13 July 2012

வைரமுத்துக்கு வாழ்த்து!

21 நூற்றாண்டியில் ஈடில்லா கீர்த்தி பெற்ற பாடல் ஆசிரியர்!,கவிஞர்,இலக்கியவாதி என பன்முகப்பார்வையில் பார் போற்றும் கவிப்பேரசு வைரமுத்து அவர்களே உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .!


என்றும் உங்கள் புலமைத்தமிழ் எங்களுக்கு புத்துணர்ச்சி தந்து கொண்டு இருக்க வேண்டும் என ஒரு ரசிகனாக ,வாசகனாக, யாசிக்கின்றேன் !






 எப்போதும் கவிஞர்களுகு வித்துவச் செருக்கு வரும் என்பதை உங்களுக்கும் ,இசைச்செருக்கு வரும் இளையராஜாவுக்கும் என்று இந்தக்குளத்தில் கல்லெறிந்தவர்கள் வாசித்த போது புரிந்துகொண்டேன் நல்ல பாடல்களை நேசிக்கும் என் போன்ற வழிப்போக்கனின் ஆசையில் நேற்றுப்போட்ட கோலம் வைரமுத்து இனி!திருத்தி எழுதிய தீர்ப்பு அல்ல நட்பில் என்று . !




வானம் எனக்கு ஒரு போதிமரம் எழுதியவர் இனி ரகுமானோடு மறு அவதாரம் கண்டபோது காவி நிறத்தில் ஒரு காதல் படித்தேன்.காதில் ஒலித்த என்ன சொல்லப்போறாய் ,! என்ற பாடல் இளைஞனாக இருந்தாலும் மனதில் அடுத்த ஆத்து ஆல்பேர்ட்டில் வரும் இதயமே இதயமே பாடல்தான் அமைதி தந்தது.




 .எல்லா நதியிலும் என் ஓடம் வாசித்த போது சிற்பியே உன்னைச் செதுக்கின்றேன் திருஞாணம் போல என்னையும் செதுக்கினீர்கள் வைகரை மேகங்கள் 16 வயதில் நீங்கள் நூலாக வெளியிட்டபோது அதே 16 வயதில்தான் நானும் உங்கள் வாசகனாக என்னையும் தீட்டிய என் பழைய பனை ஓலை போல .இதுவரை நான் என தேடித்தேடிப் படித்தேன்




.நேற்று இல்லாத மாற்றமும் .வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லாத ஒரு உணர்வு பாடலாக சீண்டிய போது டூயட் படத்தில் பிரபு பேசிய ரத்தத்தினால் வந்த யுத்தத்தினால் கவிதை எழுதினே கண்ணிருந்தால் வாசித்துப் போடியை அதிகம் ரசித்தேன் .தமிழ்புலமைக்கு .


தலைமுறைமாற்றம் போல நீங்களும் தண்ணீர்தேசம் எழுதிய போது தென்மேற்குப் பருவக்காற்று பாடல் ஒலித்தாலும். ரசித்தது (ஒரு ஒடை நதியாகின்றது )தென்றல் வந்து என்னைத் தொடுமும். தலையைக்குனியும் தாமரையேயும் தான் அது எனக்குள் வந்த மாற்றமோ நான் அறியேன் கவிஞரே!



இலங்கையில் நடக்கும் யுத்தம் நிறுத்து என்று (பூவெல்லாம் உன் வாசத்தில் )நீங்கள் பேனா யுத்தம் செய்த போது நானும் உங்கள் மீது ஈர்ப்பில் ரசித்தேன் உன்னைப்பார்த்த பின் நானாக  இல்லையே என்று (காதல் மன்னன் )பாட்டு  எனக்கும் பிடித்த போது நானும் உருகினேன் ஒரு பொய்யாவது சொல்கண்ணே  ஜோடி பார்த்த் போது எங்கோ ஒரு இடத்தில்  என்று அதுவும் ஒரு போர்க்களமும்  இரு பூக்கள்  விரும்பி வாசிப்புக்கு நேசிப்பாகியது!


 அப்போதும் வானம் தொட்டு விடும் தூரம்  என்றும் இன்னொரு  தேசிய கீதம் வாசித்தாலும்   அமர்க்களத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டபோது நாமும் கேட்டோம் யுத்தம் இல்லாத பூமி வேண்டும் ஈழத்தில் என்று  ஆனாலும் கேள்விகளாள் ஓரு வேள்வி போல இறுதி யுத்தம் நடந்த போது நீங்கள் எலிக்கறியும் சோழமன்னர்  என்று...  (ஆயிரத்தில் ஒருவன்) படத்தில் எழுதிவிட்டு உங்கள்  பாசத்தலைவர் கருணாநிதிக்கு பாட்டுடைத்தலைவன் என்று ஜால்ரா போட்ட போது கவிராஜன் கதை. வான்ம் தொட்டுவிடும் தூர்ம்தான் செந்தோழன் !

சிகரங்களை நோக்கி திருஞாணம் போல நீங்களும் ஒரு சாதாரன கவிஞர் காலத்தைக்காட்டும் கண்ணாடியாக இருக்கும் சந்தர்ப்பத்தையும் மெளனத்தின் சப்தங்கள்  எழுதினாலும் நான் வடுகப்பட்டி முதல் வால்கா வரை என்று எழுதிவிட்டு க்ருணாநிதியிடம் சர்ணாகதியாக வைரமுத்து  பொழிவிழ்ந்து போன் நிலையை எண்ணும் போதெல்லாம் !


கல்வெட்டுக்கள் ,எல்லாம் என் ஜன்னலின் வெளியே சிலதைச் சொல்லனும்  காற்றின் மொழியே  கேட்ட  செவிகள்  .

வில்லோடு  வா நிலாவே  வாசித்தாலும் விடைதேடுவது! பழனிபாரதி ஆங்கிலம் கலப்பதாக நீங்கள் குட்டிய தருணம் அதிகம் சூடு பிடித்தது  நாளேடுகளில்.

  அதன் பின் வித்தக்கவிபா.விஜய் கருணாநிதியிடம் அதிகம் ஒட்டிய போது நீங்கள் ஆஸ்தான் இடம் பிடிக்க  அடித்த காக்கா பிடிப்பு எல்லாம் உங்கள் மீது ஒரு காழ்ப்புண்ர்வை தந்தது நிஜம் .


வாசிக்கும் நெஞ்சம் யோசித்த போது கிராமத்துக் கதை கருவாச்சி காவியம் சந்தணமும் ,சாக்கடையும் தெளிந்து கொண்டேன் தத்துவஞானியாக என்று நானும் நம்பியிருந்தேன் !.

நீங்கள் இன்னும்  சிலவிடயங்களுக்கு குரல் கொடுப்பீர்கள் என்று  பத்துக்குள்ளே  நம்பர் ஒன்று சொல்லு பாடல் ஒலித்தாலும் கவிதைக்கு நீங்கள்  தரும் ஆளுமை அதிகம்!.

 உங்களின் கிராமிய உணர்வும், நவநாகரிக உலகும் கைராசியாக அமைந்தது ஒரு ரத்ததானம் தான் ..அதுதான் உங்களுக்கு தாய்வீட்டு சீதனம்  அந்த இயல்புதான் புதிய கவிஞர்களுக்கு  வழிகாட்ட வேண்டியவர் வாழ்த்தி வரவேற்காமல்.

  அவர்களை கிள்ளுக்கீரையாக தீண்டும் குணம். உங்கள் மகன் மதன்கார்க்கி மட்டும்தான் அடுத்த கவிஞர் ஆகணும் என்று  அவ்வப்போது சிலிக்கன் சிங்கம் ஆங்கிலம் கலந்து எழுதும் போது பாவம் பழனிபாரதி ஒதுங்கியிருந்தாலும் அவரின் பாடல்கள் இன்னும் ஞாபகம் வருகின்றது கவிஞரே!


ஆனாலும் இன்னும் ஒரு கேள்வி என் மனதை குடைகின்றது. பா.விஜய் சமர்2009 கவிதைத்தொகுதி ஈழத்து முள்ளிவாய்க்கால் அவலத்தைப் பாடினார். கருணாநிதிக்கு செல்லப்பிள்ளையாக இருந்தாலும் ஒரு கவிஞனாக!

 வாலி வயதான தாயினை வரவிடாமல்  கழுவேற்றிய அரசினை சாடி கவிதை பாடினார்!

கண்ணகி தேசமே என்று கவிதாயினி தாமரை.  பழனிபாரதி .அறிவுமதி வலி கவிதை தொகுப்பாக என பலர்  , சொல்லோவியம் தீட்டிய போது எல்லாம் பாட்டுத்தலைவன் என்று நெஞ்சுக்கு நீதி பொய் எழுதியகருணாநிதியின் பின் சாமரம் வீசும்  நீங்கள் இன்னும் மெளனம் காப்பது ஏன்,,,,.,,,,,,,,,,,,,,,!<<< ,?கவிதையும் ,கதையும் ஆட்சியின் பின்னே அடுத்த நாட்டுக்கதை என்று  வாகைசூடவா வாய் பேசாமல் இருப்பது !,,?


 தமிழ் ,தமிழன் ,தலைவன் ,வீரம், எல்லாம் சொல்லும் உங்கள் பேச்சு கேட்கும் போது  வானம் தொட்டும்விடும் தூரம்தான் கதையில் சொல்லிய!

 (இந்தக்கூட்டம் நமது ஜனநாயகத்தை அழுக்குப்படுத்திவிடக்கூடாது என்று ஆசைப்படுகின்றோம்  )என்று சொல்லியதை ஒரு வாசகனாக வேண்டுவது பிரபல்யமான நீங்கள்  வலிகள்  சுமந்த நம்மவர் கதையை, கவிப்புலமையில் கொஞ்சம் கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்காமல் அடுத்த தலைமுறைக்கும் தெரியும் வண்ணம் .

நம் துயரங்களை  அழகாய்  கவிதையாக, கதையாக மெட்டுப்போட வேண்டும் .
 என்பதே  இந்த வழிப்போக்கனின் ஆதங்கம்!


இந்த ஆதங்கம் ஒரு வாசகனாக !


ஆனால் பாடல் ரசிகனாக நீங்கள் எப்போதும் எங்கே என் புன்னகை  தாளம் படப்பாடலையும் ,என்னைக்கானவில்லையே காதல் தேசம் பாடலையும் கடந்தாலும் நீங்கள் வரிபிடித்த! ஞானியோடு கைகோர்த்த இந்தப்பாடல் இன்று மட்டும்மல்ல என் வாழ்நாள் முழுதும் காதில் ஒலிக்கும்  கொஞ்சம் தேனீர்  நிறைய வானம் !

22 comments :

பால கணேஷ் said...

வைரமுத்துவின் படைப்புகளை ஒன்று விடாமல் படித்து அவறறை வரிகளில் கொண்டு வந்து அழகான கட்டுரை வடித்திருக்கிறீரகள் நேசன். நீங்கள் சொன்ன கருத்துக்கள் எனக்கு உவப்பானவையே.. ஒன்றைத் தவிர...

பால கணேஷ் said...

‘இலங்கையில் நடக்கிற யுத்தம் நிறுத்து’ என்று அந்தக் கதாநாயகனுக்காக உணர்ச்சி வசப்பட்டோ, பரிவு கொண்டோ வைரமுத்து எழுதவில்லை. அவனுக்கு காதல் வந்து விட்டதால் இலஙகையில் யுத்தம் நிறுத்த வேண்டும் என்கிறான். இது சரியென்று உங்களுக்குப் படுகிறதா தம்பி?

பால கணேஷ் said...

மற்றபடி... நீங்கள் சொல்லியிருப்பதைப் போல வைரமுத்து என்கிற கவிஞனின் தமிழுக்கு நானும் ரசிகன்தான்.

தனிமரம் said...

வைரமுத்துவின் படைப்புகளை ஒன்று விடாமல் படித்து அவறறை வரிகளில் கொண்டு வந்து அழகான கட்டுரை வடித்திருக்கிறீரகள் நேசன். நீங்கள் சொன்ன கருத்துக்கள் எனக்கு உவப்பானவையே.. ஒன்றைத் தவிர.// வாங்க கணேஸ் அண்ணா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நலம் தானே நீங்கள் உறவுகள் எல்லாம்!.

தனிமரம் said...

ஒன்றைத் தவிர...//ம்ம் எனக்கு புரியவில்லை அண்ணா அந்த ஒன்று!ம்ம்

தனிமரம் said...

‘இலங்கையில் நடக்கிற யுத்தம் நிறுத்து’ என்று அந்தக் கதாநாயகனுக்காக உணர்ச்சி வசப்பட்டோ, பரிவு கொண்டோ வைரமுத்து எழுதவில்லை. அவனுக்கு காதல் வந்து விட்டதால் இலஙகையில் யுத்தம் நிறுத்த வேண்டும் என்கிறான். இது சரியென்று உங்களுக்குப் படுகிறதா தம்பி?// நிச்சயமாக இல்லை அந்த நிலையில் அங்கே யுத்தம் நடந்தது ஆனால் அவர் அதை கையாண்ட போது நம் ஊர் ஒலி/ஒளி அதை தனிக்கை செய்யாமல ஒலிக்க விட்டது நான் அறிவேன் அதுதான் கவிஞர் வெற்றி!மற்றும்படி இவரும் காசு வாங்கி எழுதும் ஒரு கவிஞர்தான்!ம்ம்

தனிமரம் said...

மற்றபடி... நீங்கள் சொல்லியிருப்பதைப் போல வைரமுத்து என்கிற கவிஞனின் தமிழுக்கு நானும் ரசிகன்தான்.// நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

Anonymous said...

கல்லூரி நாட்களில் அவர் கடவுள்...அப்புறம் ஆசான்...
அவர் வார்த்தைகளில் இன்றும் என்னுடன் பயணம் செய்வது ஸ்பரிசம்...

வாழ்த்துக்கள் இருபதாம் நூற்றாண்டுத்தமிழே...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வைரமுத்துவை நண்டு அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள்.வைரமுத்து சில வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு. அதை அத்தனை சார்பாகவும் பிரதிபலித் திருக்கிறீர்கள்

ஆத்மா said...

அருமையாக தொட்டு சென்றுள்ளீர்கள் சகோ...

ஆதங்கம் நியாயமானது..

எனக்கு வைரமுத்துவின் படைப்புக்கள் பெரிதாக தெரியாது. பொதுவாக நான் புத்தகங்கள் படிப்பதும் குறைவு கவிஞனின் படப்புக்களை அடுக்கிக் கொண்டே போயிருக்கிறீர்கள்

இனிமேல் தேடி படிக்கனும் எனும் ஆசையைத் தூண்டிவிட்டது சகோ

பகிர்வுக்கு நன்றி

Seeni said...

mmmm!

Unknown said...

வைர முத்து ஜயாவின் மூன்றாம் உலகப்போர் படித்தீர்களா அண்ணா சூப்பரா இருக்கு.....

நானும் வாழ்த்துகிறேன்.....

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?கொஞ்சம் வேலை அதிகம்.வைரமுத்து பற்றிய உங்கள் பார்வை அத்தனையும் நிஜம்!என் கருத்தும் இது தான்.அந்தக் கால "மூவர்" அணி......................ஹூம்!!!!!!!!!!

தனிமரம் said...

கல்லூரி நாட்களில் அவர் கடவுள்...அப்புறம் ஆசான்...
அவர் வார்த்தைகளில் இன்றும் என்னுடன் பயணம் செய்வது ஸ்பரிசம்...

வாழ்த்துக்கள் இருபதாம் நூற்றாண்டுத்தமிழே...

13 July 2012 05:35// நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வைரமுத்துவை நண்டு அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள்.வைரமுத்து சில வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு. அதை அத்தனை சார்பாகவும் பிரதிபலித் திருக்கிறீர்கள்

13 July 2012 08:21 // நன்றி முரலீதரன் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அருமையாக தொட்டு சென்றுள்ளீர்கள் சகோ...

ஆதங்கம் நியாயமானது..

எனக்கு வைரமுத்துவின் படைப்புக்கள் பெரிதாக தெரியாது. பொதுவாக நான் புத்தகங்கள் படிப்பதும் குறைவு கவிஞனின் படப்புக்களை அடுக்கிக் கொண்டே போயிருக்கிறீர்கள்

இனிமேல் தேடி படிக்கனும் எனும் ஆசையைத் தூண்டிவிட்டது சகோ

பகிர்வுக்கு நன்றி// நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

mmmm!// நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வைர முத்து ஜயாவின் மூன்றாம் உலகப்போர் படித்தீர்களா அண்ணா சூப்பரா இருக்கு.....

நானும் வாழ்த்துகிறேன்.//நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் வாழ்த்துக்கும். இன்னும் படிக்கவில்லை நூலாக வந்தால் அடுத்த பயணத்தில் பார்க்கின்றேன் சென்னையில்!

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?கொஞ்சம் வேலை அதிகம்.வைரமுத்து பற்றிய உங்கள் பார்வை அத்தனையும் நிஜம்!என் கருத்தும் இது தான்.அந்தக் கால "மூவர்" அணி......................ஹூம்!!!!!!!!!!

13 July 2012 22:53 // காலை வணக்கம் ஐயா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Athisaya said...

அருமை சொந்தமே!வைரமுத்து அவர்களின் பெரும் அடிமை நான்.இத்தனை படைப்புகளையும் தொகுத்து ரசித்து அருமையான படைப்பாக்கியுள்ளீர்கள்.மற்றவை மறந்து ரசனை எல்லையில் அடிமைப்படக்கூடியது அவருக்கு தான்.அருமை சொந்தமே பகிர்வு!

சந்திப்போம்.!ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஆஆஆ வைரமுத்து அவர்கள் பிறந்தது யூலை 13ம் திகதியோ? அவ்வ்வ்வ்!!!.

இனிய பிறந்ததின வாழ்த்துக்கள். எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அவரின் பேச்சுக்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம், கவிதைபோல இருக்கும்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

முதல் மரியாதைப் பாடல் சூப்பர்.