01 November 2015

முகம் காணும் ஆசையுடன் -31

முகம் பார்க்க இங்கே-http://www.thanimaram.org/2015/10/30.html
இனியும் தேடலுடன்.......


யாரோ பெத்த பிள்ளைக்கு நான் அப்பன் என்று உரிமை கொண்டாடும் விளம்பரயுத்தி இணைந்த கைக்கள் நிரோஷா வாழ்க்கை வரை சொல்லாத ரகசியம் போலத்தான்! இன்று அரசியல்., .ஊடகம், கலை ,இலக்கியம் எங்கும் விளம்பர மோகமும் வாக்கு அரசியலும் பல செய்திகளை திரிப்பு செய்வதும் !பொதுவில் பேசாமல் விடும் நடுநிலை அல்லது இனக்க அரசியல் போக்கு என்பது எழுதாத விதி !!

எங்க அண்ணா இல்லாத வெற்றிட நீட்சி என்று சொல்ல இங்க யாருக்கும் தைரியம் இல்லை! அது போலத்தான் ஒரு பாடல் வானொலியில்  ஒலிப்பரப்பு செய்யும் போது முதலில் அதன் கவிஞர்/கவிதாயினி அதனை பாடியவர்கள் பாடல் இசையமைப்பாளர்  பற்றி முதலில்  அறிவுப்பு செய்வதுதான்  முதல்மரியாதை .நடிகனுக்கு/ நடிகைக்கு  இல்லை !



பாடல் ஒலித்த பின்பு தான் அது எந்த படத்தில் எவர் ஹீரோ என்று மேலதிக தகவல் கொடுக்க வேண்டும்  நிகழ்ச்சி நேரம் இருந்தால்!. காரணம் பாடல் கேட்கும் நேயர் எப்போதும் இது யார் படம் எவர் ஹீரோ என்பதை விட இது யார் பாடியது என்ற கற்பனையை அதிகம் நேசிப்பார்கள் !என்பதைச்சொல்லி வளர்த்த வானொலி பல்கலைக்கழகம் ஆசியாவின் சிறப்பு நிலையத்தில் பயிற்றப்பட்டவன் நான் என்றாலும் !மீண்டும் பலர் புலம்பெயர் தேசத்தில் இணைய வானொலிகளுக்கு அழைத்தாலும் விட்டதை தொடர ஆசையில்லை என்று ஒதுங்கினாலும் !

பொருளாதார தேடலும் மேலதிகாரி என்ற கவர்ச்சியின் பின்னே நயந்தாராவின் பின்னே போய் காணமல் போனவர்கள் பட்டியல் இலங்கை ஊடகத்தில் அதிகம்! அது போல  என் முகம் தொலைந்தவன் பட்டியலில் என் நட்பு ராகுல் போல நானும் ஒருவன் என்பதை நீ அறிவாய் பாலன்!

இப்ப என்  தொலைந்த தொழில் பற்றி பேச ஆசையில்லை .ஆனால் இன்றைய அரசியல் போக்கு என் வாழ்வில் இரண்டர கலந்த ஒரு கறை!


இந்த இலங்கை/ஈழ தேசத்துக்கு சர்வதேசத்தின் தன்னார்வ தொண்டு அமைப்புகளின் வருகையும், அதன் பின்னே இருக்கும் நிகழ்ச்சி நிரல்த் திட்டமும் பொதுவில் பலர் அறியாவிட்டாளும் !

அதன் செயல்ப்பாட்டை வரவேற்று  மக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல் என்பது ஊடாக மக்களிடம் போகும் விளம்பரம் அதிகம் இந்த நாட்டில்.

 இந்த சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அப்பாவி மக்களுக்கு வீடு கட்டித்தருதல் ,கல்விக்கூடம் அதனோடு கணனி சேவை வழங்கள். கழிவறை வசதி மேம்படுத்தல் ,மின்சார சேவை விரிவாக்கம் ,இளைஞர் பாசறை. வீதி புனரமைப்பு ,மொழிவளர்ச்சி. குறும்பட பயிற்ச்சி, வானொலி சேவை விரிவாக்கம், வானொலி பயிற்ச்சி  மேம்பாடு என்று பல்வேறு சேவை செய்தாலும் !

அதக்கு தகுதி வாய்ந்த அதிகாரிகள் என்று ஒரு சில சபலப்பேர்வழிகளை  இலங்கையில் தலைவர் என்ற மகுடம் சூட்டும் நிகழ்வுதான் இன்றும் போர் முடிந்த பின்னும் இலவச வீடமைப்பு என்று பெரியண்ணா இட்ட பிச்சைக்கு கூட உனக்கு வீடு தேவை என்றால் ! வன்னியில் இரவின் போது இந்த முகவரியில் சந்தி என்று இச்சையுடன் இனவாத ஆட்சியாளரின் ஆட்சிபீடத்தின் அதிகார மட்டத்தில் மூத்த அதிகாரி என்ற போர்வையில்  அலைவோருக்கு இந்த ஈழ இறுதி   யுத்தமும் ஒரு புதிய  வழிகாட்டிய வரலாறு பலர் பொதுவெளியில் அறியாத செய்தி ! அண்ணாவின் காலத்தில் இப்படி நாய்கள் ஓநாய்கள் போல ஊளையிட்டத்து இல்லை இரவில்..இச்சை இலவசம் என்ற போர்வையில்!



 ஆனால் அண்ணா எப்ப வோவார் தின்னை எப்போது காலியாகும் என்ற சபல கபடதாரிகளின் கட்டுப்பாடு இல்லாத அப்பாவிகள் மீதான எல்லை மீறல் பற்றி சாதாரன தொண்டு நிறுவன  ஊழியர் அதனை ஆதாரத்துடன் பொதுவில் பேச வெளிக்கிட்ட உணர்ச்சி  போராட்ட விளைவின் பிரதிபலன்  தான்  திட்டமிட்ட நம்மவர்கள் இனவாத கூட்டும் சேர்ந்து என் தோழி பூஜாவும் சர்வதேச ஊடகத்திற்கு புலனாய்வு செய்தி வழங்கும் ஊடகப்புலி என்ற சந்தேக போர்வையில் சிறைவைக்கப்பட்டாள் !



 ஊடகத்தின் நெளிவு .சுழிவு ,விலைபோகும் தர்மம் அறிந்த தம்பி பட மணிவண்ணன் போல பலதடவை பூஜாவிடம் இந்த வீன்வம்பு  உனக்கு வேண்டாம்  உன் எதிர்கால வாழ்வு சூனியம் போலாகிவிடும் .

பொதுச்சேவை செய்ய விருப்பம்  இல்லை என்று சர்வதேச தொண்டு நிறுவனத்துக்கு விடைகொடுத்து விட்டு . நிலாவே வா வெளிநாட்டில் இப்படி பாடலாம் என்று அலைபேசியில் சொல்லிய போது !

சரி அசுரன் உங்க  விருப்பத்தின் பேரில் மக்கள் சேவையைவிட்டு இனி வரும் வாரம் நல்ல  பதில் சொல்லுகின்றேன் .என்றவளிடம் இருந்து இறுதியுத்தம் முடிந்த பின்னும் இறுதி யாண்டில் 2009 இல்  எந்த பதிலும் அலைபேசி, முகநூல், நடிகன் தள பின்னூட்டம் என்றும்  வராத என் காதல் தேடல் தொடர்ந்த நிலையில்தான் !


என் முகநூலில் தனிச்செய்தியாக அந்த பத்திரிக்கை செய்தி கண்ணில் விழுந்தது விழியில் விழுந்தவை போல!

தொடரும் விழியில்.

5 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் உணர்வு புரிகிறது நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன் தோழர்...

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! படிக்க படிக்க வேதனைதான் வருகிறது சகோ! எப்போது வரும் முகம் பார்க்கும் நேரம்??? தொடர்கிறேன் சகோ!

”தளிர் சுரேஷ்” said...

தொடர்கின்றேன்! நடிகர்களை விட பாடியவர்கள் இசை அமைப்பாளர்களை அறிந்து கொள்ள நேயர்கள் விரும்புவது நிஜம்தான்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா

படிக்க படிக்க மனம் கனக்கிறது... தொடருங்கள்... த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-