- முன்னர் இங்கே-http://www.thanimaram.com/2017/06/1.html!
- ஆரம்பகால ஈழத்து மக்களின் போராட்ட நிலை உந்துதல், அதன் மீதான அடுத்த கட்ட போராளிகள் போராட்ட வடிவத் தாக்குதல் செயல்பாடுகள், இதனால் ஏற்பட்ட தடுப்புக்காவல் வாழ்க்கை ,அக்காலத்தில் சிறைச்சாலையில் ஏற்பட்ட வாசிப்பு அனுபவங்கள் முதல் ,இன்றைய பெண்ணிய செயல்பாடுகள், முகநூலில் ஏற்படும் கருத்துநிலை மாற்று ஆணாதிக்க வெறிச்செயல்கள் பற்றிய பல்வேறு நேர்காணல்களுக்கு புஸ்பராணியின் காத்திரமான பதில்கள் பலரிடம் நல்ல வரவேற்பை காணும் எனலாம். (129-144)!
- அவரைத்தொடந்து இலங்கையின் இன்றைய கவிதைப் படைப்பாடளி கருணாகரன் (93-128) அவர்களின் நேர்காணல் காலத்தின் தேவையுணர்ந்த ஒரு அரசியல் பொதுவெளிமேடைப்பேச்சு எனலாம் . முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெற்ற ஆயுதப்போராட்டம் அதன் பலாபலங்கள் , இந்திய உண்டியல் குலுக்கும் அரசியல்வியாபரிகளின் செயல்ப்பாடுகள் , புதிய அரசியல் யாப்புத்திட்டம் , போராட்ட வாழ்வியல், இலக்கிய முன்னேற்றச்செயல்பாடுகள் , புலிகள் காலத்தின் அச்சு செயல்பாடு வளர்ச்சி , ஈழம், இலங்கைப்பதிப்பாளர்களின் சந்தைப்போக்கு தென் இந்திய சந்தையில் நுழைந்துகொள்வதுக்கான செயல்பாடுகள் , மக்களின் மெளமான அரசியல் போக்கு , புத்திசீவிக்கள் என்போரின் நரித்தனமான செயல்பாடுகள் என அவரின் நேர்காணலின் இன்றைய வன்னி மண்ணின் அடிப்படைத்தேவைகள் ,வன்னி மக்களின் குடும்பங்களின் பொருளாதார சிக்கல், இளையோர் நிர்க்கதி நிலை ,போரின் நேரடிப்பாதிப்புக்கள், அநாதரவான சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் திடீர் வளர்ச்சியும், அதன் பின்னே இருக்கும் கொள்ளை இலாப நோக்க செயல்பாடுகள் ,சாதிய செயல்பாடுகள், இலக்கிய குழாயடிச்சண்டை என அவரின் ஆளுமையை நூலாசிரியர் அதிகம் வெளிக்கொணர்ந்து இருக்கின்றார் .
- அவரின் அரசியல் விழிப்புணர்வு பற்றி சிந்தித்துக்கொண்டே கடந்து யாரை நேர்காணல் கண்டார் என நோக்கினால் மூத்த இலக்கியப்படைப்பாளி சொ. பத்மநாதன்( 145-155) இவரின் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் ,போராட்டாச்சூழல் வாழ்வு அனுபவங்கள், சகோதரமொழி சிங்கள இலக்கியங்களின் போக்கு , ஈழத்துப்படைப்பாளிகளுடனான நட்பு விடயங்கள் .தலித்தித் இலக்கியம் என்ற வார்த்தை ஜால திணிப்பு , இன்றைய கவித்தைத்தொகுப்புக்கான தேவைகள், நவீன நாட்டார் பாடல்களின் நிலை, சர்வதேச. இலக்கியச்சந்திப்புகளின் தாக்கம் எல்லாம் தங்குதடையின்றி மொழி, இன, மதம், கடந்த வாசிப்பு நேசிப்பை பதிவு செய்கின்றது குரலற்றவன் குரல் .
- ஒரு நேர்காணல் வெற்றியடைய அதன் நேர்காணலுக்கு முகம் கொடுப்போர் காத்திரமான பதில் அளிக்க வேண்டும்.!
- அந்த வகையில் ஜேர்மனியில் இருக்கும் புலம்பெயர் படைப்பாளி பொ.கருணாகரமூர்த்தி-( 27-48).அவர்கள் தன் இலக்கிய சேவைகள் , இந்திய படைப்பாளிகளிடம் ஈழத்துப்படைப்பாளிகள் கவணிக்க வேண்டும், தூக்கிவிட வேண்டும் என்ற கையேந்தும் அரவணைப்பு அரசியல்ச் சொரிதல்,புலம்பெயர் வாழ்க்கையின் அடுத்தகட்ட செயல்பாடுகள் இனி வரும் கால இலக்கியத்தின் போக்கு என்பன நேர்காணலின் மையம் கொள்கின்றது.
- அத்தோடு கேசாயினி எட்மண்ட் (219-240) இலங்கையின் ஊடகத்தின் பன்முகத்தன்மை , பாதுகாப்பு நிலை தமிழர் மீதான அடக்குமுறை , இந்திய பெண்ணியவாதிகளின் சமூகத்தளக் கருத்துரைகளின் உடலரசியல் போக்கு நிலை !ஆணவக்கொலை பற்றிய கருத்துரைகளுடன் நேர்காணல் பயணிக்கின்றது.
- அதையும் தாண்டி க. சட்டநாதனின் இலக்கிய (266-282) பரந்துபட்ட வாசிப்பு, சிறுகதை அனுபவங்கள் புலம்பெயர் இலக்கியம், தாயக இலக்கியம், யாழ்மேட்டுக்குடி பண்டிதர்களின் விமர்சன ஜோடனைகள், இந்திய தலித் எழுத்தாளர்கள் பற்றி விடயங்கள் , புலம்பெயர் சினிமா என தன்கருத்துக்களை எளியமொழிநடையில் பதிலாக பதிவு செய்து இருக்கின்றார் .
- இத்தனை பேரிடமும் இலக்கியம் சமூக, கலாச்சார , போரியல் வரலாறு, உளவியல் உடனடி தீர்வுகள் நாடி என கோமகன் நேர்காணலை செய்து நூலினை சிறப்பாக தொகுத்தவருக்கு ஏனோ தன் தேடலில் ஏற்பட்ட பிற்சேர்க்கையை பின் இணைப்பு என்று ( 295-324 ) பக்கத்தினை ஒதுக்கியிருக்கின்றார்
- ! நூலினை பெற விரும்புவோர் அவரின் மின்னஞ்சலுக்கு தொடர்பை மேற்கொண்டால் காத்திரமான படைப்பை உங்களின் வசிப்பு பெட்டகத்தில் சேர்துக்கொள்ள முடியும்!koomagan93@gmail.com ./facebookhttps://www.facebook.com/thiagarajah.rajarajan
- என்ன நூலினை வாசித்து விட்டு அதில் உள்ள குறைபாடு எப்படி என்று சொல்லாமல்விட்டாள் கோமகன் தனிமரத்தை முகநூலில் பிளாக் செய்துவிடுவார்))) நீயும் ஒரு ஒத்தோடி என்று !
- என்றாலும் என் வாசிப்பு பார்வையில் ஆசிரியர் தொடர்ந்தும் கேட்டு சலித்துப்போன போர்க்கால தமிழ் மக்கள் மனநிலை பற்றியும் ,இனவாத ஆட்சியாளர்களின் நம்பிக்கையீனச்செயல்பாடுகள் , மக்களின் அசட்டையீன அரசியல் செயல்பாடுகள் என்று மீண்டும் மீண்டும் பலரிடம் நேர்காணல் கேட்பது போலவே !
- ஈழத்து இலக்கியத்துக்கு தலித்தியம் என்ற நவீன வார்த்தையை அதிகம் திணிப்பு செய்ய முயற்ச்சிப்பவர் போலவே தோன்றுகின்றது!
- காரணம் ஈழத்து இலக்கியத்தில் தலித்தியம் என்ற வார்த்தையைக் விட பஞ்சமர் நாவல் எழுதிய கே. டானியல் என்றே இந்த சாதியப்பார்வையை ஈழத்தில் பேசிவிட்டார் . அவரினைப்போல மல்லிகை ஜீவா செ. யோகநாதன், எஸ் .பொ ,நந்தி என பலர் இந்த சாதியப்பிரச்சனையை நாவல்களாக படைத்து என்றோ முன்னனியில் இருக்கும் நிலையில் அண்டை நாட்டு தலித்தியம் என்ற வார்த்தையை இப்போது சிலர் புலம்பெயர் தேசத்திலும்/ தாயகத்திலும் மீள உருவாக்கம் செய்ய முயல்வது என்பது தேவையற்ற ஒரு செயல் எனலாம்
- . சட்ட நாதன் இதனை ஆணித்தரமாக பதிலை பகிர்ந்து இருக்கின்றார்!
- குறைபாடுகள் சொல்லத் துணிவது இவையும் எதிர்காலத்தில் கருத்தில் எடுக்கத்தோன்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்றிவேறில்லை .
- தமிழத்தின் இலக்கிய பாதை வேற தாயக/புலம்பெயர் வாழ்வியல் அனுபவங்கள் வேற என்பதை நன்கு நூல் ஆசிரியருக்கு புரிந்தாலும்!
- ஏன் மூத்த படைப்பாளிகள் போல தென் இந்திய படைப்பாளிகள் தங்களை பாராட்டி/அடையாளப்படுத்தி /குஞ்சம்கட்டி/பான்னாடை போர்த்தி /இனங்காட்டப்பட வேண்டும் என்று ஏன் இன்னும் புகழ்போதை என்னும் தேரினை இழுக்க வேண்டும் ?என்று ஆசைப்படுவதை தவிர்க்க முடியவில்லை .
- ஒரு ஜெயமோகனும், ஒரு ராமகிருஸ்ணனும், ஒரு ஜெயகாந்தன், ஒரு அம்பை, ஒரு வைரமுத்து, ஒரு தாமரை புகழ்வதால் இவர்களின் படைப்புக்கள் தரமாகிவிடும் என்ற மாய ஒளியை தேடி இன்னும் எத்தனை காலம் தான் ஓடப்போகின்றார்கள் ஈழத்து/இலங்கை/புலம்பெயர் படைப்பாளிகள்?.
- நூலாசியரின் நேரகாணலின் பதில் கொடுத்தவர்கள் சிலரின் மனநிலை வலைப்பதிவு பதிவுகள் பற்றியோ/ முகநூல் பற்றியோ போதிய தெளிவான பார்வைக் கொண்டிருப்பவர்கள் அல்ல என்பது புலனாகிறது. வலையில்/முகநூலில் எழுதும் பல அற்புதமான எழுத்தாளர்களை இவர்கள் சிரித்துக்கொண்டே கடப்பதை அவதானிக்க முடிகின்றது!
நூலாசிரியர் தலித்தியத்துக்கும், இலக்கிய குழாயடிச்சண்டைக்கும் முன்னுரிமை கொடுத்தவர் ஈழத்து /புலம்பெயர் படைப்பாளிகளின் நூல் வாசிப்பை பட்டியல் இடுபவர்கள் யோ கர்ணன், கரணாகரன் , அ. ஜோகராசு தவிர ,மற்றவர்கள்
மலையக இலக்கியம் பற்றியோ ?வடமேல் மாகாண இலக்கியம் பற்றியோ? கிழக்கிலங்கை இலக்கியம் பற்றியோ? இன்று நாளந்தம் வெளியீடு காணும் நவீன படைப்பாளிகள் பற்றியோ ?
திக்வெல கமால் முதல்!
அந்தனி ஜீவா, மாத்தளை சோமு, மாத்தளை கார்த்திகேசு, கம்பவாரிதியின் இலக்கியபணி முதலானோர் பற்றிய நினைவுக்குறிப்புக்களை கூட பதிவு செய்ய முன்வாராத சிந்தனை வளர்ச்சி பெறாத /பிரதேசவாத நிலைக்குள் /பதுங்குழி கட்டிக்கொண்டு அல்லது நாம் இன்னும் குண்டுச்சட்டிக்குள் நின்று கொண்டு பிரெஞ்சு இலக்கியம் முதல் வங்க/ ரஸ்யா, ஆப்பிரிக்கா இலக்கியத்துக்கு ஒளிபிடிக்கும் மனநிலையை எப்போது மூத்த படைப்பாளிகள் என்றாலும் ,இன்றைய படைப்பாளிகள் என்றாலும் எப்போது தேர்ந்த கட்டுடைத்த படைப்பாளிகள் வட்டத்துக்குள் பிரவேசிக்கப்போகின்றார்கள்?
திக்குவல்லை கமால்-
அந்தனி ஜீவா, மாத்தளை சோமு, மாத்தளை கார்த்திகேசு, கம்பவாரிதியின் இலக்கியபணி முதலானோர் பற்றிய நினைவுக்குறிப்புக்களை கூட பதிவு செய்ய முன்வாராத சிந்தனை வளர்ச்சி பெறாத /பிரதேசவாத நிலைக்குள் /பதுங்குழி கட்டிக்கொண்டு அல்லது நாம் இன்னும் குண்டுச்சட்டிக்குள் நின்று கொண்டு பிரெஞ்சு இலக்கியம் முதல் வங்க/ ரஸ்யா, ஆப்பிரிக்கா இலக்கியத்துக்கு ஒளிபிடிக்கும் மனநிலையை எப்போது மூத்த படைப்பாளிகள் என்றாலும் ,இன்றைய படைப்பாளிகள் என்றாலும் எப்போது தேர்ந்த கட்டுடைத்த படைப்பாளிகள் வட்டத்துக்குள் பிரவேசிக்கப்போகின்றார்கள்?
வாசிப்பு தேடலுக்கு இனவாத யுத்தம் , தணிக்கை செய்து இருக்கலாம் .போரியல் சூழ்நிலையில் போதிய நூல்கள் கைவசம் கிடைக்கப்பொறாமல் போய் இருக்கலாம் ,ஆனால் இலக்கிய சந்திப்புக்கள், நூல் திறனாய்வுகள் என்று இன்னும் ஈழத்து/இலங்கை/ புலம்பெயர் அச்சு ஊடகங்கள் வாரயிறுதி வெளியீட்டில் இன்னமும் பகிர்வதைக்கூடவா இந்த ஜாம்பாவாங்கள் என்று மார்தட்டுவோர் புத்திசீவிக்கள் /மொழிபெயர்ப்பாளர்கள் திறனாய்வு செய்வோர் சொல்ல முற்படாத /அறியாத பக்கம்!
எனினும். இன்னும் நேர்காணல் துறையில் கோமகன் ஐயா பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் போல தெரிகின்றது .
இன்நூலினை பலர் எழுத்துப்பிழை திருத்தி இருப்பார். மிகமுக்கியமான இலக்கிய வழு என்பது (கருணாகரமூர்த்தியின் பதில் பகிர்வு )குற்றாலக்குறவஞ்சியில் வரும் நாயகி வசந்தவல்லியா ? வசந்தசவுந்தரியா ?என்பதை ஆசிரியர் தெளிவு படுத்தினால் என் சிற்றறிவை விரிவு படுத்தலாம்))) பக்கம்(38)
மேலும் 151 பக்கத்தில் வரும் குறிப்பால் உணர்த்துதல் என்றுவிட்டு கொடுக்கப்படும் உச்சாத்துணை நூல் பற்றிய எழுத்துரு என்னவோ? நற்றினையா அல்லது குறுந்தொகையோ?
மிகவும் இந்த இலக்கணவழு நூலில் களையப்படவேண்டும்!
இன்னும் பல நேர்காணலை தன் பொருளாதார தேடலுக்கு இடையிலும் தமிழ் நேசிப்பின் ஆர்வத்தில் கோமகன் ஐயா தொடர வேண்டி! வாழ்த்தி ,வணங்கி இப்பூச்செண்டை பரிசளிக்கின்றேன் தனிமரம் வலைசார்பில்-
--------------------- கோமகன் ஐயா மலையக நேர்காணலை கவ்வாத்து நூலாசிரியர் தெளிவத்தை ஜோசப் முதல் பலரை இலக்கியத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஒரு சாமானிய வாசகன் தனிமரத்தின் சிறப்பு பாடல் இது)))
--------------------- கோமகன் ஐயா மலையக நேர்காணலை கவ்வாத்து நூலாசிரியர் தெளிவத்தை ஜோசப் முதல் பலரை இலக்கியத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஒரு சாமானிய வாசகன் தனிமரத்தின் சிறப்பு பாடல் இது)))
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
3 comments :
இணைத்துள்ள இணைப்பிற்கு நன்றி ஜி...
நன்றி நண்பரே
இம்முறை பதிவை நேரம் ஒதுக்கித்தான் படிக்கோணும் தல... பக்க வடிவமைப்பையும் எழுத்துக்களின் அளவையும் கொஞ்சம் கவனியுங்கோ
Post a Comment