12 November 2011

நொந்து  போகும் ஓர் இதயம்-24

எப்போதும் வியாபாரம், நண்பர்கள் குழு,  பாடல்கள் தேடும் ஒலிப்பதிவுக் கூடங்களை நாடிச்  சுற்றும் வாழ்க்கைச் சக்கரம் .

ரவியின் நட்புப் பிரிவு ஒரு துயரமான நிகழ்வாகிப்போனது.

 ஒரே ஊரில் வாழ்ந்தும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அவன் தங்கை கலியாணத்திற்கும்! என்னை அழைக்கவில்லை.

  உயர்தரப்பரீட்சை ஒரு வித சோர்வுடன் எழுதியதாக அவனின் இன்னொரு நண்பன் என்னிடம் பகிர்ந்து கொண்டான்.

 என்னால் தான் தன் பார்த்திமாவை தொலைத்து விட்டதாகவும் தன் காதல் தோல்விக்கு முழுக்காரணம் என் ஊர் புத்தி என்று சாடியது.

 என்னை இன்னும் சினம் கொள்ள வைத்தது

ஊர்ப்புத்தி என்பதன் மூலம் அவனை மன்னிக்கலாம் என்ற எண்ணத்தில் சந்திரிக்கா அம்மையார் மக்கள் விடுதலை முன்னனியை நம்பி பாராளமன்றத்தைக் கலைத்தது போல் அவனின் நட்பையும் உதறினேன்.

.அரச கட்டுப்பாட்டில் இருந்தாலும் தமிழ் மக்கள் புலிகளின் பக்கம் தான் என்பதை  இனவாத அரசுக்கு  மீளவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் முகத்தில் அறைந்தது.

 வன்னியில் இருந்து நகரசபைக்கு வந்த தொலைநகல் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் போகவும் என்ற வாசகம் .

இது காற்றில் மலேசியாவில் அன்வர் இப்ராஹிமுக்கு  எதிரா திரும்பிய பாலியல் குற்றச்சாட்டுப் போல மக்கள் வெள்ளம்  முண்டியடித்து வவுனியாவை விட்டு பலபகுதிக்கும் இன்னொரு முறை  மீளவும் இடம்பெயர்ந்தார்கள். மக்கள்.

 பலர் இந்தியாவுக்கு மீளவும் போனார்கள் சொத்துக்களை விற்று.

 இராணுவ கட்டுப்பாடு என்பதால் பாஸ் நடைமுறையில் தங்கியிருந்த பலர் இதை சாட்டாக வைத்து  காற்றுல்ல போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக .

கொழும்பு வந்து கடவுச் சீட்டு எடுத்துக் கொண்டே ஒரே இரவில் பணக்காரன்  ஆகும் அண்ணாமலை படம் போல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக புலம் பெயர தென் ஆசிய நாட்டிற்கு சுற்றுலா விசாவில் ஓடிய பலரையும் பார்த்த கண்களுக்கு!

  வியாபாரத்தில் மறுபக்கம் மூடியதால் கண்முன்னே சொந்தத் தொழில் தொடங்கி தோல்வியில் முடிந்தது கண்ணீர்க்கதை வைகாசி பிறந்தாச்சு படத்தில் சுலக்ஸனா மட்டும் விட்ட கண்ணீர்கதை அல்ல நானுந்தான்.

அடிமேல் அடி விழுந்தால் வேப்பமரமும் பலகை ஆகும் என்பது போல் இக்காலகட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தோழியான சாலிக்காவும் மரணித்த போது வேதனையைப் போக்க வெண்தாமரை இயக்கம் சாமரம் வீசவில்லை.!

  விற்பனையின் போது யாரையும் நீ யாரு என்பதை விசாரிக்காத வியாபாரி  என்னை பாதுகாப்புக் கண்கள்.

 நான் விடுதியில் சந்தித்த அப்பாவி ஒருவன் குண்டு வைக்க வந்தவன் அவனை நீ இந்த விடுதியில் இந்த நேரம் சந்தித்தாய் என்று என்னையும் பாசச் சங்கிலியில் பூட்ட நினைத்த போது! மாமியார் வீட்டில் விருந்து உண்ணும் மருமகன் நிலையில் நான் இல்லை.

 சட்டத்தின் இருட்டறையில்  பின் கதவாள் ஒழித் தோடிய என் வெளிநாட்டுப் பயணங்களை இன்னொரு கோணத்தின் திரும்பிப் பார்க்கின்றேன் தொடர் பதிவில் எழுதியிருக்கின்றேன் விரும்பியோர் பாருங்கள்.http://nesan-kalaisiva.blogspot.com/2011/02/tirumpiparkirean.html?m=1

பலரும் நிதிக்கம்பனியில் போட்ட காசுடன் ஓடிப்போன நிதிக்கம்பனி முதலாளியைப் போல் என்னையும் இந்த வியாபாரத்தில் மற்றவர்களை ஏமாற்றிவிட்டுப் போன விற்பனைப் பிரதிநிதி என்ற என் பெயரை அந்தப் பகுதியில் உச்சரிக்கும் காலப்பகுதியில் !

கஞ்சி குடித்து வாழ்ந்த   என் மலேசிய வரலாறு தெரியாதவர்கள் மீது எனக்கு எப்போதும் கோபம் இல்லை.

என் குடும்பத்திற்கும் நான் சென்னதில்லை என் துயரங்களை.தொலைத்தொடர் வசதி ஏதும் இல்லாத பயணம்.

 விரும்பிப் போன பாதையில் சீதை தாங்கினாலே துயரங்களை அதைவிடவா என் சோகம்!

அங்கே பலர் வீடுகளைவிட்டு இடம் பெயர்ந்து, கொட்டும் மாரிக்காலம் கஸ்ரப்படும் போது.

  நானும் உயிர் தப்ப ஓடிய என் வாழ்க்கையின் நிலையில்.

 எப்போதும் அவசரப்பட்டுச்  செய்யும்
காரியங்கள் எல்லாம் தோல்வியில் முடியும் என்பது போல்  மீண்டும் சாமாதானகாலம் என்ற வசந்தகாலப்பறவையாக தாயகம் திரும்பினேன். ஆனால்!

மீளவும் ஹீரோவாக  நடிக்கத் துடிக்கும் காலம் போன முன்னனி நடிகர் மோகன் போல் என் வியாபார திறமை மூலம் விற்பனைத் பிரதிநிதியாக  புதிய பதவியில் யாழ்ப்பாணத்திற்கு மீளவும் என் சகோதரமொழி மேலதிகாரியின் பணிப்பின் பேரில் வேறோரு பல்தேசியக் கம்பனியில் சேர்ந்து வேலை செய்த போது.

 தவிர்க்க முடியாத பயணமாக மீளவும் மன்னார் போனேன் .

(ஓமந்தை ஊடாக பல நாட்கள்  பயணித்தாலும் ஒரு நாளும் என் இதயத்தில் பதிந்த வவுனியாவில் தரிக்காமல் ஒழித்தோடியது)

அன்று தனிப்பட்ட என் பணியுடன் நான் சந்தித்த ஒரு முக்கியஸ்தர் இன்று உயிருடன் இல்லை .அவரை  சந்தித்த

 பின் நான் எங்கு போனாலும் ஓடிப்போகும் நிம்மதியான ஒரு இடம் தியேட்டர்.

 அயன் தியேட்டரில் தற்செலாகப் பார்த்தேன்  பார்த்திமாவை! என் மடியில் அவளின் 3வது மவன் ராசிம் .

தொடரும்

 //
வெண்தாமரை-சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டம்

) அடுத்த பாகம் நிறைவுப் பகுதி!

5 comments :

K.s.s.Rajh said...

அண்ணே அடுத்த பகுதி கிளைமாக்ஸா அடுத்த பகுதியில் உங்கள் தொடர் பற்றி ஓரு முழுமையான விமர்சனம் தாரன்....

MANO நாஞ்சில் மனோ said...

என்னால் தான் தன் பார்த்திமாவை தொலைத்து விட்டதாகவும் தன் காதல் தோல்விக்கு முழுக்காரணம் என் ஊர் புத்தி என்று சாடியது.//

இதுக்கெல்லாமா ஊரை வம்புக்கு இழுப்பாயிங்க...!!!

ஹேமா said...

எம்மவர்களுக்குத்தான் எத்தனை பாடுகள்.கடவுளே !

Anonymous said...

அடுத்த பாகம் நிறைவுப் பகுதி...என்ன அவசரம்...
?

செங்கோவி said...

வேதனைகளைக் கூட அழகாகச் சொல்லிச் செல்கிறீர்கள்..