10 March 2013

சோளம் சூப் செய்வது எப்படி!!!!!!


ஞாயிறு விடுமுறை நாள் என்ன செய்யலாம் என்று பலர் சிந்திப்பீர்கள் ?? இணையத்தில் இருந்தது போதும் இல்லத்திலும் கொஞ்சம் வேலை பார்க்கலாம் தானே ?என்று அடுப்படியில் ஆத்துக்காரி வாங்கோ என்று கேட்டாள் .என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் உங்கள் செயலுக்கு ஒரு அடுப்படியில் அசத்தும் வழி சொல்லவா??? 

யாரங்கே பேசுக்கிட்டு இருக்கும் போது சோளக்காட்டு பொம்மை என்று திட்டுவது:))) 

சரி வாங்க சோளம் சூப் செய்வோம்:)))

தேவையான பொருட்கள்
சோளம்-500 கிராம் பச்சையாக
வெங்காயம்-2
தண்ணீர் -1 லீட்டர்
தடித்த பால் -1 லீட்டர்( crème fraîche)
அளவு -உப்பு
அளவு-மிளகுத்தூள்!

செய்முறை எப்படி சூப் செய்வது.??


 முதலில் ஒரு சட்டியில் சிறிதளவு விரும்பிய எண்ணெய்யை விட்டு சூடாக்கவும் .சூடகியபின் வெங்காயத்தைச் சேருங்கள் பதமாகி வரும் போது பச்சைசோளத்தையும் சேருங்கள் ,அத்தோடு அளவான உப்பு ,அளவான மிளகுதூள் சேர்த்து சிறிது நேரம் கொதிநிலையில் வையுங்கள்  .

அதன் பின் 5 நிமிடம் கழித்து தண்ணீர் சேர்த்த பின் நன்றாக் கொதிக்க விடுங்கள் 30 நிமிடம்!

 இந்த இடைப்பட்ட நேரத்தில் முத்தாரமோ நாடகம் ,முன்னம் பிரெஞ்சுக் காலணி மாலியில் நடக்கும் யுத்தம் பற்றிய செய்தியோ பார்த்துவிட்டு வந்தால்! 

கொதித்து இருக்கும் சோளம்.

 அதன் பின் தடித்த பாலை ஊத்திய பின் கிரைண்டரில் அடித்தால் சோளம் சூப் தயார் ..

இலகுவான தேவடியில் வடிக்கட்டினால் இந்த சோளம் பருப்புக்கள் வாயில் கடிபடாது . சூப் தயார்!

தனியா இருப்போர் இதை செய்து குளிர்சாத பெட்டியில் வைத்தால் குசியாக இணையத்தில் இருக்கும் நேரத்தில் தேவையான அளவை எடுத்து மின்சார சூடாக்கியில் வைத்து சூடாக்கி மீண்டும் மீண்டும் பருகலாம். !

மேலதில தேவை என்றால் தனிமரம் வலையை நாடுங்கள் இன்னொரு சூப் இங்கு கிடைக்கும் கட்டணம் இன்றி:)))))))
http://www.thanimaram.org/2013/02/blog-post_22.htm

8 comments :

Angel said...

முதல் கோப்பை சூப் எனக்கே :))) ..ரெசிபிக்கு நன்றி நேசன் ..

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!///அஞ்சுவுக்கு முதல் கப் சூப்!///சமையல் எல்லாம்(ஆத்துக்காரிக்கு!)சொல்லிக் குடுக்க துவங்கீட்டீங்கள்,வெல்டன்!!!ஹ!ஹ!ஹா!!!!!

இளமதி said...

நல்ல ஹெல்தியான சூப். செய்து பார்ப்போம். குறிப்பிற்கு மிக்க நன்றி நேசன்!

அம்பாளடியாள் said...

உடலுக்கு ஆரோக்கியம் தரவல்ல சோளம் சூப் !....
இப்பவே செய்திட வேண்டியதுதான் .அருமையான தகவலுக்கு மிக்க நன்றி சகோதரரே .

தனிமரம் said...

முதல் கோப்பை சூப் எனக்கே :))) ..ரெசிபிக்கு நன்றி நேசன் ..

10 March 2013 15:43 //வாங்க அஞ்சலின் அக்காள் நலமா ?நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!///அஞ்சுவுக்கு முதல் கப் சூப்!///சமையல் எல்லாம்(ஆத்துக்காரிக்கு!)சொல்லிக் குடுக்க துவங்கீட்டீங்கள்,வெல்டன்!!!ஹ!ஹ!ஹா!!!!!

11 March 2013 00:54 //வணக்கம் யோகா ஐயா!ஹீஹீ அங்கே படிப்பது இங்கே செய்வது!ஹீ நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்

தனிமரம் said...

நல்ல ஹெல்தியான சூப். செய்து பார்ப்போம். குறிப்பிற்கு மிக்க நன்றி நேசன்!

11 March 2013 09:08 //நன்றி இளமதி வருகைக்கும் கருத்துக்கும்

தனிமரம் said...

உடலுக்கு ஆரோக்கியம் தரவல்ல சோளம் சூப் !....
இப்பவே செய்திட வேண்டியதுதான் .அருமையான தகவலுக்கு மிக்க நன்றி சகோதரரே .

11 March 2013 10:47 //நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துக்கும்