30 April 2013

வரலாற்றில் வாழ்தல்.-ஒரு பார்வை.




இரு மொழிக்கொள்கைக்கு தீ இட்டு தனிச்சிங்களம் சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில்! தன் ஆசிரியர் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நிலையில் .தன் ஜீவனம் எப்படிச் சென்றது .அதன் போது தன் எழுத்துலகப் பயணம் எப்படி அமைந்தது என்ற அலசல்களுடன் பயணிக்கும் எஸ் பொவின் வரலாற்றில் வாழ்தல் நூலில் .



பண்டாரநாயக்காவின் தூரநோக்கற்ற அரசியல் செயல் .அதன் பின் அவருக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி .

அதன் பின்னான தூர்மரணம் என விரிந்து செல்லும் பார்வையில்.
 திருமதி பண்டாரநாயாக்காவின் அரசியல் பிரவேசம். அவரிடன் நேர் எதிர்மறை வாழ்வின் அந்தரங்கவிடயம் எல்லாம் இவரின் எழுத்தில் படிக்கும் போது அறிந்துகொள்ள முடியாமல்  இருட்டைப்பு செய்த அரியவிடயங்கள் எல்லாம் அக்குவேறு ஆணிவேரக அலசப்படுவது ஒருபுறம் !


அத்தோடு ஆழ்ந்த பல சிங்கள இதிகாசங்களின் அரசியல் விடயங்கள் எல்லாம் மீண்டும் ஞாபகத்தில் வருவது அதன் சிறப்பாகும் .


இந்நிலையில் தன் பதவி மாற்றங்கள் அதன் பின் தமிழக பயணம் அதனோடு ஏற்பட்ட இலக்கியத் தொடர்புகள் அதன் பின் ஏற்பட்ட அரசியல் நிலைகளினால்.

 ஆசிரியர் தொழில் கிடைத்து நையீரிய  நாட்டில் தன் வாழ்க்கை முறை .


அவர்களின் இலக்கியங்கள், மக்களின் வாழ்க்கை முறை ,நையீரிய நாட்டின் வளங்கள் எப்படி ஆதிக்க சக்திகளினால் சுரண்டப்பட்டது .நம்மவர்கள் தேசத்தவர்களின் சித்துவிளையாட்டுக்கள் எல்லாம் சுவாரசியமாக தொகுப்பில் பதிவு செய்து இருக்கின்றார் எஸ்.பொ .!


அவுஸ்ரேலியநாட்டில் தான் அகதி அந்தஸ்த்து கோரிய நிலைகளின் தர்க ரீதியான காரணிகள் .அதன் பின் தன் எழுத்துலகப்பார்வை ,தமிழக ஏடுகளின் ஜனரஞ்சகச் சுரண்டல் ,சிற்றிலக்கியத்தின் நிலை ,புத்தாயிரத்தில் புலம்பெயர் சந்ததியின் இலக்கிய தலைமைத்துவம் பற்றியதான கூற்றின் சர்ச்சைகள் !


அதன் முகாந்திரம் அடிப்படையான எடுகோல்கள் எல்லாம் தொட்டுச் செல்லும் இந்தப் பயணத்தில் .இதுவரை அறிந்துகொள்ளாத பலவிடயங்களும் தன் நாடுகான் அனுபவங்களையும் ,பல்வேறுபட்ட கலைஞர்களுடன் தன் இலக்கிய ஆளுமைகள்  நேர்காணலில் கிடைத்த சேறுபூசல்கள் ,சந்தனம் பூசல்கள் எல்லாம் என இதில் வாசிப்போருக்கு திறந்த புத்தகம் போல தன் பாணியில் சொல்லி இருக்கின்றார் எஸ்.பொன்னத்துரை நீங்களும் தேடிப்படியுங்கள் இந்த இரண்டு தொகுதிகளையும்.

இதன் முதல்பதிவு இங்கே--http://www.thanimaram.org/2013/04/blog-post_23.html.
-------------------------------------------------------
பாட்டாளிகள் எல்லோருக்கும் இந்தப்பாடல் .




12 comments :

Seeni said...

nalla arimukangal..!

MANO நாஞ்சில் மனோ said...

ஊருக்கு போகும்போது வாங்கலாம்னு இருக்கேன் இந்த புஸ்தகத்தை.

மகேந்திரன் said...

அருமையானதொரு நாவல் பற்றிய அறிமுகம் நேசன்....

பால கணேஷ் said...

நான் படிச்சதில்ல இந்தப் புத்தகத்தை. ஆனா படிக்க வேணுமென்ற ஆவல் நிறைய இருக்கு நேசன். இப்ப உங்களோட இந்த அறிமுகத்தைப் படிச்சதும் அவசியம் படிச்சிரணும்னு முடிவே பண்ணிட்டேன்ப்பா!

Unknown said...

காலை வணக்கம்,நேசன்!நலமா???////பகிர்வுக்கு நன்றி.கிடைத்தால் படிக்கலாம்,பார்ப்போம்!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

அரியதோர் ஆக்கம்! அறிந்து மகிழ்ந்தேன்!
உரியதோர் போரை உணா்ந்து

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

தனிமரம் said...

.
nalla arimukangal..!//வாங்க சீனி முதல்ப்பால்க்கோப்பி குடியுங்கோ!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஊருக்கு போகும்போது வாங்கலாம்னு இருக்கேன் இந்த புஸ்தகத்தை//ம்ம் வாங்குங்கோ அண்ணாச்சி ஆறுதலாக படியுங்கோ பல கருத்துக்கள் பொதிந்து கிடைக்குது!ம்ம் நன்றி அண்ணாச்சி மனோ வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

அருமையானதொரு நாவல் பற்றிய அறிமுகம் நேசன்..//நன்றி மகி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நான் படிச்சதில்ல இந்தப் புத்தகத்தை. ஆனா படிக்க வேணுமென்ற ஆவல் நிறைய இருக்கு நேசன். இப்ப உங்களோட இந்த அறிமுகத்தைப் படிச்சதும் அவசியம் படிச்சிரணும்னு முடிவே பண்ணிட்டேன்ப்பா!

30 April 2013 18:25 //நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமா???////பகிர்வுக்கு நன்றி.கிடைத்தால் படிக்கலாம்,பார்ப்போம்!

30 April 2013 23:45 //வணக்கம் யோகா ஐயா நாம் நலம்!ம்ம்!படியுங்கோ!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம்!

அரியதோர் ஆக்கம்! அறிந்து மகிழ்ந்தேன்!
உரியதோர் போரை உணா்ந்து

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு//நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்.