.
///////////
மாயா நீ தான் என்னை!
மலையகத்தின் வீதியில்
மடுவுக்கும் மலைக்கும் இடையில்
மாப்பிள்ளை தகுதி கேட்டாய் ??
மழை பொய்த அன்நாளை
மறக்கவில்லை.
மலையும் சரியும்
மலையகத்தில் இயற்கை அழிவு இதயம்
மீரியபெத போல
மனதில் இன்னும் அடைமழை!
மனவேதனை போல நீ துப்பிய
மழைதானோ வார்தையாக
மலையக வீதியில்
மாடிவீட்டில் இருந்து
மாமனார் என்ற தகுதி
மடிப்பிச்சை கேட்க வைத்த கதை!
மாமலை போல ஒரு மாதாதேவி
மருகன் இவன் மடியில் தாங்கிய
மழலை மடுவத்தில்
மார்பில் தாங்கிய கதை எல்லாம்
மலையக பூமியில்
மான்புற்ற ஆசிரியர்கள்
மலரும் அச்சில் எழுதவில்லை!!
மடிந்தாலும் கவ்வாத்து
மருகறை என்று
மாயா நான் எழுதினேன் உன்னால்!
மா என் முகவரி தமிழில் அறிவாய்!
மா- குதிரை .நான் மா போல மரம்!
மலரும் பூக்கும் என்றாய் மாயா!
மலர் மலையகத்தில் இடப்பெயர்வு
மழையாக வந்த சேதி சொல்லாமல் விட்டாய்!
மடிக்கணனி உன்னிடம் அப்போது இல்லை!
மழைக்கும் போர்க்கும் சாக்கு
மரணத்திலும் சாக்கு சொல்லுவோம்
மலையக தலைவர் போல!
http://www.newstamilwin.com/show-RUmszBTZKXgq0.html
மாத்தையா வேலைக்கு வரவில்லை என்று
மனதில் வெட்கி மாமா வடக்கு
மாமி தெற்கு என்று மழை போல
மச்சாள் பொது ஆசையில். ஆனாலும்
மானம் என்ற மழை இன்னும்
மனசில் தூறுது மாயா.
மரத்திலும் ஆசை மடியில் உன் போல அழகாய்
மகன் அவனுக்கு நீ மாமி போல இருக்கலாம் மாயா!
மரணம் உனக்கு மண் சரிவு எனும் போர்வையிலா
மயக்க மான இந்திரன் போல அதிகாலையில் வரணும் ??
மன்னிக்கவும் மழையே மீண்டும்
மலைகத்தில் இப்படி மாயா போல வந்து
மனதில் சாரல் வீசாதே !
மலைகத்தில் புலி என்று மாமியார் வீட்டில்
மாமா பொலிஸ் தந்த பரிசு
மச்சாள் முத்தம் போல இனிப்பாகாகவோ
மன்சில் நீ மலையகம் அறிவாயோ??
மடையா இலக்கிய மேதை மோதிரக்குட்டோ
மீசையில் போடவில்லை!
மழித்துவிட்டேன் நான் பறக்கும் பூச்சி
மானம் இழந்த மல்லுவேட்டி மைனர்!!
மச்சாள் இனையம்
மடிக்கண்னி என்று மார்பிள் தூக்கவில்லை
மாமான் பாஸ்வேட் இன்னும்
மாயாதான்!
மாயா உனக்காக இன்னும்
மலர் போல தூவும் ஆசையில்!
மாலை நேரம் இங்கிலாந்து
மலைச்சாரலில்
மனதோடு மழைக்காலம்.
மலையோரம் பாடல் கேட்கும்
மந்தி!-குரங்கு .மாயா நான்!ம்ம்ம்ம்
தொடரும் மாயா......
//
மாத்தையா-அதிகாரி சிங்கள மொழியில்
மடையா-முட்டாள்
கவ்வாத்து-தேயிலைச்செடியின் கீழ்ப்பகுதி.
மடுவம்-பிள்ளை பராமரிக்கும் இடம்.
9 comments :
மயங்கினேன்...!
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
மயங்கினேன்..//வாங்க தனபாலன் சார் நலமா ?ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதல் வருகைக்கு பரிசாக.
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யாழ்பாவண்ணன் ஐயா.
மோனையின் முடிச்சுகள் அவிழ
மோகனப் புன்னகை சிந்தும் வரிகள்!!
பகிர்விற்கு நன்றி !
தொடர்கிறேன்!!!
வணக்கம்
வரிக்கு வரி சொல்லிய விதம் நன்றாக உள்ளது.. மனதை அழவைத்து விட்டது..
பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மாயா கவிதை மாயோன் போல் மனதை மயக்கியது....சிறிது வருத்தமும் பட வைத்தது. அழகிய வரிகள்...அதான் ஊமைக்கனவுகள் விஜு ஆசானே சொல்லிவிட்டாரே பின்னர் என்ன?!!!!
வணக்கம்
வரிக்கு வரி சொல்லிய விதம் நன்றாக உள்ளது.. மனதை அழவைத்து விட்டது..
பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.
மாயா கவிதை மாயோன் போல் மனதை மயக்கியது....சிறிது வருத்தமும் பட வைத்தது. அழகிய வரிகள்...அதான் ஊமைக்கனவுகள் விஜு ஆசானே சொல்லிவிட்டாரே பின்னர் என்ன?!!!!// நன்றி துளசிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment