08 May 2019

நீ—நிறவெறி!

நீஎன்றும்போல
நீர்ப்பறவையோ?
நிலையில்லாதேடலின்,
நிம்மதிதொலைந்த
நிலாமதியின்முகநூல்
நிலைத்தகவலில்
நீயே 
நீயாபடநாயகிபோல!
நீண்டசரகுஉலர்த்திய
நிலத்தில்வீசிய,
நீலிக்கண்ணீர்வடிக்கும்
நித்தயகல்யாணிப்பூப்போல
நீர்வேலிவாழையின்
நீர்ப்பரப்பிலும்,
நீண்டகாலத்தடங்கள்.
நீலஉடைதாரியின்
நீலம்பாயந்த 
நீறுபூசியவதனத்தில்
நிலத்தடிவெடியில்
நீயுரைத்தசெவ்விகளை
நீனாவின்குரலில்
நீயில்லாதமேமாதத்தில்,
நீதானேஎன்பொன்வசந்தம்என்ற
நீலச்சட்டைக்காரணும்
நீட்டிமுழங்கிய 
நீபாதிநான்பாதிபோல
நீயும்என்னில் 
நீராவிபோலகொதிக்கும்
நீதேடிய 
நீர்கொழும்புவாசகனும்
நிம்மதியிழந்த
நீர்த்திவலையுடன்,
நீலமும்சொல்லியது
நீயேதிவிரவாதிஎன்ற
நிறவெறியுடன்!))))
(யாவும்கற்பனை)

30 April 2019

புதியமுகம்!

மாற்றம் ஒன்றே மாறாத
விதிஎன்பதுபோல இணையத்தில் தனிமரம்.org., தனிமரம்.com என்றெல்லாம்உங்களை நாடிவந்த தனிமரம்காலநதியில் கடன்காரன்ஆனதுபோல இந்த டைமனும்என்கைவிட்டப்போய்விட்டது.
இணையத்தொடர்பை மாற்ற ஏற்பட்டகாலஅளவுக்குள்.))) 

இருந்தாலும் என் எழுத்தார்வம் ஓய்வுநேரங்களில்  தொடர்ந்தும் பயணிக்கும் உங்களின்அன்பு தொடரும்வரை.

இதுவரை தனிமரம்.com. என்று தேடியவர்கள்.
இனி இந்த முகவரியை https://thanimaramnesan.blogspot.com/2019/04/blog-post_29.html .கூகிள்ஆண்டவரிடம் விசாரத்தால்உங்களை என்வாசல்தேடிஅழைத்து வருவார் என்ற நம்புக்கையுடன் நானும் காத்திருக்கின்றேன்.))) 

சில தவறுகள் தொடர்வது சோம்பல்அசட்டையீனம்,மட்டுமல்ல,வங்கிஅட்டையில் ஏற்படும் மாற்றங்களையும் கவனிக்க மறந்து விடுவதால்தான்! 

போவது எது என்றாலும் தனிமரம் என்ற சொல்மட்டும்விரும்புகின்றேன் படசினேஹாபோல கொம்புமுளைத்த முயலே என்னைக்குத்தாதே என்றுபாடவைக்கின்றது!)))

மீண்டும் இதே இடத்தில் இருந்து தனிமரம் கிளைபரப்பும் உங்களுடன்!



என்றும் நம்பிக்கையுடன்,
ஏதிலி,
தனிமரம்
பாரிஸ்.
30/4/19

29 April 2019

கண்ணீர்

கவிதையும்கண்ணீர்வடிக்கின்றது!
கடவுளின்பெயரால்
களப்பலிகேட்கும்
கயவர்கள்கண்ணில்!
கைக்குழந்தையும்
காணாததாய்மைக்கும்
கட்டியவெறிப்போதை
கட்டில்ச்சுகம்தந்ததோ?
கலந்தபாலில்
கடும்நிலைதவறியதோ?
கல்நெஞ்சம்கொண்டதோ?
காற்றலையில் 
கருகும்வாசம்!
(யாவும்கற்பனை)
—//

----------------------------------------
கந்தகவாசம்என்பதை
கடல்கடந்தவனும்
கண்ணீருடன் 
கடும்தணிக்கைசெய்தேன்!
கடும்யுத்தம் என்றபோர்வையில்
கண்ணீருடன்
கடும்பணியிலும்
கடும்குளிருடன்
காத்திருந்தோம்
கடவுள்போலவாருங்கள்
கைகூப்பிவரவேற்று
கையறுத்தது 
கருணாநிதிதேசமும்!

(யாவும்கற்பனை)



10 April 2019

சந்தேகம்!!!!

இலங்கை என்ற தேசத்தில் இன ஐக்கியத்தை காக்க வேண்டியவர்கள் எல்லாம் மத, இன,மொழி வாதங்கள்  என்ற கொடிகளின் ஊடே அரச கவசங்கள் போர்த்திக்கொள்வதானால்அப்பாவி மக்கள் தினமும் அவலத்தில் வெந்துவெடிப்பதை உணராதவர்கள் பலர்

எனிலும் காலத்துக்கு காலம் இன ஜக்கியம் வலியுறுத்தி எடுக்கப்பட்ட முன்னேற்ப்பாடுகள் திட்டமிட்ட அரசியல்ப்பிறழ்வுகளினால் சீரழிக்கட்டதும் கடந்த கால வரலாறுகள்

இனவாதவெறியை இறுக்கத்தழுவிய அரச தலைவர்கள் பல இத்தேசத்தில்.

 இன்றும் தேசிய இன ஐக்கியம் பேனமுடியாதவாறு பலரின் அரசியல் சுயலாபத்தினால் சீர்கெட்டுக்கிடப்பதை பேசவேண்டிய ஊடகங்கள், தன்னலத்தினால் தம் குடும்பத்தை வளர்த்துக்கொள்வதை அவதானிக்க முடியும்

இருந்தும் சில நல்ல உள்ளங்கள் இலங்கையில் இன ஜக்கியம் தொடர்ந்தும் அவசியம் என்பதை துணிந்து  பொதுத்தளங்களில் கூறிவருவதையும் அவதானிக்கலாம்.

கடந்த வார இலங்கை அரசவிருது விழாவில் தமிழ்க்கலைஞர்களின் முயற்ச்சிக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி பொதுத்தளத்தில் அதிகம் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் புலம்பெயர் தேசங்கள் நோக்கியும் கருத்தாடல்களாக முகநூலில் தொடர்ந்தும் பகிரப்பட்டதையும் , அக்கருத்துக்களை முகநூலில் நோட்டம் பார்க்கும் சூழல் தனிமரத்திற்கு கிடைத்தது வாரயிறுதியில்.

 அதன் வெளிப்பாடே இப்பகிர்வு! இன ஜக்கியத்துக்கு இயன்றளவு கைகொடுப்போம் இதயசுத்தியுடன்


முயற்ச்சிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும் !

காட்சியினை ரசிக்க இங்கே-------







26 March 2019

எதிர்பார்ப்பு!

சிலோனில் இருந்து பலகுரலில்
சிங்கை வீதிகளில் சிரித்து
சின்னவயது கங்காரு தேசத்தில்
சிந்திய நினைவழியாநாட்களில்
சிற்றின்பம் கண்டு !

சிரான்கூர் சாலைகளில்
சீக்கிரம் சாப்பிடும் இலண்டன்
சில வியாபாரம் செய்திகளுடன்,
சிந்தனை டென்மார்க்கில்!
சின்னத்தளபதி தெறியுடன்.
சிலகாலம் சிக்கனம் என்று
சிலபெயர் மாறி 
சிலோனிற்கு பிடிக்காத
சிற்றரசு பெரியாண்ணாவுடன்
சிரித்துக்கொண்டே முகநூலில்
சிறு விண்ணப்பம் நீண்டது அபினயம்!))
சின்னமச்சாள் வாழ்க்கைப்பட்ட
சிறந்தநாடு என்ற கனடிய மண்ணிலும்
சிரிக்கும் சில குயில்கள்
சின்னக்கைபேசியில்
சினிமா பாடலுடன்,
சிந்தனை என்னும் வானொலியோடு
சிலகவிதைகளும்,
சிந்திய கண்ணீர்த்துளிகளும்,
சிலருக்கு இன்னும் ,
சீர்கெட்ட ஈழத்து 
சிலுசிலு கதிரை போலத்தான்!
சீக்கிரமே கட்சி மாறும்
சிறந்த ஐநா விருந்து 
சீக்கீரம் கிட்டடும்!)))


சிந்திக்கின்றேன் காற்றலையில்
சில கவிதை தீட்ட!))

(யாவும் கற்பனை)



05 March 2019

வசந்தம் வருமா?!!!

வார்த்தைகள் கொண்டு
வாரியனைப்பேன்
வசந்தகாலத்தில்
வரிக்கு வரியாக
வந்திடாதே
வாசலில் ஒரு கோலம் போல!)))
வந்தாள் மகாலட்சுமி என்றெல்லாம்
வந்தாரை வாழவைக்கும்
வடக்கும்கிழக்கும்,





வார்த்தைகளில் வாக்குகேட்ட
வாத்தியார்கள் எல்லாம்!
வசதியான அறைகளில்
வாதாடும் வங்குரோத்து,
வக்காளாத்து,
வாடியோர் முகங்களில்
வரவில்லை இன்னும்
வானவில் போல
வரலாற்றுச்செய்தி!



வந்து போகும்
வதனங்கள் எல்லாம்
வட்டமிடும் அரசியல்தானோ?



வருகின்ற மேடையும்,
வரப்பிரசாதங்களும் ,
வலிந்த தீண்டல்களும்,
வடைவிற்கும் அப்பக்கூட்டணியின்
வட்டமேசைதானா?
வாருங்கள் ஜெனிவாவிற்கு!

வாடும் உறவுகளின்
வாழ்வாதரக்கேள்விகளில்
வார்த்தையும் விக்கி நிற்கின்றது!

(யாவும் கற்பனை)