27 June 2017

குரலற்றவன் குரல் ஒரு தேடல்!-1

புலம்பெயர் ஈழத்து  இலக்கியத்துக்கு பாரிஸ் அதிக பங்களிப்பை வழங்கியிருக்கின்றது! தொடர்ந்தும் வழங்கிவருவது பாராட்டுக்குரிய ஒரு விடயம். அந்த  வகையில் இவ்வாரம் பாரிசில் இன்னொரு இலக்கிய மலரினை கைகளில் பெறும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி எனலாம்


நேர்காணல்கள் இன்று  ஊடகங்கள் எங்கும் இடம் பெறுகின்ற ஒரு விடயமாகிவிட்டது .என்றாலும் இலக்கிய ஆளுமைகளுடன் நேர்காணல் செய்யும் போது பல சொல்லப்படாத மூன்றாவது கோணத்தில் இருந்து சமூகத்திக்கு  கருத்தாளம் மிக்க செய்திகள் வந்தடைகிறது


பாரிசில் வாழும் கோமகன் என்று இலக்கியவட்டத்தில் அறியப்படும் மூத்த படைப்பாளி தியாகராஜா ராஜ  ராஜன் அவர்கள் பல்வேறு சஞ்சிகைகளுக்காக தான் நேர்கொண்ட ஈழத்துப்படைப்பாளிகள் /புலம்பெயர் படைப்பாளிகள் என 14 பேரிடம் தொடர்பை ஏற்படுத்தி  அவர்களிடம் பெற்ற  பதில்களை தொகுத்து அச்சில் கொண்டுவந்து இருக்கின்றார் குரலற்றவன் குரலாக


இந்த நூல் இப்போது தாயகத்தில் பல இடங்களில் வெளியீட்டு விழாவைக்கண்டு கொண்டே வருக்கின்றது சிறப்பாக .


இனி வரும் நாட்களில் பாரிசிலும் வெளியீட்டுவிழா நிகழும் என்ற நம்பிக்கையோடு! தனிமரமும் காத்து இருக்கின்றேன் நேரம் ,காலம்  கூடிவந்தால் வாசகனாக கலந்துகொள்வதுக்கு


கோமகன். அவர்கள் வலைப்பதிவும் எழுதும் ஒருவர்-http://koomagan.blogspot.fr/

முன்னர் கோமகன் சிறுகதைகள் தொகுப்பை வெளியீடு செய்து இருந்தவர் அதன் தொடர் ஆர்வத்தில் தான் இந்த இரண்டாவது நூல் கைகளில் புரள்கின்றது

ஈழத்து இலக்கியத்தின் தாக்கம் அல்லது அதன் ஆராட்சித்தேடல் என்பது ஒரு வரையறைக்குள் அடக்கமுடியாத ஒருவிடயம் எனலாம்

மூத்தபடைப்படைப்பாளிகளுடன், இளைய படைப்பாளிகளையும் இணைக்கும் ஒரு தராசுபோல கோமகனின் நேர்காணல் நூலினைப்பார்க்கின்றேன்

நூலில் தாயக விடுதலைக்கு உயிர்கொடுத்த மாவீர்கள் முதல் சாதாரண அப்பாவி மக்களுக்கும் சமர்ப்பணம் செய்து தன் நேர்காணலுக்கு வாசல் திறக்கும் ஆசிரியர்.

 முதலில் கேள்விகளை இன்றைய ஈழத்து இளைய படைப்பாளி யோ. கர்ணன் அவர்களுடனான இலக்கிய ,சமூக ,கலாச்சார ,போரியல் முடிவு ,போரியல் இலக்கியம் அதன் மெளனம் அதன் குறுக்குவெட்டுக்கள் அதன் பின் இன்றைய தேக்க அரசியல் ,பின் நவீனத்துவம் அடிப்படைமக்களின் வாழ்வாதார நிலை ,அரசியல் தீர்வுத்திட்டம் ,இலங்கை ஆட்சியார்களின் நாடகம், புலம்பெயர் நிதிப்பாச்சல்முகநூல் , குறுபடம் பற்றிய பார்வை என்பன பற்றியும் கேள்விகள் என்னிடம் பதில்கள் உங்களிடம் இருந்து வரட்டும் என்ற தோரணையில் மிகவும் அதிகமான நேர்காணலை காலத்தின் தேவையை உணர்ந்து கேட்டு இருக்கின்றார். யோ . கர்ணன் படைப்புக்கள் ஏதும் இதுவரை வாசிக்கதோன்றவில்லை இனி தேடி தனிமரம் வாசிக்கவேண்டும் ஐயா!

ஒவ்வொரு பதிலையும் வாசகர்கள் தேடி வாசிக்க வேண்டும் .அவர்களின்  சுய பதில்கள் பற்றிய பன்முகக்கேள்விகள் இன்னும் பல கேள்விகளை புரட்டி புதிய மெருகூட்டலுக்கு இன்னும் இந்த நூலும் கைகொடுக்கும் ஒரு குறிப்பேடு இனி வரும் காலங்களில் நேர்காணல் செய்வோருக்கு. இந்நூல் ஒரு அச்சில் இருக்கும் ஆதார அட்டை போல ))). 11-26 வரை!

அடுத்த பக்கம்  -என் பார்வையில் (201-218) புலம்பெயர் தேசத்தில் வாழும் மூத்த படைப்பாளி இளவாலை விஜயேந்திரன்  அவர்களின் கவிதைத்துறை அனுபவம் ,அவர்காலத்தின் இலக்கிய போக்கும் ,அரசியல் புறச்சூழல் என்பவற்றின் இன் ஊடாக அக்கால வாழ்க்கை முறையும் அவர் போல பலர் புலம்பெயரக்காரணம் என்ன என்பன பதிவு செய்யப்படுகின்றது.

 அவரின் புதிய இலக்கிய வருகை பற்றி , தேக்கநிலை ,சோம்பல் ,எல்லாம் இந்த நேரடி முகத்தேடலில் நிறைய காத்திரமான கருத்துக்கள் பகிரப்பட்டு இருக்கின்றது


இலக்கியத்தில் திறனாய்வு என்பது ஒரு குருடன் யாணை பார்த்த கதை போல எனலாம் .தடவிக்கொடுத்தல், தாக்குதல் ,ஆரத்தழுவுதல் ,அறுத்து எறிந்து, அலட்சிப்படுத்தல் என்று ஈழத்து இலக்கியத்தின் ஆளுமைகளின் முகத்திரைகள் பற்றி இங்கே சொல்ல ஆயிரம் குற்றட்ச்சாட்டுக்கள் கொட்டிக்கொண்டே போகலாம் !

என்றாலும் இந்தப்பணியைச் செய்வதுக்கும் மொழி ஆளுமை ,வித்துவப்படிப்பு என்பனவும் தேவை எனலாம்.

 அந்த வகையில் நேர்காணலுக்கு பொருத்தமானவராக  .ஜேசுராசு (49- 61) அவர்களின் ஆளுமை ,அவரிடம் நூலாசியர் கேட்கும் இன்றைய அரசியல், சமூக /கலாச்சார, இலக்கிய பின்நவீனத்துவ போக்கு பற்றி பார்வைக்கு .அழகியல் பதில்கள் அதிகம் அலட்டாத ,சுருக்கமான பதில்கள் என்று நீண்டு செல்கின்றது .

முகநூல் முதல் வலைப்பதிவு , குறுந்திரைப்படம் பற்றிய பார்வைகள் எல்லாம் அலசப்படுகின்றது .சகோதரமொழி(சிங்கள) இலக்கிய வாசகர்கள் ,அவர்களின் மனநிலைப்பாடுகள் இலக்கியப்பாலம் , எல்லாம் கேள்விகள் கேட்டே ஒப்பாரி வைத்து இருப்பது பற்றிய நூலாசியரின் கேள்வி பதில்!

வாசிப்பு அனுபவத்தை கிரகித்துக்கொண்டே அடுத்த யார் என்று தேடல் கொண்டால் அங்கே

ஈழத்து இலக்கியத்தில் பிரபல்யம்  லெ.முருகபூபதியின் (62- 91) அவுஸ்ரேலியா புலம்பெயர் வாழ்வியல் , புலம்பெயர் இலக்கியம் , இலக்கியம் தான் அடுத்த யதார்த்த இலக்கியம் என்ற போர் முரசு கொடிய அதன் எதிர்வினைகள்  பெற்ற இலக்கிய கலகக்கார் , ஆளுமைமிக்க படைப்பாளி /ஈழத்து/புலம்பெயர் இலக்கிய பணியில் மூத்த படைப்பாளியின் இன்னொரு முகம் இது என்று  மூத்தவர் எஸ் . பொ முதல், கொழும்பு இலக்கிய முற்போக்கு, பின்போக்கு அணிகள் பற்றியும் .கூழ்முட்டை எறிந்த வரலாற்றுக்கதைகள் எல்லாம்  இலக்கிய கலகங்கள் பற்றி எல்லாம் நீண்ட தேடல் கேள்விகள் ஆசிரியருகும் ,எஸ் .பொ அன்புடன் அழைக்கும் முருகுக்கும் இடையில் உள்ள இலக்கிய உள்குத்துக்கள் பவணி வருகின்றது.

 அந்தக்கால இலக்கியம் கொஞ்சம் சுவாரசியம் மிக்கது காரணம் இந்த உரையால்களின் /கேள்விகளின் புறச்சூழல் பின்னனி இலங்கை கல்வியல்த்துறையிலும் உயர்தரத்தில் தமிழ் இலக்கியப்பாடத்தில் இருக்கின்றது எனலாம்கொஞ்சம் பள்ளிக்காலத்துக்கும் போய் வந்த  சுவாரசியம் .சுருட்டு குடித்தால் இலக்கிய போதை எப்படி இருக்கும் என்பதை என் பள்ளி தமிழ் ஆசானையும் சேர்த்தே நினைக்கின்றேன் )))வடக்கு ,கிழக்கு ராசி அப்படி)))

 மிகவும் நேர்த்தியான பல  சொல்லப்படாத கொழும்பு / வடமேல் மாகாண இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது . முருகுவின் நேர்காணல் ஆனால் அவரின் இன்னொரு மனநிலை பற்றிய ஆய்வு/தேடல் பற்றி சிந்தித்தவாறே!



இவை காலத்தின் தரவுகள் அடுத்த தலைமுறைக்கு எதைக்கொடுக்கப் போறோம் என்ற கேள்விக்கு புலோலியூரானின் கேள்வி பதில்கள் சிந்திக்கவைக்கின்றது. ஈழத்தின் மூத்தவர்களில் இடைநிலைப்படைப்பாளிகளில் ஒருவர்  புலோலியூரான்(156-183)  .அவரின் பன்முகத்திறமையும் ,அறியாத செய்திகளையும், தொழில்நுட்ப  விரிவுகளையும் ,அலசுகின்றார். கோமகன் அவர்கள் . நூல் ஆசிரியரின் வாசிப்பு பிரமிக்கவைக்கின்றது .

இன்றைய பெண்ணியம் பேசுவோரின் குரல்களாக இன்றைய புலம்பெயர்வாழ்க்கை , காதல், திருமணம், எழுத்துப்பணி, அரசியல் பணி, நவீன ஆய்வுமுறைகள் , முகநூல் இலக்கியப்போக்கு , போரின் பின் தாயக மக்களின் தேடல் வாழ்வியல், பெண்களின் கலாச்சார சீரழிவு நிலை  என்ற ஊடக கோஷங்கள், நிதிமோசடி செய்த புலம்பெயர் அமைப்புக்களின் தூரோகத்தன, ஈனச்செயல்கள் முதல்  இன்றைய முன்னால் போராளிகளின் அச்ச வாழ்வு வரை ! என இப்படியாக வளரும் சமூக தளங்களில் பெண் நிலை  ,என்ன நிலையில் இருக்கின்றது என்ற  நிவேதா உதயராஜன்  உடனான நேர்காணல் அதிக விடயத்தை அலசுகின்றது .241-265)


ஒரு வானொலியில் செய்தி வாசிக்கும் ஆர்வத்தில் அவர் பெற்ற நேரடி அனுபவம் எல்லாம் இன்னும் புலம்பெயர் ஊடகத்தில் நடக்கும் தில்லுமுல்லுக்களை வெளிப்படையாக அறிய முடிகின்றது.

மரபுக்கவிதை, பின் நவீனத்துவக்கவிதை ,ஈழத்து இலக்கிய விருதுகள்  ,இலங்கை சாஹித்திய அக்கடமியின் தேர்வுகளில் எப்படி உன்னை நான் சொரிகின்றேன் ,என்னை நீ பாராட்டு என்ற பிரதேசவாத நிலையை பகிரும் நேர்காணலாக சோலைக்கிளியுடன் (283-294)கேள்விப்பதில்கள் சோலைக்கிளிக்கு வரும் காதல் கடிதங்கள் என  நகைச்சுவையுடன் சிந்திக்கவும் ,சீர்தூக்கியும் பார்க்கவேண்டிய கவிதை மேடையைப்பற்றியும் இலங்கை  ,இஸ்லாமிய மக்களின் தமிழ்த்தொண்டுக்கள், கிழக்குமாகாண இஸ்லாமியர்களின் அரசியல் நிலைப்பாடு ,






 அவர்களிடத்தில் இருக்கும் சாதி நிலைப்பாடு முதல் இன்றைய நவீன வருகை முகநூலில் எழுதும் கவிதைகள் நிலை பற்றிய கேள்விக்களுக்கு சோலைக்கிளியின் கருத்துரை என குரலற்றவன் குரல் வாசிப்பு தேடலுக்கு ஒரு முத்துக்குவியல்!






இந்திய எலக்கிய கோமாதாக்களின்  மூத்திரம் குடிக்க ஆசைப்படும் ஈழத்து சிஹாமனிகள் பற்றி  தொடர்ந்து பேசலாம்)))

பகிர்வு நீண்டதால் அடுத்த பாகத்தில் குரலற்றவன் குரல் பற்றி சிந்திப்போம் . அதுவரை செவிக்கு இதமாக இப்பாடல்


3 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் படிக்க வேண்டிய நூல் நண்பரே
வாய்ப்புக் கிடைக்கும்போது அவசியம்வாங்கிப் படிப்பேன்
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

முக்கியமான இணைப்பு ஒன்று தந்தீர்கள்... நன்றி தோழர்...

M0HAM3D said...

நன்றி நண்பரே