ஈழம் எனும் பெயரில்
ஈன்ற நாட்டில்
இவனும் கேட்டேன் ஒலி
இன்றும் அது எந்த தேசம்
ஈரானில் வேலை தேடிய பின்
ஈழம் விட்டு ஏதிலியாகி
ஈன்ற தந்தை
ஈபோல பறந்த பின்னும்
இன்னும் அறியேன்!
ஈ போல ஈழத்து அகதி!
ஈ போல உடலை உறிஞ்சும்
ஈனப்பிறவி போல இவரும்
இத்துப்போன ஈழகோசம்
இறைத்து ஈன உயிர் வளத்தார்
ஈழத்தில் இவரும் தேவதூதன் போல
ஈ போல மொய்த்தோம்
இன்று இவர் உயிருடன் இருக்கின்றார் என்று
இன்னும் அறியேன்!!
ஈன்ற உறவுகள் இடுகாடு போல
அடுக்கடுக்காய் போன போதும்
ஈழநண்பன் பேச்சில்
ஈழம் தருவேன் வீட்டில்
இரைந்து நின்ற இந்த நாய்
இன்னும் இருக்கா அரசியல் நதியில்!
ஈ இவரும் பாண்டியனாமே??,
இவர் போல இனியும்
வரும் ஈழநாய்களுக்கு எல்லாம்
இனியும் எடுப்போம் ஒரு
ஈக்குமாறு போல இதை!
இன்னும் கொலைஞர் முதல்
ஈழத்தாய் என்றும் ஈழம்
விக்கும் இவன் சீமான்
இங்கு காவடி
இழுதாலும் இன்னும்
இரந்து கொடுப்போம்
ஈரோவில்!
இன்னும் பல கதை எழுத
ஈழத்தில் இவர் போல
சுதந்திர தினம் இன்னும்
இலித்துக்கொண்டு
ஈழம் பேசும் வியாபாரிகள்
இனியும் வரலாம்!!!
///
ஈழத்தில் போர் ஓய்ந்து
இன்னும்நாம் வாழ வேண்டும்
இனியும் வேண்டாம் போர்!
......
ஈன்ற நாட்டில்
இவனும் கேட்டேன் ஒலி
இன்றும் அது எந்த தேசம்
ஈரானில் வேலை தேடிய பின்
ஈழம் விட்டு ஏதிலியாகி
ஈன்ற தந்தை
ஈபோல பறந்த பின்னும்
இன்னும் அறியேன்!
ஈ போல ஈழத்து அகதி!
ஈ போல உடலை உறிஞ்சும்
ஈனப்பிறவி போல இவரும்
இத்துப்போன ஈழகோசம்
இறைத்து ஈன உயிர் வளத்தார்
ஈழத்தில் இவரும் தேவதூதன் போல
ஈ போல மொய்த்தோம்
இன்று இவர் உயிருடன் இருக்கின்றார் என்று
இன்னும் அறியேன்!!
ஈன்ற உறவுகள் இடுகாடு போல
அடுக்கடுக்காய் போன போதும்
ஈழநண்பன் பேச்சில்
ஈழம் தருவேன் வீட்டில்
இரைந்து நின்ற இந்த நாய்
இன்னும் இருக்கா அரசியல் நதியில்!
ஈ இவரும் பாண்டியனாமே??,
இவர் போல இனியும்
வரும் ஈழநாய்களுக்கு எல்லாம்
இனியும் எடுப்போம் ஒரு
ஈக்குமாறு போல இதை!
இன்னும் கொலைஞர் முதல்
ஈழத்தாய் என்றும் ஈழம்
விக்கும் இவன் சீமான்
இங்கு காவடி
இழுதாலும் இன்னும்
இரந்து கொடுப்போம்
ஈரோவில்!
இன்னும் பல கதை எழுத
ஈழத்தில் இவர் போல
சுதந்திர தினம் இன்னும்
இலித்துக்கொண்டு
ஈழம் பேசும் வியாபாரிகள்
இனியும் வரலாம்!!!
///
ஈழத்தில் போர் ஓய்ந்து
இன்னும்நாம் வாழ வேண்டும்
இனியும் வேண்டாம் போர்!
26 comments :
ஈழத்தில் போர் ஓய்ந்து
இன்னும்நாம் வாழ வேண்டும்
இனியும் வேண்டாம் போர்!
தம 1
தமிழ் நாட்டில் பலரும் ஈழத்தை தங்கள் சுய நலத்திற்காகவே பயன்படுத்துவது வேதனை
ஈர்த்தது சகோதரரே...
ஈழத்தில் போர் ஓய்ந்து
இன்னும்நாம் வாழ வேண்டும்
இனியும் வேண்டாம் போர்!
தம 1//வாங்க கரந்தை ஐயா நலம் தானே முதல் வருகைக்கும் வாக்கு இட்டமைக்கும் நன்றிகள்
தமிழ் நாட்டில் பலரும் ஈழத்தை தங்கள் சுய நலத்திற்காகவே பயன்படுத்துவது வேதனை//உண்மைதான் முரளி அண்ணாச்சி. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
ஈர்த்தது சகோதரரே...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
தமிழ்நாட்டில் மட்டுமில்லை, ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரில் சிலரும் கூட ஈழத்தை வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள், ஈழப்போரின் இறுதிக் காலங்களில் ஈழத்தைச் சொல்லி சொல்லி வசூலித்த கோடிக் கணக்கான டாலர்கள் கணக்குக் காட்டுப்படாமல் வெளிநாடுகளில் வாழும் பல புள்ளிகளிடமே தங்கிவிட்டது, அவற்றை எல்லாம் ஈழத்தில் உள்ளோருக்கு செலவிட்டால், மூன்றே ஆண்டுகளில் வட மாகாணத்தை மீளக் கட்டியெழுப்பலாம் என வருத்தத்துடன் ஒரு ஈழத் தமிழரே புலம்பித் தீர்த்தார், வலிமையானவன் வாழ்கின்றான், சாமான்யர்களாகிய நாம் புலம்புகின்றோம், ஏழைகள் மெல்ல மெல்ல சாகின்றார்கள். எதார்த்தம் இது தான்..
ஈழத்தில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் எனும் விருப்பத்தை வெளிப்படுத்துவதுபோல் தோன்றினாலும் , கடந்த 5 வருடங்களிற்கு முன்பே போர் முடிந்து விட்ட பின்னரும் இன்னமும் தமிழர்களை ராணுவ அடக்கு முறைக்குள் வைத்திருக்கும் இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவளிப்பதே கவிதையின் நயவஞசகநோக்கம்
அங்கிருப்பவர் எல்லோரும் இங்கு சர்வ சாதாரணமாய் வரலாம். விருந்துகளில் கலந்து கொள்ள முடியும். இங்குள்ள வழிபாட்டு தலத்தில் இந்த தேசத்தின் அதிபர்கள் வரிசையில் காத்திருந்தாலும் எம்மை அழிப்பதை கொள்கையாக கொண்டவர் என்றாலும் அவருக்கு சிறப்பு சேர்த்து அனுப்பி வைப்போம். ஆனால் இங்கிருந்து செல்லவும் உண்மை சொல்லவும் தயங்குவோம்.
மான பதிவு தான் இது.
இது தன்மான பதிவு தான்
ரணமான,
விவரமான,
காரமாண,
தரமான,பதிவு
ஈரத்தை கண்களிலே கண்டேன்
ஈழம் பற்றிய கவிதையை கண்ணுரும்பொழுது
வாழும் வழி தெரியாது
வளரும் தலை முறை இது அறியாது
இனியாவது மிளிரட்டும் அவர்தம் வாழ்வு!
நன்றியுடன்,
புதுவை வேலு
(வணக்கம்!
இன்றைய எனது பதிவு ""மாங்கல்ய(ம்) மந்திரம் " (சிறுகதை)"
படித்து கருத்துரை தருமாறு வேண்டுகிறேன்!
நன்றி!)
மாநகரன் said...தமிழ்நாட்டில் மட்டுமில்லை, ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரில் சிலரும் கூட ஈழத்தை வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள்,
வெளிநாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த ஈழ வியாபாரிகளை நம்பி தான் தமிழகத்தில் உள்ள ஈழ வியாபாரிகள் பிழைப்பே ஓடுதுங்க.
இந்திய பிரதமருக்கு பாடம் புகட்டி,ராஜபக்ஷவை ஓட, ஓட விரட்டி, இலங்கையில் ஐனநாயகத்தை இலங்கை தமிழர்கள் கொண்டு வந்தாங்க என்று தமிழகத்தில் எல்லோரும் கொண்டாடுறாங்க.ஆனா இங்கே ஒருவர் போர் முடிந்து விட்ட பின்னரும் இன்னமும் தமிழர்களை ராணுவ அடக்கு முறைக்குள் வைத்திருக்கும் இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவளிப்பதே கவிதையின் நயவஞ்சகநோக்கம் என்கிறார். சிலருக்கு நல்லாக வாழவேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்ட கவிதை பிடிக்காது. கொத்து கொத்தாக மக்கள் இறப்பது, செத்து தொலைவது என்று கவிதை இருந்தா ரொம்ப பிடிக்கும்.
தமிழ்நாட்டில் மட்டுமில்லை, ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரில் சிலரும் கூட ஈழத்தை வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள், ஈழப்போரின் இறுதிக் காலங்களில் ஈழத்தைச் சொல்லி சொல்லி வசூலித்த கோடிக் கணக்கான டாலர்கள் கணக்குக் காட்டுப்படாமல் வெளிநாடுகளில் வாழும் பல புள்ளிகளிடமே தங்கிவிட்டது, அவற்றை எல்லாம் ஈழத்தில் உள்ளோருக்கு செலவிட்டால், மூன்றே ஆண்டுகளில் வட மாகாணத்தை மீளக் கட்டியெழுப்பலாம் என வருத்தத்துடன் ஒரு ஈழத் தமிழரே புலம்பித் தீர்த்தார், வலிமையானவன் வாழ்கின்றான், சாமான்யர்களாகிய நாம் புலம்புகின்றோம், ஏழைகள் மெல்ல மெல்ல சாகின்றார்கள். எதார்த்தம் இது தான்..//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் மாநகரன்.
ஈழத்தில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் எனும் விருப்பத்தை வெளிப்படுத்துவதுபோல் தோன்றினாலும் , கடந்த 5 வருடங்களிற்கு முன்பே போர் முடிந்து விட்ட பின்னரும் இன்னமும் தமிழர்களை ராணுவ அடக்கு முறைக்குள் வைத்திருக்கும் இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவளிப்பதே கவிதையின் நயவஞசகநோக்கம்//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் பா.பாலகுமார் ஐயா.
அங்கிருப்பவர் எல்லோரும் இங்கு சர்வ சாதாரணமாய் வரலாம். விருந்துகளில் கலந்து கொள்ள முடியும். இங்குள்ள வழிபாட்டு தலத்தில் இந்த தேசத்தின் அதிபர்கள் வரிசையில் காத்திருந்தாலும் எம்மை அழிப்பதை கொள்கையாக கொண்டவர் என்றாலும் அவருக்கு சிறப்பு சேர்த்து அனுப்பி வைப்போம். ஆனால் இங்கிருந்து செல்லவும் உண்மை சொல்லவும் தயங்குவோம்.
மான பதிவு தான் இது.
இது தன்மான பதிவு தான்
ரணமான,
விவரமான,
காரமாண,
தரமான,பதிவு //நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பே சிவம்.
ஈரத்தை கண்களிலே கண்டேன்
ஈழம் பற்றிய கவிதையை கண்ணுரும்பொழுது
வாழும் வழி தெரியாது
வளரும் தலை முறை இது அறியாது
இனியாவது மிளிரட்டும் அவர்தம் வாழ்வு!
நன்றியுடன்,
புதுவை வேலு
(வணக்கம்!
இன்றைய எனது பதிவு ""மாங்கல்ய(ம்) மந்திரம் " (சிறுகதை)"
படித்து கருத்துரை தருமாறு வேண்டுகிறேன்!
நன்றி!)// நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யாதவன் நம்பி.
மாநகரன் said...தமிழ்நாட்டில் மட்டுமில்லை, ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரில் சிலரும் கூட ஈழத்தை வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள்,
வெளிநாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த ஈழ வியாபாரிகளை நம்பி தான் தமிழகத்தில் உள்ள ஈழ வியாபாரிகள் பிழைப்பே ஓடுதுங்க.
இந்திய பிரதமருக்கு பாடம் புகட்டி,ராஜபக்ஷவை ஓட, ஓட விரட்டி, இலங்கையில் ஐனநாயகத்தை இலங்கை தமிழர்கள் கொண்டு வந்தாங்க என்று தமிழகத்தில் எல்லோரும் கொண்டாடுறாங்க.ஆனா இங்கே ஒருவர் போர் முடிந்து விட்ட பின்னரும் இன்னமும் தமிழர்களை ராணுவ அடக்கு முறைக்குள் வைத்திருக்கும் இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவளிப்பதே கவிதையின் நயவஞ்சகநோக்கம் என்கிறார். சிலருக்கு நல்லாக வாழவேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்ட கவிதை பிடிக்காது. கொத்து கொத்தாக மக்கள் இறப்பது, செத்து தொலைவது என்று கவிதை இருந்தா ரொம்ப பிடிக்கும்.
//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் வேகநரி ஐயா.
ஈழ வியாபாரிகள் பற்றி
ஆழமாக அலசி உள்ளீர்கள்
மாற்றம் வரவேணும்!
இங்க ஒருத்தர் இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கையில் உள்ள தமிழர்களில் காணாமல் போனவர்கள் சிறையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணையுமின்றி , விடுதலையுமின்றி வாடும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பது போலவும் , இலங்கை ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்நிலங்கள் மறுபடி தமிழர்க்க்கே வழங்கப்பட்டு சிறப்பாக வாழ்வதுபோலவும் , இனப்பிரச்சனையையும் முற்றாக தீர்ந்து விட்டது போலவும் இதற்காக நியாயம் கேட்பவர்களும் , போராடுபவர்களுமே அராஜகவாதிகள் போலவும் சிங்கள இனவெறி அரசின் குரலாக ஒலித்துள்ளார்,
இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த கால ராஜபக்ஷ ஆட்சியில் சொல்லொணா துயரத்தை அனுபவித்த தமிழ் மக்கள் அவரை விரட்டி விட்டு மைத்திரியை கொண்டு வந்ததன் மூலம் இப்போது சுபீட்சமாக வாழ்வதாக சொல்கிறார் , ஆனால் கடந்த 5 வருடகாலமாக இதே ஆசாமி இதே ராஜ பக்ச ஆட்சிலில் தமிழ் மக்கள் பிரச்சனை எதுவுமின்றி வாழ்வதாக ராஜ பக்ச அரசுக்கு முதுகு சொறிந்து வந்துள்ளார் ..
##ஈழத்தில் போர் ஓய்ந்து
இன்னும்நாம் வாழ வேண்டும்
இனியும் வேண்டாம் போர்! ##
ஆமாம் இனியும் வேண்டாம் போர் .நீங்கள் படங்களில் போட்டு விமர்சித்திருப்பவர்களும் அவ்வாறுதான் சொல்கிறார்கள் . இதில் உங்களுக்கென்ன பிரச்சனை . மிச்ச சொச்ச தமிழ்கர்களையும் . அடையாளத்தையும் அழித்து விட சிறியளவிலாவது ஒரு கெரில்லா போர் ஆரம்பிக்காதா ? அல்லது தமது புலனாய்வுத்துறை செயற்கையாக வேனும் போலி குழுக்களை வைத்து கெரில்லா போர் ஆரம்பிக்கலாமா ? அதன் மூலம் மிச்ச சொச்ச தமிழர்களையும் அழிப்பதற்கு முன்பு போல் சர்வதேசத்தின் அனுசரணையை பெற்று அழித்து விடலாம் என மனப்பால் குடித்துக்கொண்டிருப்பது இனவெறி அரசுதான் ,
Pararajasingham Balakumar ..........இன்னுமின்னும் உங்க கிட்டேயிருந்து,உங்க பதிவுகளில்,நிறையப் பாட்டுக்கள எதிர்பார்க்கிறோம்!
பதிவுகள் எதுவும் நான் இடுவதில்லை . பின்னூட்டம்தான் இடுகிறேன்.
பாட்டுக்களை கவிதை வடிவில் தனி மரம்தான் பதிவிடுகிறார்.
ஈழ வியாபாரிகள் பற்றியும் அதனால் பயனடையும் தமிழக ஈழ வியாபாரிகள் பற்றியும் மேலும் ஆதாரங்களோடு பாட்டுப்பாடுவார் என எதிர்பார்ப்போம்.
ஈழ வியாபாரிகள் பற்றி
ஆழமாக அலசி உள்ளீர்கள்
மாற்றம் வரவேணும்!//நல்லதே நடக்கட்டும் ஐயா. நன்றி யாழ்ப்பாவண்ணன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
இங்க ஒருத்தர் இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கையில் உள்ள தமிழர்களில் காணாமல் போனவர்கள் சிறையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணையுமின்றி , விடுதலையுமின்றி வாடும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பது போலவும் , இலங்கை ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்நிலங்கள் மறுபடி தமிழர்க்க்கே வழங்கப்பட்டு சிறப்பாக வாழ்வதுபோலவும் , இனப்பிரச்சனையையும் முற்றாக தீர்ந்து விட்டது போலவும் இதற்காக நியாயம் கேட்பவர்களும் , போராடுபவர்களுமே அராஜகவாதிகள் போலவும் சிங்கள இனவெறி அரசின் குரலாக ஒலித்துள்ளார்,
இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த கால ராஜபக்ஷ ஆட்சியில் சொல்லொணா துயரத்தை அனுபவித்த தமிழ் மக்கள் அவரை விரட்டி விட்டு மைத்திரியை கொண்டு வந்ததன் மூலம் இப்போது சுபீட்சமாக வாழ்வதாக சொல்கிறார் , ஆனால் கடந்த 5 வருடகாலமாக இதே ஆசாமி இதே ராஜ பக்ச ஆட்சிலில் தமிழ் மக்கள் பிரச்சனை எதுவுமின்றி வாழ்வதாக ராஜ பக்ச அரசுக்கு முதுகு சொறிந்து வந்துள்ளார் ..//தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பாலகுமார் ஐயா.
ஈழத்தில் போர் ஓய்ந்து
இன்னும்நாம் வாழ வேண்டும்
இனியும் வேண்டாம் போர்! ##
ஆமாம் இனியும் வேண்டாம் போர் .நீங்கள் படங்களில் போட்டு விமர்சித்திருப்பவர்களும் அவ்வாறுதான் சொல்கிறார்கள் . இதில் உங்களுக்கென்ன பிரச்சனை . மிச்ச சொச்ச தமிழ்கர்களையும் . அடையாளத்தையும் அழித்து விட சிறியளவிலாவது ஒரு கெரில்லா போர் ஆரம்பிக்காதா ? அல்லது தமது புலனாய்வுத்துறை செயற்கையாக வேனும் போலி குழுக்களை வைத்து கெரில்லா போர் ஆரம்பிக்கலாமா ? அதன் மூலம் மிச்ச சொச்ச தமிழர்களையும் அழிப்பதற்கு முன்பு போல் சர்வதேசத்தின் அனுசரணையை பெற்று அழித்து விடலாம் என மனப்பால் குடித்துக்கொண்டிருப்பது இனவெறி அரசுதான் ,//இனவாதம். மதவாதம். மொழிவாதம். வேண்டாம் என்பதே என் விருப்பம் பாலகுமார் ஐயா.
Pararajasingham Balakumar ..........இன்னுமின்னும் உங்க கிட்டேயிருந்து,உங்க பதிவுகளில்,நிறையப் பாட்டுக்கள எதிர்பார்க்கிறோம்!// வாங்க யோகா ஐயா நலமா நீண்ட காலத்தின் பின் வலையில் காண்பது சந்தோஸம்.அவரு தன் கருத்தினை பகிரட்டும் இன்னும் இன்னும்[[[[[[[[[[[
பதிவுகள் எதுவும் நான் இடுவதில்லை . பின்னூட்டம்தான் இடுகிறேன். // தாங்களும் பதிவுகளை எழுத வேண்டும் என்பதே என் ஆவலும்.
பாட்டுக்களை கவிதை வடிவில் தனி மரம்தான் பதிவிடுகிறார்.// நல்ல அவதானிப்பு தனிமரம் பற்றி!.
ஈழ வியாபாரிகள் பற்றியும் அதனால் பயனடையும் தமிழக ஈழ வியாபாரிகள் பற்றியும் மேலும் ஆதாரங்களோடு பாட்டுப்பாடுவார் என எதிர்பார்ப்போம்.//ஏன் இந்தக்கொலவெறி அவர்களின் பலபாடல் பல சந்தி சிரிப்பது தாங்கள் அறியாத ஒன்றா பாலகுமார் ஐயா!
Post a Comment