16 September 2011

சொர்க்க விழா!!

 கோடைகால வழி அனுப்பும் ,குளிர்கால வரவேற்புக்கும் ,பாரிஸ் மக்கள் திரலும் நாள்!

உதட்டோர முத்தத்திற்கு குறைவில்லாத காதலர்கள் போல்!

வைரமுத்து சொன்னது போல் ஐந்து நாள்கள் விற்கப்படும் நாட்களை வார இறுதியில் வாங்கும் நாள் !

மிகவும் சிறப்பு மிக்க சொர்க்கபுரி தான் பாரிஸ்சில் இன்று நடக்கும் இசைத் தொடர் !

இடைவிடாது புதிய இசைக்கருவிகளின் அறிமுகமும்  இசையின் நுனுக்கக் கருவிகள் ,மக்களிடம் விழிப்புனர்வை ஏற்படுத்தும் TECHNO PARADE  ஆகும்.

  இது பாரிஸ் தேசத்தின்  கலாச்சார அமைச்சக்தின் அறிமுகத்திட்டம் ஆகும் 1998 இல் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த நிகழ்வு.


 ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையில்  உற்சாகமாக பாரிஸ் மாநகரத்தில் கொண்டாடுகின்றது.


 இந்த நிகழ்வில் உணவகங்கள்,,பாதையோரத்தில் மடைபரப்பி கூதுகளிக்கும் மக்களுக்கு இன்னும் மயக்கம் கொடுக்கும் வண்ணம் சேவையாற்றும் .

பாரிசின் மாநாகரின் 4 ம் பிரிவுப் பகுதியில்  அமைந்து இருக்கும் ஆற்றுப்பாதையோரம் பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு வழங்க! சிறப்பான இசைக் கொண்டாட்டம் நடைபெறும்.


 இந்திரலோகத்து  சொர்க்கவிழாவையும் கம்பன் சொல்லும்  வானரப்படைகள் அறுசுவைகணிகள் உண்ட மயக்கத்தில் நினைவு மங்கிய வேலையில் அனுமான் இலங்காபுரியை அடைந்தான் என்பது போல்!

 பாரிஸ் மக்களும் இனிய மென்பாணங்கள் ,மது பாணங்கள் உண்டு பாதையோரம் ஆனந்தக் களிப்பில் இசையை ரசிக்கும் அழகு பார்ப்பதற்கு பல வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர்.


  தமக்கு  தெரிந்தவர்களுடனும் , உற்சாகமாக
மனதிற்குப் பிடித்தவர்களுடன், வீதியோரம் ஜல்சா,பலே,கபரே நடனங்கள், தனிநபர் டிஸ்கோ, தீப்பந்தத்தில் வாயினால் புகை ஊதி நெருப்பினை சுவாலையாக்கள், பல்டி, தோல்களில் ஏறி சுலலும் சதுராட்டம் என   ஆடும் அழகு பார்ப்பதற்கு உள்ளத்திற்கு கிளர்ச்சி ஏற்படும் !


 அதுவும் பிரென்ஞ் இளையோரின் சுதந்திர  ஆர்ப்பரிப்பும், அன்பு உள்ளங்களின் பலத்த கரவோசம் மேல் உலகம் அதிரும் வண்ணம் இருக்கும்

.இலங்காபுரி வேந்தனை இராமன் போருக்கு அறைகூவல் இட்டு போர் முரசு கொட்டியது போல்!


ரசிகர்களின் ஆதரவு கண்டு இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள்,ஒலிக்கவிடும் இசைக்கலவை(dj)  ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு உணர்வை பிரதிபலிக்கும் .


இசைக்கலவையாளர்களின் விரல்களில் நடனதாரகை நாட்டியம் ஆடும்.

  இசையின் சத்தம் வரும் போது உள்ளங்கள் கவலை ஏதும் அற்ற நாதத்தின் ஒலியை சுவாசித்து பேரலையில் கலந்து போகும் சிற்றரிவியாக   வீதிகளில் அசைவார்கள்!



 ஒலி/ஒளி ஊடகம் காட்சியைப் பதிவு செய்வதும் ,நாளிதல்கள் வாரசஞ்சிகைகள் பதிவு செய்வதற்கு அதிகளவில் ஒன்று கூடும்.

  5 km தூரத்திற்கு  இசைப் பேரணி  மதியம் 12 மணிக்குத் தொடங்கும்.  BASTILLE தொடங்கி அதன் மையப்  பகுதியின் 4 புறத்தின்  பெரும் பாதைகள் ஊடாக இசை முழங்கி   ஆற்றுக்கரையோரம் வந்தடைவது மாலை 6.30 மணிக்கு ஆகும்.

  அதன் பிறகு தொடங்கும் இசைக் கச்சேரிகளில் பலதுறைக் கலைஞர்களின் ஒற்றுமையில் பல இனிய பாடல்கள் இசைக்கப்படும்.

பிரென்ஞ்,ஆங்கிலம்,போர்த்துக்கள்,ஸ்பெயின் ,ஆப்பிரிக்க,ஆரபிய இசைக்கலவையில் பல புகழ்பெற்ற கலைஞர்கள் மேடையில் பாடி நளினம் புரிவதைப் பார்க்கும் போது இசைக்கு இங்கு கொடுக்கும் மரியாதை மெய்சிலிக்கும் 400000 மக்களுக்கு மேல் ஒரே இடத்தில் இணைவது என்பது  எத்தனை சிறப்பஞ்சம் ஆகும்

.இத்தனை மக்களை சிறப்பாக ஒன்றினைக்கும் கலாசார அமைச்சகம் அதன் உபக்குழுக்கள் சேவை பாராட்டத்தக்கது.

நினைக்கையில் நீங்கள்  பொறாமை கொள்வீர்கள் பிரென்ஸ் தேசத்தில் இருக்கவில்லையே என்று!

  இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் கவலைகள்    அற்ற  சொர்க்க புரியைக் கானும் போது மனதில் தோன்றும்


!நம் தேசத்தில்  எப்போதும் சொர்கபுரி? என்பது கம்பன் சொல்வதை  ஏட்டுக்கல்வியாக   மட்டும்தான் தமிழன் கானுவதா?  மாலை என்றாளே  கிரீஸ் மனிதனின் பயத்தில் வீட்டுக்குள் பதுங்கும் நம் இனம் !


பாரதி பாடியது போல் ஆடுவோம் பள்ளுப் பாடுவோம் ஆனந்தச் சிதந்திரம் பெற்றுவிட்டோம் என்று எப்போது இன்னொரு சொர்கபுரியைப் பார்ப்பது? Op

42 comments :

K said...

வணக்கம் சார்! ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க! எனக்கு பாரீஸ் வரணும் போல இருக்கு! பகிர்வுக்கு நன்றி சார்!

Mahan.Thamesh said...

வணக்கம் சார். நல்ல சுவாரசியமான தகவலை பகிர்தமைக்கு நன்றிகள்

K.s.s.Rajh said...

ரொம்ம அருமையா சொல்லிருக்கீங்க...

Anonymous said...

அருமை...அடுத்த வருஷம் டிக்கெட் அனுப்புங்க நேசன்...

Mathuran said...

நல்லா சொல்லியிருக்கிறீங்க..
அடுத்தமுறை நானும் வரட்டுமா

தனிமரம் said...

வணக்கம் ஐடியாமணி சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! விரைவில் பாரிஸ் வாங்கோ!

தனிமரம் said...

வணக்கம் மகோன் தாமேஸ்  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நீங்கள் தனிமரத்தை சார் என்பது சங்கடமாகஇருக்கு சகோ என்றே அழையுங்கோ மணிசார் எல்லாரையும் அப்படி அழைப்பது அவரின் பெருந்தன்மை நான் எல்லாம் உங்கள் அளவுக்கு பட்டங்கள் பெறாதவன். சின்னவன் !

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

நன்றி ரெவெரி  வருகைக்கும் கருத்துக்கும்  அனுப்பலாம் நேரம் இருந்தால் வாருங்கோ இசை சொர்க்கவிழாவைக் கான்பதற்கு!

செங்கோவி said...

பாரிஸ்க்கு டூர் போகலாமான்னு ஆசையைத் தூண்டுது உங்க பதிவு.

செங்கோவி said...

இதை ஒருங்கிணைப்பது உண்மையில் பெரிய விஷயம் தான்.

தனிமரம் said...

நன்றி மதுரன்   வருகைக்கும் கருத்துக்கும்   வாருங்கோ இசை சொர்க்கவிழாவைக் கான்பதற்கு! பாரிஸ் உங்களை அன்புடன் அழைக்கின்றது. நானும்தான்!

தனிமரம் said...

வாருங்கோ செங்கோவி ஐயா  சொர்க்கபுரிக்கு பாரிஸ் இல் உங்களைக் கான காத்திருக்கின்றோம்! 

தனிமரம் said...

உண்மைதான் செங்கோவி ஐயா இத்தனை கலைஞர்களின் பங்களிப்பை ஒருங்கிணைப்பது பாராட்டனும் நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை

தனிமரம் said...

நன்றி நண்டு@நொரண்டு -ஈரோடு உங்கள் வருக்சிக்கும் கருத்துக்கும்!

பனித்துளி சங்கர் said...

பதிவின் தலைப்பை வாசிக்கும்பொழுதே சற்று வித்தியாசமாக உணர்ந்தேன் உண்மையில் பதிவின் இறுதியில் உணர்ந்தேன் சொர்க்க விழாதான்

Anonymous said...

வர்ணனைகள் கலக்கல் நண்பா ....நான் இருக்கும் நாட்டில் எல்லாம் இவை பெரிதாக நடப்பதில்லை..ஆனால் பாரிஸ் பக்கத்தில தான் வரட்டுமா ))

தனிமரம் said...

நன்றி பனித்துளி சங்கர் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி கந்தசாமி  உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்! எங்கள் நாட்டின் எல்லைக்கதவுகள் திறந்தே இருக்கின்றது இங்கு இன்னும் ஏதிலிக்கு இடம் இருக்கு புரிந்து கொள்வீர்கள்.நானும் அதுதான் அந்த இடத்தின் பாடல்களை சேர்க்கவில்லை புரிந்திருக்குமே பதிவில்: ஹீ ஹீ

M.R said...

நல்ல சுவாரஸ்யமான தகவல் நண்பரே
பகிர்வுக்கு நன்றி

தமிழ் மீரான் said...

நல்ல பகிர்வு

குறையொன்றுமில்லை. said...

நல்ல பகிர்வு. நல்லா சொல்லி இருக்கீங்க. நன்றி

தனிமரம் said...

நன்றி M.R ,உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி தமிழ் மீரான் ,உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி லக்ஸ்மி அம்மா ,உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

கவி அழகன் said...

அழகா சொல்லியிருகிரீர்கள்

ஆனந்த சுவர்க்கம் கண்டேன்

Yaathoramani.blogspot.com said...

வரமுடியாத ஏக்கத்தை உங்கள் பதிவு
தீர்த்து வைத்து விட்டது
விளக்கங்களும் காணொளியும் அருமை
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

தனிமரம் said...

நன்றி கவி அழகன் வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

நன்றி ரமனி வருகைக்கும் கருத்துக்கும்!

ம.தி.சுதா said...

ஃஃஃஃவைரமுத்து சொன்னது போல் ஐந்து நாள்கள் விற்கப்படும் நாட்களை வார இறுதியில் வாங்கும் நாள் !ஃஃஃ

உணமையே அதன் பெறுமதியை இப்பத் தான் உணர்கிறேன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

நிரூபன் said...

வணக்கம் பாஸ்..

பதிவில் இணைத்திருக்கும் படங்களே...

பாரிஸிற்கு வர வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகின்றது.

நிரூபன் said...

வார இறுதியில் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்தேன்.

அதான் வர முடியலை...

எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

மன்னிக்க வேண்டும் நண்பா..,.

நிரூபன் said...

சொர்க்க விழாவின் சிறப்பியல்புகளைச் சுட்டிக் காட்டி....
அருமையான பதிவினைப் பகிர்ந்து பாரிஸ் போக வேண்டும் எனும் ஆவலை அதிகரித்திருக்கிறீங்க.

இராஜராஜேஸ்வரி said...

ஒருங்கிணைந்த அருமையான இசை நிகழ்ச்சியை சுவைகுன்றாமல் தொகுத்தளித்த நேர்த்தியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

தனிமரம் said...

நன்றி மதி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

வணக்கம் நிரூ!
அப்ப விரைவில் பாரிஸ் வாங்க!

தனிமரம் said...

மன்னிப்பு எதற்கு எல்லாருக்கும் தனிப்பட்ட அலுவல்கள் இருக்கும் தானே!

தனிமரம் said...

நன்றி நிரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி இராஜேஸ்வரி அம்மா வருகைக்கும் கருத்துரைக்கும்!

Anonymous said...

தகவல்களிற்கு நன்றி.
இற்கும் நடப்பதுண்டு
அங்கு மிகச் சிறப்பாக உள்ளது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

தனிமரம் said...

தகவல்களிற்கு நன்றி.
இற்கும் நடப்பதுண்டு
அங்கு மிகச் சிறப்பாக உள்ளது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் வேதா!