05 March 2013

விழியில் வலி தந்தவனே-9


சங்க இலக்கியங்கள் எல்லாம் காதலில் உருகும் தலைவிக்கு. அன்னம் தூது போனதும், புறா தூதுபோனதும்,பணிப்பெண் தோழிகள் ,தூதுபோனதும் என்று ஏட்டுச்சுரக்காய் போல எல்லாம் வெற்றுக்கோஸம் தான் இந்தியா ஒளிர்கின்றது என்பது போல !

என்ன போய் என்ன ?இந்த காதல் தூது எல்லாம் பேஜார் போல ஒரு புறம் என்றால் !

மறுபுறம் என்ன சொல்லி இருப்பார்கள்


 தலைவனுக்கு  ?



 கொடியிடையாள் அறுகம்புல் போல வாடிப்போனால் என்றா ?தலைவன் முகம் காணாது நெஞ்சோடு புலம்புகின்றாள் .

இப்ப வரும் என்று இருந்த யாழ்தேவி தடம்புரண்டு மதவாச்சியில் வீழ்ந்துவிட்டது வவுனியா வராது என்றா?


இந்த இலக்கியம் எல்லாம் அகநானுறு என்று காதல் பாடினாலும் ;இந்த யுத்த பூமியில் காதல் படுத்தும்பாடு தோழிகளுக்கு எப்போதும் தொல்லை தான் போலும்!


 எல்லைதாண்டி வரும் பயங்கரவாதம் போல எப்ப குண்டு வெடிக்கும் என்று தெரியாது போல நினைத்து இருந்த ரகுவிற்கு !

சுகி ரகுவிடம் கொஞ்சம் கதைக்கவேண்டும் என்று சொன்னதாக அவளது தோழி சுவாதி வந்து சொன்னாள்.

13 வது திருத்தச்சட்டத்தை விட்டு வேற பேசமாட்டோம் என்று அடம் பிடிக்கும் இனவாத ஆட்சியாளர் போல அவள் என்ன கதைப்பாள் வழமையான அதே நீ பாதி நான் பாதி என் இதயத்திருடனே உன்னை நினைத்து என்று பழைய பல்லவிதான்.

பிடிக்கும் பிடிக்கும் என்று  எனவே ரகு அதை பெரிது படுத்தவில்லை.

ஆனால் நிலமை அவசரகாலச்சட்டம் போல கொஞ்சம் சீரியஸ் என்று அவளது வகுப்பை கடந்து போகும் போது ரகு உணர்ந்தான்.

சுகி இங்கேயும் ஒரு கங்கை போல அழுதுகொண்டு இருப்பதை கண்டான்.ஒரு நாள் கழிந்தது புதுமைப்பித்தனா ?கனகாம்பரம் கு.பா ராஜகோபாலான சிறந்த கதை ஆளுமை மிக்கவர்கள் ?என்று கடந்த காலத்திலேயே கல்வி புகட்டும் தமிழ் ஆசிரியர் !

இன்றைய தேவையான நிகழ்கால நிலை சொல்லும்  மரணங்கள் மலிந்த பூமி நாவல் பற்றியோ, அந்த அவர்களும் இந்த இவர்களும் நாவல் பற்றியோ பாடம் எடுக்காத தமிழ் ஆசிரியர் வராததால் .ஏனைய மாணவர்கள் நூலகத்துக்கு போய்விட்டனர் .


ஹாசினியின் அடுத்த புதுப்படம் என்ன ?சனத் ஜெயசூரிய  செஞ்சரி அடித்தாரா ?என்று  அறியும் வாரப்பத்திரிக்கை வராத நூலகத்திற்கு !

அங்கு இருபது எல்லாம் இனவாத வெறித்தனத்தின் வேட்டையை காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும், அழகாய் அச்சிட்டு அடுத்த தலைமுறைக்கும் நம் ஈழஅவலத்தைச் சொல்லும் நம் பொக்கிசம் !

.சுகியும் தோழி. சுவாதியும் மாத்திரமே வகுப்பில் இருந்தனர்.


ரகு அவர்கள் வகுப்பை கடந்து செல்வதை கண்டதும் .சுகியின் தோழி சுவாதி கூப்பிட்டாள்.

"ரகு அண்ணா ரகு அண்ணா கொஞ்சம் இங்க வாங்க."

அவள் கூப்பிடுவது ரகுவின் காதில் விழுந்தாலும் .

இனவாத ,மதவாத அரசியல் வேண்டாம் என்று சொன்னாலும் புரியாத கொள்கை வகுப்பாளர்கள் போலஅவன் அதை கவனிக்காதது போல சென்றான்.

ஓடிவந்து இடைமறித்தாள் சுகியின் தோழி சுவாதி

".என்ன ரகு அண்ணா சுகி அழுதுகிட்டு இருக்கா என்ன என்று கேட்கமாட்டிங்களா? அவள் உங்களுடன் கதைக்கனுமாம்."

!தூதுவந்தவள் மூச்சு வாங்கினால் ரவியின் முகம் பார்த்து .

என்ன சொல்வான் இந்த காளை என் தோழிக்கு பதிலாக என்பது போல.

சரி போய் என்ன என்று கேட்போம் பெரிய கவுண்டர் பொண்ணு விழியில் நுழைந்து இதய வலி என்கின்றது ஏழைஜாதியிடம் என்று நினைத்துக்கொண்டு சுகியை நோக்கி போனான்.

மேசையில் முகம் புதைத்து தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள் சுகி ரகுவை கண்டதும் பெற்றவர்கள் பிரிந்தால் கூடப்பிறந்த உறவு ஓடிவந்தால் கட்டிக்கொண்டு உணர்ச்சி வெள்ளத்தில் அழுது புலம்பும் பெண்களைப் போலஇன்னும் அவளது அழுகை அதிகரித்தது.

என்ன சுகி ஏன் அழுறீங்க? என்ன பிரச்சனை ரகு கேட்கவும்

அது ஏன் உங்களுக்கு நீங்க உங்கள் வேலையை பார்த்திட்டு போங்க நான் அழுதா என்ன? அழாட்டி உங்களுக்கு என்ன ரகு ?என்று சற்று கோபமாக சொன்னாள்.தேடி வந்தவனிடம் ஊடல் கொண்டவள் துரத்துவது சிலப்பதிகாரம் முதல் சுகி வரை பெண் புத்தி ஒன்றுதான் போல எண்ணிக்கொண்டான்!

சரி அப்ப நான் போறேன் என்று ரகு வெளிக்கிட

இல்லை நில்லுங்க ரகு  சொல்லுறன்.

எங்க வகுப்பில் படிக்கும் அரவிந்தன் என்னை விரும்புவதாக சொல்கின்றான் இரண்டு நாளைக்குள் நல்ல முடிவா சொல்லட்டாம் .நான் என்ன செய்ய ரகு ஓரே தொல்லையாக இருக்கு அவனால்!

(அரவிந்தன் பின்னாலில் மண்ணுக்காக மரணித்தவர்களில் கலந்துவிட்டான்)

ரகுவிற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக்கொண்டான் .இங்க பாருங்க சுகி இதுக்கு ஏன் அழுறீங்க.

 இப்ப புரியுதா லவ்டுடே போல ஒருத்தன் விரும்புவதாக சொல்வது உங்களுக்கு தொல்லையாக இருக்கு இல்ல. அதுமாதிரித்தானே நீங்களும் என்னை தொல்லை பண்ணுறீங்க.ஒரு தடவை சொல்வாயா என்னை உனக்குப் பிடிக்கும் என்று

ரகு அப்படி சொல்வான் என்று சுகி சற்றும் எதிர்பார்கவில்லை சர்வதேச தயவில் வந்த சமாதனம் கூட இனவாதிகளினால் கிழிக்கப்பட்ட தமிழர் நிலை போல அவள் அழுகை மேலும் அதிகரித்தது.


ஏன் ரகு  நான் உங்களை தொல்லை பண்றேனா ?பரவாயில்லை இனி நான் உங்களை தொல்லை பண்ணமாட்டன். என்னை மன்னிச்சிருங்க.என்று ரகுவின் முகத்தை பார்க்க சக்தி இல்லாதவளாக வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.
எதுவும் பேசாமல் ரகு அந்த இடத்தைவிட்டு வந்துவிட்டான்

அடுத்த இரண்டு நாட்களுக்கு சுகி ரகுவை கண்டாலும் காணாதது போல சென்றுவிடுவாள்.இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்ன தந்தை செல்வா போல அவளை நினைக்க ரகுவிற்கு கஸ்டமாகத்தான் இருந்தது.
ஆனால் மணமேடையில் அவளை இருத்தி அழகு பார்க அவன் தயாராக இல்லை.

இரண்டு மூன்று நாட்கள் சுகி பாடசாலைக்கும் வரவில்லை. ரகுவுக்கு ஏன் என்று அவளது தோழிகளிடம் கேட்கனும் போலவும் ,இருந்தது கேட்டால் ஏதும் நினைபார்களோ என்ற பயம் வேறு .

ஆனால் அவன் மனதில் ஏதோ ஒரு மூலையில் சுகி இருந்ததால் அவனால் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

இரண்டு மூன்று நாட்களாக ஒரே காச்சலாம் வைத்தியசாலை இருக்கின்றாள் என்று விபரம் சொன்னால் சுவாதி!

உள்ளத்தின் தேடல் தான் உஸ்ணம் என்பதா?
உனக்கும் என் மீது காதல் என்பதா?
உண்மை புரியுமா சகியே?
உழவன் மகன் நானடி.
உழுது வாழும் பூமியில்
உள்நாட்டு யுத்தம்
உழுத வயல் எல்லாம்
உருக்குலைந்து போனதடி.
ஊருக்குள் புத்தன் வடிவம்
உருப்படாத இனவாதம்
உனக்கு ஏன் இந்த பிடிவாதம்!
என் மீது ஏன் பிடிமானம்???
        (ரகுவின் நாட்குறிப்பில் இருந்து )


நகரில் இருந்த பிரபலமான தனியார் வைத்தியசாலை அது.காய்ச்சல் என்று அனுமதித்து இருக்கும் சுகியை  போய் பார்கவேண்டும் என்று எண்ணத்தின் வண்ணம் வானவில் கோலம் காட்டியது ரகுவிற்கு .


ஆனால் தனியாக தான் சென்று பார்பது நல்லது இல்லை அதனால் பல பிரச்சனைகள் வரும் ஒரு பெண் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது உறவைத் தவிர தனிய ஒருவன் போவது கண்டநாள் முதல்  பிரசன்னா போல வம்பில் முடியும் செயல் என்பதை அறிந்தவன் ரகு .


எனவே சுகியின் தோழிகளுடன் சேர்ந்து அவர்கள் கூட படிக்கும் பையனைப்போல ரகு வைத்தியசாலைக்கு போனான்.

ரகுவின் நல்ல நேரம் அங்கே சுகியின் குடும்பத்தினர் யாரும் இல்லை.இருந்தால் புலன் விசாரனையின் பின் நாளைய தீர்ப்புக்கள் தீ யாகும் இந்தப் பச்சைக்கிளிக்கு ஒரு திருட்டுப்பயலோ மாப்பிள்ளை ?கட்டப்பஞ்சாயத்து கூடினால் காணாமல் போகும் கனவுகள் மட்டும்மல்ல என் குடும்பம் என்ற கோபுரவாசலும் தான் !

தொடரும்...............!!

12 comments :

MANO நாஞ்சில் மனோ said...

ஏட்டுச்சுரக்காய் போல எல்லாம் வெற்றுக்கோஸம் தான் இந்தியா ஒளிர்கின்றது என்பது போல !//

செம நக்கல்ய்யா உமக்கு ஹா ஹா ஹா ஹா ரசிச்சேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

அரவிந்தனை நினைத்தால் கஷ்டமாக இருக்கு...

Yoga.S. said...

மாலை வணக்கம்,நேசன்!///காய்ச்சல் வந்திட்டுது.என்ன காய்ச்சல்?

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

இனிய மாலை வணக்கம் நேசன்.. யோகா அண்ணன்...

ஒரு மில்க் ரீ... ரின்மில்க் போட்டுக் கிடைக்குமோ?...

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

உணர்வுபூர்வமாகப் போகுது தொடர்...

டைரியில் இருந்த கவிதை அழகு..

செங்கோவி said...

நல்ல வேகம் தொடரில்...அருமை

தனிமரம் said...

ஏட்டுச்சுரக்காய் போல எல்லாம் வெற்றுக்கோஸம் தான் இந்தியா ஒளிர்கின்றது என்பது போல !//

செம நக்கல்ய்யா உமக்கு ஹா ஹா ஹா ஹா ரசிச்சேன்...

5 March 2013 13:34 //வாங்க மனோ அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ஹீஈஈஈ நக்கல் கேட்டு சிரித்துவிட்டீர்கள்தானே!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அரவிந்தனை நினைத்தால் கஷ்டமாக இருக்கு...

5 March 2013 19:59 //ம்ம் நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மாலை வணக்கம்,நேசன்!///காய்ச்சல் வந்திட்டுது.என்ன காய்ச்சல்?

6 March 2013 08:33 //வணக்கம் யோகா ஐயா! பொறுங்கோ காய்ச்சல் என்னவென்று சொல்லுகின்றேன்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இனிய மாலை வணக்கம் நேசன்.. யோகா அண்ணன்...

ஒரு மில்க் ரீ... ரின்மில்க் போட்டுக் கிடைக்குமோ?...

7 March 2013 08:50 //வணக்கம் அதிரா பால்க்கோப்பி கிடைக்கும் !

தனிமரம் said...

உணர்வுபூர்வமாகப் போகுது தொடர்...

டைரியில் இருந்த கவிதை அழகு..

7 March 2013 08:51 //நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நல்ல வேகம் தொடரில்...அருமை//நன்றி செங்கோவி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.