14 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-நிறைவுப் பகுதி!

என்ன நானா இப்படி யாருக்கும் தெரியாமல்? என்ன இந்தப்பக்கம் எங்க இருக்கின்றீர்கள்.

 ஒரு தகவலும் ஒருத்தருக்கும் தெரியாமல் போகும் அளவுக்கு என்ன பிரச்சனை ?

"அதெல்லாம் ஒரு  கெட்ட கனவு நடந்தவை எல்லாம் நல்லதிற்கே!

 ஆமா நீ எப்ப நிக்கா செய்தாய்?

  எல்லாம் உங்களால்தான் நீங்க பாட்டுக்கு வாப்பாவிடம் என்னை இடம் மாற்றச் சென்னீங்களா?

 அங்க போன பிறகு தான் என் தவறு புரிந்தது. முதலில் உங்களுக்கு சாபம் கூடப் போட்டன் பிறகுதான் மெல்ல மெல்ல என் படிப்பு விடயம் என் பாதை என்ன என்று அல்லா என் புத்தியில் தெளிய வச்சார் .

எனக்கு கம்பஸ்கூட கிடைச்சது நானா!
 வாப்பாதான் இவரை எனக்குப் பார்த்தார்.!

 உண்மையில் வாப்பா உங்களைப் பார்த்தா சந்தோஸப்படுவார்!
 வீட்டை வாங்களேன்.

 இல்ல பார்த்திமா. நீ இப்படி சந்தோஸமாக இருப்பதே எனக்குப் போதும்.

 நான் இப்ப யாரையும் பார்க்கும் மனநிலையில் இல்ல.

 எல்லாரும் வீட்டில் நலம்தானே?

 அல்லா நம்மலகைவிடல இப்ப கொஞ்சம் இடம்பெயர்ந்து ஓடாமல் நெளுக்குளத்தில் வாப்பா, உம்மா, தாத்தா இருக்கினம்.
 நான் பெரிய தாத்தா பக்கத்தில் இங்கே இருக்கின்றன்.

 வீட்ட வரலாம் தானே?

 இல்ல நான் தனிப்பட்ட வேலையாக வந்தன்.
 இன்று இரவே கொழும்பு போறன்.


 . ஆமா நீ பள்ளிக்கூட நண்பர்கள் யாரையாவது பார்த்தாயா?

 வவுனியாவில் என்று இன்னொரு கோணத்தில் கேட்டேன் .இரண்டு தரம் போயிருந்தேன் வவுனியாவிற்கு .


உங்களுக்குத் தெரியுமே! அந்த வெள்ளப் பொடியன் இப்ப சிங்கப்பூரில் கம்பியூட்டர் கோர்ஸ் செய்யிறானாம்.

 நீங்கள் கதைப்பதில்லை என்று உங்க நண்பன் சந்திரன் நானா சொன்னார்
 நானா.

 பார்த்திமா  வெள்ளையன் என்றது ரவியை தன் கடந்த காலத்தை இப்படி பட்டும் படாமலும் சொல்வது எனக்கும் பிடித்திருந்தது.

 சந்திரன் நானா இப்ப ஒரு கடை போட்டு இருக்கின்றர்.

 உங்களைப் பற்றிக் கூட என்னிடம் கேட்டார். எல்லோரும் இடம் பெயர்ந்ததுடன் பலரும் பல இடங்களுக்கப் போயிட்டாங்க.

  நல்ல காலம் உங்களால் நான் ஏற்கனவே பதுளை போயிட்டன்.

  இப்ப எல்லாம் என் நானா நல்ல இருக்கனும் என்று தூவா ஓதுரன்.

" உண்மையில் வாப்பா சொல்லுவார் உங்க ஆலோசனைகள் தனக்கு இன்னொரு வியாபாரத்தை தொடங்க ஆசை ஊட்டும் என்று "

.எல்லாம் நல்லதுசெய்து விட்டு இப்படி இடம்பெயர்ந்ததும் மீளவும் வந்து பார்காமல் இருப்பது நியாஜமா நானா?

 இல்ல பார்த்திமா!  சில சங்கடங்கள் ஆறுதலாக இன்னொரு நாள் வீட்டை வாரன்.

"அக்ரம் கிட்ட மட்டும் இந்த இலக்கைத்தைக் கொடுத்துவிடு. அவனுக்கு எல்லாம் புரியும் படி சொல்கின்றன்.."


பார்த்திமா அந்த வெள்ளையன் எப்படி சிங்கப்பூர் போனான்?

 அவரின் மாமானார் வசதி செய்து கொடுத்தாராம்.

 மாமானார்??!
 என் நிக்கா  முடிந்தது  தெரிந்த பின் அவரும் கலியாணம் முடித்துவிட்டார். இன்ஸா அல்லா!

கடவுளே இந்தச் சின்ன வயதில் இவனுங்கள் திருந்தமாட்டாங்களா?

" பார்த்திமா பார்த்தாயா அம்பிகாபதி ரேஞ்சில் என்னோடு சண்டை போட்டான் இப்ப எந்த முகத்தோடு 23 வயதில் மாப்பிள்ளைக் கோலம் ?

எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.இது வஞ்சகச் சிரிப்போ அல்லது என்னைவிட வயதில் குறைந்தவன் குடும்பம் ஆகிவிட்டான் என்ற போறாமையோ அல்ல .

" சரி பார்த்திமா என்னைச் சந்தித்ததாக வேற யாரிட்டையும் இப்போதைக்குச் சொல்லாத.
 இன்னும் ஒரு வருடம் பின் என் வியாபாரத்தை மீளவும் வவுனியாவில் தொடங்கணும் .

அதுவரை இப்படி கானமல் போனோர் பட்டியலில் இருக்கின்றேன்.

 நானாவின் நிக்காவுக்கு எங்கள் எல்லோருக்கும் அழைப்பு வருமா?

"  நிச்சயமா மரியம் உம்மாவின் வட்டலப்பம் தானே எனக்கு பரிசுப் பொருள்.

 சரிம்மா நான் போயிட்டு வாரன் அவசரம் கொழும்பு போகனும்.

  மன்னாரில் இருந்து வருகின்ற போது மனதில் தங்கள் காதல் பெரிது என்று என் நட்புக்கு இதயக் கதவு மூடிய ரவியின் செயலில் நொந்து போன இதயம்.

 இப்போது நலமாக இருக்கின்றேன் என்று தெரிந்து கொண்டபின் ரவி கடந்த வருடம் முதல் நான் முகநூலில் இருப்பது தெரிந்து கொண்டு.

 மீளவும் நட்புக்கரம் நீட்டுகின்றான். நடந்தவை மறந்து நண்பர்கள் ஆவோம் கூட்டணியில் சேருங்கள் ஆதரவு தாருங்கள் என்று.

 என்னால் சில வார்த்தை ஜாலங்களை மறக்கும் மனவலிமையை தேடுகின்றேன்.

   இன்று மன்னியுங்கள் நண்பன் தானே என்கின்றாள் என்னவள

  மற்ற நண்பர்கள் அவனுடன் இன்று ஒரே மேசையில் இருந்து கொண்டு என்னையும் பிடிவாதம் மறந்து இணைந்த கைகள் போல சேருங்கள் என்று ஆலோசனை கூறுகின்றார்கள்.

 நானே சரி என்று பட்டதை அந்த நேரத்தில் செய்தேன் தவறு என் மீது இல்லாத போது தண்டித்த நண்பனும் அவர்கள் குடும்ப உறவு தேவையில்லை என்று அவன் நட்பினை உறுதிசெய்யாமல் ஒரு வருடங்கள் மெளனமாக இருக்கின்றேன்.

 என் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் உறவுகளே?!


.நொந்து போன இதயம் இன்றுடன் உங்களிடம் இருந்தும் விடை பெறுகின்றது பயணங்கள் பலவிதம்.
 இந்தப் பாடலை என் தெரிவில் கேளுங்கள்.

10 comments :

K.s.s.Rajh said...

அருமையான ஒரு தொடர் நிறைவு பெற்றுள்ளது...உங்கள் வலிகள் எல்லாம் கடந்து போகும் காலம் எல்லாக்காயங்களுக்கும் மருந்தாகும்

இராஜராஜேஸ்வரி said...

சில வார்த்தை ஜாலங்களை மறக்கும் மனவலிமையை தேடுகின்றேன்.

பயணங்கள் பலவிதம்.

MANO நாஞ்சில் மனோ said...

கவலை வேண்டாம் மக்கா, இதுவும் கடந்து போகும்...காலம் எல்லா காயங்களையும் மாற்றும் ஆற்றும் வல்லமை கொண்டது...!!!

shanmugavel said...

மறக்க முடியாத தொடர் சிவா! அப்போதைக்கு தோன்றுவதை செய்கிறோம் அவ்வளவுதான்,நன்றி

shanmugavel said...

மறக்க முடியாத தொடர் சிவா! அப்போதைக்கு தோன்றுவதை செய்கிறோம் அவ்வளவுதான்,நன்றி

Anonymous said...

நேசரே...பயணம் கரடு முரடாயினும் பாடம் தந்த தொடர்...வாழ்த்துக்கள்...

ஹேமா said...

வாழ்வுக் காலம் குறுகியது நேசன்.மறப்பதும் மன்னிப்பதுமே வாழ்வை அன்பால் நீடிக்க வைக்கும்.உங்கள் மனப்பாரத்தை இறக்கி வைக்க உதவியிருக்கும் இந்தத் தொடர்பதிவு.மனதில் அமைதியோடு இன்னும் தொடருங்கள் !

நிரூபன் said...

வணக்கம் சகோ,

கொஞ்சம் பிசியாக இருக்கேன்,
மன்னிக்கவும்.
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக விடுபட்ட பகுதிகளைப் படித்து கருத்துக்களைப் பகிர்கிறேன்!

செங்கோவி said...

அதற்குள் தொடர் முடிந்துவிட்டதா? நான் ஆர்வத்துடன் படித்த நல்ல தொடர்களுள் ஒன்று இது..

செங்கோவி said...

சமரசத்திற்கான பாதை எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்று விரும்புவன் நான். உங்கள் நண்பரே வலிய வந்து மன்னிக்கக் கோரியபின், நீங்கள் சமாதானமாகப் போவதே சரியென்று நினைக்கின்றேன். கொஞ்சம் அமைதியாக யோசித்தால் உங்களுக்கே இது தெரியும்.