27 September 2011

நொந்து போகும் ஒரு இதயம்!! -2






என் அருமை பதிவாளர்களே! இந்தத் தனிமரம் புதிய நீண்ட தொடருடன் உங்களிடம் வருகின்றேன்.
இதில் என்னுடன் முரன்பட்டிருக்கும் முன்னால் நண்பனின் கதை சில மாற்றங்களுடன் .
.விடை தேடுகின்றேன் .கதையில் யாரையும் புண்படுத்தும் என்றால் மன்னிப்பை இங்கேயே கேட்கின்றேன்
.தனித்தனியாக வருவதற்கு புலம் பெயர் தேடலில் தொலைந்து போகின்ற நேரம் அதிகம் என்பதால்!


////////////////////////////////////////////////////////////////////////////////////
.பிரபு கந்தசாமியின் தவப்புதல்வன் .அவர் நண்பர் தேவனின் விருப்புக்குரியவன் ..தேவன் என்கின்ற வியாபார செல்வந்தரிடம் கைநீட்டி செய்த வேலைக்கு மாதமுடிவில் கூலிவாங்கும் தொழிலாளிகளில் என் தந்தையும் நானும் சேர்ந்து கொண்டேம்.

3மாதங்கள் குறுங்கால திட்டம் போடும் எனக்கும். நீண்ட கால திட்டம் போடும் என் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல்கலால் வேலை தேடி சந்தைப்படுத்தல் அதிகாரியான சில தினங்களில் .

யாதார்த்தமாக வந்து நலம் விசாரிப்புக்களுடன். தோல் கொடுத்தான் பிரபு.

முன்னர் கடைக்கு வரும் போதெல்லாம் வெறும் பார்வையுடன் போனவன் .என்னுடன் சகலதும் பேசிக்கொள்ளும் அளவிற்கு அந்தரங்க நட்புப் பாலத்துக்குள்ளும் வந்துவிட்டான் விரைவில்.

பார்ப்பதற்கு ஹிந்திப்பட சன்சய்தத் போல் நெடியவனும் திடகாத்திரமான உடம்பும் பழுத்த பூசனிக்காய் போல் மாநிறம் கொண்டவன்.

நானோ சோமாலியில் இருந்தவன் போல் இருந்தேன். இப்ப மட்டும் என்ன அதே கோலம்தான் தலையில் தான் மாற்றம் தலைமுடியை தானம் கொடுத்துவிட்டேன் ரஜனி விக்வைக்க கேட்டதில்.

சாதாரன தரத்தில் எட்டுப் பாடங்களையும் ஒரே எறிதல் குண்டில் வீசி எறிந்து கா/பெ/ உயர்தரம் என்ற இரண்டாவது ஏணியில் ஏறும் ஆண்டாக 1997 ஆவனி பகுதியில் பள்ளிக்குள் உள்நுழைந்தவன்.

எனக்கும் அவனுக்கும் வயது வித்தியாசம் பாஞ்சாலியின் கணவர்களைப் போல்!

நல்ல பாடல் ரசனையும் 1980 இல் வெளியான படங்கள் என்னைப் போல் அவனுக்கும் பிடித்திருந்தது.

இடப்பெயர்வில் என் இனிய பல நண்பர்களை பலதிக்கிற்கும் மண் மீட்பு என்றும், கானாமல் போனவர் பட்டியலிலும் ,புலம் பெயர்ந்தும் போனவர்களையும் விட்டு தனிமரம் தனியாக பாலைவனமாக இருந்த போது நட்பு என்று உறவுப் பாலம் இட்டு பனிமழையைப் போல் வந்தான்.

அதுவும் எனக்கு அப்போது தேவையாக இருந்தது. ஊர்சுற்றுவதும் உதவாக்கரை என திரிந்து கொண்டிருந்த தனிமரத்திற்கு வவுனியாவின் சதுரங்கள் தெரிந்து கொள்ளவும் என் இருப்பு ஏது என்று தெரியாமல் திக்கு முக்கடியபோது தத்தளிக்கும் ஒரு ஓடமாகிப் போனவனுக்கு வழிகாட்டும் பாதைசாரியாகவும் பாரதியின் கண்ணன் போல் எனக்கும் யாதுமாகி வந்து இருந்தான்.பிரபு.


நாம் இருவரும் வேலைமுடிந்தும் ,பள்ளிமுடிந்தும் பல இடங்களை கோவலனைப் போல் காலினாலும் சைக்கிள் மூலமும் அளந்த தூரம் .வைரமுத்து சொல்வது போல் பழைய பர்மாவிற்குப் போகும் தூரம்

.ஒவ்வொரு குச்சு ஒழுங்கைகளையும் பாதுகாப்பு காவலர்களிடம் வரும் தேடல்களையும் தாண்டி ,மாற்றுக்குழுவினர்களின் மர்மப்பார்வைகளையும் ,
எனக்கு மொழி பெயர்த்தவன் அவனே .

எனக்கு சகோதரமொழியில் குருவாக இருந்தான். எங்கள் நட்பு அவன் வீடுவரை நண்பன் என்ற பயணத்தில் அவர்கள் குடும்பத்தில் நானும் ஒருவனானேன்.

ஓயாமல் நான் கேட்கும் பால்கோப்பியை தாயும் சரி பிரவுக்குப் பின் பூமிக்கு வந்த இரு சகோதரிகளும் தம்படிப்புக்கு இடையிலும் உரிமையுடன் போட்டுத் தருவார்கள் அண்ணா என்று.

. ..என்
குடும்பத்தினர் மறுபக்கத்தில் நானும் தந்தையும் இக்கரையில் இப்படிப் பலர் இருந்தார்கள் அக்காலத்தில்
.
வவுனியாவின் தண்ணீர் ஒரு வித்தியாசமானது. சில பகுதியில் சில படிமங்களை கொண்டிருக்கும் கொதித்தாறிய தண்ணீரை வடிகட்டிக் குடிக்காவிட்டாள்.
காலப் போக்கில் சிறு நீர் கழிக்கும் போது எரிச்சலும் அதனைத்தொடர்ந்து சலக்கடுப்பும் சிலருக்கு ஏற்படும் .( இதற்கு மருத்துவ விளக்கம் தம்பி மதிசுதா பாடம் போட்டு விளக்குவார் என நம்புகின்றேன்)


எனக்கும் வந்த புதுசு. தாகத்தைப் போக்க எதையும் ஜோசிக்காமல் அரசியல் வாதியின் தேர்தல் பிரச்சாரம் போல் அருந்திக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த போது ஆமிக்காரன் காதுக்குள் பேனையை வைத்து காதைப் பொத்தி அடித்தது போல் அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட நான் போய் நின்றது.

மன்னார் வழி காட்டும் குருமன்காட்டுச் சந்தியில் இருந்த தனியார் கிளினிக் .வைத்தியரும் என்னை ஏற இறங்க பார்த்து பரிசோதித்து விட்டுச் சொன்னது தான் எனக்கு அடி வயிற்றில் கல் இருப்பதாக .கேனியா என்பார்கள் பேச்சு வழக்கில்.

எனக்கு விரைவாக சத்திர சிகிச்சை செய்யனும் என்றார் .அப்போது உதவிக்கு இருந்து இரண்டு நாளும் பார்த்தது அவனின் தாய்.
என்னையும் தன் மகன் போல் என்று பாசம் கொட்டிய குசுமாவதி அம்மாவை .

இந்தப்
பதிவு எழுதும் ஏகாந்த நேரத்திலும் என்னிப் பார்க்கின்றேன் அதே பாசத்துடன் .

தனிமரம் வெளிநாட்டுவாசி ஆனதன் பின்பு மாறிவிட்டான் .என்று நீங்கள் கூறும் குற்றச்சாட்டு சந்தேகத்தின் பிடியில் பூஸாவில் வாடும் என் உறவுகள் போன்றது

.உண்மையில் நடந்த
எல்லாம் நீங்கள் அறியவில்லை என் பக்கம் உள்ள நியாயத்தை என்பது மட்டும்
என்னாள் உறுதியாக எந்த நியாயத்தைக் கண்டரியும் ஆனைக்குழு முன் சாட்சியம் கூறுவேன்

.அன்று உங்களிடம் கற்ற சகோதர மொழியில் இன்றும் மறக்கவில்லை காலமாற்றத்தில்.

எந்த புயலிலும் தனிமரம் கானாமல் போன செம்பனி விவகாரமல்ல என்றாவது தீர்ப்பு வரும் என்று என்னும் ஒரு கிரிசாந்தியின் தம்பியின் ஆவி போல் என்னையும் நம்புவீர்கள்.

காலமாற்றம் மீண்டும் நடந்தவையை ஞாபகப் படுத்து கின்றது.

தொடரும்-

34 comments :

Anonymous said...

வீரர்களை வளர்த்த வவுனியா தண்ணீர் கல் உருவாக்கும்....செய்தியுடன் ...உணர்வு தொடர் ...தொடருங்கள்...

Anonymous said...

//பிரபு கந்தசாமியின் தவப்புதல்வன்/// என்ர மகனின் பேர் பிரபு எண்டு உங்களுக்கு எப்பிடி தெரியும் பாஸ் ))

MANO நாஞ்சில் மனோ said...

நெஞ்சை கலங்க வைக்கும் தொடர், சொல்லுங்கள் நானும் உங்கள் துக்கத்திற்கு ஆறுதலாக இருக்கிறேன் மக்கா...

Anonymous said...

ம்ம் புரியுது புரியுது ..

உங்களுக்கு சிங்களம் தெரியுமா ..எனக்கு கொஞ்சம் கொஞ்சம் ..உங்கால பக்கம் வந்தா எனக்கு கிளாஸ் எடுப்பிங்க தானே )))

Unknown said...

சோகமான உணர்வுகளிள்
வெளிப்பாடு சகோ
தொடர்வேன் தொடருங்கள்

புலவர் சா இராமாநுசம்

Yoga.s.FR said...

இதுவெல்லாம் தனிமரத்தின்?????????????ஐயய்யோ,மன்னித்து விடு தம்பி,கிண்டல் செய்த மனது தவிக்கிறது.இத்தனையும் சுமந்து கொண்டா............................................................?முடியவில்லை.

செங்கோவி said...

தொடரின் ஆரம்பமே அழுத்தமாய் நல்ல தொடர் என்று கட்டியம் கூறுகிறதே..

அந்தத் தாயின் அன்பும் நெஞ்சை நெகிழ வைக்கிறது..தொடருங்கள்.

காட்டான் said...

என்னையா தனிமரம் இலங்கையில எந்த இடத்தை கேட்டாலும் சொல்லுகிறாய் .. பழைய பதிவில் பத்தொன்பது பள்ளிகூடத்து பழய மாணவர்ன்னு வேற சொல்லுறீங்க.. என்னத்தையா நான் நம்ப.. ஹி ஹி ஹி (மாட்டீட்டிங்களா..?)..

தனிமரம் said...

நன்றி ரெவெரி  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் தொடர்ந்து வாருங்கள் உங்கள் விமர்சனம்தான் என்னை ஊக்கிவிக்கும் !

தனிமரம் said...

நன்றி கந்தசாமி இப்போது சரி நீங்கள் தாத்தா என்று ஒப்புக்கொண்டீர்களே ! ஹீ உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கந்தசாமி தொடர்ந்து வாருங்கள் உங்கள் விமர்சனம்தான் என்னை ஊக்கிவிக்கும் !

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணா  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்   தொடர்ந்து வாருங்கள் உங்கள் விமர்சனம்தான் என்னை ஊக்கிவிக்கும் !

தனிமரம் said...

எங்கள் பக்கம் வாங்கள் கந்தசாமி நாங்கள் ரெண்டுபேரும் பிரென்ஸ் மொழி படிப்போம் அதுதான் இப்போது வேலையைத் தேடித்தரும்!

தனிமரம் said...

நன்றி புலவரே உங்கள் வருகையும் கருத்துரையும் என்னை இன்னும் மெருகூட்டும் பதிவுலகில்!

kobiraj said...

உங்கள் தொடர் இப்போதுதான் பார்க்கிறேன் .கடையில் ஏதோ சோகம் இருக்குது .

K.s.s.Rajh said...

அழகான ஒரு வாழ்க்கை கதை இதில் எதோ ஒரு இனம்புரியாத சோகம் கலந்து இருக்கு போல..அடுத்த அடுத்த பகுதிகளுக்காக வெயிட்டிங்..சகோ

தனிமரம் said...

வணக்கம் யோகா அண்ணா!

நீங்கள் மூத்தவர் பதிவுலகில் நான் நன்கு அறிவேன் .உங்களின் இன்றைய பின்னூட்டம் என் மனதில் கொஞ்சம் சலனம் தருகின்றது!

ஐயா நான் வடக்கில் ஒரு தீவில் பிறந்தவன் நாட்டின் போர்ச்சுழலில் வளர்ந்தவன் கால மாற்றத்தில் அரசகட்டுப்பாட்டுப் பகுதியில் நாட்டின் முக்கிய பல்தேசிய தனியார் துறையில்  விற்பனைப் பிரதிநிதியாக 7 வருடங்களாக வேலை செய்தவன் அதன் மூலம் இலங்கையின் கிழக்கு மாகாணம் தவிர்த்து திருகோணமலை முதல் காலி வரை பணி புரிந்தவன். சமாதான காலத்தில் வடக்கில் பணிபுரிந்து விட்டு 2005 இல்தான் பாரிஸ் வந்தேன்.

 எனக்கு அதிகம் சகோதரமொழி நண்பர்கள் இருக்கின்றார்கள் இன்றும் இருமொழியும் எனக்கு கடவுள் தந்த வரம்.
  ஆனால் என் முக்கிய உறவுகளின் பாதுகாப்பு நிமித்தம் தனிமரம் என்ற பெயரால் அழைக்கப்படுவதையே  விரும்புகின்றேன்.அதை நீங்கள் நன்கு அறிவீர்கள் பேய் ஆட்சியில்  எதுவும் நடக்கலாம் .

அதனால் தான் இலங்கையின் பலபகுதியும் என் ஞாபக குறிப்பில் பதிவின் வழியே பகிர்கின்றேன் .

இந்த கதை என் வாழ்வில் நடந்த சம்பவம் அதன் தாக்கம் என்ன என்பதைத்தான் இதில் தொடராக கொண்டு வருகின்றேன் இக்கதையில் பெயர்களைத்தவிர மற்றவை நிஜம்.
உங்களுடன் சீண்டலாக (குசும்பாக) பின்னூட்டம் போடுவது என் வலைப்பக்கம் அழைப்பதற்குத்தான் சிலர் என்பதிவுகளில் அதிகம் சீரிஸ் தன்மை வாய்ந்தது என்பதை நீங்களும் உள்வாங்கிவிட்டீர்களோ ?என்பதால் தான் தம்பி ராச்/நிரூபன் வலை/செங்கோவி ஐயாவின் வலைகளில் உங்களை சீண்டினேன்.
அதுதவறு என்பதை புரிந்துப்கொண்டு மன்னிப்பு கோருகின்றேன்!

 சின்னவன் விடும் தவறுகளை மூத்தவர் நீங்கள் தட்டிச் சொல்லும் உரிமை இருக்கின்றது.

உங்கள் அனுதாபத்தை நான் எதிர்பார்க்கவில்லை. என்னைவிட அதிகமானவர்கள் சோகங்களை சுமையாக சுமக்கின்றார்கள் அவர்களுடன் ஒப்பீடு செய்தால் என்வலிகள் தூசு ஆதரவான பின்னூட்டக கருத்துரைகளைத்தான் வேண்டுகின்றேன்.
 ராச் சொல்வது போல் சின்ன வயதில் (31) கடவுள் மனோவலிமையையும் பக்குவத்தையும் தந்திருக்கின்றார் அதனால் எனக்கு எதுவும் சின்னவிடயம்தான் எப்போதும் கூல்தான் என் பொலிஸி!
அதிகப்பிரசங்கி மாதிரியேதும்  எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
  இது படிக்காத தனிமரம்  ஐயா!
 நட்புடன் நேசன்!

தனிமரம் said...

நன்றி செங்கோவி ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி காட்டான் வருகைக்கும் கருத்துரைக்கும் .நான் 11 பாடசாலையில் படித்தவன் என்பது நிஜம் உறவுகள்(தாயகத்தில்) பாதுகாப்பு நிமித்தம் எல்லாவற்றையும் பட்டியல் இடமுடியாது ஜோகா அண்ணாவின் பின்னூட்டத்தில் பதில் கொடுத்திருக்கின்றேன் இலங்கையின்  பகுதி எப்படி எனக்கு அத்துப்படி என்று !காட்டானிடன் சிக்குமா தனிமரம் ஹீ ஹீ/

தனிமரம் said...

நன்றி கோபி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்!

நிரூபன் said...

மாலை வணக்கம் பாஸ்.

போர் வெறி கொண்ட இனவாதக் குணம் நிரம்பியவர்களாக இவ்வளவு காலமும், தமிழர்கள் பார்வையில் நோக்கப்பட்ட சிங்களவர்களின் இன்னோர் முகத்தினை,
மனிதாபிமானம் நிறைந்த சிங்கள மக்களும் இருக்கிறார்கள் என்பதனையும்,
உங்களின் கடந்த கால மீட்டல்களைச் சுமந்தவாறும் தொடர் நகர்கிறது.
அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்.

Yoga.s.FR said...

சில வேளைகளில் என்னுடைய பின்னூட்டங்கள் வயதுக்கு மீறியதாக இருக்கும்!அதனை அன்பால் சுட்டிக் காட்டி,என் வயதுக்கு மரியாதை ஏற்படும் வண்ணம் பின்னூட்டக் கற்றுக் கொடுத்தவர் திரு.செங்கோவி அவர்கள்.அவரை என்றும் நான் மறவேன்.சில சந்தர்ப்பங்களில் உங்களையும்,உங்களை மட்டுமல்ல க.வரோ,செ.நிரூபன்,மைந்தன் சிவா,மற்றும் கே.எஸ்.எஸ்.ராஜ் போன்றோரைக் கூட கிண்டலடித்ததுண்டு.இப்போதெல்லாம் வலி தெரிகிறது.அதனால் எவரையும் சீண்டுவதில்லை!உங்கள் எழுத்து எனக்குப் பிடிக்கும்,குழந்தைத் தனம் தெரியும்,அதனால்!குறையேதுமில்லை மகனே,முடிந்தால் எங்கோ ஓரிடத்தில் பார்ப்போம்!பேசுவோம்!நான் ஒன்றும் அனுதாபப்படவில்லை,அது கூடாது என்றும் எனக்குத் தெரியும்.வெளிப்படைத் தன்மை நல்லது!ஆனாலும் இடம்,பொருள்,ஏவல் இருக்கிறதில்லையா?எழுதுங்கள்,முடிந்த வரை எழுதுங்கள்,பாரம் குறையும்!அவ்வளவு தான்!நேரம் கிட்டும்போதெல்லாம் வருகிறேன்!நன்றி!

காட்டான் said...

யோ தனிமரம் அண்ணாத்தையை  மனம் வருந்த வைச்சிட்டாய் காட்டான் வண்டிகட்ட வேண்டி வரும் கவனம் சொல்லிபுட்டேன் ஆமா..!! 
ஹி ஹி நானும் இப்பிடிதான் ஆரம்பத்தில அண்ணையை தெரியாமல் அண்ணனின் கிண்டல் கேலி கருத்துக்களை வைச்சு சின்ன பொடி ஒருத்தர் வந்து கும்மியடிக்கிறார்ன்னு நினைச்சு மாப்பிள மாப்பிளன்னு அழைத்தேன் நாம் அவரின் எழுத்துக்களில் நிறம்பிவழியும் நையாண்டிகளை பார்த்தே  இப்படி முடிவெடுக்கிறோம் இப்ப எங்களுக்கு உண்மை விளங்குது அதற்காக அண்ண உங்க பாணி நக்கல் கலந்த பின்னூட்டங்களை மாற்றி விடாதீர்கள் அவைகள்தான் பதிவுகளை தூக்கி நிறுத்துகிறது... அத்துடன் எங்களுக்குள்ளும் சில விடயங்களில் ஒற்றுமை இருக்கின்றது... இண்டைக்கு பாருங்கோ யாருடைய பதிவுக்கு சென்று பின்னூட்டம் போடும்போது அண்ணாத்தை என்று சொன்னாலே எல்லோருக்கும் தெரியும் காட்டான் யாரை சொல்கிறான்னு... இதில் செங்கோவிக்குதான் நன்றி சொல்லவேண்டும் அவர் மரியாதையாக அழைத்ததாலேயே அண்ணாத்தைய புரிந்து கொண்டேன்.. இல்லாட்டி இண்டைக்கும் அவர் எனக்கு சின்னப்பொடியந்தான் அவரின் எழுத்தைப்போல...!!!

shanmugavel said...

சிறப்பாக செல்கிறது.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

பகிர்கையில் மனம் லேசாகும்!

M.R said...

மனதைத் தொடும் தொடர்

பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ

தனிமரம் said...

புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயா யோகா அவர்களே நன்றியுடன் 
என்றும் தனிமரம்!

தனிமரம் said...

நன்றி காட்டான் உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு தனிமரம் யாரையும் நோகடிக்காது அதைத்தான் தெளிவு படுத்தினேன்!

தனிமரம் said...

நன்றி நிரூபன் விரிவான பின்னூட்டத்திற்கு !

தனிமரம் said...

நன்றி சண்முகவேல் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி சென்னைப்பித்தன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி M.R  ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

Yoga.s.FR said...

எல்லோருக்கும் நன்றிகள்!முகம் தெரியா உறவுகள்,பாக்கியம் செய்தவன் நான்.

தனிமரம் said...

நீங்கள் மட்டும் அல்ல ஐயா யோகா உங்களைப் போன்ற மூத்த பதிவாளர்களை நண்பர்களாக கொண்ட நானும் பாக்கியவான் தான்!