25 April 2018

காற்றில் வந்த கவிதைகள்-38

http://www.thanimaram.com/2018/04/37.html
------------------------------------------------------------------------------------
முடிந்த கதை!
வாலிப வீதியில்
வரைந்த ஓவியங்களில்,
வந்து போன  என் காதல் 
வாழ்த்துப்பாடல்கள்§





வாழ்வின் நிலையாமை போல!
வசந்தம் தராத உன்
வடக்கின் வாழ்வியல் போல
வருடிச்சென்ற
 வசந்தக்காலப்பறவையே!
வாடிபோவேனோ ?
வட்டாரக்கல்விகள்
வடிவு என்னும் 
வசந்தமாளிகை அற்றவன்.
வரட்டுக்கெளவரம் பார்த்த உன்
வளர்ச்சிக்கனவுகள்
வதைத்த வலிகள், எல்லாம் 
வாழ்வைத்தேடி வந்த 
வாத்தியார்வீட்டுப்பிள்ளையின்
வசியம் எல்லாம் முடிந்த கதையாக
வாழ்ந்துகொண்டு இருக்கும்
வலைப்பதிவு உலகில்.

(யாவும் கற்பனை)
///










—------------


தமிழர் தேசம் எங்கும்
தறிகெட்ட தேரவாதம்,
தன்முனைப்புடன்
தம்மதச்சின்னங்களை
தாராளமயமாக்கி,
தங்கள் வெற்றியை 
தலையில் சூட்டும் நிலையில்!
தட்டிக்கேட்க வேண்டியவர்கள் எல்லாம்
தனலட்சுமியின் பெட்டிகளை
தங்களின் பெயரில் 
தம்சந்ததிக்கு சேமித்து
தம்தேவையை நிறைவேற்ற !
தமிழ் என்னும் நிலமகள்
தாங்காது துடிக்கும் இதயம் கண்டு
தன்னிடம் புலம்பிய 
தனிக்கதை எல்லாம்
தரணியில் ஐநா என்ற 
தரம்கெட்ட சபையிடம்!
தனிமனுக்கொடுக்க 
தமிழன் இன்று 
தமிழக அரசியல்வாதியிடம்
தஞ்சம் புகுந்தான்
தாருங்கள் ஆதரவு என்று
தமிழ் ஊடகத்தில்.
(யாவும் கற்பனை).

—---------------------------------------------
புதுக்கதை எழுத வந்தேன்
புத்தியில்லாதவன் என்று
புலம்பெயர்தேசத்தில்
புறக்கணித்தவளே!
புதுமை என்று 
புணர்ந்தவை எல்லாம்
புரியாத புதிர் போலத்தான்,
புன்னகை தேசப்பட நாயகியே
புத்துப்பாடகன் போல
புக்கவிதை எழுதவும்
புத்தன் தேச 
புலமை அரசியலும்
புதுமைப்பட்டம் பெற்றவன்.
புதைந்து போகமாட்டேன்
புறப்பட்டு வருகின்ற ரயிலில்
புதுக்காதலனைக் காண இன்னும்
புதினம் அறியும் ஆவலுடன்
புறக்கோட்டைவாசி இவன்!

(யாவும் கற்பனை)

-----------------------------

நேசம் என்னும் 
நேற்றைய மாற்றத்தின்
நேரடிகாரணி நீதானே!
நேரில் தந்தேன் 
நேசிக்கின்றேன் என்ற
நேயர்விருப்ப இசைப்பேழையை,
நேற்றைய காற்றில் பறக்கவிட்டாய்,
நேரடியாகச் சொல்?
நேசத்தின் விளக்கம் ஏது?
நேசனின் கவிதையிலும்
நேரச்சிக்கல்.
நேற்றும் இணையம்
நேசநாட்டுப்போரினால் 
நேரடிப்பாதிப்பு என்றதை
நேரியகுளம் வீதியில் பார்த்தவளே!
நேசமணிபொண்ணையா வீட்டில்
நேவியுடன் இருந்த 
நேரடிச்சாட்சிகள் இன்றும்
நேசநாட்டில் வாழ்வதாக
நேற்றும் யாரோ சொன்னார்கள்
நேரம்கிடைத்தால் வந்துவிடு
நேரலையில் என்றும் 
நேசத்துடன்  !
நேற்றும் இன்றும் நாளை காட்சி
நேரத்துடன் தொடங்கிவிடும்
நேரடி விவாதம்! இது
நேயர்களின் தேடலில்
நேற்றுத்தொலைத்த நேசிப்பு!

(யாவும் கற்பனை)



(


2 comments :

வலிப்போக்கன் said...

காற்றில் வந்த கவிதையோ....!!!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே