25 September 2011

விண்ணைத் தாண்டிய என் காதல் !

இயற்கையான கிராமம் தொலைந்து நகரத்தின் தூசுக்காற்றில் துவண்டு !

மாநகரத்தின் மூச்சிரைக்கும் அடுக்குமாடி வாழ்க்கையில் கலந்து போன வாழ்க்கையில். எப்போதாவது சுத்தமான செங்கம்பளம் விரிக்கும் பசுமைவெளிகளுக்குப் போகனும் என்ற ஆசையில்!

 இம்முறை என்பயணம் இன்னொரு ஞாபகச் சின்னத்தில் சேர்ந்த இடம் தான் .

இயற்கை எழில் கொஞ்சும்  சேச்சிகளும் மயக்கும் கேரள தேசம்!

சென்னையில் இருந்துசொகுசு பேருந்தில் நாம் கேரளா புறப்பட்டோம்.

 பஸ்பிரயாணம் கொஞ்சம் அலுப்புத்தட்டுயது உண்மை. மழை ஒரு புறம் சாரதியை அதிகம் வேகமாக போவதற்கு தடைக்கல் போட்டது. நீண்ட நேரத்தின் பின் 15 மணித்தியாலம் பயணித்து போய் சேர்ந்தது கேரளாவின் எர்ணாகுளத்தின் மையத்திற்கு.


நாம் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த கார்ச்சாரதி அதிகதடவை கைபேசியில் தொடர்பு கொண்டு. கிரிக்கெட் வர்ணனை போல் எங்கே நிற்கின்றீர்கள் என்று கொஞ்சம் அதிக துன்பம் தந்தாலும் நாங்கள் போக வேண்டிய இடத்திற்கு கூட்டிச் செல்ல இன்னொருவர் காத்திருக்கின்றார் என்பதில் மகிழ்ச்சியே!

மொழிபுதிது அதையும் தாண்டி முதல்தடவையாக போகின்றோம்.

 சிலருக்கு முன்பதிவு செய்யும் நிறுவனங்கள் .கடைசி நேரத்தில் காலைவாரும் செயல்களை என் வலையுலக நண்பர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள்.

அவர்களின் பதிவும் அதைத் தொடர்ந்து வந்த சில  சினிமாப் படங்களும் தான் நாம் கேரளா போக உந்து சக்தி.

நாம் போய் பஸ்தரிப்பில் இறங்கவும் எங்களை அழைத்துச் செல்ல காத்திருந்தவரும் முன்வர நம் கைபேசி அழைப்புக்கு சிரம் இல்லாமல் போனது.

பரஸ்பர அறிமுகத்தின் பின் எங்களைச் சுமந்து கொண்டு கார் போன  ஏர்ணாகுளம் பெருந் தெருப்பாதை!

 எனக்கு அத்தனக்கல ஊடாக குருநாகல் போன வழிப் பயணங்களை ஞாபக  உணர்வை மீட்டியது.

 பாதை இரு மரங்கும் செவ்விளனீர் மரங்களும் வீட்டுத்தளபாட பிரம்பினால் செய்த பாவனைப்பொருட்கள் அதிகம் .

அத்தனக்கலயில் கிடைக்கும் அங்குதான் ஒரு  அரசியல் வரலாறு இருக்கும் குடும்பத்தின் வாழ்விடங்கள்.

  அதை ஒத்த ஏர்ணாகுளத்தின் புதிய பாலம் ஊடாக அதிக தூரம் கார் போகும் வழிகள் எங்கும் மீண்டும் தாயகத்திற்கு போன உணர்வைத் தந்துகொண்டுருந்தது .

.மறக்க நினைக்கும் குருநாகல் வாழ்வை மீண்டும் சீண்டியது .

.ஒவ்வொரு கடைத் தெருக்களிலும் பலபொருட்கள் காட்சியளிக்கின்றது .

.கொஞ்சம் உள்ளே செல்லச் செல்ல மாவத்தை கம வழி கண்டிக்கு போவதைப் போல் சிறியதும் பெறியதுமான வீடுகள் வீட்டைவிட அதிகம்  கண்ணில் தெரிவது தொலைக்காட்சி அண்டெனாக்கல் பூட்டிய (சாட்டலைட்) தகடு .

ஒரு வேலை கருணாநிதியின் இலவச டீ.வி இங்கு வரை வந்துவிட்டதோ! என எண்ண வைக்கின்றது.

நாம் போகவேண்டிய இடம் நெருங்கும் வழி எங்கும் தேக்கு மரங்களும் ,செம்பரத்தைச் செடிகளும், ஆவரசம் மரங்களும் பூத்துக் குழுங்கும் அழகு அதிகாலையில் இன்னும் மனதில் கிளர்ச்சியை உண்டு பண்ணுகின்றது.

 மனதிற்குப் பிடித்தவளுடன் நீண்டகாலத்தின் பின் ஒன்றாகப் பயணிப்பதும் இன்னும் சுகமல்லவா?

நாம் போகும் இடம்தான் கடந்தாண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட விண்ணைத்தாண்டி வருவாயாவில் முன்பாதிக்கதையை நகர்த்தும் இடமான ஆலப்புழாவிற்கு!

ஆலப்புழா பிரபல்யமாகிவரும் சுற்றுலா உல்லாசபுரி!

 ஆழப்புலாவில் இயற்கை நளினம் புரியும் அழகு நடிகை சோபனாவின் பரதத்தினைப் போன்றது.!//






ஆலப்புழாவின் படகு வீட்டுக்கு டிஸ்யூம் படத்தில் ஒரு பாடல் அங்கேதான் சூட்டிங் நடத்தப்பட்டது.

சுற்றுலா பயணிகளை கேரளா சுற்றுலாமையத்தின் பணியகம் .

விளக்கத்துடன் முன்பதிவு செய்த பற்றுச் சீட்டை வாங்கி ஒதுக்கப்பட்ட படகிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

நம்மை அழைதுச் சென்று நாம் தேடிவந்த படகுவீட்டில் ஏற்றியதும் அவர்கள் விடைபெற படகின் மாலுமியும் உதவியாளரும் நமக்கு அறிமுகம் ஆனார்கள்.!

 போனதும் முதலில் தேசிக்காய் தண்ணீர் குடிக்கத்தந்தார்கள் .

உடல்சூட்டுக்கு புத்துணர்ச்சியைத் தருமாம் .

எனக்கு முன்னர் கோயில் திருவிழாக்காலங்களில் நாம் செய்த தண்ணீர்ப்பந்தல் ஞாபகம் வந்திச்சு.

 இங்கு தேசிக்காய் மிகவும் சிறியது ஆட்காட்டிப்பறவையின் முட்டைபோல்.!


படகுவீடு மிகவும் தென்னோலையாலும் பிரம்பாலும் பின்னப்பட்டு குளியல் அறை கழிவறை,படுக்கையறையுடன் மிகவும் சுத்தமாக இருக்கின்றது.

 ஒரு அறையில் இருந்து, ஐந்து அறை வரை, படகுகளில் வகை இருக்கு .

பருவகாலங்களுல் அதிகமான கட்டணம் அத்துடன் அங்கு சேவையில் 700 படகுகள் இயங்குகின்றது .

ஒரு நாளில் சராசரியாக 500 படகுகள் இயங்கிக் கொண்டிருக்குமாம்..

 ஒரு நாள் வாடகை ,ஒரு வாரம் ,ஒரு மாதம் என பலர் விரும்பிய வண்ணம் வாடகைக்கு படகுவீடு கிடைக்குமாம் .

கேரளா பண்டிகை நாட்களில் வரும் சுற்றுலாவாசிகளுக்கு படகுகள் போதவில்லையாம் என்றார் மாலுமி  .

நாம் மதியம் உள்நுழைந்ததால் மதியச் சாப்பாடு தயார் நிலையில் இருந்தது வரும் வழியில் அவர்கள் தொடர்பு கொண்டு அசைவமா/சைவமா என்பதை தீர்மானித்துகொண்டார்கள் .
.
எங்கள் படகுவீடு நீரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து இயங்க வெளிக்கிடவும் நாமும் உடைமாற்றி குளியல் முடித்து வரவும் சரியாக இருந்தது .

கடல் நன்னீர் ஏரி என்று சொல்ல முடியும் இதை இரு மரங்கிலும் விவசாய நிலமகள் பச்சையாடை உடுத்தி சிரிக்கின்றாள் செம்பரத்தம் பூ எங்களை புன்னகைத்து வரவேற்கின்றது .

பயணம் தொடரும்!

24 comments :

Anonymous said...

ஆகா..! கேராளாவும் போனிங்களா எனக்கு பொறாமையாய் இருக்கு பாஸ் ....

புகை படங்கள் நீங்கள் கமெராவில் சுட்டதா?

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

படகுச் சவாரியில் மகிழ்ந்து திளைத்தது மாத்திரமின்றி, என்னையும் கேரளாவிற்குப் போகத் தூண்டும் வண்ணம் உங்கள் பதிவு அமைந்துள்ளது..

ஆழப்புளா பற்றி நீங்கள் சொல்லியதும், எனக்கும் படகுச் சவாரி செய்யனும் என்று ஆவல் எழுந்துள்ளது.

நல்லதோர் நினைவு மீட்டல் அனுபவப் பகிர்வு.

K.s.s.Rajh said...

அண்ணே கேரப்பொண்ணுங்க நல்ல அழகுதானே அவங்களைப்பத்திலும் ஒரு நாலுவரி எடுத்துவிடுங்கோ...............ஹி.ஹி.ஹி.ஹி

கவி அழகன் said...

வாசிக்க வாசிக்க வாய் தண்டபாட்டில சிரிக்குது அதனை அழகு நடை

Mathuran said...

அருமையான அனுபவப்பகிர்வு..
நீங்க உலகம் சுற்றியவாலிபன் போலிருக்கே

Unknown said...

கேரளா மாதிரியே குளு குளு உங்கள் பதிவு

MANO நாஞ்சில் மனோ said...

என் கேரளா நண்பர்கள் என்னை அங்கே வரும்படி அடிக்கடி அழைப்பதுண்டு, எனக்குதான் நேரமில்லை, உண்மையில் அருமையான இடம்தான் போயிருக்கீங்க!!!!

தனிமரம் said...

நன்றி கந்தசாமி வருகைக்கும் கருத்துரைக்கும் கேரளா போனோம். படம் நான் பிடித்ததுதான். விரைவில் நீங்களும் போய்வாருங்கள் 

தனிமரம் said...

நன்றி நிரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும் நீங்களும் போய்வர முயலுங்கள் சகோ  இயற்கையான அழகு!

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும் .தம்பி குடும்பத்தில் சண்டைவரவேனுமோ நம்ம வீட்டுக்காரி உலகையால சாத்துவா இந்த கேரளா மயில்கள் பற்று எடுத்துவிட்டா! அவ்வ்  

தனிமரம் said...

நன்றி கவி அழகன் வருகைக்கும் கருத்துரைக்கும் . 

தனிமரம் said...

நன்றி மதுரன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் .உலகம் பெருசாமே அதனால் சுற்றவில்லை. கேரளா மட்டும்தான்  சுற்றுலா!

தனிமரம் said...

நன்றி ராமேஸ் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் .

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணாச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் .முடியும் போது குடும்பத்துடன் போய் வாருங்கள்!

Unknown said...

மாப்ள பயணப்பதிவு அருமை...ஒரே ஜாலின்னு சொல்லுய்யா!

Anonymous said...

God's own Country...எனக்கு மிகவும் பிடித்த மாநிலம்...தொடருங்கள்...

தனிமரம் said...

நன்றி விக்கியண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி ரெவெரி  வருகைக்கும் கருத்துரைக்கும்!

K said...

நேசன் அண்ணை வணக்கம்! அப்படியே கேரளாவுக்கு போய்வந்த உணர்வு! நல்ல சுவாரசியமா கொண்டு போறீங்க! கலக்குங்க வாழ்த்துக்கள்!

kobiraj said...

உங்களை கண்டுக்காமல் விட்டு விட்டேன் போல .இப்போதுதான் முதல்முறை வருகிறேன் .அருமையா பதிவு .பயண அனுபவம் சூப்பர் .எனக்குன் சந்தர்ப்பம் அமையாதா ? என எண்ணுகிறேன்

Anonymous said...

Super
spoofking.blogspot.com

தனிமரம் said...

நன்றி ஐடியாமணி சார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும்!

தனிமரம் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் தனிமரத்தில் இணைவுக்கும் நன்றிகள் கோபி.

தனிமரம் said...

நன்றி பெயரில்லா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!