நீ போன ஊர் அறியாது இன்னும் தவிக்கின்றேன்
உன் கொழுசு விட்டுச்சென்ற தடயம் போல
என் காதலையும் உன்னில் சூடாமல்
ஊர்ப்பாதையோரம் இன்னும்
இவன் பூவைப்போட்டு வீசும்
கிராமத்து மச்சான் நடந்துவாடி
அத்தை மகளே இனி யுத்தமில்லாத பூமியில்...
இந்தப்பத்திரம் போல இவன் இன்னும்
இந்திய அகதிக்கூடத்தில்!
இன்னும் ஏதிலி இருக்கின்றேன்..
இனியும் உன்பாதை இலங்கையில் தீமூட்டாமல்
இருந்தால் நல்லதுதான் வணங்குகின்றேன்!....
////////////////////////
சினேஹா போல நீயும் ஒரு சித்திரம்
சிரிக்கவில்லை சீண்டிய நண்பன்
சில் என்று நெஞ்சில் குளிர்ச்சிய
சில நிமிட சந்தோஸம்!
சிரித்தால் நீ இன்னும்
சிலபாடம் சிலோன் வானொலி போல
சிறைப்பிடித்த சித்திரைப்பாவை.
சிலிர்க்கும் நதியா!
////////////////////////////////
யாரோ எழுதியது யாருக்கோ
யான் அறியேன் யாதுமாய் உன் வலி
யாவரும் வாசிக்க யான்
யாரையோ கேட்டேன்!
யாத்து தருவதாக விரைவில்
யாவரும் வாசிக்க!
/////////////////////////////////
3 comments :
வணக்கம்
ஒவ்வொரு வரிகளும் மிக அழகு இரசித்தேன்
பகிர்வுக்கு நன்றி த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள்...
நன்றி! த.ம2
Post a Comment