25 April 2017

விழிகளில் வந்திடு கண்ணே! விம்மலுடன்..-3

முன்னர் விம்மல் இங்கேhttp://www.thanimaram.com/2017/04/2.html-


இனி....


இன்றைய அவசர பொருளாதார உலகில் இயல்பு மாற்றத்துக்கான  தேர்தலில் கூட வாக்களிக்க விரும்பாத வாக்காளர் போலவே   உறவுகளும் .

எனக்கு என்ன அவசியம் என்பது போல பலரின் அன்புக்கு மரியாதை செய்வதில்லை .ஆனால் நட்புக்கள் மட்டும் எப்போதும் தோல்வியுற்ற அரசுகளையும் அரவணைத்து செல்லும் ஐரோப்பிய  ஒன்றியம் போல எப்போதும் வாங்க வாங்க என்று கைகொடுப்பது புலம்பெயர்தேசத்தில் நட்புக்கள் மட்டுமே!

இந்த நட்புக்களினால் நல்லாக வந்தோருக்கு இணையாக வாழ்வில் துயரங்களையும் சுமப்பவர்களையும் இந்த பாரிசின் வீதியில் பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் பாடல் போல சிலரைக் காணலாம் .


அக்கரைச்சீமையிலே மனம் ஆடக்கண்டேனே பாடல் போல  இந்த வீதியில் எங்கும் தெரிவது நம்மவர்கள் முகமும் குரலுமே அதிகமாக.

மாலை 3 மணியின் பின் களைகட்டும் மெரினா போல சாயங்காலத்தில் மாலை 7 மணி வரை கலகலப்பாக இருக்கும் நகர்ப்புறம் பல்வேறு தேவதைகளுக்காக இங்குதான் கூடவேண்டும் தேர்தல் ஆலோசனைக்கூட்டம் போல .

 பாரிசின் மைய்யப்புள்ளியில் நட்புகளுடன் வாடகை அறையில்  வாழ்வோரின் பொழுதினைப்போக்குவோருக்கும். ,பாரிசின் நகர்ப்பகுதியில் சமையல்த்தளங்களில் இருநேரப்பணிபுரிவோரின்  தூரத்தில் குடியிறுப்பைக்கொண்டோர்களுக்கும் வேடந்தாங்கல் போல வசந்தகாலத்தில்.

இந்த வீதிகளில் நட்புகளுடன் உரையாடல் என்றாலும் ஒரு டீ சொல்லு நண்பா நாட்டு நிலை அரசியல் பேசுவது என்றாலும் வட்டிக்கு பணம் வாங்கும் விடயம் என்றாலும் பேசுவதுக்கான தந்தி பாண்டேயின் அரசியல் மேடை போல பிரபல்யமான இடம்.லாச்சப்பல் பகுதி .

இங்கு தான் சில மாதங்களுக்கு முன் எதிர்பாராமல் அவனைச் சந்தித்தேன் ! ஈழத்தமிழரை திடீர் என்று  ஐநாவில் சந்தித்த முன்னால் இந்திய அமைச்சர் அன்புமணி போல எப்படி இருக்கின்றீங்க மாத்தயா? என்று ! என்னை அவன் அடையாளம் கண்டுகொண்டான் எதிர்பாராமல்.போர்க்குற்ற விசாரணைக்கு நிச்சயம்   இலங்கை  அரசு பதில் கூறவேண்டும் என்று அவுஸ்ரேலியாவில் இருந்து ஐநா வந்த பாதிரியர் போல !

ஏன் மாத்தயா நீங்கள் இங்கே!  உன்னைப்போலத்தான் நானும் இப்போது வீதியில் நிற்கின்றோம்!பெருமூச்சு என்பது சில நேரத்தில் எல்லாவற்றையும் அசுவாசித்துக்கொள்ள எடுக்கும் வானொலி விளம்பர இடைவெளி போல! அது கடந்த காலம் !ம்ம் தாயகத்தில் விற்பனைப்பிரதி நிதி என்ற  கடமையின் செயல்ப்பாடுகள் நன்கு  அறிந்தவன்   கமலேஸ் !

அவனைப்பற்றிய தேடல் ஏன் எனக்கு வரவேண்டும் என்ற சிந்தனைக்கு காரணம் நேற்றய பொழுது வந்த அலைபேசியின் அழைப்பு!

அடுத்த பாடல் கேட்கும் நேயரின் இணைய வானொலி அழைப்பு போல அல்ல! ரிங் ரிங்  இது அர்ஜீன் கர்ணா பட  பாடல் அல்ல !முரளியின் ஒரு மணி அடித்தாள் போலவும் அல்ல !!முன்னைய தலைமுறை  சாதிமரப்பூச்சரமே போலவோ !!மோனிஷா மோனிஷா பாடல் போலவோ அல்ல!

என் கைபேசி அழைப்பு பாடல்!!!!


விம்மலுடன் விரையும்.....

5 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் நண்பரே

Angel said...

லாச்சப்பலும் லண்டனும் ஒரேமாதிரிதான் போல ..பஜ்ஜி வடை வாசனைலாம் வரும் லண்டன் வெம்பிளி பக்கம் ..

நீங்க சொன்ன அர்ஜுன் படப்பாடல் முரளி யின் டெலிபோன் மணி அப்புறம் ஜாதி மல்லி பூச்சரமே எல்லாமே நினைவு நீக்காமலிருக்கும் கானங்கள் ஆனா ஐஸ் பாடும் அந்த எங்கே எனது கவிதை ஐஸ் போல உருக வைக்கும் குரலும் நடிப்பும் அருமை

தொலைபேசி அழைப்பு நினைவுகளை கிளறி விட்டதா ..அவரை சந்தித்தீர்களா ..தொடர்கிறேன் பதிவை

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஓ லா ஷபேலில் சந்தித்தீங்களோ? லாஷபேலுக்குள் நடக்கும்போது ஊர் ஃபீலிங்ஸ்தான் வரும். ரோட்டோரமெல்லாம் நம்மவர் நின்று தமிழில் கதைப்பது கேட்க எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்துது.

நண்பனை சந்திச்சாச்சு??? இனி??? தொடருங்கோ..

வலிப்போக்கன் said...

ஓட்டுக்கு பணம் கொடுத்த ஓட்டு போடாத ஒறவகளும் ஓட்டு போட வரிசையில் நிற்கும் நண்பரே..............

Thulasidharan V Thillaiakathu said...

சந்திச்சுட்டாங்க...நாங்களும் தொடருகிறோம்....