29 August 2012

விழியில் ஓய்வு!!!

ஓடும் ரயிலில் எல்லாம் உன் நினைவு
ஓடிவந்த போது வலியில்லை இதயத்தில்!
ஓடவிட்டவர்கள் வாழும் ஊரில்
ஓதும் தொழில் ஒன்றும்
ஒத்துவரவில்லை உன்னைப்போல!
ஒரு முறை பார்த்தால் ஒய்வுநாடும் விழிகள்

மெல்லிசை எல்லாம் துள்ளிசை ஆனபோதும்
மெல்லிய காதல் தந்தாய் துள்ளிவரும் பெண்ணாக
சொல்லிய வார்த்தைகள் எல்லாம்
சுருதியில் சேராத வார்த்தை போல உன்னையும் சேராமல் விட்ட காலம் ஒரு
முன்பனிக்காலம் .
முடியாமல் தவிக்கின்றேன் குளிரில் உன் நினைவு சுமந்து!

வசந்தகாலத்தில் வாழ்த்துக்களோடு
வருகைதந்தாய். இதயம் காதல்
விழி திறக்க.
வடிவில் நீ ஒரு வாடாத காதல் பூ
விலைபேசவில்லை அகதியாக அலையும்
விடியாத வாழ்வில்.
விலகிப்போனாய் விருப்பம் என்று
விரும்பி வந்தேன் விசாவோடு விரல்பிடிக்க
வருந்த வேண்டாம் இப்போது என் காதல் வேற விடியல்நோக்கி
வலிகளும் கடக்க வழிகாட்டினாய் வெளிநாட்டில் விலகிப்போனவள்! என்காதல்
வாழ்த்து அட்டை வடிவில்லாமல் கசகிபோனபடி முகம் தொலைந்து வாழ்கின்றேன்.!


விழியில் தீபம் இன்றி!

19 comments :

ம.தி.சுதா said...

//முன்பனிக்காலம் .
முடியாமல் தவிக்கின்றேன் குளிரில் உன் நினைவு சுமந்து!////

வரிகளே குளிர்கிறது அண்ணே...

K said...

உணர்வுகளை வருடும் சோக கவிதை! இப்படி அழுத்தமாக எழுதவும் ஒரு திறமை வேண்டும் அண்ணா! தொடருங்கள்!

தனிமரம் said...

//முன்பனிக்காலம் .
முடியாமல் தவிக்கின்றேன் குளிரில் உன் நினைவு சுமந்து!////

வரிகளே குளிர்கிறது அண்ணே...

29 August 2012 11:29 // வாங்க மதிசுதா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ !ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

தனிமரம் said...

உணர்வுகளை வருடும் சோக கவிதை! இப்படி அழுத்தமாக எழுதவும் ஒரு திறமை வேண்டும் அண்ணா! தொடருங்கள்!//ம்ம் மணிசார் அளவு நான் எழுதமாட்டன்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

அம்பாளடியாள் said...

வலிகள் சுமந்து வந்த அழகிய கவிதை வரிகள் அருமை !..தொடர வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

வலிகள் சுமந்து வந்த அழகிய கவிதை வரிகள் அருமை !..தொடர வாழ்த்துக்கள்.

29 August 2012 11:55 //நன்றி அம்பாள்டியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்!ம்ம்

Angel said...

//என்காதல்
வாழ்த்து அட்டை வடிவில்லாமல் கசகிபோனபடி முகம் தொலைந்து வாழ்கின்றேன்.!//

வலியை மென்மையான கவிதையாக வடித்திருக்கீங்க நேசன் ....
மிகவும் நல்லா இருக்கு

Angel said...

நேசன் நீங்க மற்றும் அனைத்து நண்பர்களும் நலமா
திரும்ப அனைவரும் சேர்ந்து ஒன்றுகூடி இங்கே அளவளாவும் நாள் மீண்டும் வரணும் ....

தனிமரம் said...

//என்காதல்
வாழ்த்து அட்டை வடிவில்லாமல் கசகிபோனபடி முகம் தொலைந்து வாழ்கின்றேன்.!//

வலியை மென்மையான கவிதையாக வடித்திருக்கீங்க நேசன் ....
மிகவும் நல்லா இருக்கு
//நன்றி அஞ்சலின் அக்காள் அன்பான வாழ்த்துக்கு!

தனிமரம் said...

நேசன் நீங்க மற்றும் அனைத்து நண்பர்களும் நலமா 
திரும்ப அனைவரும் சேர்ந்து ஒன்றுகூடி இங்கே அளவளாவும் நாள் மீண்டும் வரணும் ....

29 August 2012 12:57 
//ம்ம் எனக்கும் ஆசைதான் அஞ்சலின் நான் தயார் ஆனால் யோகா ஐயாதான் இன்னும் மீளவில்லை வசந்தகாலத்தில்!ம்ம்

Angel said...

நேசன் யோகா அண்ணா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து ரிலாக்ஸ்டா வரட்டும் .
அதுக்குள்ளே உங்க குட்டி தங்கை கலையும் வரட்டும் அப்புறம் பேசுவோம் .என் ப்ளாகில் வந்து சின்ன மெசேஜ் தாங்க. நான் வருவேன் குட்நைட்

நெற்கொழுதாசன் said...

விரும்பி வந்தேன் விசாவோடு விரல்பிடிக்க
வருந்த வேண்டாம் இப்போது என் காதல் வேற விடியல்நோக்கி
வலிகளும் கடக்க வழிகாட்டினாய் வெளிநாட்டில் விலகிப்போனவள்! என்காதல்
வாழ்த்து அட்டை வடிவில்லாமல் கசகிபோனபடி முகம் தொலைந்து வாழ்கின்றேன்.!


வலி வலி எழுந்தாடுகிறது ...............................நண்பனே .........................................
அமைதியாகிவிட்டேன் சிலகணம் ........

திண்டுக்கல் தனபாலன் said...

வலிகளை சொல்லும் வரிகள்... அருமை...

நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (TM 4)

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!"தேடும் கண் பார்வை துடிக்க............................."வாழ்த்துக்கள்!ஹேமா பார்க்கவில்லைப் போலும்?

Yoga.S. said...

காலை வணக்கம்,அஞ்சலின்!நான் மீண்டு விட்டேன்.குட்டித் தங்கை(மருமகள்) தான் இணையம் கிட்டாமல்........................இன்னும் ஒரு வாரம்,பத்து நாட்களில் ஒன்றிணையலாம் என எதிர் பார்க்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

கருத்துக்கும் உணர்வுக்கும் ஒத்திசைவாய்
மோனையின் அழகு.மிகவும் ரசித்தேன்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 5

”தளிர் சுரேஷ்” said...

உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்திய கவிதை! நன்றி!

இன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

ஹேமா said...

வணக்கம் நேசன்.புளொக்கர் என்னமோ 2 நாளா இழுத்துப் பறிக்குது.ஒரே லேட்டாத்தான் வருவதும் போவதும் !

முன்பனிக்காலத்தைல் பழைய நினைவுகளை அசைபோட வைக்கிறதா குளிர் இன்னும் குளிர் தொடங்கவில்லையே...ஆனலும் கவிதை வரிகளில் மெல்லிய சோகம் உள்ளூரச் சிலிர்க்க வைக்கிறது !