08 September 2015

மேலோகம் -2


சில வலையுறவுகளின் காத்திரமான  பதிவுகள்   ஓய்வின் போது வாசிக்கும் போது. இன்னும் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டாள் எப்படி இருக்கும் என்று சிந்திப்பதுண்டு ஆனாலும் எழுத்துப்பிழையும் என் பிழையும் எங்கே காயமாக்கிவிடுமோ எழுத்தை என்ற பயமும் இருக்கு என்றாலும் கொஞ்சம் ஜாலிக்கு!!http://putthan.blogspot.fr/2015/08/blog-post.html!



இனி....


 மேலோக இசைமேடைக்கு வந்து இருக்கும் என் நேச உள்ளங்களுக்கு என் தமிழ்த்தாய் வணக்கத்துடன் ஒலிவாங்கியை உள்வாங்கி கே.எஸ் .
ராஜாவுடன் .இணையும் வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் குரல் கேட்டு முதலில் ஓடிவந்தார்  மேடையின் ஒரத்தில் இருந்த ரவிராஜ்.




என்ன மகனே முகத்தில் ஒரு புன்னகை! என் முன்னே நீ வந்ததும் உன் பின்னே நான் வந்ததும் விதிவசம். என்றாலும் இந்த மேடையில் நீயும் இருக்கின்றாய் நானும் இருக்கின்றேன்.

 ஆனாலும் உன் கட்சியில் நடக்கும் கூத்து நான் இலங்கை வானொலியில் பார்த்த ஒன்றுதான்! ஆனாலும் உன் நண்பர்  பூலோகத்தில் இப்போது பொருத்தமான துறைக்கு பொருத்தமான அமைச்சர் என்ற செய்தியைச் சொல்லி !

அடுத்த பாடலை பொங்கும் பூம்புனலில் ஒலிக்கவிட ஆசைதான்! ஆனாலும் மேலோக வரலாற்றில் ஒன்று! அவர் தந்தையும் இங்கே இருக்கின்றார். உன்னைப்போல நாடு போற்ற வாழ்க வி.சி. கனேஷன். அதுக்காக சிவாஜிகனேஷன்  என்ற நடிகருடன் ஒன்றிவிடாதே! இப்போது நடிகர் சங்கமே இரண்டுபட்டுக்கிடப்பதைப் போல அல்ல.விஜய் குடித்தாரா ?,இல்லையா என்பதா முக்கியம்?,

 சென்னையில் வீதி ஒழுங்கு எப்படி இருக்கு என்பது 7 ஜீ காலனி  போலத்தான்!

வி.சி கனேஷன் ஈழத்தின் சினிமா நட்சத்திரம் ! ஆம் ரவிராஜ் இந்த நேரத்தில் நாம் பழைசை அசைபோடும் இசைவிழா இது அல்ல என்றாலும் நானே ராஜா !ஹீ என்னைப் பார்த்து வீணை மீட்டாதே ரவிராஜ் !

உன்னை போல மனோ கனேசனுக்கு போல  அவர் தந்தைக்கும் .சகோதர மொழி நடிகர் காமினி பென்சேக்காவும் சேர்ந்தே இருக்கின்றார்கள் மேலோகத்தில்   என்பதைச்சொல்லி .

அடுத்த இசை மேடைக்கு யாரை  அழைப்பது ராஜேஸ்வரி?,

 அதுவா என்ன சொல்ல, எப்படிச்சொல்ல, இவன் தந்தை எங்க கால இலங்கை வானொலி இசைக்கூடத்தில் இசைக் ஹீரோ !இவர்  மைந்தன் இந்தக்கால பல்கலைவேந்தன் ஆனாலும் இவனுக்கு சிரிவித்யா போல அதிசயராகம் அதனால் குண்டுவெடிப்பில் கண் போனாலும் விடாது கருப்பு நாடகம் போல இசையால் செத்தாண்டா சேகர் போலத்தான் ! நான்  அவன் என்று ஒருமையில் அழைப்பது பாசத்தில் தந்தை ,மகன் இருவரும் இங்கே இருப்பது பூலோகத்தில் சன் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் பிரபு அவர் பையன் விக்ரம் பிரபு ஒன்றாய் இருப்பது போல.!மாகா நடிகர் நாகேஸ் இருக்கும் மேடையில் கீழே அங்கே  நம் சண்!



சண் என்று சொல்லும் போது தான் நம்நிகழ்ச்சியின் நோக்கம் ஆழம் புரியுது ஆனாலும் அண்ணா றைற்  என்று சொல்ல ஆசை அவரும்! இப்ப கனடாவில் இருந்து டிக்கட் வாங்கி மேலோகம் வந்து   இருக்கின்றார்!

யார் அவர் புலியா  ?,இல்லை அவர் ஒரு நகைச்சுவையாளர்! வீ.கே .ராமசாமி போல தேங்காய்ச்சீனிவாசன்போல ,சுருளி ராஜன் போல, என்றாலும் மேஜர் சுந்தர்ராஜான் போல  கோட்,சூட் போட்ட ஒல்லிக்குச்சி நரசிம்மன் போல என்னைத்தை கன்னய்யா போல  ஒலிச்சித்திரம் நம் கே.எஸ். பாலச்சந்திரனிடம் ஒலிவாங்கியை  மேடையில் கொடுத்துவிட்டு மீண்டும் வருவோம் என அறிவிப்பாளர்  கே. எஸ் ராஜாவும் அறிவிப்பாளினி இராஜேஸ்வரி சண்முகமும்  பூலோக விஜய் டீவி விளம்பரம் போல   ஆச்சி மச்சாலா வழங்கும் தனிமரத்தின்  வலையின்  நீயா நானா என்பது போல மேல்லோகம் இசைவிழா பற்றி இன்னும் பேசுவோம்!



 அதுக்கு முன்  மேடையில்  நவரசத்தால்  உங்களை பேரழகி நாட்டிய தாரகை பூலோக சோபனாவும் இவரிடம்   கற்க வேண்டும் குருகுலம் போல!

  ஆனாலும் ஈழத்தில்  நடனம். .வானொலியில் தூய தமிழ் அறிவிப்பு  பூலோக ஹிந்திப்பாடகர் சுக்விந்தர் சிங் போல அல்ல .தூய தமிழ் உச்சரிப்பு , திறமையான நிகழ்ச்சி தொகுப்பு எல்லாம்  செய்யும் ரேலங்கி செல்வராஜா ஈழத்தில் சுட்டுக்கொலை செய்ய பட்ட வீணை ஒன்று வீதியில் கிடந்த அவலம் எல்லாம் இங்கே இல்லை  பூலோகத்தில் கைதிகள் பட்டியல் பல இருக்கு!

 நாம் இணைந்து இருப்பது மேல்லோகத்தில் இசையமைப்பாளர்களை வரவேற்ற்கும் மேடையில் !

புலம்பெயர் கலைஞர்கள் காசுதேடி ஓடினாலும். இந்த பாடல் கேட்டுவிட்டு கள்ளுக்குடிக்க ஓடுங்கோ. தாய்பூமி உறவுகள்  பார்க்கப் போறம் ஊரில்காய்ந்து இனியும் நாயந்தார போல  ஒரு பரப்பை ஒரு கோடி  ரூபாய் யாழ்ப்பாணத்தில்  ஒரு நாள் தங்க கொழும்பில் வாடகை  ஒரு லட்சம் என்று விலை ஏற்றிவிட்டு  ஓசியில் ஒரு வங்கி லோன் எடுத்து ஐரோப்பாவில்  நீயும் ஒரு முதலாளி என்று வேசம் போட்டு  நீ இங்கு வருமானவரி கட்டாமல் நண்பர்களிடன் வட்டிக்கு வாங்கி  திண்டாட !

எவனோ ஒருவன்  உன் உழைப்பு புரியாத போராட்டவலி புரியாமல் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் போன தேசிய பட்டியல்  சலுகை  உறுப்பினர் போல அது  மச்சான் சொத்து! இது மாமா சொத்து! இங்கால   மருமகன் சொத்து.  என்று கொண்டாட!

 அதனால் வரும் ஐரோப்பா வசந்தகால உட்கட்சி வேட்டி கிழிப்பு அதுதாங்க பூலோக விகடன் புகழ் மூங்கில்காற்று முரளி தேடும் சாரம்/கைலி கிழிப்பு எல்லாம் இங்கே நாடக மேடையாக  வரக்காத்து இருக்கு !இப்போது கொஞ்சம் தொழில்நுட்ப சிக்கல் தனிமரம் பண்பலையில்[[Innalathe Tharam - Cylon Manoharan ( Actor, Singer & Music Director) 1/3

)) பாடல் இல்லையா  இதோ---

இப்போது விளம்பர இடைவேளை  நீங்கள் எல்லாம் பூலோக பதிவர் சந்திப்பு பற்றி வாசிக்க இங்கே-http://thaenmaduratamil.blogspot.com/2015/09/Tamil-bloggers-list-2015-handbook.html




தொடர்வோம் ஓய்வில்[[[
குத்துரான் எஜமான் குத்துரான் என்று மேடையின் ஓரத்தில் ஒரு குரல் அது தமிழ்மணம் வாக்கு என்று நாற்றுமேடையின் வானொலி புரட்சியின் விளம்பரம் ஒலிக்கும் நேரம் அதிகாலை 3 மணி பாரிசில் இடைவிடா இசைக்கு !


நகைச்சுவை அன்றி யாரையும் நோகடிப்பது அல்ல!


7 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

சந்திப்பு இணைப்பிற்கும் நன்றி தோழர்...

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! அருமையான நகைச்சுவை மேலோகம்!! நன்றி!!

balaamagi said...

நல்லா இருக்கு,,,,,,,

”தளிர் சுரேஷ்” said...

அசத்தல்!

putthan said...

நேசன் மேலோகம் 2 நன்றாக உள்ளது தொடருங்கள்

KILLERGEE Devakottai said...


ரசித்தேன் நண்பரே தமிழ் மணம் + 1

Unknown said...

நல்ல கற்பனை தம்பி! ரேலங்கி செல்வராஜா அவர்களின் பெற்றோரில் ஒருவர் எங்கள் ஊரான குரும்பசிட்டியைச் சேர்ந்தவர்கள். ரேலங்கி அவர்களின் இழப்பு எங்கள் ஊரவர்களுக்கு பெரும் அதிர்ச்சி.