30 March 2015

முகம் காண ஆசையுடன்--6

முகம் காண ஆசையுடன் -1,2,3,4.5..


 இனி...


எதிர் பார்த்தேன் இளங்கிளியே உனைக்க காணலையே? என்ற பாடல போல தான்  !

வார இறுதி ஒருநாள் விடுமுறையான ஞாயிறு ஓய்வுநாளில் சுமாவின் ஸ்கைப் அழைப்பு வரும் என்று காத்திருந்தே முதல் மரியாதை நடிகர் திலகத்தின் ஊயிர் ஊஞ்சல் போலத்தான்  அசுரனும் இலங்கையில் இருந்து முகநூல் நண்பியின் அழைப்பு நேரில் வராத போது தன் இணையத்தினை; நீயும் உன் நட்பும் போய்த்தொலை என்று குடிபோதையில்தான் பருகிய  வெற்று மதுபாண போத்தலை வீசி விட்டு போகும் குடிகாரன் போல எழுந்து போன நிலையில்!

 அவனின்  நண்பன் அகிலன் . என்ன மச்சான் ?மனசு சரியில்லைப்போல? இந்தா ஒரு பியர் குடி !

இன்று தானே உனக்கு விடுமுறை .தினமும் என்னைக்கவனி போல ஒரு நாளைக்கு 15  மணித்தியாளம்  காசுக்கும் மீதி 3 மணித்தியாளம் வெட்டியாக அறிவை வளர்க்கின்றேன்; ஆழ்ந்து நூல்கள் படிக்கின்றேன் ;நட்புக்கள் என்று  முகநூல்/ வலைப்பதிவு என்று வெட்டியாக அழையும் உன்னை சிலகாலம் பாரிசில் அறியும் ஒருவன் நான் என்றாலும் !

இந்த வீட்டில் சக நண்பன் போல உன்னையும் என்னுயிர் தோழன் பாபு பார்க்கின்றேன்

 இப்ப சில மாதங்கள் நீயும் ஒரு வலைப்பதிவு/முகநூல் என்று ஏதோ போதையில் பதவி தேடி ஓடும் முன்னால் ஜனாதிபதி போல அமைதியில்லாமல் போலி விளம்பரம் தேடுவது போல சிலரின் பதிவை நாடி ஓடுவதும்; அதன் சுருக்கம் பற்றிப் பேசுவதும் ,முகநூல் நட்பு என்று அழைப்பிள் அதிரடிப்படைநாயகன்  அம்மவாசை பாத்திரம்  போல பம்முவதும் ஏன்??

 என நான் கனம் கோட்டார் அவர்களே என்பது போல உன்னைக்கேட்க மாட்டேன் நண்பா!


முகநூலில் ஏதாவது நல்ல விடயம் அலசிஆராய முடியுமா  ?,

நிச்சயமாக இல்லை!

சும்மா பொழுது போக்கு போதைக்கு ஒரு நடிகையின் / நடிகரின் விடயம் அல்லது ,அரசியல் நையாண்டி பேசி நாமும் ஒரு பத்தி விமர்சனப்பதிவு எழுதும் தகுதி இருக்கு! என்று நமக்கு  நாமே பட்டம் சூட்டும்  பரிவட்ட மேடைபோல மட்டும் தான் மச்சான் முகநூல் இது என் கருத்து நாளை எனக்கு தாலி அறுப்பு போல  வேண்டாம் மச்சான்! .


உண்மையான நட்புக்கு இங்கு பலருக்கு சிரிக்கும் மேடை போல ஆமா நீ பாரிஸ் உன் உயிர்காப்பாற்ற வந்தாயா ?,

இல்லை உழைத்து இலங்கையில் சொந்த வீடு கட்ட வந்த  வெற்றிக்கொடி கட்டு படத்தில்  சார்லி போலவா  மச்சான்??

 வெளியில் உன் போலி முகம் எதுவோ நான் அறியேன் .

உனக்காக ஒருத்தி உன்னை நேசித்த பாவத்துக்காக இன்னும் முகம் வெளியில் காட்டாமல் இலங்கை இனவாத நாட்டில்  சிறையில் பூத்த சின்னமலர் போல இருக்கும் பூஜா பற்றி சிந்தித்தாயா??


 ,,அவளைப்பற்றி ஏதாவது ஜோசித்தாயா மச்சான் அகிலன்!பூஜா என் உயிர் மச்சான் உனக்கு எப்படி புரியவைப்பேன் நான் சிறையில் வாடும் சின்னப்பறவை போல இலங்கை இனவாதம் பற்றி சிலதை முகநூலில் போலி முகத்திலும், வலைப்பதிவில் ஊடக பத்தி எழுதும் நாளைய செய்தி  போலவும் எழுதினாலும் என் நேசம் நீ எப்படி அறிவாய் இன்னும் ஒரு பியர் தான் குடிப்போம் போதை சிலதை நிஜம் சொல்லும் !......வண்ணப்பூ வவுனியாவின் தேவதை  என் ஆசைக்காதலி அவள் பூஜா.............



 தொடரும்..........

13 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

நிஜத்தை மேலும் அறிய தொடர்கிறேன்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

நான்றாக உள்ளது நிஜமான நிகழ்வு போல் உள்ளது.. அடுத்தமுகம் காண காத்திருக்கோம் தொடருங்கள் த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

MANO நாஞ்சில் மனோ said...

வர்ணனைகள் நெஞ்சை கசக்கி செல்கின்றன...!

KILLERGEE Devakottai said...


நடையழகு காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு..
தமிழ் மணம் 4

தனிமரம் said...

நிஜத்தை மேலும் அறிய தொடர்கிறேன்...// வாங்க தனபாலன் சார் முதல் வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம்

நான்றாக உள்ளது நிஜமான நிகழ்வு போல் உள்ளது.. அடுத்தமுகம் காண காத்திருக்கோம் தொடருங்கள் த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-// நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

வர்ணனைகள் நெஞ்சை கசக்கி செல்கின்றன...!// நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் நாஞ்சில் மனோ அண்ணாச்சி

தனிமரம் said...

நடையழகு காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு..
தமிழ் மணம் 4// நன்றி கில்லர்ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும்.

மோகன்ஜி said...

சரளமான மொழியிருக்கிறது உங்களிடம். மெருகேற்றுங்கள். மேடைகள் காத்திருக்கின்றன

Thulasidharan V Thillaiakathu said...

சிலதை நிஜம் சொல்லும் !.// அறியக் காத்திருக்கின்றோம் நண்பரே!

தனிமரம் said...

சரளமான மொழியிருக்கிறது உங்களிடம். மெருகேற்றுங்கள். மேடைகள் காத்திருக்கின்றன

31 March 2015 at 10:35// நன்றி மோகன் ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சிலதை நிஜம் சொல்லும் !.// அறியக் காத்திருக்கின்றோம் நண்பரே!// நன்றி துளசிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வித்தியாசமான நடையில் முகங்களின் தேடுதல் மனதை கலங்க வைக்கிஇது