13 April 2012

புது வருடம் திரும்பிப் பார்த்தால்!!!!

சித்திரைமகள் வந்தாள் நந்தன வருடம் என்று நானும் பார்த்தேன் பல வருடம் !
மருத்துநீர் வைத்து மாமா தோயச் சொன்னதும்.
 மாமி மடிப்புப் பெட்டியில் இருந்து புத்தாடை தந்ததும் ஒரு காலம்!

பாட்டி தந்தா பத்து ரூபாய் நோட்டு புத்தம் புது நோட்டு பேரா இது கைவிசேஸம் என்று பேரன்புடன்!

போனது எல்லாம் ஒரு யுத்தத்தில்!

புதுவருசம் இன்று என்ன விஸேசம் கேட்டாள் ஒரு மச்சாள் ?

என்ன இது கேள்வி எல்லாரும் ஒவ்வொரு திக்கில் !
இனி என்ன இருக்கு?
சுப அழுத் அவுறுது வேவா !சுருதி மாறாமல்
சொன்னாள் ஒருத்தி சுத்த சிங்களத்தில்!

தித்திக்கும் வருடம் இதயத்தில் திரண்டது காதல் ஒரு காலத்தில்!

என்ன விஸேசம் இந்த வருடம் !
எனக்கு எப்போது விடுதலை என்ன பிழை செய்தேன் என் காவலரே?

எடுத்து வந்தாய் சட்டவிரோதம் ஒரு வெடி குண்டு .
தந்தது யார் சொல்லி விடு தப்பிவிடுவாய் தமிழா!

தவறு என்ன செய்தேன்!!
 எல்லை தாண்டும் போது யார் என் காரில் குண்டுப் பொதி வைத்ததது.!
எனக்கு இன்றும் தெரியாது ஏதிலி ஆனபோதும்!!!!

இந்தப்பாடல் கேளுங்கள் புதுவருடத்தில்!!


இந்த வருடம் எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டுகின்றேன்!!!!!

சுப அழுத் அவுறுது வேவா- சகோதர மொழியில் புது வருடம் நல்லாதாக அமையட்டும் என்று பொருள் படும்!

85 comments :

Yoga.S. said...

"நந்தன"ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்,இரவு வணக்கம் நேசன்!படித்து விட்டு...........................

Yoga.S. said...

"அந்த"ப் பாடல் கேட்டேன்!இந்தியாவில் அது சாத்தியமே!ஏனென்றால் அங்கு ஓரளவுக்காவது எல்லோரும் சமமாக நடத்தப்படுகிறார்களே?

தனிமரம் said...

புது வருடத்தில் வந்து இருக்கின்றீர்கள் ஒரு பால்க்கோ]ப்பி குடியுங்கோ யோகா ஐயா!

Yoga.S. said...

என்ன இது கேள்வி எல்லாரும் ஒவ்வொரு திக்கில் !
இனி என்ன இருக்கு?///வலிக்கிறது.

தனிமரம் said...

அந்த"ப் பாடல் கேட்டேன்!இந்தியாவில் அது சாத்தியமே!ஏனென்றால் அங்கு ஓரளவுக்காவது எல்லோரும் சமமாக நடத்தப்படுகிறார்களே?

13 April 2012 11:44 // இல்லை மலையாளிகள் தமிழர் வேறுபாடு இருக்கு நான் நேரில் பார்த்திருக்கின்றேன் ஏன் ஹிந்திக்காரன் வேறுபாடுகூட திடுப்பதியில் பார்த்தேன்!

Yoga.S. said...

தனிமரம் said...

புது வருடத்தில் வந்து இருக்கின்றீர்கள் ஒரு பால்க்கோ]ப்பி குடியுங்கோ யோகா ஐயா!////இந்தப் பால் கோப்பிக்குப் பதிலா,நேற்று இரவே பெரியமகள் கேட்ட "அயிட்டம்"கிடைக்குமா?தமிழில் அதை பொங்கல் என்று தான் சொல்ல வேண்டும்,ஹ!ஹ!ஹா!!!!சகோதர மொழியில் சொன்னால் அடி பின்னி விடுவார்கள்,இல்லையா?????ஹி!ஹி!ஹி!!!!!!

Yoga.S. said...

தனிமரம் said...

அந்த"ப் பாடல் கேட்டேன்!இந்தியாவில் அது சாத்தியமே!ஏனென்றால் அங்கு ஓரளவுக்காவது எல்லோரும் சமமாக நடத்தப்படுகிறார்களே?

// இல்லை மலையாளிகள் தமிழர் வேறுபாடு இருக்கு நான் நேரில் பார்த்திருக்கின்றேன் ஏன் ஹிந்திக்காரன் வேறுபாடுகூட திருப்பதியில் பார்த்தேன்!///இருக்கலாம்,இங்கு கூட...............ஹும்!

தனிமரம் said...

என்ன இது கேள்வி எல்லாரும் ஒவ்வொரு திக்கில் !
இனி என்ன இருக்கு?///வலிக்கிறது// பாட்டி ஒரு ஊரில் . மாமி ஒரு ஊரில். மச்சாள் ,,, மாமா மச்சான் எங்கே! தம்பி எந்த ஜெயில் .....ம்ம்ம் வலி அதிகம். ஆனாலும் சிரிப்பு மாறாது.

Yoga.S. said...

தனிமரம் சிட்...... மலையாளிகள் தமிழர் வேறுபாடு இருக்கு நான் நேரில் பார்த்திருக்கின்றேன் ஏன் ஹிந்திக்காரன் வேறுபாடுகூட திருப்பதியில் பார்த்தேன்!///ஆம்,மறந்தே விட்டேன்.அண்மையில் கூட,முல்லைப் பெரியாறு ஆணை விவகாரத்தில்....................!

தனிமரம் said...

புது வருடத்தில் வந்து இருக்கின்றீர்கள் ஒரு பால்க்கோ]ப்பி குடியுங்கோ யோகா ஐயா!////இந்தப் பால் கோப்பிக்குப் பதிலா,நேற்று இரவே பெரியமகள் கேட்ட "அயிட்டம்"கிடைக்குமா?தமிழில் அதை பொங்கல் என்று தான் சொல்ல வேண்டும்,ஹ!ஹ!ஹா!!!!சகோதர மொழியில் சொன்னால் அடி பின்னி விடுவார்கள்,இல்லையா?????ஹி!ஹி!ஹி!!!!!!
//பெரிய மகள் என்னை நல்லா கவனிக்கின்றா! ஆனால் நாங்கள் பொங்கள் செய்வது இல்லை .சைவம் தான். ஆனால் இன்னொரு மாமி ஹீ ஹீ ஹீ பால்ச்சோறு.
ஹீ
13 April 2012 11:50

தனிமரம் said...

இல்லை மலையாளிகள் தமிழர் வேறுபாடு இருக்கு நான் நேரில் பார்த்திருக்கின்றேன் ஏன் ஹிந்திக்காரன் வேறுபாடுகூட திருப்பதியில் பார்த்தேன்!///இருக்கலாம்,இங்கு கூட...............ஹும்!

13 April 2012 11:52 // உண்மைத்தான் ஆனாலும் சமத்துவம் இருக்கு

தனிமரம் said...

ஹிந்திக்காரன் வேறுபாடுகூட திருப்பதியில் பார்த்தேன்!///ஆம்,மறந்தே விட்டேன்.அண்மையில் கூட,முல்லைப் பெரியாறு ஆணை விவகாரத்தில்....................!

13 April 2012 11:54 // ஒரு மணித்தியால இடைவெளியில் தாண்டி வந்தேம் இல்லை நானும் !ம்ம்ம் ,எல்லாம் ,ஐயன் செயல்!!!

Yoga.S. said...

தனிமரம் said...

ஒரு மணித்தியால இடைவெளியில் தாண்டி வந்தோம் இல்லை, நானும் !ம்ம்ம் ,எல்லாம் ,ஐயன் செயல்!!!///அப்படியா?"நம்பினோர் கை விடப்படார்"!

தனிமரம் said...

ஒரு மணித்தியால இடைவெளியில் தாண்டி வந்தோம் இல்லை, நானும் !ம்ம்ம் ,எல்லாம் ,ஐயன் செயல்!!!///அப்படியா?"நம்பினோர் கை விடப்படார்"!

13 April 2012 12:11 //உண்மைதான் ஆனால் என்னையும் மதவாதி பட்டியலில் ஒருத்தர் சேர்த்து வேட்டியை உருவி விட்டார் !ம்ம்ம் கோயிலில் அடிப்பது!

Yoga.S. said...

அயல் வீடுகளுக்கும் சென்று வந்தேன்!

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் முடிந்தால் செவ்வாய் சந்திப்போம்!! கொஞ்சம் வேலை அதிகம் இந்த வாரம்! பெத் அதிகம்!! வெயில் வருகின்றது அல்லவா!

Yoga.S. said...

தனிமரம் said..உண்மைதான் ஆனால் என்னையும் மதவாதி பட்டியலில் ஒருத்தர் சேர்த்து வேட்டியை உருவி விட்டார் !ம்ம்ம் கோயிலில் அடிப்பது!////"அந்த"மேட்டர மறந்துடுவோம்!தனி மனித சுதந்திரம்?!Bon Nuit!!!Bon Courage!!!

தனிமரம் said...

அயல் வீடுகளுக்கும் சென்று வந்தேன்!

13 April 2012 12:26 //தொடரை முடிக்கவேண்டி இருப்பதால் கொஞ்சம் போவது குறைவு நான் மொய்க்கு மொய் வைக்க் இது நேரம் அல்ல!

Yoga.S. said...

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் முடிந்தால் செவ்வாய் சந்திப்போம்!! கொஞ்சம் வேலை அதிகம் இந்த வாரம்! பெத் அதிகம்!! வெயில் வருகின்றது அல்லவா!////உண்மைதான்!செவ்வாய் சந்திப்போம்,பிள்ளைகள் வருவார்கள்,அடிக்கடி வந்து பார்த்துக் கொள்வேன்!

தனிமரம் said...

தனிமரம் said..உண்மைதான் ஆனால் என்னையும் மதவாதி பட்டியலில் ஒருத்தர் சேர்த்து வேட்டியை உருவி விட்டார் !ம்ம்ம் கோயிலில் அடிப்பது!////"அந்த"மேட்டர மறந்துடுவோம்!தனி மனித சுதந்திரம்?!Bon Nuit!!!Bon Courage!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.இனிய இரவு வணக்கம்!

தனிமரம் said...

சந்திப்போம்,பிள்ளைகள் வருவார்கள்,அடிக்கடி வந்து பார்த்துக் கொள்வேன்!//நன்றி தொடர் வருகைக்கு.

Anonymous said...

வணக்கம் அக்கா ,மாமா ,அண்ணா

ஹேமா அக்கா க்கு அண்ணாக்கு மாமாக்கு வாழ்த்துக்கள் ...

Anonymous said...

ஹேமா அக்கா உங்கட வேலை நேரம் மாறி விட்டதோ ...அக்கா நீங்கள் எப்போ வருவீங்க எண்டு சொல்லுங்க நானும் அப்போ வரேன் ...

ஹேமா அக்கா திங்கட்கிழமை எனக்குத் தேர்வு இருக்கு ..அதனால் செவ்வாய் கிழமை தான் வருவேன் ...

தனிமரம் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கலை.நலம்தானே???

Anonymous said...

ஹேமா அக்கா நல்ல சாப்பிடுங்க ,...ஆனா குறைச்சல சாப்பிடுங்கோ ..இல்லை எண்டால் நிரு அண்ணா பதிவு போட்டு விடுவினம் ...

மாமா உடம்பை பார்த்துகோங்க ...

ரீ ரீ அண்ணா நீங்களும் பத்திரமா இருங்கோ ...

அம்பலத்தார் அங்கிள் ,செல்லமா ஆன்டி யை நலம் விசாரித்ததா சொல்லிடுங்கோ ..ஆன்டி க்கு உதவி செய்யுங்கோ ...ஆன்டி யை பத்திரமா பார்த்திக் கொள்ளுங்க அங்கிள் ..

ரே ரீ ANNA உங்களுக்கும் THAN


செவ்வாய் வாறன் .....ATHUVARAI.
எல்லாருக்கும் இனிய வாழ்த்துக்கள் ,டாடா டாடா .

Anonymous said...

அண்ணா நான் மிக்க நலம் அண்ணா ...நீங்கள் நலம் தானே ...

தனிமரம் said...

நான் நலம் கலை என் ஐயன் கூட இருக்கும் போது ஏது கவலை! சந்திப்போம் செவ்வாய் இரவு.!

Yoga.S. said...

கலை said...

வணக்கம் அக்கா ,மாமா ,அண்ணா

ஹேமா அக்கா க்கு அண்ணாக்கு மாமாக்கு வாழ்த்துக்கள் ...///இரவு வணக்கம் கலை!உங்களுக்கும் எங்கள் அனைவரதும் வாழ்த்துக்கள்!தேர்வை நன்றாக எழுதுங்கள்!உங்களுக்காக,உங்கள் வெற்றிக்காக நாம் அனைவரும் இறைவனை வேண்டுகிறோம்.தேர்வு முடித்த பின் எதிர் பார்த்து..................

பால கணேஷ் said...

எல்லோரும் ஒவ்வொரு திக்கில் என்ற வேதனை தெறிக்கும் வார்த்தைகளைப் படித்தபின் உங்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று வாழ்த்த மனம் வரவில்லை நேசன். ஆனால் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்வையும் ஆறுதலையும் தரட்டும், நட்பைப் பெருக்கட்டும் என்று பல எதிர்பார்ப்புகளை வாழ்த்தாகத் தருகிறேன்.

எக்ஸாம் எழுதப் போகும் கலைக்கு நன்றாக எழுதிக் கலக்க, வெற்றி பெற ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

மகேந்திரன் said...

செறிந்திருக்கும் சொல் வளமாய்
பொதிந்திருக்கும் பொருள் வளமாய்
தங்கத் தமிழின் இன்சுவையாய்
தங்கள் வாழ்வில் இனிமை நிறைந்திருக்கட்டும்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஹாலிவுட்ரசிகன் said...

எஸேம வேவா நேசன். உங்களுக்கும் இந்த வருடம் பல சந்தோஷங்களை அள்ளித் தரட்டும்.

Unknown said...

இலங்கைக்கு சிங்கள, தமிழ் புத்தாண்டுதானே அண்ணா

தனிமரம் said...

நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும்.

தனிமரம் said...

நன்றி மகேந்திரன்  அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும்.

தனிமரம் said...

நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும்.

தனிமரம் said...

அப்படித்தான் சொல்லுகின்றார்கள் பல காலமாக எஸ்தர்-சபி.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!நேற்று மாலை அம்பலத்தார் வீட்டிலும் .........................ஹும்!!!

தனிமரம் said...

காலை வணக்கம் யோகா ஐயா.
சிலரின் பதிவுகளில் சுதந்திரமாக பதில் சொல்ல முடியும் அந்த வகையில் அம்பலத்தார் மாற்றுக்கருத்தை வரவேற்று மயக்கம் தீர்ப்பார்.அது பிடிக்கும் அவர் வீட்டில்....,

Yoga.S. said...

"இன்பம் பொங்கும் வெண்ணிலா..... வீசுதே" என்று பாடத் தோன்றுகிறது,ஹ!ஹ!ஹா!!!!!!

தனிமரம் said...

இன்பம் பொங்கும் வெண்ணிலா..... வீசுதே" என்று பாடத் தோன்றுகிறது,ஹ!ஹ!ஹா!!!!!! 
//ஆஹா பாடுங்கள் ஏன் நிறுத்திவிட்டாய் உன் இசை என்ற இன்ப வெல்லத்தில் ஒடோடி வந்தேன் ...,ஹீ
எனக்கும் பாடத்தோன்றுது வெண்ணிலா வெளியே வருவாளா இருட்டிலே வெளிச்சம் தருவாளா  ம்ம்ம்ம் பிரென்சுக்காரனுக்கும் தனிமரம் தான் பிடிக்கும் போல !!!!!

ஹேமா said...

எல்லாருக்கும் வணக்கம் வணக்கம்.நேற்றுப் பகல் முழுக்க நல்ல சந்தோஷமா ஆனல் நாள் கெதியா ஓடிப்போச்சு.இரவு வர நல்ல களைப்பும் நேரமும் போச்சு.அதுதான் வரேல்ல.அப்பாவுக்குத்தான் என் சந்தோஷத்தின்ர பங்கு முழுக்க !

காத்தில அம்பலம் ஐயா பக்கம் புயலெண்டு கேள்விப்பட்டுப் போய்ப்பாத்தன்.பகலிருந்த சந்தோஷத்தை அப்பிடியே அந்தப் புயல் அள்ளிக்கொண்டு போய்ட்டுது !

நான் உப்புமடச் சந்தியில பதிவு போடலாம் எண்டு நினைக்கிறன்.ஆனால் எல்லாரும் சந்தோஷமா இருப்பீங்களோ தெரியேல்ல.

அப்பா குழம்பிப் போய் இருக்கிறார்.அம்பலம் ஐயான்ர பதிவு ஒட்டுமொத்தத் தமிழரையும் குறை சொன்னது பிழை மாதிரித்தான் தெரியுது.இப்ப அதைப் பிழையெண்டு தெரிஞ்சும் ஒத்துக்கொள்ளமுடியாத ஒரு வாதாட்டம்தான் அங்க நடந்துகொண்டிருக்கு.அதுதான் ஈகோ.உண்மைதானே அப்பா? !

ஹேமா said...

கருவாச்சிக்குட்டி நல்லா பரீட்சை எழுதிட்டு வாங்கோ.எங்கட எல்லார்ன்ர பிரார்த்தனையும் உங்களுக்காக இருக்கும்.நல்லா எழுதிட்டு ஓடி வாங்கோ கும்மியடிக்கலாம்.
வாழ்த்துகள் கலை !

ஹேமா said...

நேசன் நேற்றையான் பொங்கல்,வடை,வெண்பொங்கல் கறி எல்லாம் இருக்கோ.செல்லம்மா மாமியைக் கூப்பிடுங்கோ.ஆராவது பெரிய ஆக்கள் குழைச்சு உருண்டைச்சோறுத்தர சுத்தியிருந்து சாப்பிட ஆசையாயிருக்கு !

தனிமரம் said...

தமிழரையும் குறை சொன்னது பிழை மாதிரித்தான் தெரியுது.இப்ப அதைப் பிழையெண்டு தெரிஞ்சும் ஒத்துக்கொள்ளமுடியாத ஒரு வாதாட்டம்தான் அங்க நடந்துகொண்டிருக்கு.அதுதான் ஈகோ.உண்மைதானே அப்பா? ! // வாங்க ஹேமா புத்தாண்டு வாழ்த்துக்கள் வருடம் பிறந்து வந்து இருக்கின்றீங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

கருவாச்சிக்குட்டி நல்லா பரீட்சை எழுதிட்டு வாங்கோ.எங்கட எல்லார்ன்ர பிரார்த்தனையும் உங்களுக்காக இருக்கும்.நல்லா எழுதிட்டு ஓடி வாங்கோ கும்மியடிக்கலாம்.
வாழ்த்துகள் கலை ! 
//நீங்க பிட்டடிக்கச் சொல்லித் தரலை என்று கருவாச்சிக்கு கோபம். ஹீ:)))

தனிமரம் said...

இருக்கோ.செல்லம்மா மாமியைக் கூப்பிடுங்கோ.ஆராவது பெரிய ஆக்கள் குழைச்சு உருண்டைச்சோறுத்தர சுத்தியிருந்து சாப்பிட ஆசையாயிருக்கு ! //இப்ப குழைச்சுத் தர யாரும் இல்லை எல்லாரும் வேலை என்று ஒடும் அவசர உலகில் யாராவது பாட்டிமார் வரமாட்டார்களா என்று நானும்தான் வழியோரம் விழிவைற்றுக் காத்துக்கொண்டு இருக்கின்றேன்.கூழைசோறும் ஒரு ருசிதான் இன்னொருவர் குழைச்சுத் தரும்போது!ம்ம்ம பெருமூச்சுத்தான்!!

ஹேமா said...

நேசன் சுகமா இருக்கிறீங்களோ/வேலையில்லையோ?அப்பா எங்க?அமபலம் ஐயாவுக்கு நீங்கள் கருத்துச் சொல்லேல்லையோ?அப்பா அங்கதான் நிக்கிறார்போல !

தனிமரம் said...

நேசன் சுகமா இருக்கிறீங்களோ/வேலையில்லையோ?அப்பா எங்க?அமபலம் ஐயாவுக்கு நீங்கள் கருத்துச் சொல்லேல்லையோ?அப்பா அங்கதான் நிக்கிறார்போல ! 
//அடுப்பில் ஒரு கை மறுகை ஐபோனில் ஹேமா! நல்ல சுகம் நீங்களும் அவ்வண்ணம் இருக்க ஐயனிடம் வேண்டுகின்றேன். அம்பலத்தாரிடம் நேற்றே சொல்லி விட்டன். அப்பா இப்ப பிஸியான சந்தோஸம் மீண்டும் செங்கோவி ஐயா
 வந்து எங்களை புத்துணர்ச்சி ஊட்டியதில்.

அம்பலத்தார் said...

னிமரம் said...
ஒரு மணித்தியால இடைவெளியில் தாண்டி வந்தேம் இல்லை நானும் !ம்ம்ம் ,எல்லாம் ,ஐயன் செயல்!!!//
நிஜமாகவா நேசன்

அம்பலத்தார் said...

me 50

அம்பலத்தார் said...

சோகம் இழையோட நகர்ந்துசெல்லும் கதை நெஞ்சில் நிலைத்து நிற்கிறது

தனிமரம் said...

ஒரு மணித்தியால இடைவெளியில் தாண்டி வந்தேம் இல்லை நானும் !ம்ம்ம் ,எல்லாம் ,ஐயன் செயல்!!!//
நிஜமாகவா நேசன் 
//உண்மைதான் கேரளதேசம் பந்துக்கு அழைப்பு விட்ட தை18 அதிகாலையில் நாங்கள் வந்தது தேனி வழியாக பலருக்கு பின்னால் விழுந்தது !!!ம்ம்ம் கொழும்பில் 1983 போலதான்!இங்கேயே தடுத்தார்கள் வேண்டாம் இந்த வருட... தடைகள் தாண்டனும் 

தனிமரம் said...

me 50 //இது அதிராவின் பின்னூட்ட ஸ்டையில் நீங்களும் சேர்ந்தாச்சா???

தனிமரம் said...

சோகம் இழையோட நகர்ந்துசெல்லும் கதை நெஞ்சில் நிலைத்து நிற்கிறது

14 April 2012 04:18 
//ஹீ அந்த ராகுலுக்கும் இந்த தனிமரத்திற்கும் சம்மந்தம் இல்லை. தொடர் தொடரும் .நன்றி அம்பலத்தார் வருகைக்கும் கருத்துரைக்கும்.செல்லா அன்ரிக்கும் சொல்லிவிடுங்கோ தனிமரம் நேசன் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னது என்று!

Yoga.S. said...

ஹேமா said...

நேசன் சுகமா இருக்கிறீங்களோ/வேலையில்லையோ?அப்பா எங்க?அமபலம் ஐயாவுக்கு நீங்கள் கருத்துச் சொல்லேல்லையோ?அப்பா அங்கதான் நிக்கிறார்போல !////காலையில் வணக்கம் சொல்லியிருந்தேன் மகளே!அது ஒன்றுமில்லை,சும்மா தான்.இருந்தாலும் தனி மனித தாக்குதலுக்கு முகம் கொடுக்க வேண்டி ஆகிவிட்டது.எங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போக யாரையும் நாம் வருந்தி அழைப்பதில்லையே?"வலைப் பதிவு/பகிர்வு" எங்கள் எண்ணங்களுக்கு ஒரு தேடுதலுக்கான இடம் தானே?பிடித்தவர்கள் படிக்கவும் கருத்திடவும் தானே?பிடிக்காவிடின் மறுபக்கம் திரும்ப வேண்டியது தானே?நான் அப்படித்தான்!எங்கள் எண்ணங்களுக்குக் கடிவாளம் இட அடுத்தவர்கள் யார்?

Yoga.S. said...

ஹேமா said...
அப்பா குழம்பிப் போய் இருக்கிறார்.அம்பலம் ஐயான்ர பதிவு ஒட்டுமொத்தத் தமிழரையும் குறை சொன்னது பிழை மாதிரித்தான் தெரியுது.இப்ப அதைப் பிழையெண்டு தெரிஞ்சும் ஒத்துக்கொள்ளமுடியாத ஒரு வாதாட்டம்தான் அங்க நடந்துகொண்டிருக்கு.அதுதான் ஈகோ.உண்மைதானே அப்பா? !////அப்படியல்ல!ஈகோ என்று சொல்ல முடியாது.ஒட்டு மொத்த தமிழர்களையும் குறை சொல்வதாக அமையாது!"தொப்பி"அளவானவர்கள் போட்டுக் கொள்ள வேண்டியது தான்!நடப்பது தவறென்று தெரிந்தும் எத்தனை காலம் தான் வாளாவிருப்பது?தன் மூக்கை நோண்டி தானே முகர்வது போன்ற ஒரு தோற்றம் கொடுத்தாலும் அம்பலத்தாரின் செயல் சரியென்றே சொல்வேன்!இப்போதும்/இனிமேலும் திருந்தா விடில்???????????????

Yoga.S. said...

நேசன் தளத்தில் "அந்த" விடயம் குறித்த விளக்கத்துக்கு நேசன் மன்னிக்கவும்!தோன்றியது எழுதி விட்டேன்.

தனிமரம் said...

ஐயாவுக்கு நீங்கள் கருத்துச் சொல்லேல்லையோ?அப்பா அங்கதான் நிக்கிறார்போல !////காலையில் வணக்கம் சொல்லியிருந்தேன் மகளே!அது ஒன்றுமில்லை,சும்மா தான்.இருந்தாலும் தனி மனித தாக்குதலுக்கு முகம் கொடுக்க வேண்டி ஆகிவிட்டது.எங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போக யாரையும் நாம் வருந்தி அழைப்பதில்லையே?"வலைப் பதிவு/பகிர்வு" எங்கள் எண்ணங்களுக்கு ஒரு தேடுதலுக்கான இடம் தானே?பிடித்தவர்கள் படிக்கவும் கருத்திடவும் தானே?பிடிக்காவிடின் மறுபக்கம் திரும்ப வேண்டியது தானே?நான் அப்படித்தான்!எங்கள் எண்ணங்களுக்குக் கடிவாளம் இட அடுத்தவர்கள் யார்?// உண்மைதான் யோகா ஐயா சில அரசியல் தனிமனித தாக்குதலை கற்றுக் கொடுத்து இருக்கு எனக்கும் உடன் பாடு இல்லை பதிவைத் தாண்டி தனிமனித பண்பில் இருந்து படியிறங்கி வாரது !ம்ம்ம் 

தனிமரம் said...

நேசன் தளத்தில் "அந்த" விடயம் குறித்த விளக்கத்துக்கு நேசன் மன்னிக்கவும்!தோன்றியது எழுதி விட்டேன். 
//இதில் என்ன இருக்கு யோகா ஐயா தோன்றியதை எழுதினீர்கள் நான் சொல்ல விருப்பம் இல்லை என்று அம்பலத்தாரிடம் ஜாகா வாங்கிவிட்டேன் ஏன் தெரியுமோ இப்ப நானும் சில இடங்களில் அடிபட்டு திருந்திவிட்டேன் பின்னூட்டம் போட பிரெஞ்சுக் கடையில் நேரம் இருக்காது கோழி எரிந்ததா என்றே எட்டிப்பார்க்க வேணுமே???

Yoga.S. said...

ஹேமா said...

நேசன் நேற்றையான் பொங்கல்,வடை,வெண்பொங்கல் கறி எல்லாம் இருக்கோ.செல்லம்மா மாமியைக் கூப்பிடுங்கோ.ஆராவது பெரிய ஆக்கள் குழைச்சு உருண்டைச்சோறுத்தர சுத்தியிருந்து சாப்பிட ஆசையாயிருக்கு !////இரவு வணக்கம்,மகளே!மனது கனக்கிறது.உருண்டைச் சோறு..................ஹும்!§§§§ஏன் பதிவு போடவில்லை?யாரோ ஏதோ சொன்னார்களென்று நாம் வாளாவிருக்க முடியுமா?"அந்த"விடயம் மறந்தாயிற்று.தொடருங்கள்,தொடர்வோம்!

ஹேமா said...

வருஷம் கலகலவெண்டு வந்திருக்கு.எப்பிடி இருக்கிறீங்கள் எல்லாரும்.ரிலாக்ஸா
இருக்கிறீங்களோ !

அப்பா....பதிவு போடுவமெண்டுதான் இருந்தன்.இண்டைக்கு எனக்கு லீவு.ஆனால் என்னமோ சந்தோஷமாயில்லைமாதிரி ஒரு உணர்வு.அதோட கலையும் வரட்டும் செவ்வாய்க்கிழமை.அடுத்த லீவு எனக்கும் இனி செவ்வாய்தான்.சந்தோஷமான பொழுதாக்குவம் !

Yoga.S. said...

ஹேமா said...

வருஷம் கலகலவெண்டு வந்திருக்கு.எப்பிடி இருக்கிறீங்கள் எல்லாரும்.ரிலாக்ஸா
இருக்கிறீங்களோ? ///நேசனுக்கும் லீவு குறைவு.எனக்கு லீவு.................ஹ,ஹ,ஹா! தெரியும் தானே?சுகமாக,நலமாக கல,கலப்பாகவே இருக்கிறேன்.நன்றி மகளே!கலைக்கு தேர்வு திங்கள்.அதன் பின்னர் ஆறுதலாக கொண்டாடுவோம்,புது வருடத்தை!!!!!!!

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!

தனிமரம் said...

மதிய வணக்கம் யோகா ஐயா!
நேற்று பின்னிரவு பணிமுடிந்து வீடு வந்து ம்ம் ஒரு கொண்டாட்டம் வெளியில் போறேன் சந்திப்போம்!

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!கொண்டாட்டங்களும் தேவைதான்.கொஞ்சம் நண்பர்கள்,உறவினர்களைப் பார்த்தான் மனது கொஞ்சம் இலேசாகும்!//இன்று காலை பத்திரிகை பார்த்து நிரம்பவே குழம்பி விட்டேன்.படித்தவர்கள்,ஆசிரியர்கள்...........அவர்களுக்கே இப்படிப் புத்தி பேதலித்தால்????ஹேமாவுக்குத் தெரிந்தவர்களாக இருக்கலாம்.

Anonymous said...

புது வருடம் நல்லாதாக அமையட்டும்...

என் இனிய
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...

Yoga.S. said...

இனிய காலை வணக்கம்,நேசன்!

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

காலைவணக்கம் யோகா ஐயா.நலம் தானே உடலும் உள்ளமும்!

Yoga.S. said...

தனிமரம் said...

காலைவணக்கம் யோகா ஐயா.நலம் தானே உடலும் உள்ளமும்?///பூரண நலம்,நன்றி!பத்மினி மன்றப் பொறுப்பாளர் (செங்கோவி)திரும்ப வந்து விட்டார்,ஹ!ஹ!ஹா!!!!!

Anonymous said...

வணக்கம் அக்கா ,மாமா ,ரீ ரீ அண்ணா, அங்கிள்

எல்லாரும் நலம் தானே ...

Anonymous said...

ennachihemaa அக்கா enna nadakkuthu அக்கா ...
கஷ்டமா irukku oruvar thaniyaa ninnaalum

Anonymous said...

அக்கா சந்தியில் பதிவிடவில்லை ..ரீ ரீ அண்ணாவும் பதிவு போடவில்லை ...


மாமா நீங்கள் thaan எல்லாரையும் சேர்த்து வைக்கனும் pazhaya maari jolly yaa irukkonum

Yoga.S. said...

இரவு வணக்கம்,கலை,சரி,தேர்வு எப்படி எழுதியிருக்கிறீர்கள்?சிறந்த பெறுபேறு கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்!அக்கா நாளை பதிவு போடுவா.அண்ணாவும் நாளை என்று சொல்லியிருக்கிறார்!அதனால்,நாளை இரவு "களை"கட்டுமென நினைக்கிறேன்.வேறொன்றுமில்லை.எல்லோருக்கும் களைப்பு தானே?நான் பூரண நலம்,அதுபோல் எல்லோருமே நலமாயிருப்பார்கள் என்றே நம்புகிறேன்!

Anonymous said...

இரவு வணக்கம் மாமா ...நேர்முகத் தேர்வு மாமா ..நல்லாத்தான் படித்துப் போனீன் ...ஆனா அவங்க சுப்ஜெக்ட் பத்தி கேக்கவேயில்லை ....பொதுவா பேசினாங்க ...இன்னும் நான் நல்லப் பண்ணி இருந்து இருக்கலாம் தான் ..மனத் திருப்தி இல்லை மாமா ....கடவுள் தான் இனிமேல் காப்பாட்ட்ரனும் என்னை
...

Anonymous said...

ஹோஒ ...அக்காவும் அண்ணாவும் நாளை பதிவா ...அப்போ நாளை ஜாலி தான் ...ஹேமா அக்காவோடு கதைக்கவே முடியுறதில்லை ...

ஹேமா said...

அப்பா,நேசன்,கலை இருக்கிறீங்களோ ஆரெண்டாலும்.சுகமோ எல்லாரும்?நானும் நல்ல சுகம் !

அப்பா காலைக்கும் மாலைக்கும் வந்து வணக்கம் சொல்லிப்போறார்.
சந்தோஷமாயிருக்கு !

அப்பா...என்ன செய்தி? கவலைப்பட்டிருக்கிறீங்கள்.எனக்கேதும் தெரியயேல்லை.2 நாள் காலை 6 மணி வேலை.ஒரே களைப்பு.செய்திகள் வானொலியில் மட்டுமே கேட்டேன் !

ஹேமா said...

கருவாச்சி....வந்தாச்சு.ஆனால் என்ன ஒரு சந்தேகம் பரீட்சையில்.திருப்தியான பதில் இல்லை.குட்டவேணும்.ஆளைப்பாரு.ஒருவேளை சும்மா மனசில ஒரு சந்தேகமாவும் இருக்கலாம்.நம்பிக்கையோட இருங்கோ கருவாச்சிக்குட்டி !

நான் நல்ல சுகமடா....கொஞ்சம் அலுப்பு.நாளைக்கு களைகட்டும் எங்கட வருஷம்.ஓகேயா !

Anonymous said...

haiee jolly jolly akkaa vanthachiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii .........................................


rest eduththuttu vaango akkaa...

enakkum aluppu thaan ....naanum rest edukkiranan....

naalai kummi adikkalam

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!

Yoga.S. said...

கலை said...

இரவு வணக்கம் மாமா ...நேர்முகத் தேர்வு மாமா ..நல்லாத்தான் படித்துப் போனன் ...ஆனா அவங்க சப்ஜெக்ட் பத்தி கேக்கவேயில்லை ....பொதுவா பேசினாங்க ...இன்னும் நான் நல்லப் பண்ணி இருந்து இருக்கலாம் தான் ..மனத் திருப்தி இல்லை மாமா ....கடவுள் தான் இனிமேல் காப்பாட்ட்ரனும் என்னை.////காலை வணக்கம் கலை!பொதுவாகவே நேர்முகத் தேர்வு என்றால் படித்த படிப்பை விட பொதுவான கேள்விகளையே கேட்பார்கள்.ஏனெனில் உங்கள் தராதரம் என்னவென்று சான்றிதழ்கள் கூறி விடும்.அதிலிருந்து கேள்வி என்றால்?????இது முதல் அனுபவம் தானே.கடவுள் கைவிட மாட்டார்,நம்புபவர்களை!

தனிமரம் said...

காலைவணக்கம் யோகா ஐயா.முடிந்தால் இரவு சந்திப்போம்!

மாலதி said...

தித்திக்கும் வருடம் இதயத்தில் திரண்டது காதல் ஒரு காலத்தில்!

ஹேமா said...

இண்டைக்கு முழுக்கத் தவம் கிடக்கிறன்.நேசன் கோப்பி தரமாட்டீங்களோ ?

Yoga.S. said...

இன்று செவ்வாய்க்கிழமை.அதனால் வடை,"பாயாசம்" கிடைக்கும்,ஹ!ஹ!ஹா!!!!