போராட்ட களத்தில் இருந்து பெற்றவர்களையும் ,கூட வந்தவர்களையும் ,பிறந்த ஊரையும் ,விரும்பினால் போய்ப் பார்க்கலாம் பொறுப்பாளருக்கு அறிவித்தல் கொடுத்து விட்டு.
அப்படித்தான்!ரகுவும்சிறிய விடுமுறை ஒன்றில் ஊருக்கு வந்திருந்தான் !
இனவாத போர் வெறியில் வரும் சிங்கபாகு சிப்பாய் என்றாலும், கஜபாகு ரெஜிமேண்ட சிப்பாய் என்றாலும், விடுமுறையில் வீடு செல்லவும் ,ஆன்மீககருமம் ஆற்றவும் ,விடுப்பு விடுமுறை கேட்டாள் !விரைவில் கொடுக்கமாட்டார்கள் .உயர் அதிகாரிகள் அதனால் அவர்கள் தப்பி ஒடுவோர் பட்டியலிலும், போராளிகளிடம் சரணடைவதாகவும் கதைகள் சொல்வார்கள் எங்கள் பொறுப்பாளர் அண்ணாக்கள் !
இப்படி ஒரு சிலரை காவல் தடுப்பில் இருக்கும் போது சந்தித்ததும் ஞாபகம் வந்து போகும் நிலையில் தான் ரகு சிறிய விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தான்!
தற்போது யுத்த நிலையில் ஊரில் பெரும்பாலானவர்கள் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.ஒரு சிலர் மட்டும் குடும்பமாக இருந்தார்கள். !!
விமானக்குண்டு வீச்சில் இருந்து தப்பவும், இனவாத ஆட்சியின் தமிழர்மீதான உக்கிரமான பொருளாதார கட்டுப்பாடுகள் தொடர்ந்து ஏற்படுவதால் பலர் இடம் பெயர்ந்துகொண்டு இருந்தார்கள். எங்கே பொருட்களையும் ,உடமைகளையும், உயிரையும் பாதுகாக்க வழிகள் இருக்கும் இடங்கள் நோக்கி!!
போனவர்கள் நிலை என எல்லாவற்றையும்.அவர்களிடம் ஊர் புதினங்களை கேட்டு அறிந்துகொண்டான் ரகு.
போர் முற்றுகையிலும் நம்மவர்கள் கைதூக்கி வேண்டிக்கொள்ளும் எங்கள் சன்னிதானம் என உருண்டு நேர்த்திக்கடன் தீர்த்த ஊர்க்கோவில் திருவிழா தொடங்கியது பத்துநாள் திருவிழா .
அதில் சில நாட்கள் மட்டுமே ரகுவால் கலந்துகொள்ள முடியும் என்பதால் இரவு, பகல் என்று நண்பர்களுடன் நாட்டில் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் மிகத்தீவிரமான போர் முன்னெடுப்பு ,சர்வர்வதேசத்தின் மெளனம் ,எரிக்சொல்கைம்,யாக்காசி அக்காசி போய் இப்ப விஜய்நம்பியார் என்ற வேடதாரியின் புதிய முகம் எல்லாம் தமிழர்மீது ஏன் இப்படி ஒரு கபட நாடகம் என எல்லாம் நட்பு வட்டத்தில் ஆக்ரோசமான கருத்துப்பரிமாறல் ஒரு புறம் என்றால் !
போரரைத் தவிர்க்க புலம்பெயர் தேசத்தில் ஏற்பட்டு வரும் கவனயீர்ப்பு உண்ணாவிரத நிகழ்வுகள் ,மக்கள் குழுமத்தின் ஆதரவுகள், இவை எல்லாம் சர்வதேசம் கணக்கில் எடுக்குமா?? என்ன வளம் இங்கு இருக்கு சுரண்டல் பேர்வழிக்கு வந்து சேர்பியாவை போல பிரித்துக்கொடுப்பார்களா??,
சேர்பியாவுக்கு முன் இருந்தே நசுக்கப்படும் இனம் ஈழத்து குடிமக்கள் என்று எந்த!! இராஜதந்திரி அறிவான் சமாதனம் வெள்ளைப்புறா என்று வேசம் கட்டும் குள்ளநரிகள்!
என்று அனல் பறக்கும் கோயில் பிரகாரர்தில் .
அப்படி இருந்த ரகுவின் நட்பு வட்டத்தில் இவர்களில் ஒரு சிலர் அவயங்கள் இழந்த வீரர்கள் என்றாலும் நெஞ்சில் வீரம் இன்னும் வீசும் காளைகள் !
கோயிலில் ரகுவின் பொழுதுகள் சந்தோஸமாக கழிந்தன.
ஒரு மாலைவேளையில்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெயிலின் ஆக்ரோசத்துக்கு சூடுதணிக்கவும் ,நெஞ்சில் இருக்கும் அழுக்குச் சூட்டினை ஓடும் நீரில் போக்கவும் ஆன்மீகத்தில் நம்பிக்கையுடன் வருவோருக்கு தாகம் தீர்க்கும் வண்ணம் கோயில் வடக்குப் பக்க பிரகாகரத்தில் ஒரு நீர்த்தடாகம் எப்போதும் வற்றாது இருக்கும் வண்ணம் நீர் நிரப்பி இருக்கும். அது வற்றாது இருக்க ரகு குடிதண்ணீர் நிரப்பிக்கொண்டு இருந்தான் .
முன்னர் இதை தந்தையோடு வந்து அவன் செய்த செயல் வழமை போலவே கோயிலுக்கு பின் உள்ள பைப்பில் ரகு குடிதண்ணீர் நிரப்பிக்கொண்டு இருந்தான் !.
நிரப்பிவிட்டு திரும்பும் போது அங்கே வன்னி வெயிலின் வெக்கையைத் தீர்க்க தாக சாந்திக்குக்கு சுகியும் தண்ணீர் குடிப்பதற்காக நின்று கொண்டு இருந்தாள் !
சுதந்திரக்கட்சியின் கட்சிக்கொடி போலஒரு நீல நிற சுடிதார் அணிந்திருந்தாள்.
இவர்கள் இருவரையும் மீண்டும் சந்திக்கவைத்தது எது?ஏன் அவள் சற்று முன் வந்திருக்காலம் இல்லை ரகு சற்று பிந்தி வந்திருக்காலம் 12 B படம் சிம்ரன் போலஆனால் இவ்வளவு காலத்தின் பின் இருவரையும் ஒரே நேரத்தில் அழைத்து வந்த சக்தி எது?
14 comments :
ayyayyo .....
appuram....
மரம் கொத்தி பறவைபோல பார்த்தது அப்பப்பா என்ன வரிகள் சூப்பர்
கபடநாடகம், எதை பிரித்துகொடுப்பது ................வலி கொடுக்கிறது
அங்கங்கே ஒப்பிட்ட படங்கள்...
ஞாபக சக்தி அதிகம்...
தொடர்கிறேன்...
பகல் வணக்கம்,நேசன்!நலமா?////அடுத்து......................காத்திருப்போம்!/காத்திருக்கிறோம்!
போர் முற்றுகையிலும் நம்மவர்கள் கைதூக்கி வேண்டிக்கொள்ளும் எங்கள் சன்னிதானம் என உருண்டு நேர்த்திக்கடன் தீர்த்த ஊர்க்கோவில் திருவிழா தொடங்கியது பத்துநாள் திருவிழா .//இனியாவது கிடைக்கும் எமக்கு விடியல் என்ற நம்பிக்கையில் நேர்த்திகடன் செய்திருப்பார்களோ?
காத்திருக்கிறோம்....
உங்கள் வலைப்பூ மிகவும் புதுமையாக உள்ளது. எங்கிருந்தெல்லாமோ படங்களைக் கொண்டு வந்து சேர்க்கறீர்களே! மகிழ்ச்சி.
ayyayyo .....
appuram....//ம்ம் வாங்க சீனி அண்ணா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
மரம் கொத்தி பறவைபோல பார்த்தது அப்பப்பா என்ன வரிகள் சூப்பர்
கபடநாடகம், எதை பிரித்துகொடுப்பது ................வலி கொடுக்கிறது/நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.பூவிழி!!
அங்கங்கே ஒப்பிட்ட படங்கள்...
ஞாபக சக்தி அதிகம்...
தொடர்கிறேன்...//ம்ம் நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
பகல் வணக்கம்,நேசன்!நலமா?////அடுத்து......................காத்திருப்போம்!/காத்திருக்கிறோம்!
29 March 2013 05:50//வணக்கம் ஐயா நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா.
கவியாழி கண்ணதாசன் said...
போர் முற்றுகையிலும் நம்மவர்கள் கைதூக்கி வேண்டிக்கொள்ளும் எங்கள் சன்னிதானம் என உருண்டு நேர்த்திக்கடன் தீர்த்த ஊர்க்கோவில் திருவிழா தொடங்கியது பத்துநாள் திருவிழா .//இனியாவது கிடைக்கும் எமக்கு விடியல் என்ற நம்பிக்கையில் நேர்த்திகடன் செய்திருப்பார்களோ?//ம்ம் இருக்கலாம் ஐயா கவியாழி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
29 March 2013 06:22
காத்திருக்கிறோம்....
29 March 2013 09:32 //நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும் .
உங்கள் வலைப்பூ மிகவும் புதுமையாக உள்ளது. எங்கிருந்தெல்லாமோ படங்களைக் கொண்டு வந்து சேர்க்கறீர்களே! மகிழ்ச்சி.
29 March 2013 11:1//நன்றி ஐயா முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment