடம் ரகசியம் பேச காரணங்கள் என்றால் மிகையில்லை.
ஒவ்வொறு வருடங்களின் தருசனத்தின் பின்னும் ஒவ்வொரு புதுத்தொடர்கள் எழுதும் சங்கதிகளை காதில் விழவைப்பதும் இந்த யாத்திரையில் நாம் சந்திக்கும் நம்மவர்கள் நட்புகளே!
7 comments :
தாங்கள் மேலும் மேலும்
நிச்சயமாய் உயர்வீர்கள் நண்பரே
வாழ்த்துகள்
ஆஆஆஆவ்வ்வ்வ் நேசன் இதுதானா இடையில் காணாமல் போயிருந்தீங்க... ஒவ்வொரு தடவையும் காணாமல் போனபோது ., ஐயப்பனிடம் போயிட்டீங்க என நினைச்சு ஏமாந்ததால் இம்முறை அப்படி நினைக்கவில்லை:), நினைக்காதபோதே போய் வந்திருக்கிறீங்க... நம்பிக்கை வீண் போகவில்லை.
அருமையான அவசரப் பயணம், மனதில் ஸ்னேகா அக்கா:) இருந்தமையால்:) உங்கள் மனம் சோர்ந்திடவில்லை:)..
இந்த அவசரத்திலும் செல்லப்பா ஐயாவையும் சந்தித்து விட்டீங்களே:)..
நம்பினார் கெடுவதில்லை ..நீங்கதான் பொசுக்குன்னு அப்செட்டாகி கோவப்படறீங்க :) ஆனால் கடவுள் அனுக்கிரகத்தால் பயணம் போய் வர அருள் கிடைத்ததே .
சந்தோஷம் நேசன்
இறை பயணம்
ஐயப்பன் காட்சி
ஈற்றில்
இராசு செல்லப்பா சந்திப்பு
எல்லாம் அருமை
வெற்றி பெற வாழ்த்துகள்!
ஆ,,ஆ..பிரான்சிலும் சினேகாவா...?????????????
நேசன் உங்கள் சபரிமலைபயணம் பற்றி இணையம் வேலை செய்யாததால் வாசித்டுத் தெரிந்து கொள்ள இயலவில்லை...ஆனால் தெரிந்துவிட்டது...ஆம் செல்லப்பா சார் சொன்னார்கள்....நான் மகிழ்ந்தேன் சொன்னேன்...ஹையோ நேசன் ரொம்ப வருந்தி பதிவு போட்டிருந்தாரே விசா கிடைக்கவில்லை ஐயப்பனை எப்படிக் காண்பது....என்று...அட கிடைத்துவிட்டதா!! என்று ம்கழிந்தேன்....
அவர் உங்களை அடையார் ஆனந்தபவனில் சந்தித்ததைப் பற்றிச் சொன்னார்....அடையார் ஆனந்தபவன் வரை வந்துள்ளீர்கள்....நான் 1/2 மணி பயண நேரத்தில்தான் இருக்கிறேன்....அடுத்த முறை இங்கு வந்தால் சொல்லுங்கள் நேசன்...சந்திப்போம்...
எப்படியோ பாருங்கள் இறைவன் அருளிவிட்டார்....இனி பொறுமையாக இருங்கள் நேசன். இறைவனுக்குத் தெரியும் எப்போது என்ன எப்படி வழங்கவேண்டும் என்பது...நீங்கள் என்னதான் அவசரப்பட்டாலும், டென்ஷன் அடைந்தாலும் அதது எப்போ நடக்க வேண்டுமோ அப்போதான் நடக்கும்....
மிக்க மகிழ்ச்சி இறுதியில் தங்கள் ஆசை நிறைவேறியது...நல்ல தரிசனம் கிடைத்ததும்...இந்த பரபரப்பிலும் ஸ்னேகா....ஹா ஹா ஹா ஹா ஹா விட மாட்டீங்களே சைக்கிள் கேப் கிடைத்தால் கூட சொல்லிடுவீங்க!!!!
கீதா
Post a Comment