11 March 2013

இதயத்தைக் குடிப்போம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


வணக்கம் உறவுகளே நலமா??
காதல் மாதம் கடந்தாலும் பாரிஸ் வானம் இன்னும் கடும்பனியைப் பொழிகின்றது.

காதலர்களின் இதயம் கரைவது போல இந்த நேரத்திலும் டூயட் பாடும் உள்ளங்கள் பலர் என்பது பார்க்கும் விழிகள் சொல்லும்  பாரிஸ் வீதிகளில் கவிதையாக:))))

இதயம் கேட்கும் சூடாக என்ன கிடைக்கும் குளிர் இருக்கும் போது கவலை ஏது ??கைவந்த கலை இருக்கு நளபாகம் செய்ய கவலை வேண்டாம் இதயம் போல ஒரு சூப் செய்வோமா??:)))

 தேவையான பொருட்கள்.
 சிவப்புத் தக்காளி-250கிராம்
பீட்ரூட் -             250
வெங்காயம்-2
தண்ணீர் -1 /2லீட்டர்
தடித்த பால் -1 /2லீட்டர்( crème fraîche)
அளவு -உப்பு
அளவு-மிளகுத்தூள்!
எப்படிச் செய்வது.

 முதலில் ஒரு சட்டியில் சிறிதளவு விரும்பிய எண்ணெய்யை விட்டு சூடாக்கவும்.

 சூடகியபின் வெங்காயத்தைச் சேருங்கள் பதமாகி வரும் போது சிவப்புத்தக்காளியையும் சேருங்கள் ,அத்தோடு அளவான உப்பு ,அளவான மிளகுத்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிநிலையில் வையுங்கள்  .

அதன் பின் 5 நிமிடம் கழித்து தண்ணீர் சேர்த்த பின் நன்றாக் கொதிக்க விடுங்கள் .15 நிமிடங்கள் !

.அதன் பின் பீட்ரூட் மற்றும் தடித்த பால் சேர்த்து மீண்டும் 15 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள்.

அடுப்பில் அதன் பாட்டுக்கு இதயம் சூப் கொதிக்கவிட்டு விட்டு இணையத்தில் இன்று யார் பதிவு போட்டார்கள் என்று ஒரு நோட்டம் விடுங்கள் 

.பிடிக்கலையா பனிச்சறுக்கல் விளையாட்டுக்குப் போகும் ஐரோப்பிய சுற்றுலாப்பிரியர்களின் சாகங்களைப் தொலைக்காட்சியில் பார்க்கலாம் சந்தோஸமாக.:)))))

இல்லை தனிமரம் போல பணியிலும் பாட்டுகேட்க முடியாத நிலை. வீடு வந்த கையோடு புரட்சிக்கு நேயர் நேரம் நிகழ்ச்சியில் நீங்களும் நேரடியாக இணைந்து கொள்ள முடியாவிட்டாலும்,
மின்னஞ்சல் மூலம் பாட்டுக் கேட்கலாம்.:)))).

 வாங்க இப்ப சூப் கொதித்து இருக்கும் இனி என்ன கிரண்டரில் நன்றாக அரைத்தால்  (மிர்ச்சியிலும் அரைக்க முடியும்) இதயம் போல பீட்ரூட் சூப் தயார் பருகி மகிழவேண்டியது தானே:)))



ஊசிக்குறிப்பு :2 
அசைவப் பிரியர்கள் என்றால் இந்த சூப் தயாரிக்கும் போது வெங்காயம் பதமாகி வரும் போது சிறிய அளவில் பிரெஞ்சு வெள்ளை /சிவப்பு வைன் சேருங்கள்:))) !


வைன் சேர்க்கும் போது தனிமரத்தின் உருகும் பிரெஞ்சுக்காதலி  தொடர் கதை ஞாபகம் வந்தால்  !


அடியேன் பொறுப்பல்ல:))))))!

-குறிப்பு- பாரிஸ் உணவகங்களில் இந்த பீட்ரூட் சூப்பை இதயம் சூப் என்று நக்கலாக சொல்வார்கள் என்பதையும் நினைவுள் கொள்க(14/2/.. அன்று)   நான் அறியேன் நக்கல்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

20 comments :

Seeni said...

sako....
eppadi irkeeka....!

soup vaikka sollureenga neram illai ...

engayaavathu vaangi thaan kudikkanum.....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
நலமா??

மகேந்திரன் said...

செய்முறையை கேட்டதுமே
அப்படியே சாப்பிடனும் போலதான் இருக்கிறது...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை. சாப்பிடத் தோன்றுகின்றது

திண்டுக்கல் தனபாலன் said...

இதயம் சூப் இதயத்தை தொட்டது...

இளமதி said...

ஆரோக்கிய பானம்! அற்புதமான குறிப்பு!! அழகான படங்கள்!!!
அனைத்துமே சிறப்பு நேசன்...

அம்பாளடியாள் said...

இப்படி ஒரு சூப்பை இன்றுதான் அறிக்றேன் (நான் நினைத்தேன்
உங்கள் இதயத்தை போட்டு சூப்பு காச்சிப் போட்டீர்களோ என்று :))) )
இனிக் காச்சிக் குடித்திட வேண்டியதுதான் .வாழ்த்துக்கள் மேலும்
மேலும் சமையல் குறிப்புகளும் தொடரட்டும் சகோதரா .

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ரெசிபி! உங்கள் பாணியில் கலக்கி கொடுத்தமைக்கு நன்றி!

Yoga.S. said...

மாலை வணக்கம்,நேசன்!///என்ன ஒரே சூப் மயமா இருக்கு?எப்படியோ இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்து விடுவீர்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

இதயம் கொள்ளைகொள்ளும் இதயம் சூப் அருமை...!

தனிமரம் said...

sako....
eppadi irkeeka....!//வாங்க சீனி அண்ணா நான் நலம் தாங்களும் நலம் தானே!

soup vaikka sollureenga neram illai ...
//ம்ம் அதுவும் நிஜம் தான்!ம்ம்
engayaavathu vaangi thaan kudikkanum.....
//ஹீ கிடைக்கும் சென்னையிலும் அண்ணாச்சி!நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!
11 March 2013 16:24

தனிமரம் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
நலமா??//நலம் மகி அண்ணா!நன்றி!

தனிமரம் said...

செய்முறையை கேட்டதுமே
அப்படியே சாப்பிடனும் போலதான் இருக்கிறது...

11 March 2013 17:00 //ம்ம் நன்றி மகி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

அருமை. சாப்பிடத் தோன்றுகின்றது//ம்ம் நன்றி கரந்தைஜெயக்குமார் வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

இதயம் சூப் இதயத்தை தொட்டது...

11 March 2013 18:22 //நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துக்கும்

தனிமரம் said...

ஆரோக்கிய பானம்! அற்புதமான குறிப்பு!! அழகான படங்கள்!!!
அனைத்துமே சிறப்பு நேசன்...//நன்றி இளமதி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

இப்படி ஒரு சூப்பை இன்றுதான் அறிக்றேன் (நான் நினைத்தேன்
உங்கள் இதயத்தை போட்டு சூப்பு காச்சிப் போட்டீர்களோ என்று :))) )//ஹீஈஈஈ!

இனிக் காச்சிக் குடித்திட வேண்டியதுதான் .வாழ்த்துக்கள் மேலும்
மேலும் சமையல் குறிப்புகளும் தொடரட்டும் சகோதரா .//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

12 March 2013 01:18

தனிமரம் said...

அருமையான ரெசிபி! உங்கள் பாணியில் கலக்கி கொடுத்தமைக்கு நன்றி!நன்றி சுரேஸ் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மாலை வணக்கம்,நேசன்!///என்ன ஒரே சூப் மயமா இருக்கு?எப்படியோ இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்து விடுவீர்கள்!

12 March 2013 09:27 //வணக்கம் ஐயா!ஹீ ஒரே குளிர் அதுதான் சூப் மஜம்!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.யோகா ஐயா!

தனிமரம் said...

இதயம் கொள்ளைகொள்ளும் இதயம் சூப் அருமை...!//நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.