11 November 2011

நொந்து போகும் ஒர் இதயம்-23

அசங்கவுடன் எப்போதும் சினேகபூர்வமான நட்பு இருக்கும் எனக்கு.
வறிய குடும்பத்தில் பிறந்தவன். அவனுக்கும் அன்று இரவு என் கணக்கில் குடிவகையை வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறீனேன்!

 இரவு  கம்பளை புறப்பட்டேன்.

மலையகம் எப்போதும்  தங்களின் துயரங்களை எரிமலையாக  வேதனைகளை மறைத்துக் கொண்டு எப்படி இருக்கின்றதோ! அப்படித்தான் இந்த மலையகத்தின்  பெரும் பாதைகள் .

வலைந்து வலைந்து அருவி போல் ஓடிக் கொண்டு இருக்கும்.





















 அதிகாலையில் வெளிக்கிட்ட பயணம் கம்பளையை வந்து சேரும் போது மாலை நேரத்தை அன்மித்துக் கொண்டிருந்தது .

எனக்காக சகோதரமொழி நண்பன் தன் அறைக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தான்.

 ஒரு வார வேலையில் அவனோடு அவனின் அறையில் தங்குவதால் செலவு மிச்சம் ஒரு புறம் என்றாள்!

 விற்பனைச் சிக்கல்கள் வியாபாரத்தில் காசோலைக்கு பொருட்களை வாங்கி விற்பனை செய்து விட்டு பணத்தினைத் தராமல் சக்கரநாட்காளியைப் போல சுற்றவிடும் சிலரின் முகவரிகளைத் தெரிந்து கொள்ளலாம்.

 தனிப்பட்ட பினாக்கினால் நிறுவனத்தின் தயாரிப்பை எதிர்கட்சி என்பதற்காக எதிர்க்கும் கொள்கையைக் கொண்ட வியாபாரிகளை.
 இந்த புதிய முகம் மாற்றத்தின் மூலம் சந்தையில் மாற்றம் செய்யலமாம்.

 அதுமட்டும் மல்ல அவர்களிடம் வருமானம் முதல் அரசியல், சினிமா என பலதைப் பேசுவதற்கும் நண்பர்கள் துணை உதவும்.


 என்பதால் அதிகம் அவர்களுடன் பழகுவது வியாபாரத்தின் ஒர் அங்கம்.


 இப்படிப் பழகும் போது நண்பர்களுக்குள் எப்படி எங்கள் கைச் செலவைக் துண்டு விழாமல் நிறுவனத்தின் வளத்தில் ஒதுக்கீடு செய் முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும் .


எங்களையே ஏய்ப்போருக்கு எப்படி ஏய்க்கலாம் என்பதை தெரியாத அளவுக்கு நாங்களும் லால்லுபிரசாத் போல் மாட்டுத் தீவன கணக்கு காட்டுவம்.
  இந்த பல்தேசியக் கம்பனிகளுக்கு.


சகோதரமொழி நண்பர்களிடம் எப்போதும் இன்றைய நாளில் நல்லா சாப்பிட்டம், குடித்தோம். என்பதை தாரக மந்திரமாக ஓதுவார்கள்!

 ஜாலி அவர்களின் ஹாபி.


மலையகத்தில் மழை வந்தாள்  வீதிகள் எங்கும் மண்சரிவும் வீதித் தடையும் தொழிலைப் பாதிக்கும்  அத்துடன் தொலைத்தொடர்புகள் அதிகம் பாதிக்கப்படும்.

 துயரம் சில இடங்களில் தொடர்பே இருக்காது.

 வாகனத்தில் ஏறி எப்படா ஆட்சி மாறும் என்று காத்திருக்கும்  எதிர்க்கட்சி போல் மழை விடும் வரை காத்திருந்து அன்றைய நாளை  திட்டிக் கொண்டே ஓட்டுப் போடும் வாக்காளர் போல்  வேலை முடிந்து திரும்புவது இன்னொரு சவாலான விடயம்

.என்றாலும் நினைத்த அளவு விற்பனையைச் செய்து விட்டால்  அன்றைய இரவு பைலாவுடன் படம் பார்ப்போம்.
 தியேட்டரில். ஆனந்தா தியேட்டரில் பார்த்த படத்திற்கும் இன்று இந்திய நாளிதளுக்கும் என்ன சம்மந்தம்?

 இப்படியான  சந்தோஸங்கள் நீண்ட நாள் நிலைப்பது இல்லை.













இந்த தமிழ் பாடல் இங்கே  .
  ஒரு  வாரம்
போன பயணம் அதிக மழையாலும் விற்பனை தேக்கத்தினாலுன் நானும் 12 நாட்கள் கம்பளையில் தங்க வேண்டிய நிலை. இரண்டாம் வாரத்தின் வெள்ளிக்கிழமை மீண்டும் வவுனியாவிற்கு போய்ச் சேர்ந்தேன்.  காலமாற்றம்  ஓடும் வேகம்   இரத்த ஓட்டத்தை விட அதிகம் அதைவிட கொடுமை யுத்த பூமியில் நாம் இடம் பெயரும் துயரம் என் வாழ்விலும் சரி  வவுனியா வாழ் வாசி மக்கள் வாழ்விலும் சரி மறக்க முடியாத ஆண்டு 1999 கார்த்திகையின்  பின் வந்த நாட்கள் !

தொடரும்

13 comments :

தனிமரம் said...

உறவுகளே திரட்டியில் இணையுங்கள் வேலை நேரம் நாளை சந்திப்போம்!
நன்றி வணக்கம்!

MANO நாஞ்சில் மனோ said...

நான் இணைக்கிறேன் மக்கா நீங்க போங்க...

MANO நாஞ்சில் மனோ said...

பதிவை தமிழ் பத்தில் இணைச்சுட்டேன்...

MANO நாஞ்சில் மனோ said...

எனக்காக சகோதரமொழி நண்பன் தன் அறைக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தான்.//


சகோதர மொழின்னு நீங்க சொல்றது சிங்களம்தானே...???

அம்பாளடியாள் said...

நல்லதொரு அனுபவப் பகிர்வு .பாடலும் அருமை!...வாழ்த்துக்கள்
மிக்க நன்றி பகிர்வுக்கு ........

ஹேமா said...

நேசன்...கம்பளை வளைவுப் பாதையும் பாடலும் ரசனை !

K.s.s.Rajh said...

////MANO நாஞ்சில் மனோ சொன்னது…
எனக்காக சகோதரமொழி நண்பன் தன் அறைக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தான்.//


சகோதர மொழின்னு நீங்க சொல்றது சிங்களம்தானே...??////

ஆம் பாஸ் சிங்கள மொழியைத்தான் சகோதர மொழி என்று குறிப்பிடுவது

K.s.s.Rajh said...

மலையகம் எனக்கு மிகவும் பிடித்த ஓரு எழில்கொஞ்சும் பூமி

K.s.s.Rajh said...

பல அனுபவங்களைத்தொட்டு செல்கினறது உங்கள் தொடரை வாசிக்கும் போது ஓரு தொடர் எவ்வாறு எழுதவேண்டும் என்று கற்றுக்கொள்கின்றேன் பாஸ்....

shanmugavel said...

மொழி உங்களுக்கு அழகாக வசப்பட்டுள்ளது.தொடருங்கள் சிவா வாழ்த்துக்கள்.

செங்கோவி said...

//இப்படிப் பழகும் போது நண்பர்களுக்குள் எப்படி எங்கள் கைச் செலவைக் துண்டு விழாமல் நிறுவனத்தின் வளத்தில் ஒதுக்கீடு செய் முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும் .//

மார்க்கெட்டிங் வாழ்க்கையின் நுணுக்கமான விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது இந்தப் பகுதி..

காட்டான் said...

வணக்கம் நேசன் 
அப்போ கொம்பனி காசில "திண்டு" கொழுத்திருக்கீங்க... இதெல்லாம் எங்க தலையிலதானே விழுந்திருக்கும்..!!?

அம்பலத்தார் said...

விற்பனைப்பிரதிநிதிகளின் வாழ்வையும் தொழிலின் நுணுக்கங்களையும் சுவாரசியமாக பதிவிட்டுவருவதற்கு வாழ்த்துக்கள்.