வணக்கம் உறவுகளே!
வசந்த காலத்தின் தேடல்கள் இந்த தனிமரத்தையும் கொஞ்சம் தேகத்தையும் கவனி என்று சற்று ஓய்வை தந்து இருக்கு .இந்த நாட்களில் அதனால் கொஞ்சம் கணனியும், கைபேசியும் முகநூலுமாக மூக்கில் நுழைந்தாலும்..
கொஞ்சம் மூக்கின் சுவாசம் அதிகம் தூக்கத்தைக் தொலைத்து விட்டு தவிக்கின்ற தனிமை ஒரு புறம் என்பதால் .என்னவள் இருக்கும் பாட்டையும். வாங்கியந்த புத்தகத்தையும் வாசிக்கலாமே என்பாள்.
வாசிக்க நினைக்கும் புத்தகங்கள் எல்லாம் வரலாற்றுப் பதிப்புக்கள் மனம் ஓய்வு இல்லாத போது எப்படி கிரகிப்பது என்பதால் தவிர்த்தபோது . கவிதாயினி ஹேமா இந்த நிகழ்ச்சி பாருங்க நேசன் என்றது ஞாபகம் வர .
நானும் பார்த்தேன் நீயா நானா வில் இளையாராஜா 80 களில்!அதில் இன்னும் சில இசையமைப்பாளர்கள் நினைவு படுத்தவில்லை கோபி .
வீ.குமார், கங்கை அமரன்! லக்சுமன் பியாரில்லால்.ஹம்சலோகா,.சந்தி ரபோஸ், நரசிம்மன்/ இன்னும் பலர் என்றாலும் மையம் இசை ராகதேவன் தானே!
வீ.குமார், கங்கை அமரன்! லக்சுமன் பியாரில்லால்.ஹம்சலோகா,.சந்தி
.இந்த நிகழ்ச்சி பற்றிய பலர் பதிகின்றார்கள் இந்த வாரம் .பலபதிவுகள் சுவாரசியமாக அதன் பாதிப்பில் இருக்கும் .நானும் இப்போது எப்படி மனதையும் உணர்வுகளையும் கடந்து வருவது என இரண்டுநாட்கள் முள்மேல் படுக்கை.
அதுவும் நம் இலங்கை ஒலிப்பரப்புக்கூட்டுத்தாபண வானொலி பற்றி கோபியிடம் பேசியவர்களின் நினைவுகளோடு என் சிறுவயதுக் காலமும் சிந்தனையைக் கிளறிவிடுகின்றது.
இதில் சொல்லிய பல விடயத்தையும் மறுவாசிப்பு செய்யும் போது ஒரு காலச்சக்ரம் நிதானம் தவறிய இன்றைய அவசர உலகை நினைத்து .இழந்த அந்த உறவுகள் குடும்ப அமைப்புக்கள் ,பிரிவுகள் என நினைவு தலை முறைமாற்றம் !வயது என்று என்ன வார்த்தைகள் சூடினாலும் 80 களில் வந்த பாடல்கள் என் முதல் தெரிவாக எப்போதும் இருக்கும் .
காரணம் அதில் இருந்த அமைதி, ரசிப்புத் திறன் வார்த்தைஜாலம் எல்லாம் இன்று நாம் துரித பொருளாதாரத்தில் ஓடும் கடுகதி ரயில் என்பதால் எத்தனை பாடலை கைபேசியில் சேர்த்து வைத்துக் கேட்டாலும் !வானொலிக்குயில்களின் குரலில் நேரம் கேட்டு, ஊர் அமைதியில் இருந்த காலம் நம் மண்ணில் அதிகம் யுத்தம் தலையெடுக்கவில்லை .1983 கலவரத்துக்கு முன் என் தாய் மாமா வாங்கியந்த பனசோனிக் வானொலிப்பெட்டியை பத்திரமாக, பாதுகாத்த பாட்டியும். தாத்தாவும் சிறுவர் எங்களை தீண்ட விட்டதில்லை.
கூட்டுக்குடும்பம் என்பதால் மாமிமார்கள், பாட்டிமார் என சூழ்ந்திருப்போம் !எங்கள் கிராமத்து ஆண்கள் எல்லாம் வியாபாரம் செய்ய மலையகம் மற்றும் காலி முதல் கதிர்காமம் வரை செல்வதால் அவர்களின் வரவை அதிகம் கான்பது கோயில் திருவிழா மற்றும் பண்டிகை முக்கிய உறவுகளின் சுப நிகழ்வுகளில் தான்!!சந்திக்க முடியும் அப்படியான நம் உறவில் 1983 ஆடிக்கலவரம் வீட்டில் மரண ஓலத்தை பெட்டியில் கொண்டுவந்தபோது கலியாண வீட்டுக்களையில் இருந்த நிலை செத்தவீடாகிப்போன துயரத்தைக் கடந்து 1984 இல் வந்த சின்ன மாமாவின் கலியாணம் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு!
அப்போதுதான் ஊருக்குள் வெள்ளை ரோஜா. மன்வாசானை. அன்னக்கிளி,பகலில் ஒரு இரவு ராகங்கள் மாறுவதில்லை நூல்வேலி , நெஞ்சத்தைக்கிள்ளாதே! எனப் பல பாடல்கள் வீட்டில் ,இருக்கும் வானொலிகளையும் ஆக்கிரமிப்பி செய்து கொண்டு இருந்தது .
அதுவும் சின்னமாமாவின் கலியாண வீடியோ மட்டுமே இன்று அடுத்த தலைமுறைக்கு யார் யார் என்ன உறவு என காட்சியாக காட்டக்கூடிய ஆவணமாக இருப்பது .அதில் இருந்தவர்கள் இன்று மறைந்தவர்கள் போக இன்று யுத்தம் அதுகடந்து பல்வேறு போராட்டக்குழுவில் போய் உறவில் தொடர்பில்லாமல் போனாலும்!
அவர்களை எல்லாம் எனக்கு நினைவுக்கு கொண்டு வரும் பாடல் மட்டும் மல்ல இந்தப் படம் பார்த்த கலியாணவீட்டு படக்காட்சி அனுபவம் சிலிப்பையும் தரும்.
நம் ஊருக்குள் முதலில் தொலைக்காட்சி வந்த வீடு எங்க சின்ன மாமி வீடு இன்றும் ஒரு தலைமுறைக்கு இந்த தொலைக்காட்சியையும்( டீவி )சேர்த்துச் சொன்னால் தான் முந்திய தலைமுறை இளைஞர்களுக்கு என்னையும் தெரியும் நிலை .அந்தளவு அப்போது சிறுபராயம் அழியாத நினைவுச் சின்னம் அன்பே சங்கீத்தா . மெட்டி படம் போல.
கலமாற்றம் ,வியாபாரம் ,மற்றும் அரசியல் நிகழ்வு ,குடும்பங்கள் தனிக்குடித்தனம் என இந்தியன் ஆமி வருகை எங்க கிராமத்தை சிதைத்து. பலரையும் பல திக்கில் ஆக்கிய போதும் என் நினைவுகள் 1991 கோட்டை முற்றுகை வரும் வரை ஊரில் தீவில் கழிந்த நாட்கள் இன்னும் பசுமை .
அப்போது இருந்தே வானொலிக்கு தபால் அட்டை போடும் பழக்கம் எனக்கு உண்டு அது பெரியமாமி பழக்கியது அதுக்காக பாட்டியின் காசை முடிச்சில் இருந்து சுட்டதும் அடிவாங்கும் மற்ற உறவுகள் பாசம் எல்லாம் இன்று கால மாற்றம் பிரிவுகள் என பலநாட்டில் வாழ்கின்றோம்! ம்ம் !
அதிக தொடர்பாடல் தொலைபேசியில் பாடல் கேட்ட காலம் வந்த போதும் என்னை வானொலி இன்றும் நேசிக்க வைக்கின்றது . இடப்பெய்ர்வு அதன் பின் இ.ஒ வானொலி என் கவிதைகளையும் பாடல் தேர்வுகளையும் தாங்கி வந்த சுகமான சுமைகள் அந்த வசந்தகால நதி ஓடம் நாட்கள் மீண்டும் வராத காலகள்!
வானொலி அறிவிப்பு ஆசையில் இருந்த போது மூன்றாவது தேர்வில் உள்நுழைய நாட்கள் எண்ணிக்கொண்டு இருக்கையில் கம்பி எண்ண இனவாதம் தந்த பரிசு நானும் புலம்பெய்ர்ந்தாலும் .இன்னும் பாடல் கேட்கும் ஆசை தேயாத பால்நிலாப்பாதை .
இன்று நான் புலம்பெயர்ந்தாலும் என் குடும்பங்கள் மூன்று தலைமுறை ஒன்றாக இருந்த இந்த வெள்ளை ரோஜாப்படமும் அதன் பாடல்களும். மறக்க முடியாது சின்னமாமாவிடம் இன்றும் இந்த கலியாணவீடியோ இருக்கின்றது பொக்கிசமாக. கிராமத்தை விட்டு மலையகத்தில் குடிபெயர்ந்த பின்னும் அவரிடம்..
ஆனால் குடும்ப நிலைகள் , அரசியலில் ஆளுக்கொரு பார்வை ஆனாலும் குடும்பம் ஒரு கோயில் ஒவ்வொருத்தர் பார்வையில் .இன்றும் எனக்கு பிரபு இதில் போட்டு இருக்கும் சங்கிலி மீது ஒரு ஈர்ப்பு உண்டு!ஹீஹீ!!
சின்ன மாமா கலியாணக்காலத்தில் அப்போது அதுதான் பெசன் மாமாக்கள் ஆளுக்கொரு அரசியல் குழுவில் மல்லுக்கட்டியகாலம் அழியாத கோலங்கள் .அதுவும் குடும்பத்தில் கலியாணம் முடித்தால் மாப்பிள்ளை சீதனமாக பாட்டி பேரணுக்கு சங்கிலியும் பேர்த்திக்கு மல்லிகைமொட்டு வடிவத்தில் சங்கிலியும் (அம்பிகா கழுத்தில் இருக்கும் சங்கிலி போல ) போடும் சம்பிராதாயம் தொடரும் ஒரு குடும்ப பாரம்பரியம் .காசை வியாபாரத்தில் அழித்தாலும் நகை அழிக்க முடியாது என்பது பாட்டியின் கற்பனை!
அப்போது அது இரண்டுதலை முறைக்கு தொடர்ந்த ஒரு தொடர் .பெரியமாமா அவர் தன் மகனுக்கு என கிராம இடப்பெயர்வு வந்தாலும் . பாதுகாத்தது. ஆனால் 1995 இன் பின் மூன்றாவது தலைமுறையில் இருக்கும் பலருக்கு பாட்டி ஒரு கிராமத்தில் பேரன்கள் ,பேர்த்திகள் .புகைப்படத்தில் பார்க்கும் நிலையில் ஈழத்தில் பிறந்த பயனை அனுபவிக்கும் நிலை.
அதுகடந்து திருமண பந்ததில் சேர்ந்து ஆசிர்வாதம் வேண்டும் நிலை இந்தப்பேரணுக்கு கிடைக்காத நீதிக்குத்தண்டனை ! என்றாலும் பாட்டி பாசம் ஒரு பூப்பூவாய் பூத்திருக்கும் பூவே பூச்சூடவா போல இன்றும் நாலாவது தலைமுறை பார்த்த பாட்டி 5 தலைமுறையும் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசையும்!
சமயத்தில் வீட்டுக்காரி கேட்பது தலையில் இருந்த முடி என்னாச்சு ?என்றால் நான் சொல்லுவது இந்தப்படத்தில் பிரபுக்கு இருந்த தலைமுடிபோலத்தான் என் சின்ன மாமாவுக்கு கலியாணத்தின் போது அப்போது இருந்திச்சு.!ஹீ
இப்ப அவர் தலையில் சூரியோர்தயம் பாக்கும் ரகசியம் என்ன என்று போய் உன் சித்தப்பாவிடம் கேளு ! பரம்பரையின் ரகசியம் எல்லாம் வரலாறு முக்கியம் ஹீ! அடித்தால் ஏந்திரன் மொட்டைபாஸ் !ஹீ
//////////
43 comments :
நேசன் நான் தான் முதல் .சுக்கு காப்பி வெல்லம் போட்டு வேணும்
வெள்ளை ரோஜா !! எங்கப்பாவுக்கு ரொம்ப பிடித்த படம் எங்க வீட்ல வி சி ஆர் வாங்கினதும் ,அப்பெல்லாம் காசெட் கடைல ரெண்ட் பண்ணுவாங்க ,அப்ப இந்த படத்தைதான் முதல்ல எடுத்து வந்தார் :))
வாங்க அஞ்சலின் நலமா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ சுக்கு சேர்த்து!ஹீ
அப்ப முதல் கொப்பி வாங்க படும் பாடு ஒரு தனிசுகம் தான் இப்பபல படம் ஒரே நேரத்தில் கிடைக்கும் நிலை ஆனால் பார்க்க நேரம் இல்லை!ம்ம்
ராஜா எப்பவும் ராஜாதான் .
அவர் இசைல இளையநிலா பொழிகிறது பாடல் எனக்குரொம்ப பிடித்த பாடல் .பிரபு செய்ன் அம்பிகா செய்ன் ஆஹா :))இன்னும் வச்சிருக்கீங்களா ரெண்டுபேரும் அந்த செய்ன்களை.என் அம்மா நிறைய அம்பிகா புடவை வாகுவாங்க அப்போ
அப்ப முதல் கொப்பி வாங்க படும் பாடு ஒரு தனிசுகம் தான் //
மெய்தான் நேசன் இப்ப தமிழ்கடைல உடனே டிவிடி வந்தாலும் வாங்கி பாக்கிற ஆர்வமில்லை .
அந்த செயின் இருக்கு ஆனால் அது நான் செய்தது!ஹீ பரம்பரைச் செயின் மாறிவிட்டது ஜோடி வேற இல்ல!! ஹீ
சப்பாத்திக்கு மாவு பிசைந்து பாதியில் விட்டு வந்திருக்கேன் நேசன் .பிறகு மீண்டும் வரேன் .அனைத்து நண்பர்களுக்கும் நலம் விசாரித்ததாக கூறுங்கள்
அப்போது அம்பிகா நதியா என ஒரு புறம் ரேவதி பாவாடை என ஒரு புறம் புடவைக்கடை போனால் ஜாலிதான் அஞ்சலின் பாட்டியின் கமிசன் கிடைக்கும்!ஹீ ஐசொக் வாங்க கல்யாணிகூல் பாரில்!
சப்பாத்திக்கு மாவு பிசைந்து பாதியில் விட்டு வந்திருக்கேன் நேசன் .பிறகு மீண்டும் வரேன் .அனைத்து நண்பர்களுக்கும் நலம் விசாரித்ததாக கூறுங்கள்
26 July 2012 12:14 // நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும் உறவுகளிடம் கூறுகின்றேன்! சப்பாத்தி நல்லாப்பிடிக்கும் வெயிலுக்கு இன்னும் நல்லம்!ஹீ
sako...
anupavangal arumai!
athaukkuleye vethanai!
thentralo theeyo paadal naan kettathe illai
pakirnthamaikku mikka nantri
sako...
anupavangal arumai!
athaukkuleye vethanai!
// நன்றி சீனி கருத்துரைக்கு ம்ம்!
thentralo theeyo paadal naan kettathe illai
pakirnthamaikku mikka nantri// ராகங்கள் மாறுவதில்லைப்படம் பேசலாம் இன்னொரு நாளில் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் சீனி!
நேசன் பதிவு இண்டைக்கும்....அப்ப வெறும் கோப்பி தாங்கோ.சூப்பர் பாட்டு அதுவும் ரெண்டு பாட்டு.முதல்ல கண்ணை மூடிக்கொண்டு கோப்பியோட பாட்டு....அருமையா இருக்கு.ரெண்டும் எனக்கே எனக்கா போட்டமாதிரி இருக்கு.எனக்குப் பிடிச்ச பாட்டு...எப்பிடி நேசனுக்குத் தெரிஞ்சிருக்கும்.....மன அலை இல்லாட்டி யாரோ சொல்லிக் குடுத்துப்போட்டினம்.நன்றி நன்றி நேசன்.சுகமா இருக்கு இந்த இரவுக்கு !
நீயா நானா பல நினைவுகளை கொண்டு வந்துபோனது.அந்தப் படங்களும் பாடல்களும் அது ஒரு தனிதான்.வீட்டில் வாடகைக்கு கொப்பி வாங்கிப் படம் போட்டு அண்ணா கோடியைச் சுத்திச் சுத்தி அடி வாங்கினது ஞாபகம் வந்திச்சு !
நேசன் பதிவு இண்டைக்கும்....அப்ப வெறும் கோப்பி தாங்கோ.சூப்பர் பாட்டு அதுவும் ரெண்டு பாட்டு.முதல்ல கண்ணை மூடிக்கொண்டு கோப்பியோட பாட்டு....அருமையா இருக்கு.ரெண்டும் எனக்கே எனக்கா போட்டமாதிரி இருக்கு.எனக்குப் பிடிச்ச பாட்டு...எப்பிடி நேசனுக்குத் தெரிஞ்சிருக்கும்.....மன அலை இல்லாட்டி யாரோ சொல்லிக் குடுத்துப்போட்டினம்.நன்றி நன்றி நேசன்.சுகமா இருக்கு இந்த இரவுக்கு// வாங்க ஹேமா நலமா! இந்தப்பாடல்கள் எனக்கு அதிகம் பிடிக்கும்! !
நீயா நானா பல நினைவுகளை கொண்டு வந்துபோனது.அந்தப் படங்களும் பாடல்களும் அது ஒரு தனிதான்.வீட்டில் வாடகைக்கு கொப்பி வாங்கிப் படம் போட்டு அண்ணா கோடியைச் சுத்திச் சுத்தி அடி வாங்கினது ஞாபகம் வந்திச்சு !
//ம்ம் அடியா கருக்கு மட்டை எல்லாம் மறக்க முடியாதே!ஹீ அந்த ஓடின வேகம் எல்லாம் பாட்டியும் ஓடவில்லை!ம்ம்
26 July 2012 13:48
அது ரஜனி,ஸ்ரீதேவி படம் நேசன்.சிங்கப்பூர்ல எடுத்த படமெண்டு நினைக்கிறன்.அடியெண்டா அடி அவருக்கு.யோசிக்கிறன் யோசிக்கிறன்.ஞாபகம் வருதில்ல !
பிரியா படம் !
இப்ப பல சீடி கிடந்தும் பார்க்கும் ஆசையில்லை ஹேமா !ம்ம் காலமாற்றம் ஈர்ப்பு இல்லையோ ? தெரியாது !
’ப்ரியா’தான் நேசன்.அதில ஒரு நல்ல பாட்டு....அதையும் சொல்லுங்கோ !
என்னுயிர் நீ தானே அருமையான பாடல்!
அதே...அதே....அதேதான் நேசன்.அண்ணாவுக்கு அடிவிழ விழ என் ஒன்றுவிட்ட அண்ணா இருந்து இந்தப்பாட்டுத்தான் பாடினார்...இப்பகூடச் சிரிப்பு அடக்கமுடியாமல் வருது !
அடிவிழ விழ என் ஒன்றுவிட்ட அண்ணா இருந்து இந்தப்பாட்டுத்தான் பாடினார்...இப்பகூடச் சிரிப்பு அடக்கமுடியாமல் வருது !
//பிறகு சிரித்தவரும் சேர்ந்து வாங்கி இருப்பாரே சேர்ந்து கெடுக்கின்றாய் என் பிள்ளையை என்று !:))) ஹேமா.
அவரும் சேர்ந்துபோய்தானே வாங்கினவர் கொப்பி.மாடிக்கொண்டவர் இவர்...அவர் இப்ப உயொரோடும் இல்ல.சிங்கப்பூருக்கு எம் தொழிலுக்காகப் போன இடத்தில் சின்னவயசில் காலமாகிப்போனார்.கானமூர்த்தி அவர்களின் இளைய சகோதரன் விஜயமூர்த்தி என்று பெயர் !
அவரும் சேர்ந்துபோய்தானே வாங்கினவர் கொப்பி.மாடிக்கொண்டவர் இவர்...அவர் இப்ப உயொரோடும் இல்ல.சிங்கப்பூருக்கு எம் தொழிலுக்காகப் போன இடத்தில் சின்னவயசில் காலமாகிப்போனார்.கானமூர்த்தி அவர்களின் இளைய சகோதரன் விஜயமூர்த்தி என்று பெயர் !
//ம்ம் துயரத்திலும் நினைவுகள் சூழ்ந்து இருக்கின்ற ஜீவன்கள் ம்ம்ம்
நன்றி ஹேமா அதிகாலையில் வேலையிருக்கும் ஓய்வு எடுங்கள் நாளைய பொழுதில் சந்திப்போம் இனிய ஓய்வுகள் உள்ளத்துக்கும் இமைக்கும்!
நானும் அந்த காலப் பாடல் நினைவுகளில்
மூழ்கி எழுந்தேன்.மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
அந்த நிகழ்ச்சி பல பேருக்கு மலரும் நினைவுகளை கிளறி விட்டு விட்டது. நீயா நானாவில் இது போல சில நிகழ்ச்சிகள் அபூர்வமாக சிறப்பாக அமைந்துவிடும்
பல நல்ல பாடல்களை (கண்ணொளி) பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... (த.ம. 4)
அந்த நிகழ்ச்சியும் சரி, உங்களின் பதிவும் சரி... என்னை மாணவப் பருவத்துக்கே அழைத்துச் சென்று மகிழ்வித்தது. ஹேமாவும் நீங்களும் பேசிய அந்த ப்ரியா படப்பாடல் எனக்கு இப்போது கேட்டாலும் இனிக்கிற ஒன்று. என ரசனை எல்லைக்குள் நீஙகளிருவரும் இருப்பதில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி நேசன்.
நானும் அந்த காலப் பாடல் நினைவுகளில்
மூழ்கி எழுந்தேன்.மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்// நன்றி ரமனி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்! வாக்கு இட்டமைக்கும்!
அந்த நிகழ்ச்சி பல பேருக்கு மலரும் நினைவுகளை கிளறி விட்டு விட்டது. நீயா நானாவில் இது போல சில நிகழ்ச்சிகள் அபூர்வமாக சிறப்பாக அமைந்துவிடும்
26 July 2012 20:31 // நன்றி பாலா வருகைக்கும் கருத்துரைக்கும்!
பல நல்ல பாடல்களை (கண்ணொளி) பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... (த.ம. 4)
26 July 2012 21:18 // நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துரைக்கும்.
அந்த நிகழ்ச்சியும் சரி, உங்களின் பதிவும் சரி... என்னை மாணவப் பருவத்துக்கே அழைத்துச் சென்று மகிழ்வித்தது. ஹேமாவும் நீங்களும் பேசிய அந்த ப்ரியா படப்பாடல் எனக்கு இப்போது கேட்டாலும் இனிக்கிற ஒன்று. என ரசனை எல்லைக்குள் நீஙகளிருவரும் இருப்பதில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி நேசன்.
26 July 2012 22:37 //நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே நன்பணே! நண்பனே.
இந்த நாள் அன்று போல் இல்லையே அது ஏன் நன்பணே! நன்பணே!
நலமா நேசரே..
வாழ்ந்த நினைவுகள் சுமக்கும் 80 !அனுபவம்! 1"//
சிலோன் ரேடியோ கேட்டு வளர்ந்த நினைவுகள்...இளையராஜா கைவரிசை...வைரமுத்து/வாலி...வார்த்தைகளில்...அப்பப்பா..
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போனது...
நல்ல பகிர்வு.த.ம 6
வணக்கம் சகோதரர் நேசன்,
எண்பதுகளின் பாடல்களை
எண்ணும் பொழுதெல்லாம்
விழியின் வழியில்
பட்டாம்போச்சி பறக்கும்...
அற்புதமான பாடல்கள் வந்த காலகட்டம் அது..
அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே நன்பணே! நண்பனே.
இந்த நாள் அன்று போல் இல்லையே அது ஏன் நன்பணே! நன்பணே!
27 July 2012 02:07 // நன்றி ராஜி அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும் அதிசய உலகம் ஆகாயம் மேலே பூலோகம் கீழே!
நலமா நேசரே..
வாழ்ந்த நினைவுகள் சுமக்கும் 80 !அனுபவம்! 1"//
சிலோன் ரேடியோ கேட்டு வளர்ந்த நினைவுகள்...இளையராஜா கைவரிசை...வைரமுத்து/வாலி...வார்த்தைகளில்...அப்பப்பா..
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போனது...
27 July 2012 06:11// வணக்கம் ரெவெரி அண்ணா! நான் நலமே! ம்ம் நெஞ்சமெல்லாம் நீயே என அந்தக்காலம்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்
நல்ல பகிர்வு.த.ம 6// நன்றி முரளிதரன் வருகைக்கும் கருத்துரைக்கும்.
வணக்கம் சகோதரர் நேசன்,
எண்பதுகளின் பாடல்களை
எண்ணும் பொழுதெல்லாம்
விழியின் வழியில்
பட்டாம்போச்சி பறக்கும்...
அற்புதமான பாடல்கள் வந்த காலகட்டம் அது..
27 July 2012 10:55 // வணக்கம் மகி அண்ணா! 80 வசந்தம் வராத பருவம்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment