19 September 2011

மதுரை வழி திருச்சி!

மதுரையில் இருந்து மீண்டும் எங்களின் பயணம் திருச்சியை நோக்கிப் பயணித்தோம்.

 திருச்சிக்கும் எனக்குமான தொடர்பு பலவருடங்கள் முன்னோக்கியது.

 கால ஓட்டத்தில் ராமனைப் பிரிந்த சீதை போல் இப்போது நானும்!

 ஆம் எங்கள் ஊருக்கு திருச்சி வானொலியான திருச்சிறாப்பள்ளி வானொலியில் இருந்து ஆடிவரும் திரைகடல் ஆடிவரும் தென்றல், வேளான்மைக்கல்வி ஒலிபரப்புகள் எங்கள் வீட்டு வானொலியில் வலம் வந்த அந்த அமைதியான காலத்தைச் சொல்கின்றேன்!

 அப்போது வானொலிக்குள் முகத்தைத் தேடிய பூமியில் இப்போது என் கால்கள் தடம்பதிக்கின்றது.

 பலதடவை!
திருச்சிக்குப் போவது யாரிடம் என்ற உங்கள் ஆதங்கம் புரிகின்றது !

.திருச்சி முன்னரை விட இப்போது இன்னும் முன்னேற்றம் கண்டு வருகின்றது.

 ஒவ்வொரு வருடப்பயணங்களிலும் இதை நான் நன்கு உணர்கின்றேன்.  பலதடவை தனியாக தனிமரம் போன படியால் இப்போது திருச்சி எனக்கு ஒரு பழகிய இடமாகிவிட்டது எனலாம்.


 திருச்சியில் இறங்கியதும் நாம் பயனித்தது எங்கள் ஊர்க்கோயிலின் சாயலில் இருக்கும் அம்மன்தான் சமயபுரத்தாள் அம்மன் கோயிலுக்கு!

அதிகாலையில் மணி அடிக்கப் போகும் எங்கள் கிராமத்து கோயில் 21 வருடங்களாக பாதுகாப்பு பிரதேசம் என்ற கம்பி வலயத்துக்குள் கட்டுண்டு கிடக்கின்றது.

 ஊரைக்காக்கும் தெய்வத்தின் சன்நிதி கூட யுத்தம் என்ற கொடுயவலையில் சிக்கிவிட்டது.

 கண்முன்னே இருந்த கோயிலை நான் பார்த்து வருடங்கள் 21  ஆண்டுகள் ஆகிவிட்டது.  வனவாசம் போனது போல் இனியும் அந்த ஊருக்குள் எப்போது திரும்பிப் போவது?

 விரட்டப்பட்ட அகதியானவன் அதே சாயல் அம்மனை இங்கு பார்க்கின்றேன்.

  அதனால் தான் தனிப்பட்ட விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் குழுவாக சமயபுரத்தாலிடம் போவது என் இயல்பு.

நான் பார்த்த அம்மன் திருவுருவத்தை என் மனைவியும் கானவேண்டும் என்ற ஆவலில் நாம் திருச்சியில் இருந்து சமயபுரம் போனோம்.

  சமயபுரம் என்றாளே அம்மன் கோவிலுக்கா? என்று பஸ் நடத்துணர்கள் கண்டுபிடித்து விடுகின்றார்கள்.

சூரியோதம் வரும் வேளை ஈர ஆடை உடுத்தி அம்மனை வலம் வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்று எங்கள் ஊர் பெரியவர்கள் சொல்லுவார்கள்.

 நானும் சமயபுரத்தாளின் அருள்வேண்டி பலதடவை அதிகாலையில்  சமயபுரத்தாளை தேவியே! நின் பாதம் போற்றுவேன் நூற்றாண்டு  தாண்டி உன் உயிர்  முகவரி கேட்டறிந்த நுண்மான் நுழைபுலம் கொண்டாட்சி செய்பவளே சரணம்!தருசித்திருக்கின்றேன்.

 இம்முறை மாலையில் கோயில் சிறப்புத் தருசனம் ஊடாக மனைவியுடன் உள்நுழைந்தோம் .

சமயபுரத்தாளின் மூலப்பிரகாரம் மிகவும் தொளிப்புடன் பக்தர்கள் முண்டியடிக்க தீபாராதனை நடக்கின்றது

.ஆயிரம் கண்கொண்ட தாயின் திருவடிகளை தருசிக்கும் பேறு நம் விழிகளுக்கு..

 அபிராமிப்பட்டரின்" ஆத்தாளை எங்கள் அபிராமியை நெஞ்சமெல்லாம் என்று "அதிகம் பக்தர்கள் நெரிசலில்.

 அந்தனர்கள் வீபூதி குங்குமம் விரைவாக கொடுக்கின்றனர். தாயின் தருசனத்தின் பின் வீதி வலம் வந்தாள் சமயபுரத்தாலில் கோபுரக்கலசம் தங்கமுலாம் பூசியது ஜெகஜோதியாக ஜொலிக்கின்றது.

 தாய் உள்ளம் கொண்டவளின் கோபுரம் இப்படியான தங்கமுலாம் பூசிய கோபுரங்கள் மிகவும் விரல்விட்டு என்ன முடியும்

.அம்மனின் அற்புதமான கோயிலின் திருவுருவம் இன்னும் கண்களில்!பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கும் ,தோஸ நிவாரனத்திற்கும் ,மாலை,சேலை,தொட்டில், தங்கத்தில்,வெள்ளியில் செய்த ஆபரங்கள் என பலதை காணிக்கை இடுகின்றனர்.

அம்மனுக்கு பலர் பால் குடம் எடுக்கின்றனர். விரதம் இருப்போர் பாதயாத்திரை வருவோர் என சமயபுரத்தாள் அதிகம் பக்தர்கள் தவம் கிடப்பதைக் கான முடிகின்றது

.சமயபுரத்தாளின் சிறப்பு, பூசைகள் பற்றி அறிய இங்கே -http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_05.html


நன்றி - ராஜேஸ்வரி அம்மா!

 அடுத்த பதிவுடன் மதுரை உலா முடியும்!

22 comments :

இராஜராஜேஸ்வரி said...

அருமையான ஆயிரம் கண்ணுடையாள் தரிசனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

எமது பதிவின் சுட்டியும் தந்து நன்றியும் தெரிவித்து ..மிக்க நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

Arun Kumar said...

எனது மிக இஷ்ட தெய்வம் சமயபுரத்தமாள், திருச்சியில் படிக்கும் காலத்தில் எனது பொறியியல் கல்லூரிக்கு மிக அருக்கில் தான் தாயின் ஆலய்ம் இருக்கிறது,படிக்கும் காலத்தில் ஏதோ போக்கில் தாயை தரிசிக்காமல் விட்டு விட்டேன். அதன் பின் என் வாழ்வின் இறக்கம் கண்ட போதேல்லாம் என்னை ஏற்றி விடுவது சமயபுரத்து தாயே.. உங்கள் ஊடாக சமயபுரத்து தாயை தரிச்சித்துக்கு மிக்க நன்றி

Anonymous said...

உங்களை நினச்சு எனக்கு பொறாமையாய் இருக்கு பாஸ் ...இந்தியா எல்லாம் சுத்துரிங்க ))

எனக்கும் நீண்ட நாள் ஆசை ஆனா காலம் தான் சரி வரமாட்டேன் எங்குது)

செங்கோவி said...

சமயபுரத்து அம்மன் சக்தி வாய்ந்தவள்..தரிசனத்துக்கு நன்றி பாஸ்.

Anonymous said...

என்னது அடுத்த பதிவுல முடியுதா இந்திய விசிட்...?

தனிமரம் said...

நன்றி இராஜேஸ்வரி அம்மா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி அருன்குமார்  வருகைக்கும் கருத்துரைக்கும்!சக்தியின் பெருமையை உணர்கின்றீர்கள்!

தனிமரம் said...

நன்றி கந்தசாமி  வருகைக்கும் கருத்துரைக்கும்!ஒரு நாள் போகலாம்  கவலை வேண்டாம் சகோ!

தனிமரம் said...

நன்றி செங்கோவி ஐயா  வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி ரெவெரி   வருகைக்கும் கருத்துரைக்கும்! முடிவது ஆன்மீகப் பயணம் ! 

காட்டான் said...

மாப்பிள கோவிலுக்கு வெளிய வாய்யா நிறைய இடமிருக்கு இந்தியாவில...

கவி அழகன் said...

ஊர்க்கோவில் யாபகங்கள் மனதை கனமாக்குது

தனிமரம் said...

 நன்றி காட்டான் வருகைக்கும் கருத்துரைக்கும் விரைவில் கோவிலைவிட்டு தனிமரம் அட்டகாசமான பதிவுடன் வரும்!

தனிமரம் said...

 நன்றி கவி அழகன் வருகைக்கும் கருத்துரைக்கும்! ஊர் ஞாபகங்கள் இன்னும் இதயத்தை கனமாக்கின்றது!

K.s.s.Rajh said...

அண்ணே இந்தப்பதிவு...டாஸ்போட்டில வரவில்லை அதான் லேட்டு..சாரி..வழக்கம் போல பயண அனுபவம் சூப்பர்..ரசித்தேன்..

அப்பறம்..இன்று ஒரு சூப்பர் பதிவு போட்டு இருக்கேன் வந்து பாருங்க...மெயிலும் அனுப்பினன்..

shanmugavel said...

பரவாயில்லையே! திருச்சி அனுபவம் உங்களுக்கு சிறப்பாக இருந்திருக்கிறது.

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி சன்முகவேல் ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!இணைவுக்கும்

Mohamed Faaique said...

உங்கள் பிரயாண அனுபவங்களை அழகாக தொகுத்து தந்திருக்கிறீர்கள் . நன்றி

தனிமரம் said...

நன்றி faaique வருகைக்கும் கருத்துக்கும்!

நிரூபன் said...

சமயபுரத்து அம்மனின் பெருமையினை அழகுறப் பதிவு செய்திருக்கிறீங்க.

நல்லதோர் பதிவு.

தனிமரம் said...

நன்றி நிரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்!