15 November 2020

கவிதைகள் !

 கைகூப்பி 

கைவிட்டு

கைகூப்பி 

கைவிட்டு

கைத்தலம்பற்றி

கைலாகு கொடுத்து

கைதிகள்  ஆராய்வு  என்ற

கைகட்டிய  கதறல்கள்

கையொப்பம்  இட்டவர்கள்

கையேந்தி  வம்ஷம்  போல

கையாலாக  கதைகளையும்

கை  நணைப்போம்

கை  கொடுக்கும்  கை  படம்போல

கைதான   வீட்டுச்சிறையில்!



///--------------------------------------------------

பார்த்ததும் பகிடிவிட்டதும்

பாதம்  பிடித்ததும்

பல்லிழித்ததும்

பார்த்து   வியந்ததும்

பல்லாங்குழிப்   பாடல்   போலவும்

படிஏறியுதும்!  

பாதாம்   மிதியாமையும்

பட்டறிந்தததும்!

பரிதவித்தததும்!

பார்த்து  அழுததும்

பாதை  மாறிய20   சரத்து   போல

பாளுமன்ற

பதவி  மாற்றம்  போல

பார்த்து   இருக்கின்றேன்!

பாவை   உன்வாழ்வையும்

பதுளை  நேயர்பாடல்  போல






பட்டிதொட்டி   எங்கும்

பட்டை  கிளப்புமா?

பார்த்தாலே   பரவசம்!

பாருங்கள்   திருந்தாத

பரதேசி   வாழ்வையும்!

படம்பிடிப்போம்!( யாவும்கற்பனை)



------------------------------மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம் உறவுகளே!   

நன்றிகளுடன்

 தனிமரம் நேசன்

.------------------

22 October 2020

என்னை செதுக்கியவள்!

 என்ன பார்வைஇது?



----------------------------

என்னையும்  செதுக்கிய 

என்றும் அன்புடன்நாயகி  போல,

ஏழைஜாதி   அரசியல்போல,

ஏதிலியும்   எட்டிப்பார்க்கின்றேன்!

எதிர்வரும்   மாதத்தில்

எங்களுக்கும்   கலியாணம்!

ஏறிட்டேன்!

என்ன  தொழில்சாருக்கு?

என்ஜினியர்   இல்லையோ?

எக்கவுண்டன்?

எலற்றீசியன்!

எதிர்கால   அரசியல்வாதி?

என்போல  ஏற்றதொழிலில் 

எச்சில்கோப்பைகழுவும்

எங்கசெப்  முன்னால் 

எதுவும்   முகத்தில்   இல்லை!

எருமைமாடு   மேய்ப்பவனுக்கும்

என்னவளே? நங்கைக்கும்!

எழுத்துப்பதிவு   என்ற

எழுத்தோவிய   அட்டையில்

எவனோபெயர்!

என்றோ  உடைந்த 

எகிப்து  ஆட்சியும்

எல்லோரும்   சிதைத்த  வடகிழக்குபோல

என்னத்தைச்   சொல்லகன்னையாவும்

என்றோ!  மறைந்தார்!

என்ற   தகவலும்

என்னிதயம்   போல 

என்றாலும்!   வராத 

எனக்கே   நீ   சினிமா  பாடல்போல





என்றாலும்   வரவேண்டும்!

எருமை   மாட்டுத்தயிரும்

எங்கள்   நாட்டுரொட்டியும்

எல்லோரும்     போற்றும்

என்உயிர்தோழன்!

எங்களிடம்   சொல்லாத

ஏதோ   ஒரு    ஏக்கம்

எடுத்து    வரஆசை

எனக்கும்     இணையம்/

என்விருப்பம்   என்று

எந்த   நிகழ்ச்சிக்கும் 

என்னால்    வரமுடியவில்லை

என்காதலி    ஐபோனுக்கும்

ஏழரைச்சனி!




எங்கசாதகம்   எல்லோருக்கும்   பொருந்தாது!))

எங்ககட்சித்   தலைவருக்கும்

எங்க   அழைபேசிக்கும்

எனோ?   பச்சை   வாகனம்!

என்றாலும்!

நான்பச்சைக்கதிரைக்காரன்!

ஏம்பாட்டு   ஏம்பாட்டு

எசப்பாட்டு   மட்டுமே!))

எல்லோரும்  வாழ்த்த   வாங்க

என்சுவச்காற்றில்!))




(யாவும்கற்பனை)







07 September 2020

வந்ததாம் கொர்னா!

 வசந்தகால அறுவடையில்தான்

வானில்     இருந்தும்

வடக்குத்தேசத்தில்     இருந்தும்

வரிந்தி  கட்டிக்கொண்டு

வந்தார்கள்!

வரியுடையில்!

வளந்தவர்கள்

வரிப்புலியுடையில் 

வந்தார்களா   என்று?

வடக்கில்   முரசெலியும்

வந்தகதை   அறியாத 

வடக்குஅரசியல்

வரிசையில்எழுதலாம்

வருவாயா?





வராதே!

வந்தால்   தீக்குளிப்போன்

வசந்தம்போல   காதலும்

வருடிய   காதலும்

வருடக்கணக்கில்

வதைமுகாமில்!



வடிவாய்ச்சொல்லு

வந்து கேட்டவர்கள் 

வதனமுகத்தில்

வகிபாகம்   என்ன

வராத  பாடல்கள்போல

வரும்  தொடர் 

வருடும்   வாழ்வில்

வசந்தவாசல்    போல

வரும்   அரசியலமைப்பு  வெற்றிலை

வசியம்   செய்யாத

வரட்டுக்   கெளவரத்தில்

வதங்கியபயிராக!))!


வரலாறும் கூறும்

வந்தது  ஒருசந்தனம்

வசியக்காரி   வசியக்காரி

வடஜப்பான்   யாசிஅக்காசி

வடிவழகன்   எரிக்சொல்கைம்

வன்னி   வந்த   விஜய்நம்பியார்

வந்து   போன   பிரானாப்முகர்ஜி!

வந்ததாம்  கொர்னா!





வரவில்லை   இன்னும்

வரலாற்றுத்    துரோகிகளுக்கு

வந்திட்டவில்லை   கொர்னா!(

வயல்   எரிந்தவலிகளுடன்

வருகின்ற   ரயிலில்

வரும்பாடல்   இது!

வரிக்குதிரைப்படத்தில்

வந்தாள்   காவேரி!

(யாவும் கற்பனை)

-------------------------------------            



-------------------------------------

29 August 2020

கடைசி ஆசை!

 


கவிதை வரும் என்று காத்திருக்கும்
கண்டிநேயர் போல!
கடும்பனியிலும்,
கடுகதியில்
கண்ணுறங்கும்
கணக்கு வாத்தி மகனே!
கந்துவட்டிக்கு கடன்வாங்கி
கல்விப்புலவு என்ற போர்வையில்
கடல்கடந்த
கதிரைக்கட்சிக்காரே!
கண்ணீருடன்
காதல்சுகமானது நாயகியின்
கதை சொல்லி
கள்ள ஓட்டுப்போட்டு
கட்சிமாறிய
கங்காணியின் கதை
கடிதம் போல வரையாத
கல்நெஞ்சக்காரணே!
கணபேர்கள் சங்கிமிக்கும்
கதிர்காம யார்த்திரைக்கு
கலகலப்பு பாடல் போல,
கடவுச்சொல் மறந்த முகநூல்
களவாணியே!
கனவுகலைந்த காதலுடன்
கடைசிமுறை கேட்கின்றேன்
கல்வீட்டுத்திட்டத்தில்
கனஹாவுக்கு ஒரு காணியும்,
கம்பளிப்பூச்சிக்கு ஒரு கைச்சைக்கிளும்,
கட்டையில் போகையில்
கல்லூண்டாய்வீதிக்கள்ளும்,
கட்டைச்சுருட்டுக்கு ஒரு
கண்ணீர்க்குவலையுடன்
கண்ணேதிரே தோன்றாதே!
கலகலவென ஓடும்
கதிர் போல நீயும்!
கம்பளை ரயிலில்
கண்ணீருடன் போகாதே!
கடைசியாசையில்!
கடலில் ஒருத்தி
கனத்த கடிதத்துடன்!
(யாவும் கற்பனை)
-------------------------------------------------------------------------------------------------------------------------------







05 July 2020

தூற்றல்!!!

துள்ளியமாடு பொதி சுமப்பது போல
துள்ளித்திருந்தான்!
துவண்டு போனானோ?
துத்தத்திரி!
தூக்குகாவடி தூக்கிய
தூய நட்புகள் எங்கே?
துன்னாலைக்கள்ளுபோல
துடைத்தெரிஞ்சாசோ?
துள்ளித்திரிந்தகாலம்
தூரல்நின்று போச்சு
துர்கா தியேட்டரில்

தூக்கிய சீடி
துடைத்தெறிந்த கதைகளுடன்,
துழையிட்ட மூங்கில் எறும்பு போல
தூக்குக்கைதி போல
தூக்கி எறிந்த,
தூரதேசக்கனவுகளில்
துளிவிட்ட
துப்பரவுப்பணியாளன்!
தூரோகியானான்!
தூங்காத தேர்தலில்
துவங்கிய கட்சியில்
துக்கம் விசாரிக்க
துனைமுதல்வர் ஆணைக்குழுவில்
தூக்கிவீசப்பட்ட ,
தூர்நாற்றத்தில்
தூக்கம் கலைந்தது!


தூக்கில்தொங்கிய காதலியே
துங்கிந்தை அருவியில்
துதிப்போமா?
துடிக்கும் இதயத்துடன்!
( யாவும் கற்பனை)

-----------------

22 June 2020

திமிர்.

கல்வி கற்காத பாட்டியும்
கற்பகம் படம் போல
கண்ணக்குழியழகி  விஜயா போல
கடன்வாங்கி
காணி உழுது
கற்பித்தால்
கனிமொழியை !
கற்றோர் என்ற சபையில்
கணீர் என்ற குரல் கேட்கும் ஆசையில்
கண்டிவரை போய்
கலைப்பட்டதாரியானதை
காட்சிப்படம்
கலைநயத்துடன் மின்னியது
கந்தையா வீட்டில்!
கருப்பு என்றாலும்
கஸ்தூரி மஞ்சல் போல
கலியாணச்சந்தையில்
காத்திருந்தாள்!


கற்றதகுதிக்கு எவருமில்லை ஈடாக!
கணக்கப்படிச்ச திமிருடன்!
கனபேர் அறியாத
கருப்பையா மகன்
கணக்கப்பிள்ளை கண்டியில் !
கல்லாதவன் என்று
கழட்டிவிட்டவன் மச்சான்
கலியாணத்தில் ஓடிய
கலியாண அகதிபடம் போல!
கற்றது தமிழ்படம் போல
கருப்பையா பேர்த்தியுடன்
கணக்கப்பிள்ளை
கடுகண்ணாவில் கொல்லப்பட்டதும்,
குழந்தை அவளுக்கு மாமி
கனிமொழி உறவில்!
கடும்யுத்தம் என்று
கட்டுநாயக்கா தாண்டி
கண்கான தேசம் போனாள்
கற்றுவிட்டேன் பலதகுதி,
காலம் எல்லாம் முதிர்கன்னி!
கடும்பணி செய்வேன் என்ற
காணிவித்த காசுடனும்,
கவியாணம் கானத
கடும் மனச்சுமையுடனும்,
கண்ணீரில் தவித்த
கற்பகம் பாட்டியை
கந்தாளாயில் விட்டு!
கடும் விசாரணையின் பின்
கனடாவில் அடைக்கலம்!
கற்பித்தால் தன் மருமகளுக்கும்
கல்விக்கு ஏது முற்றுப்புள்ளி!
கண்ணக்குழியழகி
கனிஹா போல நீயடி! என்
கண்பட்டுவிடும் செல்லமே!
காதல்சுகமானது நாயகி போல
கவிதைக்கு கற்பனை போல
கட்டிளம் பருவத்தில்
கனகுறிப்புக்கள்,
கடகடவென
கதிரை ஆட்சிட்கு வந்தது போல
கற்ற பையன்,
கடையிருக்கு,
கணக்காளர்,
கலைஞர் என்றெல்லாம்,
கரம் பட்டது!


கணித்த பஞ்சாங்கள் எல்லாம்
கனபொருத்தம் இருக்கு!
காத்திருங்கள்!
கல்விகற்கின்றாள்
கலியாணம் இப்போது வேண்டாம்!
கவலைப்படாதீங்கோ
கனஹா போல என் மகள்
கலைத்துறையில் நுழையமாட்டாள்!
கலியாண வயசில்லை
கனிமொழி சொல்லிய போது
கனிஹாவுக்கு வயது 27
கந்தகபூமியில்
கடும்போரில்
கண்மூடிய பாட்டியும்
கடைசியாசையாக சொன்னாள்!
கைம்பொன் நானும்
கற்பகத்திற்கு ஒரு  கலியாணம்பார்க்கல,
கணடாவில் பேர்த்திக்கு
கலியாணம் நடக்குமோ?,
கண்ணீருடன் கண்விழித்து
கற்கவெச்ச பாடு எல்லாம்
கதையாக சொன்னாலும்!
கடன் தந்தவன் பேராண்டி
கற்பூரமுல்லை ராஜா போல
கடைசியில் சாத்திரம்
கடும் தோஷம் என்றெல்லாம்
கதைவிடும் ஒற்றைமரம் போல
கடும்பனியிலும்
கப்பலில் போறாளாம்
கடுமையான கொர்னா பாதிப்பில்
கரைசேராத அமெரிக்காவுக்கும்!

மருத்துவ சேவையில்
மல்லுக்கட்டும் டாக்டர் கனிஹா!
கண்ணீருடன் வழியணுப்பிய  மாமியின்
கைபேசியில் ஒலித்தது
கல்கி படத்தில் இருந்து
எழுதுகிறேன் ஒரு கடிதம்!
(----------------------------------


17 June 2020

வா கிறுக்கல்!

வாங்க எப்படி இருக்கின்றீங்க

வாசலில் வரவேற்று

வாரியணைத்தார்!

வாசல்ப்படி  மிதிக்காதே   என்றவர்!





வா  ஒரு   வைன்குடிக்கலாம்!

வழமைக்கு   மாறாக!

வாழ்ந்துகெட்டவர்,

வார்த்தையின்றி 

வாடு வதைக்கண்டேன்!

வரலாற்றில் வாழ்ந்த  தலைமுறை!

வாகனம்   ஓட்டனும்

வண்ண   நிறவைன்  வேண்டாம்!

வழகத்திற்கு   மாறாக

வரட்டாம்   அம்மா!

வளர்ந்திட்டான்   உன் 

வாரிசு,    அப்படியே 

வாழையடி    வாழைபோல

வார்த்தைகள்   குளறுது!

வாரயிறுதி     எப்படி?

வாராளாம்  இவ்வார

வசந்த  காலத்தில்      யாரு?

வாழத்தெரியாதவள்!

வாசலில்   ஒருவெண்ணிலா   போல,

வல்லரசு  காணாத   கொர்னாவில்

வாசலில்  கோலம்   போட்டவள்!

வசியக்காரி   என்றாயே!))

வார்த்தையற்று   போனாயோ?

வலையில்    வருடும் 

வார்த்தைகளில்    நீயிறைத்த

வசைவுகள்    எல்லாம்

வாசித்தேன்    ஓய்வில்!

வாழ   வேண்டியவர்கள்,

வாஸ்துசாஸ்திரத்தில்,

வாரிக்குட்டியூர்    போல

வாழ்  விழந்த  காணங்கள்   எல்லாம்

வானொலியில்  ஒலிக்காத  பாடல்கள்   போல

வாழ்த்துவது   போல   தூற்றிய

வாஞ்சிநாதன்அரசியல்!

வசதி  வந்தபின்   வந்த,

வடக்கு  கூத்தணி   சசிகலா   போல

வடமராட்சியின்உதயம்    போல 

வாரியணைப்பது    போல

வண்ணம்    கொண்ட   வைன்,

வாடும்   பூப்போல

வாட்டிய   பன்றியிலும்

வாசணை   கருகியதுபோல

வாய்ச்சாடல்    போல

வாக்காளர்பட்டியல்   போல

வருவாய்கேட்டவள்!

வாடியமுகம்   காண

வழிகாட்டும்    குருப்போலவும்

வாஞ்சையும்    ஒருபுறம்

வாலோடு   வந்தது   கோபம்!

வாங்க     போகலாம்!ம்ம்

வாரயிறுதி   முடிகின்றது,

வறுத்தெடுத்தவளுக்கு!

வாய்விட்டும்    சொல்லாதகாதல்

வாராயோ   தோழி   பாடல்   போல!

வடகம்போல

வாடியவள்   முகம்  பார்த்தால்!

வாழ்கின்றாய்போல?

வா  ஒருகாப்பி   குடிக்கலாம்     என்பாளோ?

வாசனையில்    நீயும்    ஒரு

வாய்க்கால்    போல,

வானவேடிக்கை   பட்டாசுபடம்   போல

வாழ்த்து   மழை   வரமுன்!

வந்துவிட்டேன்!

வாடிக்கிடந்தது! 

வாசிக்காத   நாவல்மரம்   போல

வாழ்க்கைப்பட்ட   வைன்   போத்தல்

வடிவாகச்   சிரித்தது!

 ( யாவும்கற்பனை))))