வலையுறவுகளே! மீண்டும் தனிமரம் ஒரு தொடர்கதையுடன் உங்களை நாடி வலையுலகில் வருகின்றேன் . அடுத்த பகிர்வு முதல் !
காதலும்; உயிர் இழப்பும் கடந்து; நடைப்பிணமாக வாழும் பலரின் இயல்புக் கண்ணீர்க்கதைகள் ஈழ அகதி ஏட்டில் எழுதாத பக்கங்கள் ஆயிரம் எனலாம் .!
அச்சிலும், இணையத்திலும்., இலங்கையா?, சிலோனா?, ஈழமா?? என்ற கோள்வி என்றாலும் ;எல்லாராலும் ஏனோ பெருமூச்சை தன்னிலையில் விட்டவண்ணம் வானம் பார்த்த ஈழப்பூமியில் ஒரு விடியல் வரும் என்று காத்து இருந்து மனம் நொந்து வாழ்வை இழந்து சிறைப்பறவையான கதைகள் இனியும் என்றாவது வருமா ??
என்று ஏங்கும் இலக்கிய உலகு இன்னும் இருக்கின்றது என்றால்! இனி வரும் காலம் இந்த பூமியில் இருந்து பல கதைகள் ஆட்சி செய்யும் என்ற மூத்தவர் அமரர் எஸ்பொ சொல்லிய வார்த்தைகள் இன்னும் நிழல் போல என்றாலும் ஈழத்தின் கதைகள் எல்லாம் ஊறுகாய் அல்ல தமிழ்நாட்டில் புத்தகம் விக்க!
எது .எப்படியோ !சாமானிய வழிப்போக்கன் தனிமரமும் கடந்த ஆண்டு இந்தியாவில் சந்தித்த ஒரு நம்மவரின் இதய வீணையை பாரிஸ் ஊடாக தொடர்கதையாக உங்களிடம் பகிர்கின்றேன்.
படிக்காத என்னையும் நேசிக்கும் உங்களிடம் என் கதைகளும்!
யாரோ சிலரின் முகம் காட்டமுடியாத மனிதர்களின் கதையை பக்கவாத்திய மேளம்போல இருந்து எழுத்தாணி பிடிக்கின்றேன் !
இவரும் ஒரு அருமையான சிந்தனைவாதி ராஜ்சேகர்https://www.facebook.com/rajasankar?fref=nf இந்தாண்டு சென்னையில் சந்தித்தேன்.7/1/15 மாலை!
இந்தத் தொடரும் ஒரு முகம் தேடி அலையும் ஒரு ஈழத்து உறவுகள் சிலரினை பெயர் மாற்றி உங்களுடன் பேசவிடுகின்றேன்.
.இன்றைய நவீன வரவான முகநூலும். அத்துடன் வரும் இலவச வசதியும் வைப்பர். வாட்ச்சப் . இவர்களின் நிஜத்தை எப்படி எல்லாம் உணர்வில் நேரில் சந்திக்கவும், சிந்திக்கவும் சிலரை எப்படி வைத்து என்பதை இனிவரும் நாட்கள் தனிமரம் வலையில் படிக்கலாம்!
யாரையும் மனசஞ்சலம் கொள்ளவைக்கும் எண்ணம் தனிமரம் வழிப்போக்கன் நேசனுக்கில்லை !என்றாலும் இந்த கேள்விகள் சிலரை சிந்திக்கவைத்தால்! என் பெறுமதிமிக்க இணையத்தில் தனிமரம் செலவிடும் ஓய்வும் ஒரு மூச்சு வாங்குவதே அன்றே!!!!வேறல்ல!!!
வழமை போல இந்தத் தொடருக்கும் ,நேசனுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இந்த முகப்புப் படம் நேசனின் கற்பனையில் தோன்றிய ஒன்று .பலநாள் கற்பனை நினைப்பில் நிஜவுலக ரயில் பயத்தின் ஊடே பாரிஸ் ரயிலில் தீட்டிய ஓவியம் மட்டுமே என்னிடம் !
என் இரண்டாவது ஐபோன் களவாடப்பட்டது நிஜம் !ஹான்சிஹா மேல் சத்தியம்[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
ஈரோ !பெறுமதியைவிட அதில் இருக்கும் என் எழுத்து ஆர்வ உணர்வு தனிக்கதை நிஜத்தில் தமிழ் மொழி கடந்துஇந்திய நட்பு போல தனிமரத்தின் சாகோதர மொழி சிங்கள நட்புக்கள் பலரின் தொலைபேசி இலக்கம் ,மின்னஞ்சல், எல்லாம் போனதால் பலரை இவ்வாண்டு இந்தியா போகமுன் தொடர்பு கொள்ளவில்லை!![[[[[[[[[[[!அவர்கள் பலரும் ஐய்யப்பன் வழியில் சபரிமலைக்கு வருவது தனிக்கதை!
என்றாலும்! இனி தொடர் என் வீட்டுக்கணனியில் இருந்து வெளியாகும் முதல் தொடர் இது !
என்பதால் முன்னர் போல வேகமாக தனிமரம் வலையில் தொடர் வராது என்பதையும் .இனியும் தனிமரம் நேசன் தொடர் எழுதுவேன் என்பதையும். என்னைச்சீண்டி என்மீது சந்தனம் பூசிய பண்டிதர்கள் சிலருக்கு தனிமரம் நேசன் இன்னும் வெட்டியுடன் வலையில் தொடர்வேன் என்பதை வலையுலக அவைக்கு சொல்லிய வண்ணம் !
பிடித்த பாடல் சேர்த்த வண்ணம் இடையில் கவிதையும் தீட்டிய முகம் காண ஆசையுடன்!
இவன் படிக்காத தனிமரம்
6 வது ஆண்டில் இன்னும் தனிமரம் வலையில் ஈ ஓட்டும் நேசன்!
ஏப்பா பக்கத்து இலையில் உள்குத்து போட்ட யாரும் வலையில் இன்று இல்லையே ???,
[[[[
வலையில் யாரையும் நோகடிக்காது நமக்கு தோன்றுவதை எழுதுவோம் !எழுப்பிழை அவசர உலகில் சிறுதவறு அதை வாசிப்போர் துணிந்து பதிவின் பின்னூட்டத்தில் சொல்லி பதிவை அழகாக்கலாமே ??ஏன் உள்குத்து??
இது பணம் ஈட்டும் தொழில் அல்லத்தானே!இன்றுவரை தனிமரம் வலையில் ஒரு ஈரோகூட பெறவில்லை ஆனால் என் தனிமரம்.org முகவரிக்கு வருடம் தோறும் ஈரோ 15 செலுத்துவது ஆத்ம திருப்திக்கு அன்றி சிலரின் கொக்கரிப்பு தனிமரம் பைட்ஸ் இல்லை தனிமரம் இப்படித்தான்!நாற்றம் கொல்ல தனிமரம் ஏதிலி ஈழத்தில் என்றாலும் பாரிசில் வேலையில்லாமல் இணையத்தில் வெட்டி பேசும் அடிப்படித்தேவை அல்லாத பாரிசில் இனிதே எல்லாத்தேவையும் அடிப்படையில் கொண்ட ஒரு ஈழத்தவன்!
வலையுலகும் ஒரு தரிப்பிடம்தான்! வருவோம்! பின் ஹிட்சி கிடைக்காவிட்டால் போவோம் ! இருக்கும் காலத்தில் ஹிட்சு அன்றி நட்பை சேமிப்போம்!
தனிமரம் பலரை இன்றும் நிஜத்துடன் பார்க்கின்றேன் துணிந்து! மதவாதி .மொழிவாதி. இனவாதி அல்ல!
என்றும் நட்புடன்
தனிமரம் நேசன்
பாரிஸ்§
தொடர் பிடித்தால் கருத்தும் திரட்டியில் வாங்கும் இடுவது உங்கள் எண்ணம் எழுதுவது என் ஆசை அதில் குத்து குடையுது என்றால் நீங்களும் வலையில் பதிவு எழுத தின்ண்டுக்கல் தனபாலன் சாரிடம் அடிப்படை படியுங்கோ! இனித்தொடர்!
உங்களிடம் விரைந்து!!!முகம் காண ஆசையுடன்[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
15 comments :
இனிய அறிமுகம்
தங்கள் எண்ணம் போல்
தங்கள் கதை வண்ணம் காண
எல்லோரையும் போல
நானும் காத்திருக்கிறேன்!
சென்னைக்கு வந்து என்னை அழைக்கவே இல்லை?
எழுதுங்கள் நேசன் என்னென்ன பயங்கரம் இருக்கப்போகிறதோ என்ற அச்சமிருந்தாலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எழுத்து ஆருதல்தானே
எதுவென்றாலும் சில நொடிகள் மறந்து விடுங்கள்... தொடரை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...
// நட்பை சேமிப்போம்... // இதை விட என்ன வேண்டும்...?
எழுதுங்கள் நண்பரே!
காத்திருக்கிறோம்....
எழுதுங்கள் நண்பரே
முகம் காண ஆசையுடன்
ஆர்வமுடன்
காத்திருக்கிறேன்
தம +1
word verification ஐ
நீக்கினால் நலமாக இருக்கும் நண்பரே
இனிய அறிமுகம்
தங்கள் எண்ணம் போல்
தங்கள் கதை வண்ணம் காண
எல்லோரையும் போல
நானும் காத்திருக்கிறேன்!// வாங்க யாழ்பாவண்ணன் ஐயா முதல் வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும் நன்றிகள்
சென்னைக்கு வந்து என்னை அழைக்கவே இல்லை?// மன்னிக்கவும் பாஸ் குழுவோடு வந்த படியால் போதிய நேரமின்மை நிச்சயம் விரைவில் சென்னையில் சந்திப்போம் கார்ர்த்திக்.
எழுதுங்கள் நேசன் என்னென்ன பயங்கரம் இருக்கப்போகிறதோ என்ற அச்சமிருந்தாலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எழுத்து ஆருதல்தானே// நிச்சயம் எழுத்து ஒரு சுகமே முரளி அண்ணாச்சி நன்றி வருகைக்கும் ஊக்கிவிப்புக்கும்
எதுவென்றாலும் சில நொடிகள் மறந்து விடுங்கள்... தொடரை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...
// நட்பை சேமிப்போம்... // இதை விட என்ன வேண்டும்...?//உண்மைதான் தனபாலன் சார் நட்புத்தான் உலகமே! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்
எழுதுங்கள் நண்பரே!//நன்றி புலவர் ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்.
காத்திருக்கிறோம்....// நன்றி கிங்ராஜ் வருகைக்கும் கருத்துரைக்கும்.
எழுதுங்கள் நண்பரே
முகம் காண ஆசையுடன்
ஆர்வமுடன்
காத்திருக்கிறேன்// நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்
தம +1
word verification ஐ
நீக்கினால் நலமாக இருக்கும் நண்பரே// இது கூகில் ஆண்டவரின் சித்து வேலை ஐயா நான் அறியேன்.
தாமதமாகிட்டேன்ன் வெல்கம் நேசன்.. என்னாது ஐ ஃபோன் களாவு போயிட்டுதோ அவ்வ்வ்வ்வ் எப்பூடி? கவனமில்லாமல் இருந்திட்டீங்களோ?
Post a Comment