09 November 2015

`முகம் காணும் ஆசையுடன் ---சுபம்!!!!


முன்னம் வாசல் இங்கே-http://www.thanimaram.org/2015/11/36.html

இனி....

பதவியில் இருப்பதும், படகில் இருப்பதும் ஒரே நிலைதான்! ஆனால் மறைகரங்களை இனம்காட்ட மறுக்கும் பின்புலம் எல்லாம் விசாரணை செய்ய வேண்டும் விலகியோடுதல் ஏனோ சிலரைக்காக்க என்பதை மட்டும் நெஞ்சில் நிறுத்து! அவசரமாக கூடும்  அமைச்சரவைக் கூட்டம் எல்லாம் சிறைக்கைதிகளின் நிலை பற்றி சிந்திப்பது இல்லை.நல்லாட்சி ஆட்சி சீர்கெட்டுப்போனநிலை.

என்னால் ஆன இன்னொரு உதவி சுமாவினையும் கண்கானிப்பில் இருந்து விலக்கி வைத்திருப்பது. வேற என்ன உதவி தேவை என்றாலும் என்னைத்தொடர்பு கொள்ளு முடியும் என்றால் நிச்சயம் உதவுவேன்.

 இனி நல்லதே நடக்க பிரார்த்திப்போம்!!! என்று சொல்லிய அபயக்கோனை கடவுளைக் கண்ட பக்தன் போல  வார்த்தை பேசாமல் நின்றான் அசுரன்
.

இரண்டு நாட்களின் பின் கொழும்பில் சுமாவின் திருமணம் வரவேற்பு காணும் விழாவில் பூஜாவுடன் சேர்ந்தே நிகழ்வுக்கு சென்றான்.

 என்ன நண்பா?, நேற்று நீங்கள் பதிவுத்திருமணம்  அவசரமாக செய்த  விடயத்தைக்கூட  நடிகையின் கலியாணம் போல பொதுவில் பகிரவில்லையே ?,முகநூலில் ஒரு செல்பி இல்லை?, என்றவாறு நிவேதா அசுரனை கலாய்த்தாள்!

 என்ன புதுப் பொண்ணு என்னைப்பற்றி சொல்லியிருக்கின்றானா?,. வந்ததில் இருந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை  !அவரின் திடீர் வருகை, என்னை சிறைமீட்டது !எல்லாம் கனவு போல இருக்கு!! ஆனால் நிஜம் அதனை  நிதானிப்பதுக்குள் திடீர் பதிவுத்திருமணம் ,அதுக்கும் உதவிய அபயக்கோன் அப்பா  . !அவரின் ஆலோசனைகள் என திருப்பங்கள் அதிகமாக இருக்கு அக்கா நிவேதா.

. வந்தவனுக்கு தோழி என்னிடம் ஒரு வார்த்தை சொல்ல மனமில்லை ,முகநூலில் வேண்டாம், என் கைபேசியில்கூட சொல்லாத ரகசியம் .

நிவேதா என் அவசரம் உனக்கு சொன்னால் புரியாது. புலம்பெயர் புறச்சுழ்நிலை சொல்லி உன்னை கலங்கடிக்க ஆசையில்லை. முகம் காணும் ஆசையுடன் ஓடிவந்தேன் !ஆண்டவன் கிருபையில் என் காதலி 5 வருட சிறையிருப்பை வேதனையோடு கழித்த நாட்களின் கதை இன்னொரு காவியம் போல நடிகன் தளத்தில் பாரிஸ் போனதும் எழுதுவேன் விரிவாக.!

 நிச்சயம் எழுது நண்பா! வாசிக்க காத்து இருக்கின்றேன். அப்படியே பூஜாவுக்கும் ஒரு வலையை திறந்து கொடுத்தாள் நல்லது.

செய்யலாம் !வாங்க மணமக்களை வாழ்த்துவோம் போய் என்றவாறே சுமா இருக்கும் இடம் நோக்கி நடந்தார்கள் நிவேதா, அசுரன், பூஜா  மூவரும்..

.தூரத்திலேயே சுமா அசுரனை நன்றியுடன் பார்த்தாரே எழுந்து நின்றாள்! வாங்க. எப்படி? இப்படி எல்லாம் உன்னால் ஜோசிக்க ?,எழுத முடியுது? என்று சிந்திப்பேன்!

ஆனால் தனிமையில் என் கலியாணத்துக்கு நீ செய்த பொருளாதார உதவிக்கு என்ன கைமாறு செய்ய !

நீ செய்த ஆய்வுத்தேடலுக்கு முன் அசுரன் செய்தது ஒன்றும்மில்லை! இதோ என் காதலியை கைபிடிக்க உன் கைதிகள் தேடல் உழைப்புக்கு  பரிசாக சில ஆயிரம் ஈரோக்கள் தான் இந்த ஏதிலியால் செய்ய முடிந்த உதவி.!




 அடிவாங்குவாய் அசுரன்.

நாங்கள் இருக்கின்றோம்! இப்ப பூஜாவேறு சேர்ந்த பின்னும் நீ அகதி  என்று சொன்னால் நம்பாது உலகம். சரி நாங்கள் பின் முகநூலில் பேசுவோம் இப்ப விருந்து உண்டு செல்.

 உன் விருந்துக்கு அழைக்கவில்லை நீ என்பதையும் மறக்கவில்லை .அதையும் ஒருநாள் என் தளத்தில் எழுதுவேன்.

 நீ எழுது சுமா ஆனால் அவசரம் என்ற சொல் வெறும் வார்த்தையில்லை அது இன்னொரு வலி அதனை இன்னொரு தொடராக எழுதுவேன் நடிகன் தளத்தில்.

ஆமா தனிமரம் உன் விழாவுக்கு வாழ்த்து சொல்லி இருப்பானே என்னைமுந்தி! .
அவன் அதிகாலையில் அழைத்து பேசிவிட்டு ஸ்கைப்பை மூடிவிட்டான்.

நீங்கள் இருவரும் தனித்தனி முகங்கள் என்றாலும் உங்களின் நட்பும்,இணைந்தகைகள் படம்போல  பிரிவையும் எழுதலாமே அசுரன் .ஏன் வம்பில் மாட்டவா?, ஆளைவிடுங்க!


 நானும் என் காதலியும் இன்னும் ஒரு வார்த்தையும் கதைக்கவில்லை! ஒரு பாட்டும் கேட்கவில்லை!!.நிஜமா பூஜா ?,நான் பேச நினைப்பதெல்லாம் அவரின் பாடலில் வந்துவிடுகின்றது .ஆனாலும் நாளை மீண்டும் பிரியும் அவரின் அருகாமையை நினைக்கும் போது இந்த நேரமே உயிர்விடலாம் போல இருக்கு சுமா அக்கா!

. சீச்சீ சிறையில் இருந்த போது இருந்த நம்பிக்கை இப்ப இல்லையா?? இன்னும் ஒரு வருடத்தில் நீயும் பாரிஸ் போய் அசுரனுடன் திருமணம் காணப்போறாய் !

அந்த சந்தோஸத்தை நினைத்தவாரே நீயும் முகநூல், வலை என்று வாசிப்பதுடன் புதிய மொழியான பிரெஞ்சையும் இங்கு இருந்து படி.

 இனி வேலைக்கு போகாதே வீண் அவஸ்த்தையும் வேண்டாம்! அன்புத்தோழியே என்று அழைக்க மாட்டேன் நேசிப்பு  மச்சாள் என்பேன் .அசுரன் அண்ணா என்றால் அவரின் மனைவி எனக்கு மச்சாள்முறைதானே?,


உங்க பேச்சு பிடிச்சு இருக்கு! ஏன் உவன் பேச்சு பிடிக்கலையா?? ஐய்யோ நீங்க வாயாடி .சரி சுமா மீண்டும் சந்திப்போம் நான் விடைபெறுகின்றேன் நாளைக்காலை பாரிஸ் நோக்கி  பயணம்

.இனி எப்போதும் போல முகநூல்,ஸ்கைப், வலை என்று அசுரன் வெட்டியாக இருப்பான் என்று சொல்ல ஆசை !ஆனால் பாரிஸ் வாழ்க்கைத்தான் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்! எல்லாம் நல்லதே நடக்கும்.


 உன் நேர் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள். இதோ சேர்ந்தே ஒரு செல்பி! வேண்டாம் தாயி!!

 நீ அதையும் முகநூலில் போட்டு என்னையும் ,அந்த உதவாக்கரை தனிமரத்தையும் இன்னும் மோதவிட வேண்டாம்!

 நன்றி மீண்டும் சந்திப்போம். சுமா.

நன்றி அசுரன் வருகைக்கு.

. என்னங்க! சொல்லு பூஜா நீ இனி பேசிக்கொண்டே இரு அதையும் அடுத்த தொடராக எழுத முன் இப்ப ஒரு ஓய்வு நாடி ஒரு பாட்டு கேட்க ஆசை! அதையும் உன் தேர்வில் விடுகின்றேன் பூஜாவே நீயே சொல்லு!

நான் என்ன உங்களைப்போல பாட்டுப்பிரியை இல்லை!ஆனாலும் கனாக்கான்கின்றேன் பாட்டு பிடிக்கும்!


சரி அதைக்கேட்டவாறே தனிமரம் எழுதிய முகம் காணும் ஆசையுடன் தொடருக்கு ஒரு சுபம் சொல்லுவம் இப்போது !!


இதன் பாகம் இரண்டு நிச்சயம் வரும் என்ற ஈழத்து /இலங்கை  அரசியல்வாதியின் வாக்குறுதிபோல சிறையில் காத்து இருப்போர் விடுதலை விரைவில் என்ற செய்தி தொடர் கதை போல  வரலாறு தொடரும்[[[[[[!
கும்மி அடிப்போம் பொதுவில் !



அதுவரை
நம்பிக்கையுடன் ஒரு !!சிறு முடிவு தொடருக்கு.!!



                                                     சுபம்!!!!!!

.

6 comments :

”தளிர் சுரேஷ்” said...

சுபமாய் முடித்தமைக்கு வாழ்த்துக்கள்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

சுபம்! வரலாறு தொடரப்போவதை நாங்களும் தொடரக் காத்திருக்கின்றோம் நேசன் நண்பரே! 2 ஆம் பாகம் வரட்டும்! வாழ்த்துகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த தொடரை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்...

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

yathavan64@gmail.com said...


இனிய தீப திருநாள் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு

கரந்தை ஜெயக்குமார் said...

தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
தம+1