17 March 2013

panna cotta செய்வது எப்படி!!!!!


வணக்கம் உறவுகளே !!!!!!

பாரிஸ் வானம் பனிமழைபொழிந்ததில் பாதைசாரிகள் எல்லாம் பணிக்கு செல்ல முடிதாத நிலையில் திண்டாடிய நிலையை பார்க்கும் போது வல்லரசு என்றாலும் வர்ணபகவான் மனசு வைத்தால் தான் மனிதர்கள் நடமாட முடியும்!


 வாகனங்கள் வீதியில் வலம் வரும் விடியல் வேலை என்றாலும் வீட்டில் சாப்பாட்டு பிடிக்கலை என்றால் !ஓட்டலில் சாப்பிட போவது என்றாலும் பனிமழை விடுகின்றது இல்லையே என்ற நிலையில்!!


இன்று ஒரு பால்க்கலவை செய்யும் முறையை பார்ப்போமா??

இப்ப எல்லாம் அதிகம் பால்க்கோப்பி குடித்தால் அதிகம் டென்சன் வந்திடுமாம் என்று யாரோ ஆலோசனை சென்னார்களாம் ஓசியில் என்று காதில் ஓதும் கட்டின மனைவியின் சொல்லிற்கும் மரியாதை கொடுக்கணும் தானே :)))


வாங்க பால்க்கலவை செய்வோம்!!!!

தேவையான பொருட்கள்.
பால் -500 மி.லீ
தடித்த பால் -500 மி.லீ
சீனி -100 கிராம்
தேசிக்காய் தோல் சீவி நறுகியது-25 கிராம்
ஒரேஞ்சு தோல் சீவி நறுக்கியது-25 கிராம்
ஜெலட்டின் -8  பேப்பர்.
அடுப்பு -
சட்டி -1
கப் -6
பச்சைத்தண்ணீர் -500 மி.லீட்டர்
  என்ன எல்லாம் தயாரா வாங்க  எப்படிச் செய்யலாம்:)))

 வாசலில் நிற்காமல் இணையத்தில் இருக்கமல் குசினிக்குள் வாங்க வலது காலை எடுத்து வைத்து:)))
அடுப்பு மின்சாரமா ?காஸ் முறையா, இல்லை இன்னும் பாட்டியின் மடியில் இருந்து பால்க்கோப்பி குடித்த விறகடுப்பா ?எது என்றாலும் அடுப்பு இருந்தால் போதும்.!


முதலில் பாலையும் தடித்த பாலையும் ஒன்றாக விட்டு சட்டியில் விட்டு சூடாக்குங்கள் அதற்கு முன் அடுப்பு வீரியத்துடன் எரிகின்றதா இல்லை சோம்பல் முறிப்பது போல எரிகின்றதா என்று ஒரு கண்ணோட்டம் விடுங்கள்.10 நிமிடங்கள் 
சூடாகும்.அந்த நேரத்தில் பச்சைத்தண்ணியில் ஜெலட்டின் பேப்பரை ஊறவிடுங்கள்.


அதன் பின் சட்டியில் இருக்கும் பால் கொதித்து வரும் போது சீனியையும் தேசிக்காயும் ஒரேஞ்சும் சேர்த்து பாலில் இட்டு நன்றாக கலக்குங்கள் . கலக்கும் போது பால் சட்டியில் இருந்து அடுப்பில் நுழைந்துவிடாமல் பாருங்கள். இல்லைபென்றால் அழகாய்யிருந்த குசினியை கோயம்மேடு சந்தை போல ஆக்கிவிட்டீங்க என்று சம்சாரம் சப்பாத்திக்கட்டையால் தட்டிச் சொன்னால் நான் பொறுப்பல்ல வழக்குப்போட்டால் நிவாரன நிதி தரமாடேன் இலவசம் என்று :))) .கருணாநிதி ஆட்சிபோல:)))

சூடாகி  பொங்கிவருகின்ற நிலையில் பாலினைய்  அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள்  

பின் பச்சைத்தண்ணியில் ஊறும் ஜெலட்டினை வெளியில் எடுத்து நல்லாக பிழியுங்கள் நீர் இல்லாமல் இருக்கும் வரை .அதன் பின் ஜெட்டினை பாலில் இட்டு ஒரு சில நிமிடம் கலக்குங்கள் .அவ்வளவும் 
தான் இனி கப் இல் ஊற்றுங்கள் .அதன் பின் குளிர்சாதன அறையில் 8 மணித்தியாளம் ஆறவிடுங்கள் .

அதிகாலை வேலைக்குப் போய் அந்தி மாலையில் வீடு வரும் போது ஓடிப்போய் குளிர்சாதன அறையில் இருக்கும் பால்க்கலவையை சுவையுங்கள் .

விரும்பினால் தேனும் கலந்து உண்டாள் உள்நாக்கு தித்திக்கும் பிடித்தவர்கள் கூட சுவைத்தால்!!



 இன்னும் சுவை தான் வாழ்வில் உருகமாட்டீர்கள் கேட்டுப்பாருங்கள் இந்த நங்கைக்கும் பிடித்த சுவையூட்டி என்று என் நண்பன் சொன்னான் ஒரு காலத்தில்:))))


 அட அப்படியே பார்த்துட்டுப்போனால் தகுமோ ??இரு பின்னூட்டம் போட்டுவிட்டுப் போறதுதானே ,பிடித்திருக்கா, பிடிக்கலையா???

9 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

இது நல்லாயிருக்கே... செய்து பார்ப்போம்... நன்றி...

இளமதி said...

ம்ஹும்... இது செய்யுறதுக்கு இவ்வளவு விஷயம் கவனிக்கணுமா...:)

நேசன் அருமையாக உங்க பாணியில அசத்தலா பதிவு பண்ணியிருக்கிறீங்க. ரசிச்சு ருசிச்சுப் படிச்சேன்.
நன்றி!

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!அருமையான விளக்கம்(நக்கலும் கூட)சரி,இது(செய்முறை) ஆம்பிளையளுக்குத் தானே?ஹ!ஹ!ஹா!!!

தனிமரம் said...

இது நல்லாயிருக்கே... செய்து பார்ப்போம்... நன்றி...//வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ம்ஹும்... இது செய்யுறதுக்கு இவ்வளவு விஷயம் கவனிக்கணுமா...:)

நேசன் அருமையாக உங்க பாணியில அசத்தலா பதிவு பண்ணியிருக்கிறீங்க. ரசிச்சு ருசிச்சுப் படிச்சேன்.
நன்றி!/ நன்றி இளமதி வருகைக்கும் கருத்துரைக்கும்.

19 March 2013 13:11 /

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!அருமையான விளக்கம்(நக்கலும் கூட)சரி,இது(செய்முறை) ஆம்பிளையளுக்குத் தானே?ஹ!ஹ!ஹா!!!

17 March 2013 23:59 //வணக்கம் யோகா ஐயா!ஹீஈஈஈஈஈஈஈஈ விரும்பியவர்களுக்கு!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

அருணா செல்வம் said...

இது படிப்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆமாம்... அது என்னது தேசிக்காய்..?
நீங்கள் தனி“மரம்“. எதையாவது செய்து சாப்பிடுங்கள். உங்கள் வீட்டுக்கு வரலாம் என்று நினைத்தேன்... இந்த மாதிரி எதையாவது கொடுத்து பழி வாங்கிவிட மாட்டீர்களே...

காற்றில் எந்தன் கீதம் said...

செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன் நேசன்... நல்லா வரவில்லை என்றால் என்ன செய்வதுன்னு தான் பார்க்கிறேன்...:)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

வலைச்சர தள இணைப்பு : சமையலில் நளபாகம் :)