12 November 2014

கையறுநிலை!! சிறு கதை போல.




 கார்காலத்தின்  வருகைக்கு கட்டியம் கூறுவது போல பாரிஸ் வானமும் மழையைப்பொழியும் காலை நேரத்தில் !

பாரிசின் புறநகர்ப் பகுதியின் ரயில் நிலையத்தில் காத்து இருந்தான் அகிலன் பாரிஸ் நகரைச்சென்றடையஇன்னும் சில் நிமிடத்தில் யாழ்தேவி ரயில் போல sncf வந்துவிடும் என்பதை உயரத்தில் பூட்டியிருந்த தொலைக்காட்சியில் சினிமா நடிகையைப்பார்த்து ஜொல்லுவிடும் ரசிகன் போல ஒரு துள்ளல் குறிப்பு காட்டியது! 



அகிலனின் சிந்தனை எல்லாம் அடுத்தவாரம் என்ன செய்வது என்ற தேர்தலுக்கு முகம் கொடுக்கும் முன்னால் அமைச்சர் போல அவன்நிலை!


 வெளிநாட்டு வாழ்க்கையும் ஒரு சிரிப்பு மேடைதான் காசுமரத்தின் கீழ் இருக்கும் ஞானி போலவும் கைபேசி சிணுங்களில் இவ்வளவு கோடி ரூபா வை யாழில் வியாபாரம் செய்ய, கொழும்பில் மாடி வீடு வாங்க என்ற அதட்டல் தொனியின் உறவுகள் எல்லாம் அறிவது இல்லை அதிகாலையில் கோப்பி குடிக்கவும் நேரம் இன்றி எழும்பி ஓடும் காகம் போன்ற புலம்பெயர் ஒப்பாரி வாழ்வை.ஈழயுத்தத்தில் இருந்து உயிர் தப்பிக்க புலம்பெயர் தேசம் பாரிசில் அடைக்கலம் தேடிய பலரில் ஆயிரம் பெயர் சொல்லி ஒரு காலியாணம் போலத்தான் அகிலனின் நிலையும். 



நேற்று வந்தது போல இருந்தாலும் பத்து வருடங்கள் ஓடிவிட்டது அகதி என்ற முத்திரையைப் போர்வையைப் போல முகம் தேடிப்போக்கும் சம்பிரதாய சட்டத்துக்குள் புகுந்து கொள்வதுக்குள் தலையில் இருந்து முடியும் உதிர்ந்து விட்டது

 . வந்த இடத்தில் நானும் சண்டியர்தான் சண்டை வரும் வரை சட்டை கிழியும் வரை போல சமையல் தளத்தில் பாதுகாப்பு சோதனை அதிகாரிகள் படை சூழ வருமானவரித்துறையும் சுகாதரத்துறையும் சேர்ந்து வந்து தேடுதல் செய்யும் நிலை ஏற்படாத காலம் வரையும் சமையல்க்காரன் வேலைகிடைத்ததும் .,பிரபல்ய நடிகரிடம் சினிமாவுக்கு கதை சொல்ல அலைந்த புதிய இயக்குணர் போல அகதி விசாவுக்கு அலைந்ததும் தனிக்கதை.



 இது எல்லாம் யாரும் பேசமாட்டார்கள் நல்ல கதையில்லாது தோற்ற சினிமா கலைப்படம் போல அவனுக்கு விசா கையில் இருக்கும் கொழுப்பு ஆளுங்கட்சி போல அடாவடியில் துள்ளுகின்றான் என்றும் திமிர் என்றும் காதில் ஓதுவோர் எல்லாம். பள்ளிக்கூட காதல் படலை வரை என்பது போல அல்லாமல் காலம் பூராகவும் கைபிடித்து கலங்கரை விளக்கம் போல ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து அழகு பார்க்க அவன் விரும்பியவள் கூட விசாவுக்குகாத்தானோ தன்னை அகிலன் விரும்புவதாக எண்ணி அகிலனின் நிஜமான நேசிப்பை ஏதோ அரசியலில் இறங்க தன் ரசிகர்களை உசுப்பியே விசில் ஊதும் நடிகர் போல எண்ணி சந்தனம் பூச வேண்டியவளே சாணியை அரிதாரம் போல பூசி அயல்நாடாம் இங்கிலாந்து ராணிக்கு இன்னொரு மாளிகைகை கட்டும் கனவுத்திட்டத்துக்கு இஞ்சினியர் இவள்தான் என்பது போல உயர்ப்படிப்பு என்று இடம்பெயர்ந்துவிட்டாள் . 



அகிலன் தேவதாஸ் போல சோகத்தில் தாடி வளர்த்து இருந்தாலும் கனவே கலையாதே பட முரளி போல பையத்தியமாக இல்லாமல் இன்னொருத்தியை தாய்த்தேசத்தில் இருகரம் நீட்டி ஈழத்தில் இருந்து விசாவோடு இல்லத்தரசியாக இங்கு வரவழைத்ததும் ,வாரிசு இரண்டுக்கு தந்தை ஆனதும் இடையில் சில பக்கம் போல .கடந்த காலம்!


 இப்போது பாரிசிலும் வேலையில்லாத்திண்டாட்டம் இலங்கையில் திறமையான எதிர்க்கட்சி இல்லாத நிலைபோல அதிகமாகிக்கொண்டு இருக்கும் நிலையில் தான் அடுத்த வாரம் முதல் பணிபுரியும் சமையல்க் கடைக்கும் மூடுவிழா என்றும் இனியும் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கமுடியாது என்ற முதலாளியின் பேச்சைக்கேட்டதில் இருந்து அகிலனின் ஒரே சிந்தனை இனி என்ன செய்வது??


 அரசின் நிதி ஊதவியை நாடவேண்டும் , இன்னொரு வேலையைத் தேடும் வரை அதுக்குள் அரச கேட்கும் பத்திரங்களின் கணக்குமட்டும் குறைவில்லை வருமானச்செலவு போல . வீட்டுவாடகை,வங்கிக்கடன் என்று அகிலனின் வங்கிக்கணக்கில் செலவுப்பக்கம் எப்போதும் சினிமா நடிகரின் சம்பளம் போல உயர்ந்தே இருக்கும்.

இங்கு பலரின் இரட்டைவேலையின் உள்ரகசியத்தில் உபரிச்செலவுகள் வெளியில். தெரியாத உள்நாட்டு அரசியல் விவகாரம். இனி என்ன செய்யலாம் ??

இது தான் அவனின் மனஓசை . கார்த்திகையும் வந்துவிட்டாள் ஐய்யப்பன் விரதம் தொடங்கிவிடும் அகிலனும் ஆன்மீகயாத்திரை என்று இந்தியா செல்பவன் இந்த விரதம் இருக்க முடியாதவர்கள் இவணைப் பார்த்து சீமான் அரசியல் போல உண்டியல் குலுக்குவது எல்லாம் நடைமுறையில் பார்த்த்துச் சலித்த கூத்தணி வெட்டுத்தோட்டாக்கள் .

 இதுவரை கையில் காசு சேர்க்கும் எண்ணம் வந்ததில்லை இப்போது தான் நீதி தேவதை நல்ல தீர்ப்பு எழுத விழித்தது போல மனசும் பணத்தை சேமிக்கவில்லையே என்ற ஆதங்கம் வருகின்றது.இதைத்தான் முன்னோர்கள் நாற்பதில் நாய்க்குணம் என்றார்களோ?? 

எதோ என் கடவுளே "நான் யாருக்கும் தீங்கு செய்ய்வில்லை எப்படியும் இந்த வருடமும் யாத்திரை போகும் வழியைக்காட்டு.

" எப்படியும் அடுத்த மாதம் என் முதலாளி மொத்தமாக தருவதாக எழுத்தில் தந்த கடித்தில் சேவைக்கால ஊதியமும் சம்பளமும் சேர்த்தால் எப்படியும் வங்கிக்கடன்7500 ஈரோ கட்டிவிடலாம் மீண்டும் முதல்வர் ஆவேன் என்பது போல என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன் . அதில் எந்த தடங்களும் வந்துவிடக்கூடாது என்ற நினைப்பிள் இருந்தவனுக்கு கைபேசியில் இடியாக வந்த செய்தி இதயம் நின்றுவிடும் போல இருந்தது.


 . தாயார் உடல்நலகுறைவாகி ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருப்பதாகவும், வைத்தியர்கள் இனி கடவுள் சித்தம் என்று கைவிட்டுவிட்டார்கள் தங்களின் எதிர்ப்பார்ப்பு சில லட்சம் கட்டிய பின் மருந்து மாத்திரை இந்த வசதியறைச் செலவு என்றும் இனி என்னிடம் பணம் இல்லை இறுதிக்காரியங்கள் எல்லாம் உன் பொறுப்பு என்று மூத்த அண்ணண் ஊரில் இருந்து எடுத்த தொலைபேசி அழைப்பிள் சொல்லிய விடயங்கள் கேட்ட நிலையில் அகிலனின் இதயமும் துடிக்க நீண்ட நேரம் எடுத்தது . .அந்த நேர இடைவெளியில் எங்கோ இருந்து வந்த ஒரு வேற்றுநாட்டவன் அகிலனின் கையில் இருந்த கைபேசியையும் உருவிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான். அவன் காதில் விழுந்த்து எல்லாம் காசு எப்ப அனுப்புவாய் என்ற  அண்ணாவின் வார்த்தை மட்டுமே .கட்வுளே கருணை காட்டு என்று கையறுநிலையில் ரயிலில்  சாய்ந்தான் அகிலன். 

மறுநாள் நாளிதழலில்  அகிலனின் புகைப்படம் மரணச்செய்தியாக நண்பர்களினால் வெளீயீடு செய்யப்பட்டிருந்தது.




யாவும் கற்பனை .

7 comments :

ஆத்மா said...

வெளிநாட்டு வாழ்க்கை உண்மையிலேயே சிரமமானதுதான். தாய் தேசத்தில் இருக்கும் உறவுகள் இதை புரிந்து நடந்து கொண்டால் நலவே

kingraj said...

நன்றாக உள்ளது.

தனிமரம் said...

வெளிநாட்டு வாழ்க்கை உண்மையிலேயே சிரமமானதுதான். தாய் தேசத்தில் இருக்கும் உறவுகள் இதை புரிந்து நடந்து கொண்டால் நலவே// வாங்க ஆத்மா நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட காலத்தின் பின் வலையில் சந்திப்பதில் சந்தோஸம் முதல் வருகைக்கு பால்க்கோப்பி பரிசாக ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றாக உள்ளது.//நன்றி ராஜ் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

Yoga.S. said...

ம்............யதார்த்தம் சொல்லிய வெளி நாட்டு வாழ்வு.(ஊரில்)நம்மவர்க்கு இவையெல்லாம்,"வெறும்" கதைகள்!

தனிமரம் said...

ம்............யதார்த்தம் சொல்லிய வெளி நாட்டு வாழ்வு.(ஊரில்)நம்மவர்க்கு இவையெல்லாம்,"வெறும்" கதைகள்!//ம்ம் உண்மைதான் யோகா ஐயா! நலம் தானே நீங்கள்§ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா!

Thulasidharan V Thillaiakathu said...

மனம் மிகவும் வேதனிக்கின்றது! மிக நல்ல கதை! கனமான கதை!