வணக்கம் உறவுகளே !!
அந்த நாள் ஞாபகம் தொடர் பதிவு ஊடாக மீண்டும் தனிமரம்!:))
முந்திய பதிவுகள் இங்கே..
http://www.thanimaram.org/2012_10_01_archive.html
அந்த நாள் ஞாபகம் தொடர் பதிவு ஊடாக மீண்டும் தனிமரம்!:))
முந்திய பதிவுகள் இங்கே..
http://www.thanimaram.org/2012_10_01_archive.html
என்னடா ??தனிமரம் தொடர் கொண்டு வருமே இன்று .என்னாச்சு என்பது காதில் கேட்குது .ஒவ்வொருத் தருக்கு ஒவ்வொரு ஆசை என் ஆசை தொடர்கள்தான் :))
சரி இன்று எந்த தியேட்டரில் விசில் ஊதலாம் என்று ஜோசனையோ தனிமரத்துட்ன் சேர்ந்து ??
வாங்க செல்வமாஹால்-கொட்டாஞ்சேனை.
இந்தப்படம் எனக்கும் முக்கிய கருத்துச் சொன்னபடம் .
அன்பு ,பாசம் ,குடும்பம், தியாகம் என்பன குடும்ப ஆலமரத்தின் அடிநாதம் என்று குத்திக்காட்டியது .
சில நேரத்தில் என் முகநூலில் ,சில குழுமத்தில் பதிவுப்செய்ய முடியாத விடயங்களை எல்லாம் இந்த தனிமரம் வலையில் தவழ விடுவதில் ஒரு ஆனந்தம் :)))
இந்தப்படம் நானும், ராகுலும் ,அவனோடு நம் நண்பனும் டெனில் ,அவன் எதிர்காலத் துணைவியும் (மிருனா என் இன்னொரு சகோதரி போல இன்று இருக்கும் நண்பியும்) சேர்ந்த முதன் முதலில் ஒன்றாக பார்த்த படம் .
இது இந்த முகவரி தேடி முகம் தொலைந்தவர்கள் பலர்.
அந்த வழியில் 18 வயதில் பதுளையில் இருந்து வந்த என் நண்பனும் என்னோடு வந்து இருந்தான்.
எங்கள் நட்பு ஒரு பாசவலை இந்த வலையில் இருந்து தப்ப முடியாது ..
செல்வமஹாலில் 1999 நவம்பரில் தீபாவளி வெளியீடாக .அரங்கம் நிறைந்த முதல் காட்சியை கண்டுகளித்தோம்.
இன்றும் மறக்க முடியாத ஞாபகம்.
இதில் சுவாரசியம் என் நண்பன் காதலுக்கு முதல் தூது போகும் நிலை இக்கட்டில் நான்.
என் வீட்டில் இது தெரிந்தால் என் நிலமை முகாரிதான்:)))
இது ஒரு புறம் அந்த நங்கையும் என்னை அண்ணா என்று ஏற்றுக்கொண்டால் அவளும். என் நண்பனை நேசிக்கும் யாசிப்பையும் என்னிடம் பகிர்ந்து கொண்டாள் .
இந்த ஜோடியினர் காதலர்களாக சேர்ந்து பார்த்த முதல் படமும் இதுதான்.
சீதையின் வனவாசம் 14 வருடங்கள் என்றால் இந்த ஜோடிகள் இல்லற பந்தத்தில் இணைக்க காத்திருந்த 14 வருடம் எங்கள் நெஞ்சில் நீண்ட பாரம்.
நண்பன் ஒரு புறம் உடன் பிறவாத அந்த தங்கை ஒரு புறம் தனிமரத்தையும் ,ராகுலையும் ,அதிகம் புலம்பெயர் தேசத்தில் அடிக்கடி பிரதேசவாத ,குடும்ப அரசியல் இனவாத தேசிய அரசியல் எப்படி தலையிடியாகியது நட்பில் அதனால் சாமானிய நண்பர்கள் நொந்து நூடில்ஸ் ஆன நிலையை இனி வரும் தொடர் பேசும்:)))
இந்தப்படத்தில் இந்தப்பாடல் எனக்கு அதிகம் பிடிக்கும்.
நவீன் குரல் தனித்துவம் தமிழில் ஒரு சில பாடல் பாடியவர் வரிசையில் சேர்ந்துவிட்டார்.
வைரமுத்துவின், கற்பனை தேவாவின் இசை என எப்போதும் ரசிக்கும் பாடல் தலயின் நடிப்பு ,ரகுவரன் பாத்திரம் என எப்போதும் பிடித்த படம்!
இந்தப்பாடலை கேட்டு ரசிப்போமா ,???????
11 comments :
இரவு வணக்கம்,நேசன்!நலமா?(என்னைப் போல)நீங்களும் 'தல' ரசிகரோ?ஹி!ஹி!!ஹீ!!!கோப்பி?????????
தொடர்ந்து எழுதுங்க உங்களது அனுபவத்தை பகிர்ந்திடுங்க.வாழ்த்துக்கள்
நல்ல பாடல்...
/// அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா...
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா...
படம் : அன்பே சிவம் ///
ெமாபல் வீவ்வும் ைவத்தால் என்ன ேபால உள்ளவர்கள் வாசிக்க எளிதாக இருக்கும்
அருமையான படம்! இதன் பின்னனியில் ஒரு தொடரா? வாழ்த்துக்கள்!
இரவு வணக்கம்,நேசன்!நலமா?(என்னைப் போல)நீங்களும் 'தல' ரசிகரோ?ஹி!ஹி!!ஹீ!!!கோப்பி?????????
2 February 2013 12:57 //வணக்கம் யோகா ஐயா! வாங்க முதல் பால்க்கோப்பி குடியுங்கோ, நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!
தொடர்ந்து எழுதுங்க உங்களது அனுபவத்தை பகிர்ந்திடுங்க.வாழ்த்துக்கள்
2 February 2013 16:10 //நன்றி கவியாழி வருகைக்கும் கருத்துரைக்கும்!
நல்ல பாடல்...
/// அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா...
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா...
படம் : அன்பே சிவம் ///// நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் தனபாலன் சார்
ெமாபல் வீவ்வும் ைவத்தால் என்ன ேபால உள்ளவர்கள் வாசிக்க எளிதாக இருக்கும்
2 February 2013 22:48 // நன்றி முத்தரசு வருகைக்கும் கருத்துரைக்கும்
அருமையான படம்! இதன் பின்னனியில் ஒரு தொடரா? வாழ்த்துக்கள்!
3 February 2013 05:28 // நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் சுரேஸ்
ஆஹா.. மீண்டும் கோப்பிக்கு அடிபடும் நேரம் ஆரம்பமாகிவிட்டது... எழுதுங்கோ நேசன்..
அழகான பாடல்..
Post a Comment